பக்கங்கள்

புதன், 4 அக்டோபர், 2017

கொலஸ்ட்ரால் - கவலை வேண்டாம்! - புதிய தகவல்‘கொலஸ்ட்ரால்’ என்ற கொழுப்பு மிகுதிச் சத்து நம் ரத்தத்தில் கூடுதலாகச் சேருவதால், பலவித உடல் நோய் களுக்கு அது வழிவகுக்கும் ஆபத்து என்ற கருத்துப் பரவியுள்ளதால், நம் உணவில் கொலஸ்ட்ரால் (நல்ல கொலஸ்ட்ரால் - கெட்ட கொலஸ்ட்ரால் என்ற இருவகை அதில் உண்டு)பற்றி எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று மருத்துவ உலகம் அறிவுரை கூறி எச்சரித்து வந்தது!

இதிலிருந்து விடுபடும் ஒரு புதிய அரிய செய்தி! அமெரிக்க அரசு - கொலஸ்ட்ரால் பற்றிய எச்சரிக்கையை திரும்பப் பெற்றுள்ளது.

ஆபத்தானது  என்ற பட்டியலிலி ருந்து இந்த ‘கொலஸ்ட்ரால்’ நீக்கப்பட் டுள்ள இச்செய்தி நேர் எதிர் திசையில் திரும்பிய ‘யுடர்ன்’ செய்கை என்றால் மிகையாகாது!

இது உடலுக்குக் கேடு செய்யும் உணவுச் சத்து அல்ல என்று கூறியுள் ளது!

1970-களிலிருந்து இதய நோயி லிருந்து பாதுகாத்துக் கொள்ளவும், இதய ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவதற்குக் காரணமாகவும் இந்த ‘‘கொலஸ்ட்ரால்’’ என்ற கொழுப்புச் சத்துக் காரணமாகும் என்ற கூற்றினை இப்போது மாற்றி, கைவிட்டுள்ளது அமெரிக்க (மருத்துவ உலகமும்) அரசு!இதன்படி முட்டை, வெண்ணெய் மற்றும் கொட்டைகள், கொழுப்புகளைக் கொண்ட பால் பொருள்கள், தேங்காய் எண்ணெய், இறைச்சி இவைகளை யெல்லாம் பாதுகாப்பற்றவை என்பதை மாற்றி, கவலைப்படவேண்டிய உணவுச் சத்துக்களைத் தருபவன அல்ல என்று தெளிவாக்கப்பட்டுள்ளது!

அமெரிக்க அரசின் விவசாயத் துறை இதுபோன்ற பலவற்றையும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்து, பரிசோதனைகளுக்குப் பிறகு தனது ஆய்வுக் கருத்துரையை அளிப் பது வழமை.

2015 இல் அது கூறியதாவது:

‘‘இதற்குமுன் உணவு சம்பந்தமான வழிகாட்டு நெறிமுறையில் அமெரிக்கர் களுக்கு - கொலஸ்ட்ரால் சேருவதை 300 மில்லிக்கும்மேல் ஒரு நாளைக்குச் சேரக்கூடாது’’ என்று கூறப்பட்டது.

2015 இல் அமெரிக்க அரசு விவ சாயத் துறை இதை பரிந்துரைத்திருக்காது; காரணம் அதற்குக் கிடைத்த ஆதா ரங்கள் சான்றுகளின்படி - உணவில் சேரும் கொலஸ்ட்ராலுக்கும், ரத்தத்தில் உள்ள சீரட் Serum Blood Cholesterol) அமெரிக்க இதய சம்பந்த கழகம்  (American Heart Association - AHA), அமெரிக்க இதயம் சார்ந்த கல்லூரி (American College of Cardiology - ACC) உணவு சம்பந்தமான ஆலோ சனைக் குழுவினர் இத்தகைய எச்சரிக் கையைத் தந்திருக்கிறார்கள். சர்க்கரை கூடக் கூடாது என்பதில் நாம் அதிக கவனத்துடன் இருக்கவேண்டும் என்றே கூறும்!

பிரபல அமெரிக்க இதய நோய் நிபுணர் டாக்டர் ஸ்டீவென் நிசான் (Dr.Steven Nissen)  அவர்கள் இதுபற்றி கருத்துக் கூறுகையில்,

‘இது சரியான முடிவுதான். நமது உணவு சம்பந்தமான வழிகாட்டு நெறி முறை விதிகள் பல நேரங்களில் - பல பத்தாண்டு காலமாக தவறாகவே அமைந்துள்ளன.

நாம் பல உணவுகளை உட்கொள் ளும்போது இத்தகையச் சத்துகள் நமது உடலில் - அதன் சேர்க்கை குறைவே எடுக்கும்.

(When we eat more foods rich in this compound, our bodies make less)

நமது உணவில், இத்தகைய அதிக கொலஸ்ட்ரால் உள்ள முட்டை, வெண் ணெய், ஈரல், அதனால் உடல் கிளர்ந்து எழவே செய்கிறது!

உண்மையான தகவல் என்ன தெரியுமா கொலஸ்ட்ரால் பற்றி?

நமது உடம்பில் கொலஸ்ட்ராலைப் பெரிதும் உற்பத்தி செய்வது ஈரல் (Liver) தான். நமது மூளை பெரிதும் கொலஸ்ட் ராலால்தான் உருவாக்கப்பட்டுள்ளது! அதில் உள்ள நரம்பு செல்கள் இயங்க இது கட்டாயத் தேவையாகும்!

உடம்பிற்குத் தேவையான ஸ்ட்டி ராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்வதற்கு ஆதார சுருதியே இந்த கொலஸ்ட்ரால்தான்! மறவாதீர்!!

அந்த ஸ்டிராய்டு ஹார்மோன்கள் என்பவைதான் எஸ்ட்ரோஜென் (Estrogen) டெஸ்ட்டோஸ்ரோன் (Testosterone), கார்ட்டிகோஸ்டிராய்ட் போன்ற நமது உடலின் பல உறுப்புகளை சரியாக  இயங்கச் செய்யும் கரணிகள்.

எனவே, உடலில் உள்ள ‘‘அதிக கொலஸ்ட்ரால்’’ என்பது ஈரல் பகுதி சரியாக உள்ளது என்பதற்கு சரியான முக்கிய அடையாளம் ஆகும்! உடல் நலம்பற்றிய அடையாளமும்கூட அது!

ஃபிரேமிங்கஹாம் குழுவினரான இதய நோய் நிபுணர் குழு ஆய்வின் கூட்டு இயக்குநரான டாக்டர் ஜார்ஜ் வி.மேன் Dr.George V.Mann) அவர்கள் இதுபற்றி கூறுகையில்,

Saturated Fats என்ற ஒருவகை கொழுப்புச் சத்து (இதுதான் காரணம் என்று முன்பு கூறப்பட்டு வந்தது) இதய நோய் வருவதற்குக் காரணம் அல்ல.

இது ஒரு கற்பனையான கருத்து! இந்த நூற்றாண்டின் தலைசிறந்த தவறான புரட்டு ஆகும்!

‘‘கெட்ட கொலஸ்ட்ரால்’’ என்றே ஒன்று கிடையாது; கிடையவே கிடை யாது. இது இதய நோயை உருவாக்கும் என்பதே தவறான நம்பிக்கை - அறிவுரை - ஆதாரமற்றது!

வழக்கமான கொலஸ்ட்ரால் அள வோடு உள்ள பலருக்கும் இதயநோய் - மாரடைப்பு (Heart Attack) ஏற்படுகிறது அது எப்படி?

நமது உடம்புக்கு 950 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் ஒவ்வொரு நாளும் அதன் பணி செய்ய தேவைப்படுகிறது! ஈரல்தான் இதனை உற்பத்தி செய்து அளிக்கிறது!

எனவே, கொலஸ்ட்ரால் கூடுதலாக உடம்பில் உள்ளது என்றால், நமது ஈரல் சரியாக - நன்றாக வேலை செய்கிறது என்பது பொருள்!

எனவே, நிபுணர்கள் கூற்றுப்படி கெட்ட கொலஸ்ட்ரால், நல்ல கொலஸ்ட் ரால் என்றெல்லாம் கிடையாது!

கொலஸ்ட்ரால் என்பதால் - நமது உடலின் எந்த உறுப்பும் இயங்க  எந்தத் தடையையும் அது ஏற்படுத்திடுவ தில்லை.

இதுதான் இப்போது புதிதாக வந்துள்ள - இன்ப அதிர்ச்சியூட்டக் கூடிய மருத்துவச் செய்தி.

(இதை நமக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பிய டாக்டர் எம்.எஸ்.இராமச் சந்திரன் அவர்களுக்கு நமது வாசகர்களின் சார்பில் நன்றி!)

- விடுதலை,4.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக