பக்கங்கள்

திங்கள், 19 டிசம்பர், 2016

சிங்கப்பூர் நாட்டில் செம்மொழி மலர்ச்சி பாரீர்!


சிங்கப்பூர்  நாடு தமிழ்மொழி மற்ற மொழி (பெரும்பான்மையோர், சிறுபான்மையோர்) என்ற பேதம் விளைவிக் காமல் அனைத்து (நான்கு) மொழிகளும் ஆட்சியாளர்களால் சமவாய்ப்புத் தரப்படும் மொழிகளாகவே செயல்படுவது, அரசு அத்தனைப் பண்பாடு களையும் பாதுகாத்து, அவர்களது மரபு டமைப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி, ‘சிங்கப்பூரியர்கள்' என்றால் அனைவரும் உறவினர் என்ற நல்லதோர் ஒருமை உணர் வினைக் கட்டிக் காப்பாற்றி வருகின்றது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்மொழித் திண்ணை என்று மாதம் முழுவதும் ஏராளமான நிகழ்ச்சிகள்; தமிழ்க் குடும்பங் களின் இளையர்களுக்கும், தமிழ் கற்க விரும்பும் ஏனையோருக்கும் அருமையான வாய்ப்பை அளிக்கின்றனர்!

"திருவாளர் சிங்கப்பூர் பேராசிரியர் சுப.திண்ணப்பனார், தமிழர் பேரவைத் தலைவர் தேவேந்திரன், சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் நா. ஆண்டியப்பனார் தமிழ் மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் அரிகிருஷ்ணன், 'கவிமாலை' காப்பாளர் மா. அன்பழகன், தமிழ் இலக்கியக் களம் இரத்தின வேங்கடேசன், தமிழவேள் (கோ. சாரங்கபாணி) நற்பணி மன்றச்  செயலாளர் இலியாஸ், இவர்களுக்கு நற்பலமாக விளங்கும் முதுபெரும் எழுத்தாளர் ஏ.பி. இராமன், பல்வேறு நூல்களை வெளியிட ஊக்கம் தரும் நல்ல முயற்சிக்கு ஆக்கமான வள்ளல் முஸ்தபா (ரஹ்மத் அறக்கட்டளை) நாகை திரு. போப் ராஜ், பெரியார் சமூக சேவை மன்றத் தலைவர் கலைச்செல்வம், தமிழ் நெஞ்சர் என்.ஆர். கோவிந்தன் போன்ற எண்ணற்றவர்களின் தமிழ்த்தொண்டு, தமிழ் வளர்ச்சித் தொண்டு, தமிழ் மானம் காக்கும் தொண்டு போன்ற பலவற்றைச் செய்து வருகின்றனர்."

தமிழ் பரவ சிங்கப்பூர் அரசு இவர்களை பெரிதும் ஊக்குவிக்கிறது.
"வளர் தமிழ் இயக்கத்தின் தலைவர் திரு. ஆர். இராஜாராம் அவர்களின் தலைமையில் சிங்கப்பூர் தேசிய மரபுடைமை வாரியத்தின்  நிதி உதவியோடு அரசின் சார்பில் வர்த்தக தொழில் அமைச்சர் திரு. எஸ். ஈஸ்வரன் அவர்களின் பேராதரவு ஊக்கத்துடன் சிறப்பான புதிய செயல்பாடுகள் ஆண்டுதோறும் மலர்ந்து, பயனளிக்கின்றன! பரிமளிக்கின்றன!!

"வாழும் மொழி, வாழும் மரபு" என்ற தலைப்பில் தமிழில் மிகு பயன்தரும் அரிய, எளிய தொகுப்பினை  சிங்கப்பூரில் உள்ள பிரபல உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தின் கல்வி அதிகாரி திரு.அன்பரசு ராஜேந்திரனும், செல்வி விஜயபாரதி வீரவர்மனும் (இவர் பயிற்சி பெற்ற ஆசிரியை) இணைந்த முயற்சியாக ஒரு நூல்தொகுப்பை சிங்கப்பூர் இளையர்களுக்கு நமது மரபுடமைச் சொற்களும், கருவிகளும் - இவர்கள் அறியாத தலை முறையினர் என்பதால் நன்கு அறியும்படி சிறந்த முயற்சியாக, கொண்டு வந்த நூலைப் படித்தேன்! வியந்தேன்!",

தமிழ்நாட்டு இளையர்கள் கூட அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் - இவை!

‘ஏர்' பற்றி வள்ளுவர், குறளைச் சொல்லிக் கொடுத்தால் - குறளின் விளக்கத்தில் போதுமா? அது அறிந்த (சிங்கப்பூர் இளைஞர் களுக்கு - மாணவர்களுக்கு) விளக்குவதும், கொண்டுவந்து காட்டுவதும் அவசியம் அல் லவா? அது போல சொற்களை பயிற்றுவிக்க படித்து நினைவிற்கொள்வதோடு, அவை களை நேரில் பார்க்கவும், புதைந்துபோன நமது பண்பாட்டின் மீட்டுருவாக்கம் செய்யும் எண்ணம் உருவாக்கவும் உதவிடும் வகை யில் அமைந்த நூலை, நண்பர் இலியாஸ் தர, படித்து மகிழ்ந்து, பாராட்டி ஊக்கப் படுத்தவே இதனை எழுதுவதோடு, தமிழ் நாடு செய்யத் தவறும் பலவற்றை நினை வூட்டுவதுபோல இது உள்ளது, வேறு நாடுகளில் உள்ள தமிழ் கற்பிப்போருக்கும் இது ஒரு வெளிச்சம் ஆகும்!
‘அடுக்குப்பானை'யில் ஆரம்பித்து யாழ், யாளி, வளரி வரை பல சொற்கள் (படத்துடன்) விளக்கமாக தரப்பட்டுள்ளன.

‘வளரி' நம்மில் எத்தனைப் பேருக்குக்கு தெரியும் ‘வளரி' என்பது இழைக்கப்பட்ட மரத்தில் செய்யப்படும், சில சமயங்களில் இரும்பினால் செய்யப்படும் பிளவு வடிவி லான சிறு ஆயுதம், இதன் ஒரு முனைப்பகுதி மற்றொரு முனைப்பகுதியை விடக் கனமாகவும், தடிமனாகவும் இருக்கும். இது "பூமராங்" வகை ஆயுத வடிவமைப்பைக் கொண்டது. இதன் லேசான முனையைக் கையில் பிடித்து, தோளுக்கு உயரே சுழற்றி விசையுடன் இலக்கை நோக்கி வீசி எறிவார்கள். ஆற்றலும் திறமையும் மிக்க ஒருவரால் 300 அடி தூரம் வரை குறி தவறாமல் வீச முடியும்.

"வளரி" பண்டையத் தமிழகப் போர் முனைகளில் போர்க் கருவியாகவும், வேட் டையின்போதும் பயன்படுத்தப்பட்டுள்ளது; "வளரி" பண்டைய தமிழக போர்முறைகளில் போர்க் கருவியாகவும் பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

என்னே அரிய  - நமக்கே தெரியாத ‘புதையல்' இது!

‘யாழ்' என்பதை தமிழர்கள் தொலைத்து விட்டு அவ்விடத்தில் ‘வீணை' வந்து ஆக்கிரமித்துக் கொண்டதே!
துன்பம் நேர்கையில் ‘யாழ்' எடுத்து நீ
இன்பம் சேர்க்கமாட்டாயா? - என்று
உருக்கத்தோடு புரட்சிக்கவிஞரின்
பாடலைப் பாடுவோர் மூலம் மட்டுமே
யாழ் அறியப்படுகிறது!

'யாழ் - ப் - பாணர்கள்' யாழை வாசிப்பதில் வல்லவர்களான தமிழர்கள் -  அவர்கள் குடியிருப்பு நிலமே 'யாழ்ப்பாணம்' - இக்கருத்தினை எத்தனைப் பேர் அறிவர்?

சிங்கப்பூரின் தமிழ் மறுமலர்ச்சிக்கு அடிப்படைக்காரணம் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கம் 1930 முதல் தொடங்கி ஊட்டி வளர்த்த மொழி உணர்வு, முக்கிய மாகும். அ.சி.சுப்பையா, வள்ளல் இராமசாமி (நாடார்) தமிழவேள் கோ.சாரங்கபாணி போன் றோரின் முயற்சியின் வெற்றி மலர்களே இவை!

வேரை மறவாதீர் விழுதுகளே!

- கி.வீரமணி, வாழ்வியல் சிந்தனைகள்
-விடுதலை,17.6.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக