பக்கங்கள்

சனி, 2 அக்டோபர், 2021

கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது? (1) & (2)

 கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது?

"அமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகுஎனக் கேற்படுகிற மன உளைச்சல்களைஅயர்வைசோர்வை - அனைத்தையும் போக்குகின்ற அருமருந்தாக அமைந்திருப்பதே எழுத்துப் பணிதான்.

அதுவும் முதல்வர் எனும் சுமை என் தோளில் ஏற்றப்பட்ட பிறகுஇந்த நான்குஅய்ந்து ஆண்டுகளில் ஓட்டப் பந்தயத்தில் ஓடி விட்டு வந்தவன்எலுமிச்சைப் பழத் தண்ணீரை விரும்பு வதுபோல்நானும் களைப்பாற்றிக் கொள்ளக் கவிதைகட்டுரைகதை - ஏதாவதொன்றை எழுதுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருக் கிறேன்."

இப்படி 'நெஞ்சுக்கு நீதி'  தன் வரலாற்றில் தொடக்கமாக எழுதுகிறார்.

மேலே செல்வோமா?

"பல்வேறு தலைப்புக்களில் முப்பதுக்கு மேற்பட்ட கவியரங்குகளில் நான் தலைமை ஏற்றுக் கவிதை பாடியிருப்பது இந்த நான்குஅய்ந்து ஆண்டுகளில்தான்!

அந்தக் கவிதைகளை எழுதுவதற்கு எனக்குக் கிடைக்கிற இடம்பெரும்பாலும் புகைவண்டி தான்.

இரவு நேரத்தில் பத்து மணிக்கு மேல் புகைவண்டியின் பெட்டிகளின் கதவுகளை மூடிவிட்டுத் தூங்குவது போல ஒரு நடிப்புஅதன் பிறகு பார்வையாளர்கள்முறையீடுகள்நிச்சயமாக இல்லை என்று நம்பலாம்அதிலும் சில நிலையங்களில் கதவைத் தடார்தடார்எனத் தட்டி வெளியே ஆளை இழுத்து, "பாவம்நல்ல தூக்கம் போலிருக்கிறதுஎழுப்பி விட்டோம்பரவாயில்லைமன்னித்துக் கொள்ளுங்கள்'' எனப் புன்னகை புரிகிறவர்களும் உண்டுஇவை களுக்கிடையே இருபது முப்பது பக்கங்கள் எழுதி விட்டோம் என்ற மன நிறைவோடு விடியற்காலை ய்ந்து மணிக்குத் தூங்கிஆறு மணிக்கு இறங்க வேண்டிய ஊரில் விழிப்பதிலே ஒரு தனி இன்பம் இருக்கத் தான் செய்கிறது.

காலையில் எழுந்ததுமே வீட்டு வாயிற்புறத்தில் அய்ம்பது பேர் இருப்பதாகத் தகவல் கிடைக்கிறதுஅவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்துவிட்டுச் சிற்றுண்டி அருந்துவதற்குள் அய்ம்பது நூறாகிறதுசரியாக அழுக்குத் தேய்த்துக் குளித்தே ஆண்டு ஏழுக்கு மேலாகிறதுநூறு பேருடைய பிரச்சினைகளைக் கவனித்துக் கொண்டிருக்கும்போதேமேலும் பத்துப் பார்வையாளர் சீட்டுக்களோடு பையன் மேலே வருகிறான்அதில் இருபது பேரைப் பார்க்க முடியாமல் போய், "கோட்டைக்கு வாருங்கள்அல்லது மாலையிலே வாருங்கள்'' என்று கூறிவிட்டு, 'அய்யோ இப்படிச் சொல்லிவிட்டுப் புறப்படுகிறோமேஎன்ன நினைத்துக் கொள்கிறார்களோ?' என்ற மன வேதனையோடு காரிலே ஏற வேண்டியிருக்கிறது.

கோட்டையிலே அதிகாரிகளுடன் - அமைச்சர்களுடன் ஆலோசனை - எதிர்பாராமல் எழுகின்ற எத்தனையோ சிக்கல்களுக்குத் தீர்வு காண வேண்டிய இன்றியமையாமைமூன்று மணிக்குச் சோறுஅதற்காக வெளியே கிளம்பும்போது அலுவலகத்தைச் சுற்றிப் பெரியதோர் பார்வையாளர் அணிவகுப்புஅவர்களுடைய முறையீடுகளைப் பெற்று அதற்காவன செய்வதாக உறுதியளித்து மீண்டும் மாலை 4-30 மணிக் கெல்லாம் வீட்டில்பார்வையாளர்கள் சந்திப்புஇதற்கிடையே சிறப்பு நிகழ்ச்சிகள்பொதுக் கூட்டங்கள்சுற்றுப் பயணங்கள்சட்டசபை இருந்தால் அந்த வேலைகள்!

இத்தனையிலும் கழக நினைவும்கலை உணர்வும் இழையோடிக் கொண்டிருப்பதால்களைப்பு ஆளை வீழ்த்துவதில்லைதாங்கிக் கொள்ள முடிகிறது.

அரசாங்கப் பொறுப்பு எவ்வளவுதான் மனத்தை அழுத்திக் கொண்டிருந்தாலும் நம் கழக நண்பர்களைப் பார்க்கின்றபோதுஇதயத்தில் சுமை குறைகிறதுசுவை ஏறுகிறதுஅவர்கள் ஏதாவது சூடான விஷயங்களைக் கொண்டு வந்திருந்தால்கூடக் கழகத்தைப் பற்றி அவை இருந்தால் சூடும் சுவையும் கலந்த இன்பத்தை அனுபவிக்க முடிகிறது."

புரிகிறதாகலைஞருக்கு எது அருமருந்துஇன்பத்தை எப்படி அனுபவிக்கிறார் - என்பது!

நாளையும் கலைஞரை சந்திப்போம்.

கலைஞரின் அருமருந்து எது? - இன்பம் எது? (2) - வாழ்வியல் சிந்தனைகள்-கி.வீரமணி

கலைஞர் முதல் அமைச்சராக இருந்தபோது உற்சாகம் பெற்றது எப்படிஎதன்மூலம் அவரது ஆளுமை - ஆட்சி வெறும் காட்சிக்காகவோபெருமைக்காகவோ அல்ல!

"சமுதாயத்தின் அடித்தளத்திலே கிடக்கிற மக்களுக்கும் மனம் குளிரத்தக்க வண்ணம் ஒவ்வொரு நாளும் அரசின் சார்பில் ஏதாவது செய்து கொண்டேயிருக்க வேண்டும்அப்படிச் செயல்படுகிற நாளெல்லாம் உள்ளத்தில் இன்பம் துள்ளும் நாளாகவே இருந்திருக் கின்றதுசில மாதங்களுக்குமுன் 'ஸ்டேட்ஸ்மேன்நிருபரிடம் பேசியபோது,

வெளிநாடுகளைப் போலஅற்புத விஞ்ஞான முன்னேற்றங்கள் தமிழ்நாட்டுக்கு வரவேண்டு மென்று ஆசையிருந்தாலும் அதற்கு நீண்டகாலம் பிடிப்பதைப் பற்றிக்கூட எனக்குக் கவலை இல்லைஎங்கள் நோக்கமெல்லாம் இங்குள்ள சாதாரண மக்களை மகிழ்ச்சி யோடும் உற்சாகத் தோடும் வாழச் செய்யவேண்டுமென்பதுதான் என்று குறிப்பிட்டேன். - நிருபர் போன பிறகு நீண்ட நேரம் யோசித்தேன்.

என்ன செய்திருக்கிறோம் ஏழை எளியவர் களுக்கு?

எல்லாவற்றையும் செய்து முடித்துவிடவில்லை யென்றாலும்ஏதோ நம்மாலானதைச் செய்திருக் கிறோம்கொஞ்சம் கொஞ்சமாகச் செய்து வருகி றோம்அவர்களும் நம்பிக்கை கொண்டிருக் கிறார்கள்.

அவர்களைக் காணும்போதும்அவர்களு டைய உள்ளத்தை உணரும்போதும் உற்சாகம் பீரிடுகிறதுஉளைச்சல் நீங்குகிறதுஎண்ணங்கள் பூரிக்கின்றனஅவை எழுத்தாரமாவதற்குத்தான் நேரத்தையும் இடத்தையும் தேடியலைய வேண் டும்எப்படியோ முடிகிறதுஅந்தப் பணியையும் நிறைவேற்றி வருகிறேன்.

பழைய தமிழகம்புதிய தமிழகம், - மக்கள் நிலைஅறிவு வளர்ச்சிஇலக்கிய இன்பம்அரசியல் அலைகள்அனைத்தையும் பற்றிய விளக்கங்களோடு ஒரு தொடர் கட்டுரை எழுத வேண்டும் என்பது என் நெடு நாளைய அவாவெறும் கட்டுரையாக மட்டுமிருந்தால் சுவை குன்றுமோ என்ற பயத்தில் தொடர் கதைபோல் அந்தக் கட்டுரையை எழுத எண்ணுகிறேன்கதையென்றால் அதற்கு ஒரு இழையோடும் கதாபாத்திரம் வேண்டுமேஅதற்கு என்னையே நான் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்."

இவரது உற்சாகம் எப்படி சுரந்தது பார்த்தீர்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக