பக்கங்கள்

முதியோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முதியோர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 19 ஜனவரி, 2021

60-65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் கவனத்திற்கு... 12 அன்பு கட்டளைகள்


                                                      டில்லி ‘எய்ம்ஸ்‘ (AIMS) மருத்துவமனையின் இயக்குநர் சமூக வலைதளங்களுக்குப் பயன் படும் வகையில் அனுப்பியுள்ள, 60 முதல் 65 வயதுக்கு மேற்பட்ட இருபால் (இப்போது முப் பால் என்றும் அழைத்துக் கொள்ள வேண்டும்) அன்பர்களுக்கு முதுமை வாழ்விற்கு பயன்படக் கூடிய சில முக்கியமான அறிவுரைகள்.

இதனை நமது வாசக நேயர்கள் படித்துப் பயன்பெற வேண்டியே ஒரு வாழ்வியல் கட்டுரையாக எழுதுகிறோம்.

1. குளியல் அறைக்குச் செல்லும்போது வீட்டில் (இது கழிப்பறைக்கும் கூடப் பொருந்தும்) கதவை சும்மா சாத்தி வைங்க - தாழ்ப்பாள் போடவேண்டாம்.

2. வீட்டின் தரையை தண்ணீர் கொண்டு மற்றவர்கள் துடைத்து சுத்தப்படுத்தும் பணி நடக்கும் போதோ, அல்லது அந்த ஈரம் காயுமுன்போ அத்தரையில் நடக்க வேண்டாம். அதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.

3. ஸ்டூல், நாற்காலி, பெஞ்ச் போன்றவற்றின் மீது ஏறி, பொருட்களை எடுப்பது, சுத்தம் செய்வது, துணிகளை காயப் போடுவது போன்ற வேலைகளை தவிர்க்க வேண்டும்.

4. கார் இருந்தால் தனியாக ஓட்டவே கூடாது. கூட யாராவது கண்டிப்பாக இருக்க வேண்டும்.

5. மாத்திரை, மருந்துகளை வேளா வேளைக் குத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் (கூடுமானவரை அவரவர் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து, மாத்திரைகளை அவர்களே வேளை தவறாமல் எடுத்துக் கொள்ளும் பழக் கம் சிறப்பானது. அதுகூட முதுமையில் பல மாத் திரைகளை எடுத்துக் கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தியிருப்பார்கள் - வைட்டமின் மாத் திரை உட்பட. அவற்றை தனியே எடுத்து வைத்து, ஒரு முறை சரி பார்த்து, எதுவும் விட்டுப் போகாமல் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம். தனித்தனியே எடுக்கும்போது நமக்கே சிற்சில வேளைகள் எடுத்தோமா இல்லையா என்ற சந்தேகமும், மறதியும் ஏற்படுவதை, மனக் குழப்பத்தைத் தவிர்க்க அது பெரிதும் உதவும்).

6. உங்களுக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதைச் செய்து மகிழ்ச்சியோடு இருங்கள். அதை யாருக்காகவும், காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம்.

7. வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றால் தனியாகச் செல்ல வேண்டாம். தெரிந்த துணை யுடன் செல்லுங்கள் (புதியவர்கள் உதவ அனு மதிக்காதீர், பாதுகாப்பாகச் சென்று திரும்ப அந்த அறிமுகத் துணை பயன்படும்).

8. வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அறிமுகமில்லாதோர் யாராவது வந்தால் கூடிய வரை அச்சூழலை தவிர்க்கவும் - அல்லது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவும்.

9. கூடியவரை, படுக்கையறை, குளியலறை, கழிப்பறை ஆகியவற்றில் காலிங்பட்டன் (Calling Button) அவசியம். அசாதாரண திடீர் நெருக்கடி - சூழலில் மற்றவரை அழைப்பதற்கு அது பயன்படும்.

10. சைக்கிள் முதல் கார் வரை அனைத்து வாகனங்கள் ஓட்டுவதை முடிந்த அளவு தவிர்த் தல் நல்லது.

11. வாழும் காலத்தில் உடல் நலம், மன அமைதி, உறவின் நண்பர்கள் தொடர்பு மற்றும் துணை போன்றவை மிகவும் முக்கியம். மிக மிக அவசியம். எல்லோரிடமும் இனிமையோடு பழ குங்கள். (எக்காரணம் கொண்டும் பொறுமையை இழக்காதீர்).

12. கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் வேண்டாம். நிகழ்காலம் உன்னத மானது. அதை முழுமையாக, மகிழ்ச்சியாக, இனிமையாக அனுபவித்து வாழுங்கள்.

(பிறரின் நிறை - குறை இவற்றில் குறையைப் பெரிதுபடுத்தாமல் நிறையை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். 60 மதிப்பெண் பெற்றவர் முதல் வகுப்பு பெற்றவர் ஆவார். விடுபட்ட 40 மதிப் பெண் பெறவில்லையே என்று கவலைப்பட்டா மகிழ்ச்சியை துறப்பது? அது விவேகம் அல்ல!)

(நன்றி: டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன்)

அடைப்புக் குறிகளுக்குள் இருக்கும் கருத்து கள் நம்மால் எழுதப்பட்டவை.

திங்கள், 21 டிசம்பர், 2020

65 வயது தாண்டியவர்களே - இதை தெரிந்து கொள்ளுங்கள்!



வழமைபோல டாக்டர் எஸ்.இராமச்சந் திரன் அவர்கள் “கட்செவி” (Whatsapp) மூலம் அனுப்பிய ஒரு சுவையான தகவல் இதோ:


“65 வயதைத் தாண்டியவர்கள் உலக மக்கள் தொகையில் வெறும் 8 சதவிகிதம் பேர் தானாம்'' - வியப்பாக இல்லையா?


(யார் இத்தகவலைச் சேகரித்து - சமூக வலைதளங்களில் வெளியிட்டாரோ அவ ருக்கு உங்கள் நன்றியைக்  கூறிக் கொள்ளுங் கள்!) காரணம் 65 வயதைத் தாண்டியவரான நேயர்களே!  நீங்கள்தான் எவ்வளவு அரிய வாய்ப்பு பெற்றவர்கள் என்பதை எண்ணி மகிழுங்கள்!


இந்த பூமிப் பந்தில் உள்ள மக்கள் தொகை 780 கோடி மக்கள் ஆகும்! (7.8 பில்லியன்) பலருக்கும் இதுபெரிய எண்ணிக்கை என்ற அளவில் மட்டும்தான் தெரியும்.


இதைக் கண்ணுற்ற சிலர், இதனை மொத்த எண்ணிக்கை 100 ஆகச் சுருக்கி அதனை வெவ்வேறு விதமான புள்ளி விவரமாக நமக்குத் தந்து சுவையூட்டி உள்ளார்கள்!


எளிதில் எவரும் புரிந்து கொள்ள உதவும் இந்த ஏற்பாடு! - இல்லையா?


மொத்தம் 100 பேர் - இந்த பூமிப் பந்தில் இருக்கிறவர்கள் என்று கணக்கிட்டுக் கொண்டு பார்த்தால் - பல்வகைப் பிரிவுகளின் எண்ணிக்கையை எளிதாகப் புரிந்து கொள்ள இதோ:


மக்களின்


வகைப் பிரிவுகள்


அய்ரோப்பாவில் உள்ளோர் - 11 பேர்


வட அமெரிக்காவில் - 5 பேர்


தென் அமெரிக்காவில் - 9 பேர்


ஆப்பிரிக்காவில் வாழ்வோர் - 15 பேர்


ஆசியாவில் இருப்போர் - 60 பேர்


இதில்,


49 பேர் கிராமப்புறங்களில் வாழுகின்றனர்.


51 பேர் நகரங்களில் வாழும் நகர வாசிகள்!


77 பேருக்குச் சொந்தமாக வீடு உண்டு.


23 பேருக்கு வாழ இடமில்லாதவர்கள்.


அதில்,


உணவு முறை


21 பேர் அற்புதமாக போஷிக்கப்பட்ட புளியேப்பக்காரர்கள் (over-nourished).


63 பேர் முழுமையாக சாப்பிடுபவர்கள்.


15 பேர் மிகக் குறைவான அளவுக்கு ஏற்ற உணவு அற்றப் பசியேப்பகாரர்கள்! (under-nourished)


ஒரு நபர் ஒரு வேளை சாப்பாடு மட்டுமே சாப்பிடுபவர். அடுத்த வேளை சாப்பாடு கிட்டாதவர்.


வாழ்வாதாரம் - வாழ்க்கைச் செலவு.


48 பேர் அன்றாட வருமானம் 2 அமெரிக்க டாலருக்கும் கீழே!


மற்றும் 100 பேரில்,


87 பேர் சுத்தமான குடிநீர் வசதி கிடைக் காதவர்கள்.


13 பேர் அந்த குடிநீருக்கான வாய்ப்பு இல்லை (கிட்டாதவர்கள்).


75 பேர் கைத்தொலைபேசி உள்ளவர்கள்.


25 பேரிடம் கைப்பேசி இல்லாதவர்கள் (வசதி இல்லாதவர்கள்)


இதில்,


30 பேருக்கு இணைய வசதி உண்டு


70 பேருக்கு அந்த இணையவசதி (Online) இல்லை (தேடாதவர்களும் கூட!)


கல்வி


7 பேர்தான் பல்கலைக்கழகப் படிப்பு பெற்றவர்கள்.


மற்றும் 93 பேர் கல்லூரிக்கே போகாத வர்கள்!


83 பேருக்கு எழுதப் படிக்கத் தெரியும்.


17 பேர் தற்குறிகள் - எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்


மதங்கள் எண்ணிக்கையைப் பார்ப்போமா?


கிறித்தவர்கள் - 33 பேர்


முஸ்லீம்கள் - 22 பேர்


இந்துக்கள் - 14 பேர்


பவுத்தர்கள் - 7 பேர்


மற்ற மதத்தவர் - 12 பேர்


மத நம்பிக்கை அற்றவர் - 12


வயது கணக்குப் பார்ப்போமா?


14 வயதுக்கு குறைவான வாழ்வு பெற்ற வர்கள் - 26 பேர்


15 - 64 வயதுக்கும் இடையே வாழ்பவர்கள் - 66 பேர்


65 வயதுக்கு மேற்பட்டு வாழ்பவர்கள் - 8 பேர்


இப்போது சற்று கண்ணை மூடிக்கொண்டு ஒரு கணம் யோசியுங்கள் - சிந்தியுங்கள்!


சொந்தவீடு,


முழுச்சாப்பாடு,


தூய்மையான குடிநீர்,


கைத் தொலைபேசி,


இணையத் தொடர்பு,


கல்லூரிக்கும் சென்றவர் என்ற வாய்ப்பு


- இவை அனைத்தும் உடையோர் 7 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே!


இதில் 100 பேரில் 65 வயதைத் தாண்டி வாழும் 8 சதவிகிதம் பேரில் நீங்களும் ஒரு வர் என்று அறிந்து - மகிழ வேண்டாமா?


கிடைத்த வாய்ப்பை நன்கு பற்றிக் கொண்டு, தானும் வாழ்ந்து, பிறருக்கும் பயன் படக்கூடிய வாழ்க்கையாக நமது இந்த நிறை வாழ்க்கையைப் பயன்படுத்தி மகிழ்ச்சியுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டாமா?


64 வயது வருவதற்கு முன்பே, இந்த உலகை விட்டு மறைந்த 92 பேரில் ஒருவராக நாம் இல்லாதபோது, வருத்தமும், கவலையும் ஏன்? எஞ்சிய வாழ்க்கை இன்பத்துடன் இருக்க வேண்டாமா?


அதற்கு ஒரு சிறிய வழி (நாளை சொல்கி றேன்).


பிறருக்குத் தொண்டு செய்க!


பிறருடன் பகிர்ந்து கொள்க!!


மகிழ்ச்சிதானே ஊற்றாகக் கிளம்பும்!!!


முதியோர்களின் முக்கிய கவனத்துக்கு...



முதுமை என்பது எப்படி தவிர்க்கப்பட முடியாததோ அப்படித்தான் முதிய வயதில் நோய் எதிர்ப்புச் சக்தி வயது ஏற, ஏற - ஆண்டுகள் உயர, உயர குறைந்து எதிர் விகிதாச்சாரத்தில் இருக்கவே செய்யும். இது இயற்கை. ஆனால் போதிய மருத்துவக் கவனம் - முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். மனந்தளர்ந்து விட வேண்டாம்.



50 வயதுக்கு மேற்பட்ட இரு பிரிவினர் களும் நிமோனியா போன்ற காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு தடுப்பூசி ஒன்றை ஒரே முறை போட்டுக் கொண்டால் அதன் பிறகு அந்த பயம் தேவையே இல்லை என்பது மருத்துவர்கள் கூற்றாகும்.


முதியோருக்கான நலம் பற்றி மிகவும் கவலை எடுத்துக் கொண்டு அவர்கள் நலப் பாதுகாப்பாளராகவும், அதை ஒரு தொழிலாக அல்ல-தொண்டாக, தொண்டறமாகச் செய்து வருபவர் சிறந்த மனித நேயரான மருத்துவ மாமனிதர் டாக்டர் வி.எஸ்.நடராஜன் அவர் கள் ஆவார்கள்.


அவர் முதியவர்கள் எப்படி கவனத்துட னும், பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அளித்துள்ள விளக்கம் ஒரு நாளேட்டில் வெளிவந்துள்ளது (‘தினத்தந்தி‘, 29.10.2020). அதனை அப்படியே தருகிறோம் - விளக்கம் ஏதும் தேவையில்லை ஆதலால் -


நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள


முதியோர்களுக்கு ஏன் தடுப்பூசி போட வேண்டும்?


டாக்டர் வி.எஸ்.நடராஜன் விளக்கம்


நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முதியோர்களுக்கு ஏன் தடுப்பூசி போட வேண்டும் என்பதற்கு டாக்டர் வி.எஸ்.நடராஜன் விளக்கம் அளித்துள்ளார்.


முதியோருக்கான நோய்கள் மற்றும் அதற்கான தடுப்பூசி குறித்து சென்னை முதியோர் நல டாக்டர் வி.எஸ்.நடராஜன் கூறியதாவது:


முதுமை கால நோய்கள்


நோய் தடுப்பு என்றால் குழந்தைகளுக்கு மட்டும் தான் என்ற காலம் போய், முதியவர் களுக்கும் உண்டு என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. நமது உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி வயது ஆக ஆக, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டு வருகிறது. முக்கியமாக பாக்டீரியா, வைரஸ் மற்றும் பாரசைட் போன்ற தொற்றுக் கிருமிகளி லிருந்து நமது உடலை நோய் எதிர்ப்பு சக்தி பாதுகாக்கிறது. இன்புளூயன்ஸா, நிமோ னியா, காசநோய், பூஞ்சை காளான், நீர்த் தாரையில் ஏற்படும் தொற்று நோய்கள் ஆகியவை முதுமை காலத்தில் வரக்கூடிய முக்கிய நோய்கள் ஆகும். தோல் மிகவும் மிருதுபடுவதால் சுலபமாக தோல் சிராய்ப்பு அல்லது புண்கள் ஏற்படலாம். ஆண்களுக்கு பிராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினால் சிறுநீர்ப் பையில் நீர் தேங்கி பூச்சித் தொல்லைகளுக்கு வழி வகுக்கலாம்.


தடுப்பூசி


பெண்களுக்கு ஹார்மோன் குறைவினால் பிறப்புறுப்புகளில் வறட்சி ஏற்பட்டு பூச்சி தொல்லைகள் வர வாய்ப்பு உண்டாக்கலாம். எனவே முதுமைக்காலத்தில் நலமாய் வாழ சீரான உணவு முறையும், உடற்பயிற்சியும் எப்படி அவசியமோ அதுபோல தடுப்பூசியும் அவசியம். இன்புளூயன்ஸா இது வைரஸ் கிருமியினால் ஏற்படும் ஒரு தொற்று நோய். இந்த நோய் முக்கியமாக குளிர் காலத்தில் தான் தாக்கும். இதற்காக தடுப்பூசி ஆண்டிற்கு இருமுறை போட்டுக் கொள்வது நல்லது. பக்க விளைவுகள் கிடையாது. ஆஸ்துமா, நீரிழிவு நோய், இருதய நோய், புற்று நோய் மற்றும் சிறுநீரக தொல்லை உள்ளவர்கள் போட்டுக் கொள்வது மிகவும் நல்லது.


முதுமையில் நோயின் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களுக்கு நிமோனியா மரணத் தைக் கூட விளைவிக்கும். 50 வயதைக் கடந்தவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வதால் நிமோனியா, சளி, காய்ச்சல் வராமல் தடுக்கப் படுகிறது. இதனால் குடும்பத்தில் உள்ளவர்க ளுக்கு பரவாது.


சேமிப்பு


டெட்டனஸ் தடுப்பூசி ஹெப்படைட்டிஸ் பி போட்டுக் கொள்வது நலம். மஞ்சள் காமாலை நோயை தடுக்க ஹெப்படைட்டிஸ் பி தடுப்பூசி கொடுக்கப்படுகிறது. வயதான வர்கள் எல்லோருக்கும் ஹெப்படைட்டிஸ் பி பரிந்துரைக்கப்படுவதில்லை. ஒவ்வொரு தடுப்பூசியும் ஒரு சிறிய சேமிப்பு.


- இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


எனவே வருமுன்னே காக்க முதியவர்கள் விழிப்புடன் செயல்படுவீர்களாக!