பக்கங்கள்

வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

தூக்கம் மிகவும் முக்கியம்!நமது வாழ்வு நலமுடன் அமைய வேண்டின், அதற்கு நாம் உட்கொள்ளும் உணவு முக்கியம்; அதே போல் உடற்பயிற்சி - வயதுக்கு ஏற்ற வகையில், மருத்துவர்கள் ஆலோசனைகளை ஏற்று செய்வது - நடை பயிற்சி உட்பட மிகவும் முக்கியம்.

மருந்துகள் எடுத்துக் கொள்ளும் - தேவை உள்ள வர்கள், முறையாக கால நேரம் தவறாமல் அவைகளை எடுத்துக் கொள்வது - அதில் காலாவதியான மருந்துகளா (Expiry Dates) என்று பார்த்து எடுத்துக் கொள்ளும் பழக்கத்தை, வழக்கமாக ஆக்கிக் கொள்ளுதல் முக்கியம் ஆகும்.

இவை எல்லாவற்றையும்விட மிக  முக்கியம், வயதுக்கு ஏற்ப தூக்கம் ஆகும்!

எல்லோருக்கும் குறைந்தது ஏழு மணி நேரத் தூக்கம் மிகவும் தேவை என்று மருத்துவ நிபுணர்களும், ஆய்வாளர்களும் கூறுகிறார்கள்.

நம்மில் பலரும் தூக்கத்தை அலட்சியப்படுத்தி இரவுக் கச்சேரிகள் - நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரி - இரவு நேர திரைப்படக் காட்சிகள்  - நடு நிசி 12 மணியையும் தாண்டி வேலை செய்தல் - எழுதுவது, படிப்பது - காலை 4லு மணி வரைகூட இத்தகைய பணிகளில் ஈடுபடுதலை வழக்கமாக்கிக் கொள்ளு கின்றனர்!

இளம் பிராயத்தில் இந்த இரவு நேர விழிப்பு - இடையறாத பணி உடலுக்கு ஒத்துப் போகக் கூடுமே தவிர, முதுமையில்  இவைகளால் நாம் கடும் விலையை - உடல் நலப் பாதிப்பைக் கொடுக்க வேண்டி நேரிடும்! முதுமை அடைந்தவர்கள் 60,70 வயது தாண்டிய எவராயினும் அவருக்கு 8 மணி நேரத் தூக்கம் மிகவும் இன்றியமையாதது என்புது முதிர்ச்சியுள்ள - மூத்த அனுபவம் மிக்க மருத்துவர்கள் கருத்தாகும்!

அனுபவ அறிவுரையும்கூட!

இரவு 12 மணிக்கு மேல் 2 மணி வரை தான் மூளையில் சில மறதி நோய் பிற்காலத்தில் ஏற்படுத்தக் கூடிய துகள்கள் உருவாகித் தேங்குகின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்!

அந்த கால கட்டத்தில் எதிர் நீச்சல் போட்டு விழித் துக் கொண்டு, உறக்கத்தை விரட்டியடிப்பது பிற்கால விபரீத விளைவுகளுக்கு நாம் அச்சாரம்  தருவதாகவே அமையக் கூடும்!

தூங்க விடாமல், குற்றவாளிகளிடமிருந்து உண் மைகளை  கறந்திட - காவல்துறை விசாரணை அதிகாரிகள் செய்யும் முறை இருப்பதே, 'தூக்கமின்மை' எத்தகையது என்பது பொது அறிவின் மூலம் எவரும் புரிந்து கொள்ளலாமே!

மதியம் ஒரு சிறு இடைவெளித் தூக்கம் (Nap) குறிப்பாக முதியவர்களுக்கும், இதய சிகிச்சை செய்து கொண்டோருக்கும் மிகவும் நல்லது.

இன்று வெளி வந்துள்ள ஒரு செய்தியில், ஜெர்மனிய பல்கலைக் கழகத்தில் தூக்கம் பற்றிய ஒரு மிக முக்கிய மான ஆய்வினை மேற்கொண்டு கண்டறிந்துள்ள அறிவியல் - உடலியல் சம்பந்தப்பட்ட துறையினர் தரும் ஆய்வுத் தகவல், முறையாகத் தூங்குவது - போதிய அளவில் தூக்கத்தைத் தவறாமல் கடைப் பிடிப்பது. நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி, அதிகப்படுத்த உதவுகிறது என்பது அரிய உண்மையாகும்!

டி செல்ஸ் (T Cells) என்பவை  கெட்டுப் போன அதாவது தொற்று நோய் பீடிக்கப்பட்ட ஒருசெல்லில் பசை போல ஒட்டக் கூடிய இண்ட்டகிரின் (மிஸீமீரீக்ஷீவீஸீ) என்ற வகை புரதம் அந்த செல்லைப் பிடித்துக் கொள்ளுகிறதாம்!

தொடர்ந்து தூக்கமின்மையும், மன அழுத்தமும் (Stress)  இணைந்து இந்த நோயை அதிகப்படுத்தி உடல் நலத்தைக் கெடுக்கிறதாம்!

எனவே உங்களது  நோய் எதிர்ப்பு சக்தியைக் குன் றாமல், குறையாமல்  உடலில் வைத்திருக்க, போதிய அளவான 7,8 மணி நேரத் தூக்கம் மிகவும் அவசிய மாகும்.

மற்றொரு செய்தி: அதிகமான தூக்கமும்கூட உடல் நலத்தினைக் கெடுத்து, இதய நோய் வர துவக்கம் செய்யக் கூடும் என்பதை மறவாதீர்!
- ஆசிரியர் கி.வீரமணி

-  விடுதலை நாளேடு, 15.2.19