பக்கங்கள்

சனி, 2 அக்டோபர், 2021

உழைப்பு, ஒழுக்கம் - கொள்கை - கூட்டுத்தான் "தங்கதுரை" (1) & (2)

 உழைப்பு, ஒழுக்கம் - கொள்கை - கூட்டுத்தான் "தங்கதுரை" (1)

மத நம்பிக்கைமத வழிபாடு - இவற்றில் ஊறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஒரு தோழர்குற்றாலத்திற்கு அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரம் என்ற சிற்றூரில் வாழும் தோழர்

சீதங்கதுரை அவர்கள் ஓய்வு பெற்ற தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளத் தோழர்!

மனிதாபிமானம்ஒழுக்கம்கொள்கை வாழ்வுசகோதர பாசம்குடும்பம்ஊர் உறவுகளுடன் மிகுந்த கடப்பாடு - இவற்றுக்கு எடுத்துக் காட்டானவர்.

தென்காசி பள்ளியில் படித்த  இவரும்இவரது தம்பியும் (டேவிட் செல்லதுரைதினமும் நடந்தே சென்று படித்துத் திரும்புவர்அவர் 'கனவுலகுஎன்று தனது வாழ்க்கையை ஒரு சிறு நூலாக எழுதியிருப்பது படிப்பதற்கு மிகவும் சுவையாக உள்ளதுஇளமையில் வறுமையை அனுபவித்த எம் போன்றோருக்கு இதன் சுவை இன்னமும் கூடுதலாகவே தெரியும்.

அவர் தனது பள்ளி வாழ்க்கையைப் பற்றி எழுதுகின்றார்.

"அக்காலத்தில் 11ஆம் வகுப்புதான் எஸ்.எஸ்.எல்.சிஎன்பதுஎனது தம்பி 8ஆம் வகுப்பு வரை பொன்னம்பலம் நடுநிலைப்பள்ளியில் முடித்துநான் படிக்கும் அய்.சி.அய்ஈஸ்வரன் பிள்ளை மேல்நிலைப்பள்ளியில் 9-ஆம் வகுப்பில் சேர்ந்தான்எனது பொறியியற்பிரிவு ஆசிரியர் திருஆதிமூலம் அவர்கள்நான் மதிய உணவு கொண்டு வராமல் பட்டினி இருப்பதை அறிந்துஅவருக்கு வீட்டிலிருந்து வரும் உணவில் ஒரு பகுதியை என்னை சாப்பிட கட்டாயப்படுத்துவார்.

எனது சுயமரியாதை இடம் தராதுமறுத்து விடுவேன்எனக்குத் தெரியாமல் வேறொரு மாணவரிடம் காசு கொடுத்து வாழைப்பழம் வாங்கி வரச்செய்து எனக்குத் தருவார்.

 நான் கிழிந்துதைத்த சீருடை அணிந்து வருவதையும்அதுவும் ஒரே ஒரு சீருடை மட்டும் இருப்பதையும் அறிந்த ஆசிரியர் “அண்ணா பிறந்த நாளில் உனக்கு ஒரு பரிசு தருகிறேன்எனக் கூறி ஒரு சீருடை (டவுசர்சட்டைவாங்கிக் கொடுத்தார்."

(காமராசர் பகல் உணவுத் திட்டம்திராவிட அண்ணாகலைஞர் ஆட்சியில் கல்வி மேம்பாடு - ஏழை மாணாக்கர்க்கு இலவச திட்டங்கள்பகல் உணவுமுட்டைவாழைப்பழம் தருவது எவ் வளவு பெரிய உதவி எப்படி என்பது புரிகிறதா?)

இப்படி பள்ளிப் படிப்பு முடித்து தமிழ்நாடு மின் வாரியத்தில் 2.11.1969இல் தினக் கூலியாக ரூ.3.25 காசு சம்பளத்தில் சேர்ந்துபடிப்படியாக உயர்ந்து, 12.3.1981இல் வரைவாளர் 3ஆம் நிலை பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மின்விநியோகப் பிரிவு செயற்பொறியாளர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்தார்!

"9.2.1982இல் நீலமலை மாவட்டத்தில் குந்தா உற்பத்தி வட்டத்தில் காலியிடம் உள்ளது எனத் தெரிந்து கொண்டுஅவ்விடம் கேட்டு விண்ணப்பித்தேன்கிளைன்மார்க்கன்கோட்டக் கிளையின் சங்க செயலாளராக தேர்வு செய்தனர்பிறகு 8.5.1987இல் திருநெல்வேலி  கிராமப்புற கோட்டத்தில் விருப்ப மாறுதலில் - பணி ஒப்புக் கொண்டேன்.

13.12.1999இல் பதவி உயர்வு பெற்று எண்ணூர் சென்னை அனல் மின் நிலையத்தில் பணி ஒப்புக் கொண்டேன்மீண்டும் திருநெல்வேலி உற்பத்தி வட்ட மத்திய அலுவலகராக 2002இல் பணி ஒப்புக் கொண்டேன்."

31.07.2005இல் விருப்ப ஓய்வு பெற்றார்.

இவரது பணிக் காலத்தில் வெளிப்படையாக கொள்கைக்காரனாக இருப்பதை மறைக்காமல் தெரிவித்து வாழ்ந்தார்தூய வாழ்க்கை என்பதால் சமரசமற்ற கொள்கை வாழ்வு வாழ்ந்து வரலாறு படைத்தார்!

"எண்ணூர் அனல் மின் நிலையத்தில் செயல்பட்டு வரும் அனைத்துத் தொழிற் சங்கங்களையும் ஒருங்கிணைத்தோம் - பெரியார் படம் திறக்க ஏற்பாடு செய்தோம்தலைமைப் பொறியாளருக்கு நான் அனுமதி கேட்டு விண் ணப்பம் அளித்தேன்தலைமைப் பொறியாளர் (CEஎன்னை அழைத்தார் - சென்றேன். "நான் தீவிர இந்து பக்தன்கோயம்புத்தூர் கவுண்டர் - பெரியாருக்கு எதிரானவன்அவரது படம் திறக்க அனுமதி வழங்க மாட்டேன்என ஆவேசமாகக் கூறினார்.

அதற்குப் பிறகு என்ன நடந்ததுமிக சுவையான கதை - நாளை பார்ப்போம்!

உழைப்பு, ஒழுக்கம் - கொள்கை - கூட்டுத்தான் "தங்கதுரை" (2)

 


 'பெரியார்' படம் திறக்க அனுமதியளிக்க மாட்டேன் (மின் அலுவலகத்தில்) என ஆவேசமாகக் கூறியதைக் கேட்ட தங்கதுரை பதற்றமடையாமல், நிதானமாக 'சார் தமிழ்நாடு அரசு, எந்த தலைவர்கள் படங்கள் அரசு அலுவலகங்களில் வைக்கலாம் என்ற பட்டியலில் தந்தை பெரியார் பெயரும் உள்ளது; அதனால் நீங்கள் மறுக்க முடியாது" எனக் கூறினார்.

"நான் அனுமதியளிக்க மாட்டேன் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கிறேன்" என்றார் அந்தப் பெரிய அதிகாரி!

"நான் (தங்கதுரை) உங்கள் விருப்பம்போல் செய்யுங்கள். பெரியாரின் படத்திறப்பு நிகழ்ச்சி குறித்த நாளில் கண்டிப்பாக நடைபெற்றே தீரும்" எனக் கூறி வந்தேன்.

சென்னை கோட்டையில் அப்போதிருந்த மின்சாரத்துறை அமைச்சர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்களை சந்தித்து படத்திறப்பு நிகழ்ச்சிக்கு வரும்படி அழைத்தேன். அவரும் கண்டிப்பாக பங்கேற்பதாக ஒப்புக்கொண்டார். அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்றன. ஆனால், அலுவலக அனுமதி நிகழ்ச்சிக்கு முந்திய நாள் வரை கிடைக்கவில்லை.

உடனே, தலைமை அலுவலகம் சென்று உரிய பிரிவில் கேட்டேன். சம்பந்தப்பட்ட எழுத்தர் சற்று பொறுங்கள் எனக்கூறி சென்றார். சிறிது நேரத்தில் என்னிடம் வந்து தங்களை செக்ரட்டரி வரச்சென்னார் என்றார். நான் சென்று மின்வாரிய செயலாளரை சந்தித்தேன். 'நீங்கள் யார்?' என்றார். நான் எனது பெயரைச்சொல்லி 'எண்ணூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றுகிறேன்' என்றேன். அவர் மிகுந்த கோபத்துடன் “ பெரியார் படத்தைத் திறக்க வீரமணி தான் வரவேண்டுமா? சங்கத்தலைவர் களை அழைக்கலாம், மின் வாரிய பொறியாளர்களை அழைக்கலாம்! அதனை ஏன் செய்யவில்லை?" என்றார். நான் அமைதியாக, "படத்திறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது நாங்கள். பெரியார் படத்தை யார் திறந்தால் சிறப்பாக இருக்கும் என்பதை முடிவு செய்வதும் நாங்கள் தான், அதனால் அய்யா வீரமணியை அழைத்துள்ளோம்" என்றேன். சில நிமிடங்கள் அமைதியாக இருந்த மின்வாரிய செயலாளர், 'சரி நீங்க போகலாம்' என்றார். நிகழ்ச்சி நாளன்று படத்திறப்பு அனுமதி வந்து விட்டது. 

நிகழ்ச்சிக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு பிற்பகலில் தோழர்களுடன் ஆசிரியர் மற்றும் கழகத் தோழர்களை வரவேற்க முன்வாசலில் நின்றோம். கடும் மழை பொழிந்தது, ஆசிரியர், கவிஞர் கலி பூங்குன்றன், பேராசிரியர் இறையன் உட்பட ஏராளமான தோழர்கள் வந்து சேர்ந்தார்கள். 

மேடையில் தலைவர் ஆசிரியர், மற்றும் தலைமைப் பொறியாளர், கழக முன்னோடிகள் தொழிற் சங்க தலைவர்கள் அமர்ந்திருந்தனர். மழை விடுவதாக இல்லை. தோழர்கள் மழையில் நனைந்து கொண்டே மேடை முன்பு திரண்டிருந்தனர்.

பேச வேண்டியவர்கள் பேசிமுடித்த பின், இறுதியாக தந்தை பெரியார் படத்தைத் திறந்து வைத்து, ஆசிரியர் அவர்கள் சுமார் 1லு மணி நேரம் பேசினார்கள். இல்லை, பெரியாரின் மனித நேயக் கொள்கையை முழங்கினார்கள். கேட்டவர் களின் செவிக்கு அறிவு விருந்தாக அமைந்தது. மேடையில் இருந்த தலைமைப் பொறியாளர் என்னை அழைத்து, "தயவு செய்து தலைவரை எனது அறைக்கு வரச்செய்ய முடியுமா?" எனக் கேட்டார். உடனே நான், 'தலைவரிடம் கேட்டு சொல்கிறேன்' என்றேன். ஆசிரியர் அய்யாவிடம் கூறினேன். அவரும் ஒப்புக் கொண்டார். தந்தை பெரியாரின் வாரிசு ஆசிரியர் அவர்கள் மறுக்கவா செய்வார்கள்? நிகழ்ச்சி மிக, மிக சிறப்பாக நடந்து முடிந்தது. தலைமைப்பொறியாளர் அறைக்கு ஆசிரியரை அழைத்து சென்றோம். அனை வருக்கும் தலைமைப் பொறியாளர் சிற்றுண்டி அளித்து சிறப்பித்தார்கள். எந்த பொறியாளர் “நான் ஒரு தீவிர இந்து பக்தன், கோயம்புத்தூர் கவுண்டர் - பெரியாருக்கு எதிரானவன்'' என என்னிடம் கூறினாரோ அதே தலைமைப் பொறியாளர்தான் ஆசிரியரை அழைத்து அனைவருக்கும் விருந்தளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் மேடையில் இருந்த அனைவருக்கும் "தந்தை பெரியார்” வாழ்க்கை வரலாறு நூல் ஆசிரியரால் வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சி தொடர்பான செய்திகள், ஆசிரியரின் முழுஉரை ஆகியவை “விடுதலை” யில் மூன்று தினங்கள் தொடர்ந்து வெளிவந்தது. அனைவருக்கும் நான் நன்றி கூறினேன்." 

பெரியாரின் மனிதநேயம் வென்றது!

எப்படிப்பட்ட உறுதியான கொள்கை வாழ்க்கை; நேர்மையும், ஒழுக்கமும் வாளும் கேடயமுமானால் அரசு அதிகாரிகள் எங்கும் எந்த நிலையிலும் உறுதியோடு இருக்க முடியும்.

அதை வாழ்க்கையாக வாழ்ந்து காட்டுபவர்தான் நமது தங்கதுரை!

வாழ்க பல்லாண்டு உடல் நலத்துடன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக