பக்கங்கள்

வெள்ளி, 2 டிசம்பர், 2016

அறிவியல் சிந்தனைகள் 11. வெல்ல முடியாதது எது?


வாழ்வின்ஒவ்வொருஅனுபவத் தையும் நாம் எந்த வயதினராக இருந் தாலும் அதை ஒரு தேர்வு, அறைகூவல் என்றே கருதி இருந்தாலும் தேர்வுக்குச் செல்லுபவர் எவராயினும் எவ்வளவு கவலையோடும், பொறுப்போடும் கட மையாற்றுவார்களோ அவ்வாறு நாம் செய்யப் பழகிவிட்டோமேயானால், எதுவும் நமக்குக் கடினமானதல்ல.

தேர்வில் நாம் ஒரு சில நேரங்களில் தோற்றுப் போய்விட்டால் என்ன? குடியா முழுகிவிடும்? அதோடு வாழ்வா முடிந்துவிட்டது? ஒரு ரயிலைத் தவற விட்டுவிடுவோமேயானால், அதோடு செல்லவேண்டிய பயணமே நின்று போய்விடுமா?

புதுடில்லி, மும்பை மற்றும் பல வட மாநில நகரங்களில் ஆழ்ந்த மூடுபனி காரணமாகப் பல நாட்கள் விமானங்கள்,பயணங்களைரத்துச் செய்யவேண்டியிருந்தது.இத னால்,பலஆயிரக்கணக்கானபயணி களுக்குச் சங்கடம்தான். இதற்காக எவராவது தற்கொலை செய்து கொள்ளுவார்களா?தூக்கில்தொங்கி விட்டார்களா? இல்லையே! பொறுமை யும் வாழ்க்கைக்குத் தேவை. பல நேரங்களில் நம் எதிர்பார்ப்புக்குத் தடைகள் வரத்தான் செய்யும். அவற்றை நாம் திட சித்தத்துடன் எதிர் கொண்டு, அடுத்து என்ன செய்யவேண்டும் என்பதைத் திட்டமிட, எதிர்பாராது நமக்குக் கிடைத்த அந்த ஓய்வைப் பயன்படுத்திக் கொள்ளுவதுதானே அறிவுடைமை?

பலவீனமுற்றவர்கள் இம்மாதிரி நேரங்களில்தான் சகுனம், ஜோதிடம் போன்ற மூட நம்பிக்கைகளுக்குப் பலியாகி விடுகிறார்கள்! எந்த ஒரு தேர்வானாலும் 100-க்கு 100 மதிப்பெண் எப்போதும் பெறுபவராகவே ஒருவர் இருக்க முடியுமா?

‘‘இடுக்கண் வருங்கால் நகுக’’ என்ற வள்ளுவரின் அறிவுரைக்குச் சரியான பொருளே, மிகவும் துணிவுடன் புன் முறுவலுடன் துன்பங்களையும், தோல்விகளையும்கூட எடுத்துக் கொள் ளுங்கள் என்பதுதானே!

சிலருக்குச் சிறுவயதிலிருந்தே தோல்வி மனப்பான்மையில் ஊறி விடும் பழக்கம் ஏற்பட்டு விடுகிறது. ‘‘ஓ அதுவா, நான் எங்கு போனாலும் எனக்குத் தோல்விதான்; அது ‘என் ராசி’’’ என்றெல்லாம் பிதற்றும் பேதை மையிலிருந்து  நாம் விடுதலை அடையவேண்டும்.

நம்மால் முடியும்; எதுதான் நம்மால் முடியாது? எல்லாமே முடியும் என்று கொஞ்சம் அதிகமாகச் சிந்தித்துக் கவனமாகச் செயல்பட்டு, கடும் உழைப்பைத் தந்துவிட வேண்டும்.

‘‘அதிர்ஷ்டம் எனக்கு எப்போதும் கிடையாதுங்க’’ என்று புலம்பும் ஆசாமி களைப் பார்த்தால், நாம் மிகவும் பரிதாபப்பட்டே ஆகவேண்டும்?

‘திருஷ்டம்‘ என்றால் பார்வை ‘அதிருஷ்டம்‘ என்ற சமஸ்கிருத - வடமொழிச் சொல்லுக்கு - பார்வையற்ற நிலை ‘குருட்டுத்தனம்‘ என்பதே பொருள்.

இப்போது நீங்கள் எவராவது ‘குருட்டுத்தனமானவராக’ இருக்க வேண்டும் என்று விரும்புவீர்களா?

கடும் உழைப்பினால் அல்லது கூரிய புத்தியின் திறத்தினால் பெற்றுள்ள சாதனையை - வெற்றியை - நீங்கள் ஏன் தன்னம்பிக்கையோடு அணுகாமல், அது உங்கள் அறிவுக்கும், உழைப்பிற்கும் திட்டமிட்ட செயலுக்கும் குறி வைத்து எய்தியதின் பயனாகக் கிடைத்தது என்று கருதாமல், ‘விதி’ ‘அதிர்ஷ்டம்‘, நல்ல காலம், யோகம் என்று கூறி, 21 ஆம் நூற்றாண்டுக்கு வேகமாக முன்னோக்கிச் செல்லவேண்டிய நீங்கள், 2 ஆம் நூற்றாண்டுக்கு ஏன் பின்னோக்கிச்செல்லுகிறீர்கள்?இரு பால் இளைஞர்களும் நல்ல முற் போக்குச் சிந்தனையாளர்களாகவும், கடும் உழைப்பாளர்களாகவும், எதை யும் ஏற்கும் மனப்பக்குவம் - பயிற்சி உடையவர்களாகவும் ஆகி வளர்ந்து வந்தால், தோல்வி அவர்கள் பக்கமே வர அஞ்சும்!

வெல்ல முடியாத போரிலும் வென்று விடுவார்கள்!

செலவழித்த தொகையைப் பற்றியா மனிதர்கள் எண்ணிக்கொண்டு சும்மா இருக்கிறார்கள்? இல்லையே, மேலும் சம்பாதிக்கவேண்டும் என்றுதானே ஒவ்வொருவரும் முயற்சிக்கின்றனர்!

அதுபோலச் சென்றவைகளைப் பற்றி - செலவாகக் கருதுங்கள் - பல நேரங்கள் அந்த அனுபவங்களைப் பாடமாக்கிக் கொள்ளுங்கள். கசப்பான அனுபவங்களை, நமது வளர்ச்சிக்கான உரங்கள் அவை என்றே கருதி மேலும் துணிவுடன் உங்கள் அடிகளை நம் பிக்கையோடும், உறுதியோடும் எடுத்து வையுங்கள்.

வெற்றியை யாராலும் தடுத்துவிட முடியாது!

- கி.வீரமணி

-விடுதலை'2.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக