வாழ்வியல் சிந்தனைகள்

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் கட்டுரைகள்

பக்கங்கள்

  • முகப்பு
அப்துல் கலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அப்துல் கலாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 9 டிசம்பர், 2021

அப்துல்கலாம் என்ற அதிசய மாமனிதர்!



  October 15, 2021 • Viduthalai

மக்கள் குடிஅரசுத் தலைவராக நம் நாட்டில் ஆட்சி புரிந்த மேதகு ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் அவர்களது பிறந்த நாள் இன்று!

இன்னும் பல ஆண்டு காலம் வாழ்ந்து வையத்தை வாழ வைக்க உழைத்து நம்மை உயர்த்தவிருந்த உத்தமரை, இயற்கையின் கோணல் புத்தி காரணமாக நாம் இழந்தோம். இதற்குமுன் ஆட்சித் தலைவர்கள் பலர் வெறும் காட்சித் தலைவர்களாக மட்டுமே இருந்தவர்கள்.

பதவிச் சிம்மாசனம் மட்டுமே அவர்களுக்கு உரியது.

ஆனால் நம் அய்யா கலாம் அவர்களது மனிதநேயத்தாலும், களங்கமற்ற கடமை உணர்வாலும் மக்களின் இதயச் சிம்மாசனத்தில் இடம் பெற்ற தொண்டறத்தின் தூய உருவம் அவர்!

ஏழ்மையும், வறுமையும் அவரை அவரது இலக்கிலிருந்து ஒதுக்கிடவில்லை; அவர்தம் கடும் உழைப்பும், போதிய தன்னம்பிக்கையும் அவரை நாளும் உயர்த்தியது!

"இராமேசுவரத்தில் செய்தித்தாள் விநியோகப் பையனாக" உழைத்து  அதில் கிடைத்த சொற்ப வருவாயைக் கொண்டு தனது படிப்பை என்ஜினியரிங் வரை முடித்தார். இந்தியாவின் சிறந்த விஞ்ஞானி என்று பெயர் பெறும் அளவுக்கு அவரது நுண்மா நுழைபுலம், அவரது அயராத உழைப்பு, தளராத தன்னம்பிக்கை அவருக்குக் கை கொடுத்தது!

இந்தியாவிற்கு அணுக்குண்டு தயாரிக்கும் ஆற்றல் உண்டு என்று உலகுக்குக் காட்ட காரணமான தொழில் நுட்ப மேதையாக அவர் வளர்ந்தார்! உயர்ந்தார்!!

எங்கே உழைப்பும், உளப்பூர்வ உறுதிப்பாடும், பங்கேற்பும் இருந்தாலும் அவர்களை ஊக்கப் படுத்தி, மேலும் உழைத்து வரலாறு படைக்க அவர் ஒரு மகத்தான செயலூக்கியாகவே இறுதிவரை திகழ்ந்தார்.

வறுமையை உலகின் 300 கோடி மக்களிடையே எப்படி ஒழிப்பது என்பதுபற்றி அவரது வாழ்வின் இறுதிப் பகுதியில் 'Target 3 Billion' - என்ற நூலில் எழுதியதில் அவர் உலகெங்கும் உள்ள கிராம - நகர பேதத்தை ஒழித்தலே - அதற்கான பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்தி, ஒரு புதுஉலகம் காண வழி வகை செய்யும் என்று உணர்த்தினார்!

உலகமே தன் குடும்பம்; அனைத்து மக்களே தன் உறவுக்காரர்கள் என்று கருதி அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க ஆவன செய்தலே சிறந்த ஆட்சிக்குரிய இலக்கணம் என்று கூறத் தவறாதவர்.

தஞ்சையில் உள்ள நமது பெரியார் - மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக் கழகத்திற்கு குடிஅரசுத் தலைவராகவும், அப்பொறுப்பிலிருந்து விடுபட்ட நிலைமையிலும்கூட ஆறுமுறை வந்து நம்மை இடையறாது ஊக்கப்படுத்திய உயர்தனிச் செம்மல் அவர்.

'புரா' 'Pura - Providing Urban Amenities for Rural Areas  என்ற வறுமை ஒழிப்புத் திட்டத்தில் நமது வல்லம் பல்கலைக் கழகம் 69 கிராமங்களைத் தத்து எடுத்து அவர்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம், மின்னணு வளர்ச்சி, பொருளா தார தேவைகள் பற்றி 4 தொடர்பு அம்சங்கள் என நாம் பெரியாரின் சிந்தனைகளை செயலாக்க அவர் கூறும் முன்பே, 1946இல் பெரியார் கூறியது கண்டு அதிசயப் பட்டதோடு, 'பெரியார் புரா' என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்!

உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் அங்கே நமது பல்கலைக் கழகத்தின் 'பெரியார் புரா' 'Periyar Pura' திட்டத்தை பற்றி எடுத்துக் கூறினார் - பல நாட்டு பாராளுமன்ற உரைகளில்!

'Sir I am Your International Marketing Agent'

"அய்யா, நான் உங்களது சர்வதேச சரக்கு 'கல்வி' விற்பனை முகவர்" என்று சிரித்துக் கொண்டே கூறி நம்மை மேலும் மேலும் ஊக்கப்படுத்திய உத்தமர்! உழைப்பின் உச்சம்!!

"பிறப்பது ஒரு சம்பவம்தான் என்றாலும் இறப்பதுதான்  சரித்திரமாக அமைய வேண்டும் என்ற அளவுக்கு வாழ்ந்து காட்டுங்கள்" என்ற அவரது கூற்றே அவருக்கு நாம் காணிக்கையாக்கும் பாராட்டு ஆகும்!

கலாம் ஒவ்வொரு இளைஞனின் ஊக்கத்திலும் வாழ்கிறார்! வாழ்கிறார்!!


இடுகையிட்டது parthasarathy r நேரம் 6:24 AM கருத்துகள் இல்லை:
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
லேபிள்கள்: அப்துல் கலாம்
பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

தமிழர் தலைவர், ஆசிரியர்

தமிழர் தலைவர், ஆசிரியர்
கி.வீரமணி

ஜப்பானில் தமிழர் தலைவர்

ஜப்பானில் தமிழர் தலைவர்
உலகின் இரண்டாவது பெரிய புத்தர் சிலை முன்பாக

Translate

Powered By Blogger

மொத்தப் பக்கக்காட்சிகள்

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

  • பொது வாழ்வில் உள்ளோர் கற்க வேண்டிய பாடங்கள் இவை!
    இன்று திராவிடப் பெருந்தகையாள ரும், தென்னிந்திய நல உரிமைச்சங்கம் ஷி.மி.லி.தி. என்ற நீதிக்கட்சியைத் தோற்று வித்தவர்களில் ஒருவருமான த...
  • சில நேரங்களில் சில மணமக்கள்!
    திருமணங்களை வைதீகர்கள் நாள், நட்சத்திரம், ஜோஸ்யம் இவை களையெல்லாம் பார்த்துதான் நிச்சயிக்கின்றனர். இதில் வர்க்க பேதமின்றி, ஏழை, பணக்கார...
  • கலைஞரின் பார்வையில் வாளேந்திய வீரத்தாய் இதோ!
    கடலூரில் அய்யாவின்மீது செருப்புப் போடப்பட்ட இடத்தில்  எழுப்பப்பட்ட சிலை அருகே - நெருக்கடி காலம் முடிந்து,  பெரியார் நூலகம் திறப்பு விழா 1...
  • கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது? (1) & (2)
      கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது?       August 07, 2021  • Viduthalai " அமைச்சர்   பொறுப்பை   ஏற்ற   பிறகு ,  எனக்   கேற்படுகிற ...
  • கொலஸ்ட்ரால் - கவலை வேண்டாம்! - புதிய தகவல்
    ‘கொலஸ்ட்ரால்’ என்ற கொழுப்பு மிகுதிச் சத்து நம் ரத்தத்தில் கூடுதலாகச் சேருவதால், பலவித உடல் நோய் களுக்கு அது வழிவகுக்கும் ஆபத்து என்ற கருத...
  • கவிதை நடையில் ஒரு நூல்!
    பகுத்தறிவுப் பகலவன் என்று அனைவராலும் போற்றப்படும் தந்தை பெரியார் அவர்களைப் பற்றி - அண்மைக் காலத்தில், தெரிந்து கொண்டோரும், அறிந்து கொண்டோ...
  • தோழர் பாண்டியன் படைத்த அமுது!
    நேற்று முன்னாள் (4.4.2018) ஆய்வறிஞ ரான மானமிகு தோழர் புலவர் பா. வீரமணி அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மானமிகு தோழர் தா. பாண்...
  • தமிழிசைப் போராளி எம்.எம். தண்டபாணி தேசிகர் - என்றும் வாழ்பவர்!
      August 27, 2021  • Viduthalai தமிழ்நாட்டில்   தமிழில்   பாடுவதற்கும் ,  அதை   இசை   மேதைகள்   அங்கீகரிப்பதற்குமே   ஓர்   நீண்ட ,  நெடிய   ...
  • எல்லாமே எல்லார்க்கும் - புரிந்துகொள்வோம்!
    தமிழ் மொழி, இலக்கியம் - இவைகளுக்கு மிகப் பெரிய தொண்டாற்றி, மறைந்தும் மறையாதவர்களாக, தலைமுறை தலைமுறைகளாக வாழ்ந்துவரும் ‘சாவா மாமனிதர்கள்’ -...
  • பாடையது ஏறினும் ஏடது கைவிடேல்!
    புத்தகங்களைப் படித்தாலும்கூட அதனை மீண்டும் மீண்டும் படிக்கும் போதுதான் முழுப் பொருள் நமக்குக் கிடைக்கும். மேலெழுந்த வாரியாகப் படித...

லேபிள்கள்

  • அகம்
  • அகரமுதலி
  • அச்சம்
  • அண்ணா
  • அப்துல் கலாம்
  • அம்பேத்கர்
  • அமெரிக்கா
  • அமைச்சர்
  • அறக்கொடை
  • அறிவியல்
  • அறிவு
  • அறிவுரை
  • அன்பு
  • அனுபவம்
  • ஆசிரியர் கி.வீரமணி
  • ஆப்பிள்
  • ஆய்வு
  • ஆய்வுரை
  • ஆளுமை
  • இடஒதுக்கீடு
  • இணையம்
  • இதயம்
  • இதழ்கள்
  • இரத்த ஓட்டம்
  • இராகுல்
  • இலக்கியம்
  • இலக்கு
  • இளமை
  • இளைஞர்கள்
  • இன்ப வாழ்வு
  • இன்பம்
  • ஈகம்
  • ஈரோடு
  • உங்களில் ஒருவன்
  • உடல்
  • உடல் நலம்
  • உடல் நலன்
  • உடற் கொடை
  • உணவு
  • உணவு நிறுவனம்
  • உழைப்பு
  • உறவு
  • ஊர்
  • எதிரி
  • எம் ஆர் ராதா
  • எழுத்து பணி
  • எளிமை
  • எளிய வாழ்வு
  • என் எஸ் கிருஷ்ணன்
  • ஏகலைவன்
  • ஏமாற்றம்
  • ஏமாற்று
  • ஒழுக்கம்
  • ஒற்றுமை
  • ஓய்வு
  • க. இராசாராம்
  • கசப்பு
  • கட்டளை
  • கடிதம்
  • கண்
  • கதை
  • கருவூலம்
  • கரோனா
  • கல்வி வளாகம்
  • கலைஞர்
  • கி.வீரமணி
  • கிரியா
  • குடந்தை
  • குடற்புண்
  • குடியிருப்பு
  • குடும்பம்
  • குழந்தைகள் இல்லம்
  • குன்றக்குடி அடிகளார்
  • கேரளா
  • கேள்வியும் பதிலும்
  • கோபம்
  • கோலி சோடா
  • சத்துணவு
  • சிக்கனம்
  • சிங்கப்பூர்
  • சிரிப்புத் தன்மை
  • சிறந்த மனிதர்
  • சிறுநீரகம்
  • சுரதா
  • சுற்றுப்பயணம்
  • சுற்றுலா
  • சூழ்ச்சி
  • செயலலிதா
  • செல்வம்
  • செவிலியம்
  • செவிலியர்
  • சேமிப்பு
  • சேவை
  • டாக்டர்
  • த.பாண்டியன்
  • தங்கதுரை
  • தண்டபாணி தேசிகர்
  • தமிழ் அகராதி
  • தமிழிசை
  • தலாய் லாமா
  • தன்முனைப்பு
  • தனிமை
  • தா.பாண்டியன்
  • திராவிடர் - ஆரியர்
  • திருமணம்
  • திருவிக
  • திருவையாறு
  • திறமை
  • தூக்கம்
  • தேர்தல்
  • தொண்டறம்
  • தொண்டு
  • தொப
  • தொழில்
  • தோல்வி
  • தோழர் பாலன்
  • நகைச்சுவை
  • நட்பு
  • நன்றி
  • நாராயணகுரு
  • நாவலர்
  • நிகழ்காலம்
  • நிறைவாழ்வு
  • நினைவுகள்
  • நீதியரசர்
  • நீரிழிவு
  • நூல்
  • நூல்கள்
  • நூலகம்
  • நூறு வயது
  • நெஞ்சுவலி
  • நெருப்பு
  • நோயற்ற வாழ்வு
  • நோயெதிர்ப்பு
  • பகத்சிங்
  • பசி
  • பண்பு
  • பறப்போம்
  • பாதுகாப்பு
  • பாரதிதாசன்
  • பாராட்டு
  • பிணி
  • பில்கேட்ஸ்
  • புகழ் வேட்டை
  • புத்தகக் கடை
  • புத்தகம்
  • புத்தம்
  • புத்தர்
  • புத்தாண்டு
  • புயல்- பூகம்பம்
  • புரட்சி
  • புரட்சிக் கவிஞர்
  • புரட்சிக்கவிஞர்
  • புறம்
  • பூனை
  • பெண்
  • பெண்கள்
  • பெரியார்
  • பெரும் தொற்று
  • பெரும் பேறு
  • பெற்றோர்
  • பொக்கிஷங்கள்
  • பொது வாழ்க்கை
  • பொய்
  • பொருள்
  • பொருளாதாரம்
  • போதை
  • போலி அறிவியல்
  • போலி போலீஸ்
  • மகளிர்
  • மகிழ்ச்சி
  • மண்டேலா
  • மணியம்மையார்
  • மதம்
  • மரபணு ஆய்வு
  • மரம்
  • மருத்துவம்
  • மறதி நோய்
  • மன உறுதி
  • மனம்
  • மனவளம்
  • மனித நேயம்
  • மனிதகுலம்
  • மனிதநேயம்
  • மனிதம்
  • மாமனிதர்
  • மார்க்சு
  • மாரடைப்பு
  • மின் பதிவு
  • முதியோர்
  • முதிர்ச்சி
  • முதுமை
  • முதுமையாளர்
  • முரசொலி
  • மூட நம்பிக்கை
  • மூடநம்பிக்கை
  • மூடுபனி
  • ராகுல சாங்கிருத்தியாயன்
  • வ.உ.சி
  • வ.ரா.
  • வகுப்பு
  • வரலாறு
  • வரவு-செலவு
  • வலி
  • வழிகாட்டி நூல்
  • வன்மம்
  • வா.மு. சேதுராமன்
  • வாக்கு
  • வாழ்க்கை
  • வாழ்வியல்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • வாழ்வியல் சிந்தனைகள்ஒ
  • விஞ்ஞானிகள்
  • விவேக்
  • வெற்றி
  • வெறுப்பு
  • வைக்கம்
  • வைரசு
  • ஜப்பான்
  • ஜாதி
  • ஜோதிபா பூலே
  • ஜோபைடன்
  • ஸ்டாலின்

என்னைப் பற்றி

parthasarathy r
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ▼  2026 (11)
    • ▼  செப்டம்பர் (4)
      • உணவு நிறுவன வரலாறு – உழைப்பின் மேன்மைக்கு ஒரு வழிக...
      • உணவு நிறுவன வரலாறு – உழைப்பின் மேன்மைக்கு ஒரு வழிக...
      • வாழ்வில், குறிப்பாக பொதுத் தொண்டில் கற்க வேண்டிய...
      • நாராயணகுரு குறித்த புதிய ‘திறவு’கள்!
    • ►  ஆகஸ்ட் (7)
  • ►  2024 (3)
    • ►  ஜூன் (3)
  • ►  2023 (9)
    • ►  அக்டோபர் (5)
    • ►  பிப்ரவரி (4)
  • ►  2022 (22)
    • ►  ஜூலை (15)
    • ►  மே (5)
    • ►  ஜனவரி (2)
  • ►  2021 (51)
    • ►  டிசம்பர் (13)
    • ►  அக்டோபர் (10)
    • ►  ஆகஸ்ட் (6)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (10)
    • ►  ஜனவரி (3)
  • ►  2020 (63)
    • ►  டிசம்பர் (32)
    • ►  நவம்பர் (9)
    • ►  அக்டோபர் (5)
    • ►  மே (1)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (2)
    • ►  ஜனவரி (6)
  • ►  2019 (57)
    • ►  டிசம்பர் (5)
    • ►  நவம்பர் (15)
    • ►  அக்டோபர் (3)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (8)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (8)
    • ►  மே (3)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (4)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (2)
  • ►  2018 (54)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (7)
    • ►  செப்டம்பர் (7)
    • ►  ஆகஸ்ட் (4)
    • ►  ஜூலை (3)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (6)
    • ►  ஏப்ரல் (2)
    • ►  மார்ச் (8)
    • ►  பிப்ரவரி (2)
  • ►  2017 (66)
    • ►  டிசம்பர் (2)
    • ►  நவம்பர் (6)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஆகஸ்ட் (3)
    • ►  ஜூலை (2)
    • ►  ஜூன் (3)
    • ►  மே (10)
    • ►  ஏப்ரல் (5)
    • ►  மார்ச் (3)
    • ►  பிப்ரவரி (1)
    • ►  ஜனவரி (25)
  • ►  2016 (103)
    • ►  டிசம்பர் (30)
    • ►  நவம்பர் (26)
    • ►  அக்டோபர் (20)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (11)
    • ►  மே (10)
    • ►  பிப்ரவரி (4)
    • ►  ஜனவரி (1)
  • ►  2015 (71)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (8)
    • ►  அக்டோபர் (5)
    • ►  செப்டம்பர் (6)
    • ►  ஆகஸ்ட் (24)
    • ►  ஜூலை (5)
    • ►  ஜூன் (7)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.