பக்கங்கள்

பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பெரியார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 அக்டோபர், 2020

மிக்க பண்பின் குடியிருப்பு அவர்தாம் பெரியார் பார்! -4


April 25, 2020 • Viduthalai • வாழ்வியல் சிந்தனைகள்

“மிக்க பண்பின் குடியிருப்பு” அவர்தாம் பெரியார் பார்! (4)

“மிக்க பண்பின் குடியிருப்புதந்தை பெரியார் அவர்களைப்பற்றி பலரும் ஜோடனையாகவோ, கற்பனைக் கதைகளாகவோ, ஊகங்களாகவோ பலவற்றைக் கூறி, "அவர் ஒரு கஞ்சன்”, “கருமித்தனம் படைத்தவர்” என்று கூறுவது வழக்கம். இவை பெரியாரைப்பற்றி அறியாதோரின் தவறான மதிப்பீடு. 'சிக்கனத்தின் சிகரம்' அவர் என்பது உண்மை ; ஆனால், பலரும் சிக்கனத்திற்கும், கருமித்தனம் - கஞ்சத்தனத்திற்கும் உள்ள வேறுபாடுபற்றி அறியாதவர்களேயாவர்! அய்யா சொல்வார், "எதையும் தேவைக்கு ஏற்ப செலவழிப்பது - சிக்கனம் தேவைக்குமேல் செலவழிப்பது- ஆடம்பரம் தேவைக்கே செலவழிக்காது இருப்பது - கருமித்தனம் ஆகும்.

"வரிசையில் தந்தை பெரியார் அவர்கள் ஒரு சிக்கனக்காரர் - ஆடம்பரத்தை அறவே வெறுத்து, எளிமையே எப்போதும் இனிமை என் பதை வாழ்ந்து காட்டி, அச் சிக்கனத்தால் சேர்த்த பொருளைத் தன் பெண்டு, தன் பிள்ளை, தம் மக்கள் என்று தராமல், தொல்லுலக மக்களுக்குத் தொண்டறத்திற்கென விட்டுச் சென்ற ஒப்பாரும் மிக்காரும் இலாதவர் அவர்! நகைச்சுவையரசர் கலைவாணர் என். எஸ்.கிருஷ்ணன், சீரிய பகுத்தறிவாளர்.

அவர் 1945 ஆம் ஆண்டு வாக்கில் ஒரு கொலை வழக்கில் திட்டமிட்டே சிக்க வைக்கப்பட்டு, ஆயுள் தண்டனை இவருக்கும், இசை மேதை எம்.கே. - தியாகராஜ பாகவதருக்கும்! அப்போது சென்னை மத்தியசிறைச்சாலையில் கலைவாணரைச் சந்தித்த தந்தை பெரியார், வழக்கு நடத்தப் பணம் இருக்கிறதா அவரிடம் என்று சந்தேகப்பட்டு, சுமார் 10 ஆயிரத்திற்கும்

மேற்பட்ட ஒரு பெருந்தொகையை கையில் எடுத்துக்கொண்டு, கொடுக்க முன்வந்தபொழுது கண்ணீர் விட்ட என்.எஸ்.கே. கனக்கப்அ பொருள் தட்டுப்பாடு இல்லை; தேவைப்படும்போது கேட்டு வாங்கிக் கொள்கிறேன் என்றார்.

மறுநாள் டி.ஏ.மதுரம் அம்மையாரிடம், அந்தப் பணத்தை எடுத்துக்கொண்டு மீரான் சாயபுத் தெருவுக்குச் சென்று, அய்யா அவர்களைச் சந் தித்து, அப்பணத்தைத் திருப்பித் தரும்படி என்.எஸ்.கே அவர்கள் அனுப்பியது வரலாறு அல்லவா? (அன்றைய பத்தாயிரம் இன்று கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட மதிப்புள்ள பெருந்தொகை என்பதையும் மறந்துவிடக்கூடாது).

1967- அறிஞர் அண்ணா அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு, சென்னை பெரிய மருத்துவ மனையில் தனி வார்டில் சிகிச்சை பெற்று, அமெரிக் காவிற்கு அழைத்துச் செல்லப்படும் முன், அன்று காலையில் அய்யா, அண்ணாவைப்பார்த்து நலம் வாவைப் பார்க்க நலம் விழைந்து வழியனுப்பும் வகையில், சென்னை மருத்துவமனைக்குச் செல்கிறார்.

உடன் அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார், புலவர் கோ.இமய வரம்பன் (தனிச் செயலாளர்), நான் ஆகியோர் உடன் செல்கிறோம். அப்போது அய்யா உடல் நலம் விசாரித்த பாங்கு கண்ட அண்ணா , மிகுந்த யார், புலவன் அன்னைஉணர்ச்சிவசப்பட்ட வராகக் காணப்பட்டார்.

விசாரித்துப் பேசிய தந்தை பெரியார், ஒரு பண முடிப்புக்கட்டை அறிஞர் அண்ணா அவர்களிடம் தந்து, வெளிநாட்டில் சிகிச்சை என்றால், மிகவும் செலவாகும். இதை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறினார், அண்ணாவின் கண்ணீர்த் துளிகள் ஒரு பக்கம் கசிந்த நிலை. அண்ணா உணர்ச்சியோடு சற்று மவுனமானார்; பிறகு, அண்ணா , அய்யாவுக்கு நன்றி கூறி, 'அய்யா, அதற்கு வேண்டிய ஏற்பாடுகள் எல்லாம் செய்தாகிவிட்டது.

தங்களுக்கு மிகவும் நன்றி' என்று தழுதழுத்த குரலில் கூறிடும் நிலையில், ப்போது தவத்திரு குன்றக்குடி அடிகளாரும், அண்ணாவைப் பார்த்து வழியனுப்பி, நலம் விசாரிக்க அங்கே வந்திருந்தார், ஒரு குடும்பம் போல, பல்துறைப் பிள்ளைகளும் - தந்தையும், த தனயர்களுமாக இருந்த அந்தக்காட்சி, எங்களுக்கு " என்றென்றைக்கும் அழியாத ஓவியமன்றோ!

" இதுபோல், பற்பலருக்கும் அ இல்லாமல் விரும்பிச் செய்திட்ட உதவிகள் அவருக்கும், அவருடைய டைரிக் குறிப்புக்கும் மட்டுமே வெளிச்சம்; பற்பல நேரங்களில் அம்மா விடம்கூட அவர் அப்போது கூறியது கிடையாது! ஒரு கை செய்த உதவி மறு கை அறியக்கூடாது என்பது மத வாசகமாக இருக்கலாம்;

ஆனால், அதை நடைமுறையில், வாழ்வியலாக ஆக்கி, இறுதிவரை வாழ்ந்தவர் ஈரோட்டு வள்ளல் நம் - அய்யா அவர்கள். "மிக்க பண்பின் குடியிருப்பு” என்ற புரட்சிக் கவிஞரின் கவிதை ஓவியம் எவ்வளவு சரி என்பது புரிகிறதல்லவா? அய்யாவின் பண்பு நலன்கள் பல வரலாற்றில் மற்ற பெரிய தலைவர்கள் என்போரிடம் தேடினா லும் கிடைக்காது - அவை அரிய புதையல்கள், கனத்த கருவூலங்கள். ஞரின் கலவன் குடியின்

வெள்ளி, 26 அக்டோபர், 2018

தந்தை பெரியாரும், வரவு-செலவு கணக்கும் (2)


மத்திய அரசின் வருமானவரித் துறையினர் - அவர்களுக்கு, கழகத்தை விட்டுவெளியேறிய தி.பொ. வேதாசலம் அவர்களும், குத்தூசி க. குருசாமி அவர்களும் எழுதியனுப்பிய கடிதம், பெரியாரிடம் உள்ள பணம் பற்றியும், அதற்கு உரிய கணக்கு வரி முதலியன போடவும் தூண்டி எழுதப்பட்டதை வைத்தே 1956-57 முதல் 1963-64; 1965-66, 1966-1967, 1967-68 இப்படி பல ஆண்டுகளுக்கான வருமான வரி செலுத்தவில்லை - வருமானத்தை மறைத்தார் என்று குற்றஞ் சுமத்தி பெரியார் அறக்கட்டளையான, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் என்பதற்கும், அதே தொகை ஈ.வெ. ராமசாமி நாய்க்கர் என்று தனிப்பட்ட நபர்  ஹோதாவிலும் என்று வரி, அபராத வட்டி இப்படி அய்யா காலத்தில் 15 லட்சம் ரூபாய்; அம்மா பொறுப் பேற்ற பிறகு 60 லட்சம் ரூபாய்;  எனது பொறுப்பில் வந்த வழக்கு I.T. Tribunal என்ற மேல் முறையீட்டு டிரிபியூனல் நடுவத்தில் 80 லட்சம்  ரூபாய் என்றும் வந்தது. இவ்வழக்கு விசாரணையில் நிறுவனம் சார்பில் வாதாடிய பிரபல வழக்குரைஞர் உத்தம்ரெட்டி (ஏற்கெனவே வருமான வரித்துறை பெரிய அதிகாரியாக இருந்து பிறகு வழக்குரைஞர் தொழிலை மேற்கொண் டவர்) "பெரியார் எந்தத் தொழிலையும் 1919க்குப் பின்  செய்யவே இல்லை; பொது வாழ்வில் தான் இருந்தார். அவருக்குத் தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்ட அன் பளிப்புகள், நன்கொடைகளைக்கூட, அவர் சொத்துக்கள்  மூலம் வந்த வருமானம் உட்பட வங்கியில் தான் போட்டு நிறுவனத்திற்குத்தான் அளித்து வந்துள்ளார்!

அவர் வருமானத்தை மறைத்தார் என்பது சரியல்ல.

வழிச் செலவிற்குக் கொடுக்கப்பட்ட - ஒரு கூட்டத்திற்கு 50 ரூபாய் என்றால் அதைத் தோழர்கள் கொடுத்தபோதுகூட பெயருடன், தேதியுடன் வங்கிக் கணக்கில் போட்டு, டைரியில் குறித்து வைத்துள்ளார். இதோ அந்த சில டைரிகள்" என்று இரண்டு நடுவர்களுக்கும் காட்டினார்.

அய்யாவின் எழுத்துக் குறிப்புகளை சரியாக விளங்கிக் கொண்டு படித்துக் காட்ட, நடுவர்கள், நீதிபதிகள் என்னையே படித்துக் காட்டச் சொன்னார்கள். நான் படித்து முன் எழுத்து -சுருக்கியுள்ளதையும் அவர்களுக்கு விளக்கியபோது தந்தை பெரியாரின் பொறுப்பு மிகுந்த நிதி மேலாண்மையைக் கண்டு வியந்து, இதில் வருமானத்தை மறைத்தார் என்ற குற்றச்சாற்றுக்கு ஏது இடம் என்றே கேட்டார்கள். பிறகு தீர்ப்பு ஆணையும், எழுதி, அந்த வரி விதிப்பு முழுவதையும் தள்ளுபடி செய்து, அறக்கட்டளைத் தகுதியை வழங்கினார்கள்!

அய்யா பெரியார் அவர்களுக்கு லெட்ஜர், குறிப்பு, பேரேடு எல்லாம் அவரது பையில் உள்ள டைரியும், 'செக்  புத்தகங்களின் அடிக்கட்டையும்' (Counterfoil) தான். அதில் யாருக்கு இந்த காசோலை கொடுக்கப்பட்டது - என்பதற்கான குறிப்பை அவரது கையிலேயே எழுதி வைத்திருப்பார்கள். அந்த பழைய 'செக்' புத்தகங்களை, அடிக்கட்டைகளையும்கூட அந்த நீதிபதிகளான நடுவர்கள் பார்த்து வியந்தனர்.

சில நேரங்களில் அவருக்கு அவரது டைரிக் குறிப்பின் முன் எழுத்துள்ள நபர் யார் என்பது நினைவுக்கு வராவிட்டால் வலிந்து அதை நினைவூட்டிக் கொள்வார்; முடியாதபோது அன்னை மணியம்மை யாரையோ, தனிச் செயலாளர் புலவர் இமயவரம் பனையோ, எங்களைப் போன்றவர்களையோ கேட்பார். நாங்கள் "அய்யா, இன்னார் இந்த ஊருக்கு தேதி கேட்டு முன் பணமாக பாதி 25 ரூபாய் தந்தார். மற்ற 25 ரூபாய் தங்களைப் பார்க்க வந்த இந்த ஊர் கழகப் பொறுப்பாளர் இன்னார் கொடுத்தார்" என்றவுடன் திருப்தி அடைவார்!

சில்லறை நோட்டுகள் ரூபாய் 90, 95 சேர்ந்தவுடன் அதை 100 ரூபாய் நோட்டாக மாற்றிடவே விரும்புவார். சிக்கனம் சேமிப்புக்காக அவர் கடைப்பிடித்த வழி அது! பக்கத்தில் அம்மாவிடம் கேட்பார். "ரூ.5 இருந்தால் கொடு" என்று! 95+5 = ரூ.100 நோட்டு வாங்கி வா என்பார். மற்றவர் எவரும் வந்து புதிதாக பணம் கொடுத்தால் நினைவு தப்பிய - வாங்கிய 5 ரூபாய், 10 ரூபாய் கடனை அம்மாவிடம்கூட பைசல் செய்து விடுவார்!

100 ரூபாய் நோட்டை சேமிப்பாக்கி வங்கிக் கணக்கில் போடுவார்.

இப்படித்தான் நண்பர்களே, தந்தை பெரியாரின் சிக்கனம் தமிழ் நாட்டின் பொக்கிஷம் ஆகியது. இன்று குழந்தைகள் விடுதி,  ஏராளமான கல்வி நிலையங்கள், நூலகம், படிப்பகம், பகுத்தறிவுப் பிரச்சாரப் பணி, ஏடுகள் என்றெல்லாம் மக்களுக்கே திருப்பி (அவை மூலம்) தரப்படுகின்றன!

எளிமை, சிக்கனம், ஆடம்பரத்தை இயல்பாகவே ஏற்காத மனம் - அவருடைய வாழ்வியல்!

திருச்சியில் மாளிகையில் தங்கியிருந்து  சாப்பிடும் உணவுகூட மிகவும் எளிமை,  ஏராளம் பல காய்கறி வகைகள் சமைக்காது - ஒன்று இருந்தாலே போதும் என்ற நோக்கு!

இப்படிப்பட்ட எளிய, மக்கள் தலைவரை எங்கே காண முடியும்?

விளம்பரப்படுத்திக் கொள்ளாத எளிமை, விரும்பி வாழ்ந்த சிக்கனம், வெறுக்கப்பட்ட ஆடம்பரம் - இவைதாம் பெரியார்! நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களும்கூட! இல்லையா?

- விடுதலை நாளேடு, 26.10.18

வியாழன், 25 அக்டோபர், 2018

தந்தை பெரியாரும், வரவு-செலவு கணக்கும் (1)

'ஆற்றில் கொட்டினாலும் அளந்து கொட்டு' என்பது பழமொழி.


எதையும் அளவிட்டு, அளவறிந்து, திட்டமிட்டு வாழ்வில் செய்தால் நமது வாழ்க்கை பயனுள்ள தாகவும், பிறகு வருந்தத்தகாததாகவும் கூட அமையக்கூடும்!

செலவழிப்பதில்கூட திட்டமிட்டு, கணக்குப் பார்த்துச் செலவழிப்பது, செலவழித்ததை மறந்து விடாமல் செலவு கணக்கில் ஒரு சிறு குறிப்பில் எழுதி வைப்பதும் நம்மை மேலும் செம்மையுறச் செய்யும்!

நம்மில் பலரும் செலவழித்துப் பழக்கப்பட்ட வர்களே! திட்டமிட்டு செலவழித்தோ அல்லது முன்னுரிமை எதற்கு - எந்த அளவு இதற்கு நம்மிடம் உள்ள நிதியை ஒதுக்கிட முடியும் என்று ஆழ்ந்து யோசித்துச் செலவழிப்பதில்லை. அப்படிப்பட்ட வர்கள் வாழ்க்கை கடனாளி வாழ்க்கையாகவும், வாங்கிய கடனை முறையாகத் திருப்பிச் செலுத்த இயலாமல், சாக்குப் போக்கு கூறி ஓடி ஒளியும் தலைமறைவுக்காரராக ஆக்கி, தமது நாணயத்தை இழந்தவர்களாகிவிடும் மிகப் பெரிய சமூக அவலத் திற்கு ஆளாகி விடும் விரும்பத்தகாத நிலையும்கூட உள்ளது!

பல்கலைக்கழகத்தில் படித்த காலத்தில் படித்த ஷேக்ஸ்பியரின் ஒரு வரி அறிவுரை வசனத்தை, அவர் படைத்த ஒரு பாத்திரம் கூறுவதாக நமக்குக் கற்பித்தார் நமது பேராசிரியர்!

'Neither a lender nor a borrower be' 

கடனும் கொடுக்காதே, கடனும் வாங்காதே'

- இந்த அறிவுரையை பெரிதும் - நான் அறிந்த வகையில் - வாழ்வில் கடைப்பிடித்து ஒழுகிய தலைவர் தந்தை பெரியார் அவர்களாவார்கள்!

'மண்டிக்கடை ஈ.வெ.ராமசாமி நாயக்கராக' இருந்த காலத்திலேயே அவர் இதனைக் கற்றவர் என்றாலும் தொழில் வாழ்க்கைக்குப் பொருந்தாது; தனி வாழ்க்கைக்கு மட்டும்தான் என்பதையும் நன்கு புரிந்தவர்!

அய்யா தந்தை பெரியார் அவர்களிடம் யாராவது கடன் கேட்டால் - கூடுமானவரை மறுத்து விடுவார் - முகதாட்சண்யம் பார்க்காமலேயே கூட. இப்படி தன்னிடம் வந்து கேட்பவர்களிடம் முகத்திற்கு நேரே சொல்வார்.

"என்னிடம் கடனாக நீங்கள் பெற்று, உறுதி யளித்தபடி திருப்பிக் கொடுக்க இயலாது போகும் போது உங்களுக்கும் தர்மசங்கடம்; எனக்கும் மன வேதனை - இரண்டும் வேண்டாம்! இதோ ஒரு சிறு தொகை - இதை நான் தங்களுக்கு நன்கொடை யாகவே தந்துவிடுகிறேன்; பெற்றுக் கொள்ளுங்கள். இதை எனக்குத் திருப்பித் தர வேண்டாம்" என்றே கூறுவார்கள்!

தனது நண்பர்களின் வேண்டுகோள் காரணமாக, சில மில்களில் முதலீடு செய்து அந்த வட்டித் தொகையைப் பெருக்கி, இயக்கப் பணத்தில் சேர்த்துப் பெருக்கியே மகிழ்ந்திருக்கிறார்!

அந்த மில் நிர்வாகத்திடமிருந்து, குறிப்பிட்ட (3 மாத வட்டித்தொகை) தேதியில் டி.டி.யாக வரவில்லை என்றால் ஓரிரு நாள் பொறுப்பார்; உடனே கடிதம் எழுதி உடன் தொகையை அனுப்ப நினைவூட்டுவார்; அதன் மேலும் தாமதமானால், சிக்கனத்திற்கே பேர்போன தந்தை பெரியார் அந்த 'பாக்கியாளருக்கு' தந்தியே அனுப்புவார். (இதில் தந்தி செலவு பார்க்க மாட்டார்) அவர் வியாபாரப் பாரம்பரியத்தில் வந்ததால், வந்த வட்டித் தொகையை உடனே வங்கியில் போட்டு வைத்து, அதன்மீது வட்டி இழப்பு ஏற்படாமல் பெருக்க வேண்டுமென்றே விரும்புவார்!

பலருக்கு உதவும் போது கூட, சிறுதொகை ரூ.50, ரூ.100 போன்றவைகளுக்குக்கூட, 'செக்' காசோலை யாகவே கொடுப்பார். செலவு கணக்குப் பார்ப்பதற்கு அது வசதியாக இருக்கும். என்றாலும் அதையும் மறக்காமல் தனது டைரியில் குறித்து வைப்பார்.

வழிச்செலவுக்குப் பணத்தை (50 ரூபாய்தான் அப்போது) வாங்கி - சுருக்கெழுத்தில் கொடுத்தவர் முன் எழுத்தைப் போட்டு - வீ(ரமணி) க(டலூர்) கூட்டத்திற்கு அழைத்து அய்யாவிடம் 25 ரூபா தந்து 25 ரூபாய் பாக்கி என்பதையும் மற்றொரு பக்கத்தில் (கடைசிப் பக்கத்தில்) குறித்து வைத்து, நினைவாக அவ்வூரில் கூட்டம் முடித்தோ, முன்போ கேட்பார் - இப்படிச் சிக்கனமாகச் சேர்த்துத்தான் மக்களுக்கே விட்டுச் சென்றார்.

Time Management என்பது எவ்வளவு முக் கியமோ அவ்வளவு முக்கியம் பணத்தை சேமிப் பதும், செலவழிப்பதும் Money Management ஆகும்!

ஒரே ஒரு வேறுபாடு இரண்டிற்கும் எது என்றால் பணத்தைச் செலவழித்தால் மீண்டும் சம்பாதிக்க முடியும்; நேரத்தைச் செலவழித்து விட்டால் செல வழிக்கப்பட்ட நேரத்தை - காலத்தை - மீண்டும் வாழ்நாளில் திரும்பப் பெறவே முடியாது!

தந்தை பெரியாரின் பொது வாழ்க்கையிலிருந்து கற்க வேண்டிய பாடங்கள் அநேகம்; அதைவிட அய்யாவின் தனி வாழ்விலிருந்தும் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு. அவர்களைப் பொறுத்த வரை தனிவாழ்வு - பொது வாழ்வு என்ற இரண்டும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை; இரண்டறக் கலந்தவையாகும்!

என்றாலும் இப்படி எதையும் கணக்கிட்டுச் செலவழிப்பது,  வரவு-செலவுகளைப் பதிய வைத்து அசைபோட்டுப் பார்ப்பது ஒவ்வொருவரின் வாழ்க் கையிலும் உயர்வைத் தரும்!

அய்யா தந்தை பெரியாரின் 'டைரிக் குறிப்பு' எப்படி வருமான வரித்துறை கீழமை அமைப்பு அவர்மீது சாட்டிய ஆதாரமற்ற குற்றம் - "வரு மானத்தை மறைத்தார்" என்பது! (அவரால் ஆளாக் கப்பட்டவர்கள் ஆதாரமற்ற புகார்களை எழுதிப் போட்டதன் விளைவு) அழிக்கப்பட வொன்னாத சரியான மருந்தாகி, வழக்கை வென்றது எப்படி என்பதை நாளை பார்ப்போம்!

- நாளையும் வரும்
- விடுதலை நாளேடு, 25.10.18

வியாழன், 26 ஜூலை, 2018

வெல்க திருமாவேலனின் கருத்துப் போர்!



தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் இன்று இளைஞர், மாணவர் உலகத்தால் பெரிதும் காதலிக்கப் பட்டு ஈர்ப்புக்கு உள்ளான புவி ஈர்ப்பு சக்திகள்!

'ஈரோட்டுப் பெரியாராகி' - தமிழ் நாட்டுத் தந்தையாகி, திராவிடர்களின் இன முரசாகி, இந்திய சமூக நீதிப் பேரொளியாய் ஆகி, இன்று உலகம் தொழும் மண்டைச் சுரப்புக்குச் சொந் தக்காரர் ஆவார் உலகத் தலைவர் பெரியார்.

சில விளம்பரந்தேடிகளும், வியாக்யான கர்த்தாக் களான ஒரு சில ஏடுகள் - பெரியார் கருத்தின் கொள் கைகளில் எதிரிகளின் 'அபார' விளம்பர 'சடகோபம்' கிட்டும் என்ற எண்ணியவர்கள், தந்தை பெரியார் பற்றி தாழ்த்தப்பட்ட சமுதாய நம் சகோதரர்களின் குறிப்பாக புதிதாக வரும் மாணவர், இளைஞர்களிடையே ஒரு தவறான புரிதலை திட்டமிட்டு ஏற்படுத்த உண்மை யல்லாத குற்றச் சாற்றுகளை உலக விட்டார்கள்!

சருகுகள் மரத்தின்மீது விழுந்தாலோ, மரங்கொத் திகளாலோ எந்த மரமும் சாய்ந்து விடாது என்ற கருத்தியலால் நாம் (தி.க.வினர்) அவர்களுக்குப் பதில் சொல்வதில்லை.

ஒருபொய்யையே திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மைபோல் மக்களிடம் வலம் வந்து நிலை பெறும் என்று இன்றும் சில பொய் - புனைவு - புரட்டு வியாபாரம் செய்வோர் பற்றி, தந்தை பெரியார் அலட்டிக் கொண்டதே இல்லை; அலட்சியப்படுத்தியே தனது பணியைத் தொடர்ந்தார்.

முன்புபோல இல்லை - அறிவியலின் அருங் கொடையான இணையம் வந்த பிறகு தொற்றுநோய்க் கிருமிகளைவிட, இந்த புரட்டுக் கிருமிகள் வேகமாக ஒரு ரவுண்டு உலகை வலம் வரத் தொடங்குகின்றன. பிறகு அற்ப ஆயுள் என்பதால் இருக்குமிடம் தெரியாமல்   முடங்குகின்றன!

என்றாலும் இந்த தொற்றுநோய் கிருமிகளால் நம் இளையர்களின் மூளைக்குக் காய்ச்சல் ஏற்பட்டு விடக் கூடாது என்ற மருத்துவ நோக்கு போல் தமிழ்நாட்டின் தலை சிறந்த பத்திரிக்கையாளர் - எழுத்தாளர் - ஆசிரியத் தகுதியாளர்  ஆகிய சிந்தனையாளர் ப. திருமாவேலன் அவர்கள் ஒரு அரிய கருத்துக் கரு வூலப் பேழையை, கடுமையான உழைப்பின் மூலம் 'பிரசவித்துள்ளார்'.

அது 'இயற்கைப் பிரசவம்'  - செயற் கையான அறுவை சிகிச்சையைப் போன்றதல்ல. சிந்தனையும், உழைப் பும் ஈன்றெடுத்த அரியதோர் நூல் - அற்புதப் படைப்பு.

"ஆதிக்க சாதிகளுக்கு' மட்டுமே அவர் பெரியாரா?" என்ற கேள்விக் கணையால், பொய்மையை, ஆயிரம் ஆதாரச் சான்றுகளால் சல்லடைக் கண்ணாகத் துளைத்து புரட்டர்களின் பொல்லாங் கினை பொடிப் பொடி யாக ஆக்கியுள்ளார்!

நாம் புளகாங்கிதம் அடைந்து பூரிப்பால் மகிழ் கிறோம். தோழர் ப. திருமாவேலன் அவர்கள் பெரியார் திடலின் விளைச்சல்! வீரிய விதைகள்  ஒரு போதும் வீண் போகாது; பாதுகாக்கப்பட்டு உழவாரத்திற்குப் பின் உயர் தனி ரகம் என்று உயரத்தை, ஒப்புக் கொள்ளாத வர்களே இல்லை என்ற அளவுக்கு எந்தப் பிரச் சினைபற்றி அவர் எழுதினாலும் அதை மறுப்போர் வெற்றி பெற இயலாது; காரணம் சரக்கு அவ்வளவு உயர்ந்தது - உண்மைகளின் தொகுப்பே!

தந்தை பெரியாரை விமர்சித்தால், தங்களுக்கு தனி விளம்பரம் எளிதில் கிடைக்கும் என்ற சில தலையில்லாத தகைமையாளர்கள் எழுதியது எத்தகைய புரட்டு - இமாலயப் புரட்டு என்பதை இவர் எதிர் கொள்ள முயன்றது எழுத்துலகத்திற்கே ஓர் எடுத்துக்காட்டு!

இந்நூல் தந்தை பெரியார் அவர்களின் உரைகள், எழுத்துகள் - தக்க தரவுகளாகி ஆவ ணங்களால் அறைந்து உலுக்கு கின் றன. பொய் மூட்டைகள் பொல பொலவென, கலகலகத்து காணாமற் போகும்!

எப்போதும் உண்மைக்கு ஒரு முகம்தான் ஆனால் ஒப்பனைக்கோ ஆயிரமாயிரம் பொய் முகங்கள்! போலித்தனப் பொலிவுகள்!! இவரது எழுத்தின் வெப்பத்தால்  சாம்பலாகிக் கரைந்தோடி கலக்க வேண்டிய இடத்தில் கலந்து விட்டன.

இந்நூல் தந்தை பெரியார்பற்றிய புரிதலுக்கு இது ஒரு கலங்கரை விளக்கின் வெளிச்சம்! நுண்ணாடி! பொய்க் கிருமிகளின் நெஞ்சத்தை நெற்றியடி வாதங்கள் மூலம் தவிடு பொடியாக்கும் தகத்தகாய முயற்சி!

நன்றி மறந்த மக்கள் மத்தியில் நன்றிக்குத் திருவிழா எடுக்கும் நன்றிக்கொத்து சாசனம்.

இது அவரது எழுத்துச் செல்வங்களில் பதினைந் தாவது இந்த புதுமைப் படைப்பில் பதினாறு தலைப் புகளில் பலமுள்ள தரவுகளைக் கொண்ட காலத்தை வெல்லும் கருத்து ஆவணம்!

ஒவ்வொருவரும் வாங்கிப் படிப்பதுடன் தங்களின் வீட்டு நூலகத்தின் கருத்து ஒளி வீச்சாக்கிட வேண்டும்!

இந்நூல் முழுவதும் பக்கத்துக்குப் பக்கம் தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவனின், காரிருள் விரட்டும் கதிரொளி.

அவர்தாம் பெரியார்!

அவர் அனைவர்க்கும் உரியார்!

நரியார் இதை அறியார்!

உரியாரை உணரவைக்கும் மாமருந்து இந்நூல்!

வெல்க திருமாவேலனின் கருத்துப் போர்!

- விடுதலை நாளேடு, 26.7.18

வெள்ளி, 6 ஏப்ரல், 2018

தோழர் பாண்டியன் படைத்த அமுது!



நேற்று முன்னாள் (4.4.2018) ஆய்வறிஞ ரான மானமிகு தோழர் புலவர் பா. வீரமணி அவர்கள், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மானமிகு தோழர் தா. பாண்டியன் அவர்கள் எழுதி முடித்து இம்மாத வெளி யீடாக வந்துள்ள "பெரியார் என்னும் இயக்கம்" என்ற நூலைக் கொடுத்தார். அவர்தான் அந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ளார்! அணிந்துரை, மிகவும் சுருக்கமாகவும் செறிவானதாகவும் அமைந் துள்ளது.

நியூ செஞ்சுரி புக் அவுஸ் (பி)லிட் வெளியிட்டுள்ள இந்நூல் 92 பக்கங்கள் கொண்டது, விலையும் குறைவு 80 ரூபாய்தான்.

நேற்று இரவே இதனைப் படிக்க எடுத்து முழுவ தையும் ஒரே அமர்வில் தொடர்ந்து படித்து முடித்தேன். சுவைத்தேன் - கொம்புத்தேன் போன்று சுவைத்தேன்.

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பற்றி எத்தனையோ நூல்கள் இதுவரை வெளிவந்துள்ளன. என்றாலும் மிகவும் தனித்த சுவையுடனும், கருத்தாழத் துடன், பெரியார் பற்றிய நுனிப்புல் மேயும் பலதரப்பட்ட விமர்சகர்களுக்கும் தக்க பதிலுரைகளும் அடங்கிய, இன்றைய இளைஞர்கள் படித்து முடித்து அசை போட்டுச் சிந்திக்க வைக்கும் அற்புத அறிவுக் கருவூலம்.

ஒரு மாறுபட்ட அணுகுமுறையில் அய்யாவை பல் வேறு கோணங்களில் படம் பிடித்துக் காட்டுவதோடு, அவர் எப்படி ஒரு தனித்த சாதனை செய்த புரட்சியாளர் - ஒப்பாரும், மிக்காரும் இல்லாதவர் என்பதை அவர் தொகுத்துச் சொல்லும் முறை - எடுத்த நூலை கீழே வைக்கவே மனமின்றி தொடர்ந்து படித்து வைக்கின்ற ஈர்ப்பினை உருவாக்குகிறது!

1967இல் அறிஞர் அண்ணா முதல் அமைச்சராகிய பின், தந்தை பெரியார்தம் 89ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திருச்சியில் கலந்து கொண்டு - 18 ஆண்டு பிரிவுக்குப் பின் ஒரே சாரட் வண்டியில் ஊர்வலமாக வந்தகாலை நிகழ்த்திய வரலாற்றுப் பெருமை வாய்ந்த வாய்மைப் பேருரையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

"ஆங்கிலத்தில் 'Putting Centuries into a capsule' பல நூற்றாண்டுகளை ஒரு சிறு குளிகை மருந்துபோல, உள்ளடக் கியது தந்தை பெரியாரின் தன்னிகரற்ற தொண்டு" என்றார்.

அதுபோல 95 ஆண்டு காலம் வாழ்ந்து, எதிர் நீச்ச லடித்து, அவரது லட்சிய வெற்றிக் கனிகளை அவரே சுவைத்த ஒரு வீர காவியமான  "தந்தை பெரியார் ஒரு தனி மனிதரல்ல, ஒரு சகாப்தம் ஒரு கால கட்டம், ஒரு திருப்பம்" என்றவர் அவரது தலைமாணாக்கர் அறிஞர் அண்ணா.

'மண்டைச் சுரப்பை உலகு தொழும் ' ஒரு ஒப்பற்ற புரட்சியாளர்பற்றி தோழர் பாண்டியன் படைத்துள்ள இந்நூல் ஒரு புதுமை படைப்பு, சீர்மை நிறைந்த சிற்றிலக்கியம் ஆகும். எட்டு வடிவம் என்பதுபோல எட்டு அத்தியாயப் (Octagonal) பரிமாணத்தில் பெரியார் பற்றிய ஓர் உயிரோவியமான கருத்தோவியம் இது!

தோழர் பாண்டியனின் பேச்சு சிறந்ததா? எழுத்து மிகுந்ததா என்ற தலைப்பிட்டு வாதிட்டால் இரண்டும் தான் என்று எந்த நடுவரும் தீர்ப்பளிப்பர்.

எடுத்துக்காட்டாக ஒரே ஒரு அரிய கருத்து முத்து இதோ

"...அவர் உயிருடன் வாழ்ந்த காலம் முழுவதிலும், அவரைப் பலரும் சந்தித்து மடக்கிக் கேள்வி கேட்டு, அவரை பதில் கூற முடியாது தடுக்க முயல பார்த்தனர். ஆனால் கேள்விகளைக் கேட்கத் துண்டியே பதில் கூறும் வகையில், பாடமே கற்பித்து வந்த பேராசான்தான் தந்தை பெரியார். அவரது மறைவுக்குப் பின் அவரது குரல் கேட்பது இல்லை ஆனால், அவருக்குப் பதிலாக விஞ்ஞானிகள் அவர் கூறிய அரியக் கருத்துக்களை நிறுவிக் காட்டி வருகின்றனர்.

விஞ்ஞானம் மனிதனை வளர்க்கும் பாதை ஆகும். ஏற்றுக் கொள்பவர்களை, விஞ்ஞானம் வளரும்போது அவர்களையும் வளர்க்கும். அதை ஏற்காவிட்டால், விஞ்ஞானம் அத்தகையோரை உதறித் தள்ளி விட்டு, முன்னேறிச் செல்லும்.

எதிர்த்து நிற்போரை, விஞ்ஞானம் மிதித்து நசுக்கி விட்டு அது தன் வழியே செல்லும். ஏனெனில், விஞ்ஞானம் அறிவை அடிப்படையாகக் கொண்டது.  அந்த விஞ்ஞானத்தைத் தன் அறிவுக்கான கைத்தடியாய் பிடித்தவர் பெரியார்.

எனவே கும்பமேளா கூட்டத்தைப் பார்த்து, பெரியார் தோற்றுவிட்டார் எனும் சிந்திக்க மறுக்கும் சிறியரை மன்னிப்பதே நமக்கு வேலையாகிவிட்டது...."

... என்னே கருத்து. 'Liberation is the record of best thoughts' என்றார் எமர்சன் என்ற அறிஞர்.

'இலக்கியம் என்பது சிறந்த கருத்துக்களின் உயர்ந்த ஆவணம்' என்றார்.

தோழர் பாண்டியன் படைத்த தக்கதோர் அமுது ஓர் இலக்கிய ஆவணம் ஆகும். படியுங்கள், பயன் பெறுங்கள்!

- விடுதலை நாளேடு, 6.4.18