பக்கங்கள்

புதன், 21 டிசம்பர், 2016

மரணம் என்னும் பேராசானிடம் மனிதர்கள் கற்றுக் கொண்ட பாடம்!

இன்றைய வரையில், பிறந்தவர்கள் இறப்பது என்பது இயற்கை நியதி - மருத்துவ விஞ்ஞானம்! மாற்றமில்லை.

நோய்நொடியற்றவாழ்க்கையை, ஒழுக்கமாகவும்-கட்டுக்கோப்பாக வும் வாழ்ந்து தங்கள் வாழ்வை நீட்டிக் கொண்டே, மரணத்தின் அழைப்பைத் தள்ளித் தள்ளிப்போடுவதனால், வாழ் நாள் நீடிக்கக்கூடும்.

மகிழ்ச்சி தான் - உயிருடன் இத் தனை ஆண்டுகளும் வாழுகிறார்களே என்றெண்ணும்போது...ஆனால் வயதுதான்ஏறுமேதவிர,முதுமை அந்த மகிழ்ச்சியைக் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துத் தின்றுவிடும் நிலையில், மற்றவர்கள் உதவியில் லாமல் வாழமுடியாத நிலை - முது மையால்ஏற்படும்போது,அதுஅவனது சுயமரியாதையையும், தன்னம்பிக் கையையும் மெல்ல மெல்ல குறைக்கும் நிலை தவிர்க்க முடியாதபோது, மகிழ்ச்சி வேதனையாக மாறிவிடுகிறது!

மாரடைப்பு போன்ற நோய்களி னாலோ அல்லது விபத்துக்களினாலோ, இளம் வயதுள்ளவர்களை நாம் இழக் கும்போது, அந்தப் பிரிவின் துக்கம் நம்மைவிட்டு எளிதில் நீங்குவதில்லை!

ஆனால், முதுமையில் முடக்கப்பட்ட வாழ்வு வாழ்வதைவிட, மரணத்தின் திடீர் அழைப்பை ஏற்பது நம்மைவிட்டுப் பிரிந்தவர்களுக்கு பல வகையில் லாபமேயாகும். உற்றார், உறவினர், குடும்பத்தார், உற்ற நண்பர்களுக்கு அவரது மறைவு எளிதில் ஏற்கத்தக்கதாக அமையாது!

காலம்தான் அந்தப் புண்ணை ஆற்றும் ஒரே மாமருத்துவர்!

‘மயான வைராக்கியம்‘, ‘பிரசவ வைராக்கியம்' என்றெல்லாம், அந் தந்தநேரத்தில்மின்னலெனத்தோன் றித் தோன்றி மறைந்த நண்பர்கள் மறைவின்மூலம் முளைத்துக் கிளம் பியவை எல்லாம், சுடுகாட்டிலிருந்து வீட்டிற்குச் செல்லும் வரை கூட நீடிப்பதில்லை! இது உலக வழக்கு.

குறுக்கு வழியில் பதவி, பணம், பட்டம் சேர்க்க, செயற்கையான புகழ் போதையை நாடிட, துடியாய் துடிக்கும் மனிதர்கள், இறந்து போனவுடன் சவ அடக்கத்திற்கு இடுகாடு வரை சென்றபோது, இப்படி அலைந்த மனிதர், கடைசியில் எதைத் தன்னுடன் எடுத்து சென்றார்? ஒன்றுமில்லை.

எவ்வளவு தான் மலைமலையாய் சொத்து சேர்த்தாலும், ‘ஆறடி மண்ணே சொந்தமடா’ என்ற அவலப் பாட்டின் வரிகள்தானே மிஞ்சும்!

மின்மயானம் வந்துவிட்டு, சில நொடிகளில் மறைந்த மனிதர்கள் சடலத்தை எரித்து, பிடிசாம்பல் இந்தா பிடியுங்கள் இதை என்றும் தரும் நவீன மின் அணுயுகத்தில் பழைய பாட்டும் கூட - ‘ஆறடி மண்ணே  மனிதா உனக்குச் சொந்தமா?’ என்பதும் கூட அடிப்பட்டுப் போகிறதே!

மனிதர்களை மரணம் என்னும் பேராசான் தன்னுடன் கூட்டிக் கொண்டுச் செல்லும்போது, ஒரு துரும்பைக்கூட எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லையே! அப்படி இருந் தும் மாய்ந்து மாய்ந்து பொருளை ஏன் சேர்க்க வேண்டும்?

பொது ஆர்வலர்கள் - பொது அமைப்புகள், அறக்கட்டளைகள், இவைகளின் நிறுவனர்கள், இப்படி மாய்ந்து சேர்ப்பதில்கூட கொஞ்சம் பொருள் உண்டு. பின்னால் வருகிற வர்கள் ‘புறங் கையைக் கூட நக்காத’ பேர்வழிகளாக அமைந்தால், பெரும் பயன்கூட ஏற்படக்கூடும்! (அது பெரும்பாலும் விதிவிலக்கே) அதிலும் சுயநலம் ஊடுருவினால், அங்கேயும் மிஞ்சுவது அலங்கோலம் தான்!

எப்பேர்ப்பட்ட மனிதர்கள் - மாமனி தர்கள் என்றாலும், அடுத்த கணமே, அவர்கள் மறைவுக்குப் பின் ‘சவ ஊர்வலம்‘ என்ற தலைப்பில் ‘சவங்கள்’ என்றுதான் அழைக்கப்படுவது உல கியல் அல்லவா?

பின் ஏன் போகும்போது குறுக்கு வழி, கோணல் புத்தி, உள்ளொன்று வைத்துப் புறமொன்று என்ற இரட்டை வேட வாழ்க்கை?

வாழ்வில் மனிதர்கள் காணாத ‘சமரசம் உலவும் இடமாக’ மயான பூமியைத்தானே மரணம் காட்டுகிறது?

மறைந்தவர்களால் பாடம் கற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், அவர்களை வழி அனுப்பிவிட்டு வீடு திரும்பியவர்கள் குறைந்தபட்சம் இதை உணர்ந்தாவது, இனியேனும் நம் வாழ்வில் நாணயமும், நேர்மையுமே வாழ்க்கை நெறிகாத்து குறுக்கு கோணல் புத்தி, மனச்சாட்சியை வெளியேற்றி  மனக்குரங்கின் ஆட்டத்திற்கே ஆட் டம் போட்டு அவதிப்படும் அவல வாழ்விலிருந்து சற்று விலகி உண் மையான மகிழ்ச்சியைத் தேடி, மன நிறைவு முடிவுடன் மற்றவர்களுக்கு விடை கொடுக்கலாமே!

மரணமென்ற பேராசான் எவ்வ ளவுதான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொடுத்தாலும் அதைக் கற்க, அதன்படி நிற்க மறுக்கும் அல்லது மறக்கும் மனிதர்கள் தானே இந்த பூமியில் அதிகம்; இல்லையா?

- கி.வீரமணி
-விடுதலை,21.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக