மனித நேயக் கருத்துக்களின் தோற்றம், நாகரிகம் உதயமான காலம் வரை தேடிச் செல்லப்பட இயன்றதாகும். ஆனாலும், கடந்த 1000 ஆண்டு காலத்தில் முன் எப்போதும் இல்லாதபடி வளர்ந்து, மலர்ச்சி பெற்றுள்ளது. மாந் தர்களின் உரிமைகள் மதிப்புப் பெறத் தொடங்கியபோது, மக்களாட்சி போற்றி வளர்க்கப்பட்டபோது, அறிவியலும், கார ணம் தேடும் ஆவலும் மனித அறிவின் எல்லைகளை விரிவுபடுத்தியபோது, மத நம்பிக்கையற்ற கருத்துக்கள் தோன்றி இவ்வுலகில் செல்வாக்குப் பெற்றபோது, மனிதத் தன்மை மலர்ந்து மணம் வீசியது. கடந்த 1000 ஆண்டுகளில் இத்தகைய மனிதநேயக் கருத்துக்களின் செல்வாக்கு வியத்தகு முறையில் வளர்ச்சி பெற்றதை அடையாளம் காட்டும் நிகழ்ச்சிகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
மிகச் சரியானதாகவோ, முழுமையானதாகவோ இல்லாமல் இருக்கலாம் என்ற இந்தப் பட்டியல் ‘ப்ரீ என்குயரி’ ஆசிரியர்களால் தேர்வு செய்யப்பட்டது. கடந்த கால நிகழ்வுகள் நம்மை எதிர்காலத்திற்குத் தயார்ப்படுத்துகின்றனஎன்பதாலும்,அத னால் மனித நேயம் மேலும் மலர்ச்சி பெறுகிறது என்பதாலும், பல மாந்தர் எதிர்ப்பார்ப்பதைவிட அடுத்த ஆயிரம் ஆண்டுகள் மிகவும் நம்பிக்கை ஊட்டு வதாக இருக்கக் கூடும்.
தொழில் நுட்பமும் அறிவியலும்
கல்வி அறிவியல் விழிப்புணர்வு (1050-1200)
பகுத்தாய்ந்து கேள்வி கேட்கும் பாரம் பரியத்தைப் புதுப்பித்தது; அய்ரோப்பாவின் முதல் பல்கலைக் கழகங்களுக்கு அடித் தளம் அமைக்கத் தூண்டியது.
சைனாவில் கடற்பயணத்திற்காக முதன்முதலாக திசைகாட்டும் கருவி அதிகாரப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டது (1117)
நட்சத்திரங்களைக் கொண்டு திசை அறிவதை சார்ந்திராமல், கடற்பயணத்தில் எல்லையையும், நம்பகத்தன்மையையும் விரிவுபடுத்திய கடற்பயணக் கருவி.
மார்கோ போலோவின் சீனப் பயணம் (1298)
கிழக்கே உள்ள நாடுகள் மக்கள் பற்றிய ஒரு அறிதலை மேற்கத்திய மக்களுக்கு உருவாக்கியது.
ஜோஹன் குடென் பெர்க் நகரக் கூடிய அச்சு இயந்திரத்தைக் கண்டு பிடித்தார் (1450)
முதன் முதலாக பெரும் அளவில் அச்சி டப்பட்ட புத்தகம் (ஙிவீதீறீமீ) பைபிளே ஆகும்.
‘விண்வெளிப் பகுதிகளின் புரட்சிகள் பற்றி’ என்ற கோபர்நிகஸின் நூல் வெளியிடப்பட்டது (1543)
விண்வெளியின் மய்யம் பூமி அல்ல, சூரியனே என்பதை நிலைநிறுத்தி, விண் வெளி ஆய்விற்கு மதநூல்களே வழிகாட்டி என்ற கோட்பாட்டை மதிப்பிழக்கச் செய்து, விண்வெளியியலில் அனைத்து எதிர்கால முன்னேற்றங்களுக்கும் பாதை வகுத்தவர்; உண்மையை அறிவதற்கான வழியாக அரிஸ்டாட்டிலின் அதிகாரத்தின் மீது சோதனை ஆய்வு நடத்தப்படுவதை நியாயப்படுத்தியது.
அறிவியல்-புரட்சி (1600-1700)
அற்புதங்களை விளக்க சோதனைகள் மூலம் ஆய்வுசெய்யும் ஆற்றலை கலீ லியோ, நியூட்டன், கெப்ளர் நிரூபித்துக் காட்டினர்; விண்வெளியினைப் பற்றியும், அதில் மனித இனத்தின் இடத்தைப் பற்றியுமான மதநூல்களின் அடிப்படையிலான கருத்துக்கள் மறுக்கப்பட்டன.
பொருளியலின் தோற்றம் (1770)
செல்வம் என்பது எவற்றை அடக்கியது என்னும் வணிக காலத்திற்கு முன்னதான கருத்தின் அடிப்படையில், ஆடம் ஸ்மித் போன்றவரின் படைப்புகள், தொழில் வணிக வளர்ச்சியை ஊக்குவித்த நேரத் திலேயே, அரசர்களின் ஆற்றல்களை வெகுவாகக் குறைத்தது.
எட்வர்ட் கிப்பனின் ‘வீழ்ச்சியும் அழிவும்‘ வெளியிடப்பட்டது (1776-1788)
அறிவுப்பூர்வமாக எதனையும் கேள்வி கேட்கும் முறையின் மீது பகைமை பாராட் டியதால், ரோம சாம்ராஜ்யம் வீழ்ச்சி அடைந்ததற்கு கிறிஸ்துவ மதத்தைக் குற்றம் சாட்டினார்; எதிர்மறையான அழிவைத் தரும் சமூக விளைவுகளுக்கு மதம் பொறுப்பாக இருந்திருக்க இயலுமென்ற கருத்து மக்களிடம் பெரும் அளவில் பரப்பப்பட்டது.
மக்கட் தொகைப் பெருக்கத்தைப் பற்றிய புதுமையான கருத்தை மால்தூஸ் அறிமுகப்படுத்தியது (1798)
மக்கட்தொகைப் பெருக்கம் ஒரு உண் மையான அச்சுறுத்தல் என்பதை முதல் முதலாகத் தெரிவித்தவர்; மக்கட் தொகையினை முனைந்து கட்டுப்படுத்தவேண்டும் என்ற வாதத்தின் முன்னோடி.
ரோஸெட்டா கல்வெட்டு கண்டுபிடிப்பு (1799)
எகிப்திய அடையாளக் குறியீடுகளை மொழிபெயர்க்க உதவியது; பல கிறிஸ்துவ மத நம்பிக்கைகளும், பழக்கங்களும் எகிப் திய மூலத்தைப் பெற்றுள்ளதை பிற்காலத்து அறிஞர்கள் நிரூபித்துக் காட்டினார்கள்.
‘உயிரினங்களின் தோற்றம்' என்ற டார்வினின் நூல் வெளியிடப்பட்டது (1859)
உயிரினத் தோற்றம் பற்றிய அதன் இயல்பான விளக்கம், கோடிக்கணக்கான மக்களைக் கவர்ந்த மதத் தொடர்பற்ற உலகைப்பற்றிய கருத்தை உருவாக்கியது.
அணுக்கோட்பாடு உருவாக்கப்பட்டது (1900-1930)
அணு உலகைப் பற்றிய புதிய அறிவை உண்டாக்கியது; அறிவியலின் இயல்புத் தன்மை என்பதை, கடுமையான முடிவுகளை மேற்கொள்ளும் தன்மையை சார்ந்திருப்பதிலிருந்து விடுவித்தது.
அய்ன்ஸ்டீனின் ‘பொதுவான மற்றும் சிறப்பான தொடர்புக் கோட்பாடு’ என்ற நூல் வெளியிடப்பட்டது (1905-1916)
இயற்பியல் அறிவியலை புரட்சிகர மானதாக்கியது; புதிய இயற்பியல் பற்றிய பொதுவான கண்ணோட்டம் உரு வாவதற்கான வழியினை அய்ன்ஸ்டீனின் கோட்பாடுகள் வியத்தகு வகையில் உறுதி செய்யப்பட்டது எளிதாக்கியது.
கம்ப்யூட்டர் கண்டுபிடிப்பு (இ.என்.அய்.ஏ.சி.1946)
மின்னணுக் கணினி, சமூக வணிக நிறுவனங்களை வீழ்ச்சியடையச் செய்து, அனைவரும் தகவல்களைப் பெறுவதை ஜனநாயக உரிமையாக்கிய மூன்றாம் தொழிற்புரட்சி என்றழைக்கப்படுவதை அறிமுகப்படுத்தியது.
மரபணு கண்டுபிடிப்பு (1953)
மரபணு விதியின் மறைபொருளை வெளிப்படுத்த வழிகோலியது; தேவதை களின் முழுக் கட்டுப்பாட்டிலேயே உயி ரினங்களின் தன்மை உள்ளது என்ற பொதுவான அற்புதங்களில் நம்பிக்கை கொண்டுள்ளமையை, ‘டபுள் ஹெலிக்ஸ்’ என்ற இரட்டை திருகுமுறைக் கோட்பாடு கண்டுபிடிப்பு தகர்த்துவிட்டது.
சோதனைக் குழாய்களில் அமினோ அமிலங்கள் தயாரிக்கப்பட்டன (1953)
தெய்வீகத் தலையீடு இன்றி, உயிரற்ற பொருட்களிலிருந்து உயிர் உருவாகக் கூடுமென்ற வாய்ப்பின் ஒரு பகுதி நிரூபிக்கப்பட்டது; அனைத்துமே முற்றிலும் இயல்புத் தன்மை பெற்றவை என்ற கருத்தை பொதுமக்களிடையே உருவாக்கும் வாய்ப்பை அதிகப்படுத்தியது.
விண்வெளி ஆராய்ச்சி தொடங்கியது (1957)
அறிவியல் துறையில் முன் எப்போதும் கண்டறியாத வளர்ச்சியையும், அறிவியல் பற்றிய மக்களின் போற்றுதலையும் கொண்ட காலகட்டத்தை உருவாக்கியது.
பாரம்பரியத் தொழில் திறன் தோற்றம் (1973)
மனிதர்கள் தங்களின் பாரம்பரியத் திறன்களால் செயல்பட ஊக்குவிக்கப்பட இயலும் என்பதுடன், அவர்களும் பாரம் பரியத் திறன்களை உருவாக்க இயலும் என்பதை முதன் முதலாக நிரூபித்தது.
இங்கிலாந்தில் முதல் சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது (1978)
மனித உயிரியலின் மீது மனிதக் கட்டுப் பாட்டை விரிவுபடுத்தியது; பாலிய லிலும், இனப்பெருக்கத்திலும் இருபாலரும், ஒரு வர் மற்றவரைச் சார்ந்திராமல் சுதந்திரமாக இருக்கும் புத்துணர்வை உறு திப்படுத்தியது.
(தொடரும்)
-விடுதலை,15.12.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக