19 ஆம் நூற்றாண்டு அறிவியல் சாதனைகளை நிகழ்த்தி, மக்கள் அடிப்படையில்கொண்டிருந்த பல மூட நம்பிக்கைகளை ஆட்டங் காணச் செய்தது!
அதற்கு வழிவகுத்தவர் சார்லஸ் டார்வின் ஆவார். பரிணாம வளர்ச் சியின் மூலம்தான் மனிதன் இன்றைய நிலையில் உருவானான். இது ஆண் டவனின் படைப்பு அல்ல என்று கூறி, கர்த்தர் சிருஷ்டித்தார் என்ற கற்பனையை உடைத்தார்!
அறிவியலின் வேகம் இருபதாம் நூற்றாண்டில் மிக அதிகமாகச் சென்றது. 20 ஆம் நூற்றாண்டு ஒரு கண்டுபிடிப்பு யுகமாகும். (Age of Discovery) 21 ஆம் நூற்றாண்டு, கண்டுபிடிப் புகளை மேலும் செம்மையாக்கி, அத னைப் பக்குவப்படுத்தி மனிதகுலம் பயன்பெறும் நூற்றாண்டாகவே மிளிரப் போகிறது என்பது அறிவியலார் கணிப்பு ஆகும்.
கடவுள் கற்பனையின் மரண ஓலம் துவங்கியதோடு, அதன் அண்ணனான ஆத்மா கற்பனையும் ஆடிப்போய் - ஓடிப்போய் மறைந்து விட்ட நூற்றாண்டு ஆகும்!
அதற்கானஆதாரங்களைவிளக் கினால் பெரிய நூல்களே கூட எழுத வேண்டியிருக்கும் - வந்தும் உள்ளன! ‘‘கடவுளின் இறுதி ஊர்வலம்‘(God’s Funeral) என்ற நூல் ஒன்று 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளி வந்துள்ளது. A.N.Wilson என்பவர் எழுதி யுள்ளார்.
அதுபோலவே அறிவியல் புரட்சி எந்த எல்லைக்குச் செல்லும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் என்பதை ‘‘மிச்சியோ காக்கூ’’ என்ற ஜப்பானிய அமெரிக்க விஞ்ஞானி Visions”என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
‘‘நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ நாளேட் டின், அறிவியல் பகுதியான Science Express --இல் “Scientists find the essence of Life” ‘‘
‘‘அறிவியலார் மனித வாழ்க்கை உற்பத்தியின் அடிப்படைகளைக் கண்டு பிடித்துவிட்டனர்’’ என்ற தலைப்பில் மிக ஆதாரப்பூர்வமான அறிவியல் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.
இவைகளுடன் அறிவியல் வான வியல் விஞ்ஞானியான கார்ல் (Carl Sagan)
- அண்மையில் தான் மறைந்தார் “The Demon – Haunted World”
என்ற ஓர் அரிய விஞ்ஞான நூலில் பக்கம் 32-இல் ஓர் அருமையான தகவலைத் தந்துள்ளார்.
“Spirit” comes from the latin Word “to breath”.
What we breath is air which is certainly matter, however thin.
Despite usage to the contrary, there is no necessary implication in the word “Spiritual” that we are talking of anything other than matter, of which the brain is made or anything outside the realm of Science”
தமிழாக்கம்:
‘‘ஸ்பிரிட்’’ என்ற சொல் லத்தீன் மொழிச் சொல்லாகும்; இந்த ‘ஸ்பிரிட்’ என்ற சொல்லிலிருந்துதான் ‘‘ஸ்பிரிச்சுவல்’’ (Spiritual) என்ற சொல்லும் வந்தது.
இந்த ஸ்பிரிட் என்ற சொல் மூச்சை இழுத்து விடுவதைக் குறிப்ப தாகும். மூச்சு இழுத்துவிடுவது காற்று என்ற பருப்பொருள் மூலமே நடைபெறுவதாகும்.
எனவே சுவாசிப்பது என்பது Matter
ஆகும் என்பதால், அதை வைத்து ஆத்மா, ஆத்மீகம் - ஆன்மீகம் என்ற சொற்களை உருவாக்கி அதற்கு மாறுபட்டது போல் கூறுவது அறிவியல் ரீதியாகச் சரியானதுஅல்ல.”
1) சார்லஸ் டார்வினின் Theory of Evolution
பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு, Origin of Species
உயிர்வகைகளின் தோற்றம் பற்றிய நூல், பைபிள் மற்றும் மூடநம்பிக்கைகளின் அஸ்தி வாரத்தையே அசைத்தது!
“Critics of the First Cause Theory have no difficulty in pointing out its inadequacies by asking what or who caused the First Cause?” As an explanation it is hopeless”
உற்பத்தி பற்றி பைபிளில் கூறப்பட்ட புரட்டு ஆட்டங்கண்டதால், மத உலகம் மருண்டது! வெகுண்டெழுந்து ‘வீர் வீர்’ என்று அலறியது! 1859 இல் - 19ஆம் நூற்றாண்டில்!
2) 1953இல் (இருபதாம் நூற்றாண்டில்) கேம்பிரிட்ஜில் வாட்சன் என்பவரும், கிரிக் என்பவரும் (Watson and Crick’s theory of DNA)
இணைந்து கண்டுபிடித்த DNA
ஆய்வு, சார்லஸ் டார்வினும், வாலஸ்ஸும் இணைந்து நூறு ஆண்டு களுக்கு முன்பு துவங்கிய பணியில் இறுதிப் ‘பாராவை’ எழுதியது எனலாம்!
3) உயிர் வேதியியலின் விளக்கமாக, நோபல் பரிசு பெற்ற டாக்டர் கொரானா தன்னுடைய ஆய்வுக்கூடத்தில், பொதுவான பரிணாம வளர்ச்சியில், உயிர்ப் பொருளும், உயிரற்ற பொரு ளும் ஒரு படிநிலையில் உள்ளன என்றபோதிலும்,முறையானசூழ் நிலையில், ஓர் உயிரற்ற கரித் துண்டோ,உலோகத்துணுக்கோ ‘‘வைரஸ்’’ போன்ற உயிர்ப்பொருளாக மாறிவிடக்கூடும் என்று உணர்த்தினார்!
முற்றும் உயிரற்ற ரசாயனப் பொருள் களைக் கொண்டு, உயிர்ப் பொருளாகிய Gene மூலக் கருவினைத் தயாரித்துக் காட்டினார்!
“கம்ப்யூட்டர் வைரஸ்” என்ற சொல் இப்போது உலகமெங்கும் புழக்கத்தில் வந்துள்ளதை நினைவுபடுத்திக் கொள் ளுங்கள்!
4) அமெரிக்காவில் -மேரிலண்ட் மாநிலத்தில் (இது வாஷிங்டன் D.C.
. க்கு பக்கத்தில் உள்ள மாநிலமாகும்) Institute ofGenomic Research (“TIGER”)
என்ற ஆய்வு அகத்தில் ஆராய்ச்சி செய்து, ஜீன்கள் என்ற மரபணுக்கள் 300 அய்க் கொண்டு உயிரினத்தை உற்பத்தி செய்யமுடியும் என்று காட்டியுள்ளனர்! இது மூடநம்பிக்கை உலகத்தினை பூகம்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கும் கண்டுபிடிப்பு ஆகும்! கடவுள் கற்பனைக்கு மரண அடி கொடுக்கப்பட்டுவிட்டது!
மிக மிகச் சிறிய கிருமியான உயிரின குச்சியத்தை (Bacteria)
ஆய்வுக் கூடத்தில் மைக்கோ பிளாஸ்மா ஜெனிடாலியம், ‘Mycoplasma Genetalium’ என்ற பெயரில் உருவாக்கியுள்ளனர்!
‘‘‘‘Science’’’ என்ற ஏட்டில் உள்ளபடி இந்தவிஞ்ஞானிகள்டாக்டர்கிரேக் வென்ட்டர் (Dr. Craig Venter), கிளேர் ஃப்ரேசர் (Dr. Clare Fraser)
ஆகிய இருவரும் இதுபற்றி விரிவான ஆராய்ச்சியின் மூலம் அதிர வைக்கும் சாதனையைச் செய்துள்ளனர்.
இதுவரை விஞ்ஞானிகளுக்குத் தெரியாத சுமார் 300 ஜீன்கள் என்ற மரபு அணுக்கள் இந்த மைக்கோ பிளாஸ்மா ஜெனிட்டாலியம் என்ற மிகச் சிறிய குச்சியத்தில் உள்ளதைக் கண்டுபிடித்து, செயற்கையான குச்சி யங்கள் (Artificial Bacterium)
மூலம் உயிரினத்தை உற்பத்தி செய்ய முடியும் என்று நிரூபித்துவிட்டனர்!
இதுபற்றி டாக்டர் வென்ட்டர் தெளிவாகக் கூறுகிறார்:
““It would clearly be creating a new species of life that does not exist. I think if we could go down to the point of truly understanding and having one of the formulas of life, and you have to understand that there are thousands of, if not millions of different formulas, it would be a profound break through”
“Once they get through the first barrier of creating life in the lab, scientists propose to use the molecular information to build an organism from Scratch from the basic chemicals upwards”
தமிழாக்கம்:
“இம்முறை, இதுவரை இல்லாத முற்றிலும் புதுவகையான உயிரினத்தை உருவாக்குவது ஆகும்.
இந்த“ஃபார்மூலா”மூலம் உயிரினத்தை புதுமையாக - ஆயி ரக்கணக்கில் (ஏன் மில்லியன் கணக் கில் அவைகள் உண்டு) உள்ள ஜீன்களிலிருந்து தேர்வு செய்து அறிவியலார் உருவாக்குகிறார்கள்.
இந்த விதிமுறைகளில் தேர்ச்சி பெற்றவர்களான விஞ்ஞானிகள் பரி சோதனைக் கூடத்திலேயே இம்மாதிரி உயிரினத்தை இனி எதிர்காலத்தில் உற்பத்தி செய்வார்கள்.
இனிமேல் அடிப்படை ரசாயனப் பொருள்களை வைத்துக்கொண்டே, வேறு எந்தப் பொருளின் துணையும் இல்லாமல் இதைச் செய்து காட்டும் வாய்ப்பு மிகுந்து விடும் என்று வென்ட் டர் கூறுகிறார்.”
‘குளோனிங்’ என்ற முறையில் ‘‘டோலி’’ என்ற ஆட்டுக்குட்டியை நகலாக, அசலிலிருந்துதான் முன்பு உற்பத்தி செய்து விந்தையான சாத னையைச் செய்தனர்.
அது மூலத்திலிருந்து (Original) படிகள் (Copics)எடுப்பதுபோன்ற ஒரு செயல்.
இதுவோ, உயிரற்ற குச்சியப் பொரு ளிலிருந்து உயிர்களை உருவாக்கும் சாதனை என்றால், இனி கடவுளுக்கு என்ன வேலை? கடவுள் கற்பனை என்று கூறும்போது அதற்கு மரணம் எப்படி நிகழ முடியும்? இப்படி ஒரு கடவுளின் மரணம் என்ற தலைப்புத் தந்துள்ளது முரண்பாடு அல்லவா என்று கேட்காதீர்கள்.
ஆதி மனிதர்கள் கடவுளை உற் பத்தி செய்தார்கள்; இப்போது புது மனிதர்கள் “கடவுளை” மரணப் படு குழியில் தள்ளிவிட்டனர். அந்த கற் பனைப் புரட்டு, மரண ஓலமிட்டுக் கொண்டே கல்லறைக்குள் செல்லும்படி வைத்துவிட்டனர்!
இவ்வளவு பெரிய விஞ்ஞானிகள் பரிசோதனைக்கூடங்களில் ஆய்வு செய்து கண்டறிந்தனர்! ஆனால், நமது அறிவு ஆசான் தந்தை பெரி யாரின் “மண்டைச்சுரப்பு” சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பே “இனிவரும் உலகத்தில்” கடவுளுக்கு வேலை இல்லை என்று துல்லியமாகக் கணக் கிட்டு உலகுக்கு அறிவித்துவிட்டது என்னே அவரது ஒப்பற்ற சுய சிந்தனை!
அமெரிக்கப் பகுத்தறிவாளர் இராபர்ட் கிரீன் இங்கர்சால் மிக அருமையாகச் சொன்னார்.
““An honest god is the noblest work of man””
‘‘ஒரு யோக்கியமான கடவுள் என்பது, மனிதனின் உயர்ந்த படைப்பு.’’
21 ஆம் நூற்றாண்டில், அறிவியல் அதை அகிலத்திற்குப் பறைசாற்றுகிற நிலையில், இன்னமும் கடவுளை நம்பும் பரிதாபத்திற்குரியவர்களே, உங்கள் கால்கள் (பகுத்தறிவு) இருக்கும்போது தேவையற்ற ஊன்று கோலை (கடவுள் நம்பிக்கை) ஏன் பிடித்துச் செயற்கையாக நடந்து அல்லல் படுகிறீர்கள்?
ஊன்றுகோலை (Crutches)வீசி எறிந்து பீடு நடைபோடுங்கள். புது உலகம் காணுங்கள்!
கடவுளும், ஆத்மாவும் புதைகுழிக் குள் செல்லுவதைப் பார்த்துப் பூரியுங்கள் - இல்லையேல் குறைந்த பட்சம் புரிந்து கொள்ளவாவது செய்யுங்கள்.
-விடுதலை,7.12.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக