பக்கங்கள்

திங்கள், 22 பிப்ரவரி, 2021

விலை மதிப்பற்ற புன்னகையுடன் கூடிய முகங்களைத் தேடுவோம்!


துன்பத்தைக்கூட வரவேற்கும் மனப்பக்குவம் நம் ஒவ்வொரு பகுத்தறிவாளருக்கும் வரவேண் டும்இன்பத்தை அனுபவிக்க சிறந்த வழி என்ன தெரியுமாதுன்பத்தைச் சுவைத்துப் பார்த்த அனுபவத்தின் மூலமே இன்பம் எவ்வளவு சுகமானதுதேவையானது என்பதை எவராலும் உணர முடியும்பசியிருந்தால்தானே உணவு மிகவும் சுவைக்கிறதுஉணவின் தேவையும் அப் போது தானே தெரிகிறதுஅதுபோல எதிர்ப்பு இருந்தால்தானே வெற்றியின் வீச்சும்விவே கத்தின் சிறப்பும் நமக்குக் கிட்டும் நேரத்தில் பொருளுடையதாகும்! - இல்லையா?

எனவேதான் நண்பர்களேதுன்பத்தைக் கண்டு துவளாதீர்கள்!

துயரத்தைக் கண்டு மனம் நொந்து போகா தீர்கள்!

தற்கொலைகள் எந்தப் பிரச்சினைகளையும் தீர்க்காது என்பதை கோழை மனத்தவர்கட்கு குட்டிச் சொல்ல முயல வேண்டும்.

இன்றைய தோல்விநாளைய வெற்றி - அத்தோல்வியைக்கூட ஓர் அனுபவமாக மட்டுமே பாருங்கள்!

வாழும் மனிதர்கள் தங்கள் வயிற்றுக்குச் சோறிடும் போதும் ஏற்படும் மகிழ்ச்சி - மன நிறைவைவிடபசி என்று வந்தவர்கட்குப் பகிர்ந் தளித்து அவரது பசி தீர்ந்தபோது நன்றி கூறி னாலும்கூறாவிட்டாலும் அவர் முகமலர்ச்சி யைக் கண்டு நமக்கு ஏற்படும் அகமலர்ச்சிக்கு அளவுதான் ஏது நண்பர்களே!

எதிரிகளைக் கண்டு வெறுப்பதைவிடஉள்ளத்தால்நம் நடத்தையால் அவர்களையும் வெல்லும் வகையில் நமது அன்புகருணை உள்ளம் அமைதல் வேண்டும்.

அது எளிதானதாஎன்று தானே கேட்கத் தோன்றுகிறது!

இதோ பவுத்த அறிஞர் தலாய்லாமா கூறு கிறார்... “உங்கள் துன்பங்களை - இடர்களை - தொல்லைகளை - வலிகளை - இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள் முதலில்.

ஒன்று உள்ளத்தைப் பொறுத்தது (Mental) மற்றொன்று உடலைப் பொறுத்தது (Physical). இதில் உள்ளம்தான் அதிகமான அளவு நம்மைப் பாதிப்புக்கு உள்ளாக்குவதாகும்!

 “நலமான உள்ளம் நலமான உடலில் (A sound mind in a sound body) என்பது இலக் கானாலும் கூட உடலின் பங்கு இரண்டாவதே!

மனம் - உள்ளம் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் பதிவு செய்கிறது - அது எவ்வளவு சாதாரண மானதாக இருப்பினும் கூடஎனவே மன அமைதி - உள்ளத்தூய்மை என்பதற்கே நாம் முழுக்கவனம் செலுத்திட வேண்டும்உள்ளம் தூய்மையுடனும்அமைதியுடனும் இருந்தால் உடற் பிரச்சினைகள்வலிகள் யாவும் இருக்காதுஒருவேளை இருந்தால் பொருட்படுத்தும் அள வுக்கு இருக்கவே இருக்காது!”

உள்ளத்தூய்மைஅமைதி என்பவற்றை எப்படிப் பெறுவதுஅவ்வளவு எளிதா என்று தானே உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது?

எளிதுதான் - ஆகாயத்தில் பறப்பதைப் பிடிப்பதை விட நம்முள் உள்ள அன்புகருணைஇரக்கம் இவற்றை வளர்த்தலே உள்ளத் தூய் மைக்கு - மனத்துக்கண் மாசிலானாகும் அனைத்து அறனைத்தரும் ஊற்றாக அமைந்துவிடும்அதற்கு என்ன தயக்கம்அன்புகருணையை புன்னகைமூலமும்நட்புறவு மூலமே எளிதில் பரப்பிட முடியுமே!

நாளும் எதிரிகளைச் சம்பாதிப்பதை விடுத்து உண்மையான நண்பர்களைத் தேடிப்பிடித்து அதன் எண்ணிக்கையைப் பெருக்க முயலுங்கள்அன்பு நதியினில்கருணை வெள்ளமாக ஓடு வதில் நீராடி நீராடி மகிழுங்கள்!

நட்புறவுகளைவிட நாம் சேர்க்கும் சிறந்த செல்வம் - நமக்கு ஒடோடி வந்து உதவிட மட்டு மல்ல - கருத்துப் பரிமாறிடஇடித்துரைத்து நல் வழிப்படுத்தநேரிய பாதையில் இருந்து நம்மை நழுவ விடாமல் பாதுகாக்கும் நல்ல நட்புறவு வட்டம் நமக்குப் பெரும் பாதுகாப்பு அரண் அல்லவா?

தனித்து இருப்பவர்கள்தான் தவறுக்கு ஆளா கிறவர்கள்நண்பர்களிடையே இருக்கும்போது பாதை தவறுவது பெரும்பாலும் நடப்பதில் லையே! (தவறான நண்பர்களுடன் கூடினால் தவறான வழியில் இழுப்பார்கள்எனவே நண் பர்களைத் தேர்வு செய்வதில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்).

புன்னகையுடன் கூடிய புதுமுகங்களாக நம் முகங்கள் அமையட்டும்பொன்னகையாளர் களைத் தேடி அலுக்காதீர்கள்புன்னகைப் பொங்கும் முகங்களைத் தேடுவீர்நலம் நாடுவீர்!

மகிழ்ச்சியில் திளைப்போம்வாரீர்வாரீர்!!

எதிரிகள் என்பவர்கள் நமக்குப் பாடம் எடுப்பவர்கள்


தன்னை வென்றால் தரணியை - இந்த உலகத்தையே நாம் வென்று விட்டோம் என்று மனநிறைவை அடைய முடியும்.

அது எளிதானதா என்று மலைக்காதீர்கள்ஒவ்வொரு தடையையும் நாம் வாழ்வின் துன்பங்களாகப் பார்ப்பதற்குப் பதிலாகவாழ்வில் இயற்கை நமக்கு எடுக்கும் பாடங்கள் என்று கருதி அவற்றை அணுக வேண்டும்பாடங்க ளைப் படித்துத்தானேதேர்வெழுதி வெற்றி பெற முயலுகின்றோம்அதுபோல எளிதானது என்றே எதையும் பற்றி முயன்றால் முடியாததல்ல என்ற முனைப்போடும்தன்னம்பிக்கையோடும் அணுகுங்கள்வெற்றி வாய்ப்பு நிச்சயம்தான்!

தீதும் நன்றும் பிறர் தர வாரா‘ என்று தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றன் எத்தனை நூற் றாண்டுகளுக்கு முன் எளிய வரிகளில் விளக் கினார்படித்தோமே தவிர கற்கவில்லையேஅதன்படி நிற்க முயற்சிக்கவில்லையே!

மிகப்பெரிய துன்ப நிகழ்ச்சியை முன்பு சொன்னது போல்ஒரு வாய்ப்பாகக் கொண்டு நம்பிக்கையுடன் எதிர்கொண்டு நமது உள்ளத் தின் நெஞ்சுரத்தைப் பெருக்கிக் கொண்டால் மகிழ்ச்சி நம்மை விட்டு ஒருபோதும் விலகாது!

அந்த மகிழ்ச்சி பிறருக்கு உதவுவதில்தான் முதலிடம் பெறவேண்டும்முன்னுரிமைக்கு உரியதாக அமைய வேண்டும்.

விபத்தில் அடிபட்டு சிக்குண்டவரை விரைவாக மீட்பதும்உடனடியாக தேவையான சிகிச்சையைத் தந்து காப்பாற்றுவதும்தானே முக்கியம்அதை விட்டுவிபத்து எப்படி ஏற்பட்டதுஎப்போது ஏற்பட்டதுயாரால்ஏன் ஏற்பட்டது என்று ஆராய்ந்து அதன் பின்னரே சிகிச்சை என்றால் அது பயனும் தராதுஅறி வார்ந்த அணுகு முறை - செயல்முறையுமாகாது.

பிரச்சினைக்குத் தீர்வு காணுவது முதலாவ தாகும்பிரச்சினை ஏன் ஏற்பட்டது என்று ஆராய்வது அப்புறம் இருக்கட்டும் என்பதே சரியான நடைமுறையாக நம் வாழ்வில் அமைய வேண்டும்!

கருணைக்கே முதலிடம்கேள்விக்கல்லமறவாதீர்உடனடியாக மூச்சுக் காற்றுப்போல் முன்னோட்ட செயல்களைச் செய்துவிட்டு பிறகு நிதானமாக யோசிக்க வேண்டியவற்றிற்கு இடம் தாருங்கள்.

நம்முடைய எதிரிகளை நல்ல ஆசான்களைப் போல் கருத வேண்டும் என்கிறார் தலாய்லாமாவியப்பாக இருக்கிறதல்லவா?

பாடங்களை யார் கற்றுக் கொடுப்பார்கள்ஆசிரியர்கள் தானேஅதுபோல நமக்கு நம் எதிரிகள் கொடுக்கும் தொல்லைகளும்துன்பங் களும் ‘பாடங்களாகிவிட்டால் அவர்களுக்கு நாம் நன்றி சொல்வோமே தவிரஆத்திரப்பட மாட்டோம்.

எடுத்துக்காட்டாக ‘மிசா‘ என்ற சிறைவாசம் - சிறையில் கொடூரமாக மிகவும் கேவலமான வார்த்தைகளால் நாங்கள் "அர்ச்சிக்கப்பட்டு", பலமான தாக்குதல்களுக்கு ஆளாகிய அனுபவ பாடம் - எவ்வளவு செலவழித்தாலும் எளிதில் கிடைக்க முடியாத வாழ்க்கைப் பாடங்கள் - எங்களைப் பொறுத்தவரை - எப்படி என்கிறீர்களா?

அந்தத் துன்பத்தினை அனுபவித்து மீண்டு வந்ததால் இனி அவற்றைவிட பெரிய துன்ப இயல் நடப்புகள் எவை வந்தாலும் எதிர்கொள் வது எளிதாகப்பட்டு விட்டதல்லவா?

நம்பிக்கையை நாங்கள் ஒருபோதும் இழக்க வில்லைகொடுமை குணாளன் ஆகிய அச்சிறை யின் தலைமை அதிகாரி "நீங்கள் இனி எளிதில் வெளியே செல்ல முடியாதுஎத்தனை ஆண்டு களோ எங்களுக்கே தெரியாது?" என்று அச்சுறுத் திய வார்த்தைகளைஅனாயாசமாக எங்களிடம் கூறியதைக் கேட்டு அதிர்ந்த சக சிறைவாசிகளான நம் தோழர்களிடம் "நாளை என்ன நடக்கும்?‘ என்று கணிக்கப்பட முடியாததுதான் அரசியல்கவலையை விட்டுகிடைத்த சிறை வாழ்க் கையை சிறப்பாக கழிப்பது எப்படி என்பதை யோசியுங்கள்என்று ஆறுதல் மொழியை நம்பிக்கையுடன் கூறியபோதுமிரண்டவர்கள்சுருண்டவர்கள் எல்லாம் எழுந்தவர்கள் ஆனதை இப்போது நான் நினைத்துப் பார்த்து மகிழவே செய்கிறேன்.

தலாய்லாமா கூறுவது உண்மைதானே?

(அடுத்தும் ஆய்வு செய்வோம்)

நாம் வெல்ல வேண்டியது - பிறரை அல்ல; நம்மையே!


வாழ்க்கையின் சிறப்பு அம்சம் பொருள் சேர்ப்பதல்லபெரும் புகழ் சம்பாதித்து கீர்த்தியும்பெருமையும் அடையும் இலக்கு அல்ல.

பிறருக்கு - குறிப்பாக நாம் வாழும் சமூகத் திற்குநம்மை வாழ வைக்கும் இந்த உலகத்த வர்க்கு நாம் பல நூறு பணிகளை - உதவிகளை - தொண்டறம் செய்துஅன்பும்கருணையும்சமத்துவமும் பேணிஅனைவரும் உறவினர் என்று உணர்ந்து செயல்படும் பரந்த விரிந்த மனப்பான்மையை நாம் நமது முக்கிய பண்பாய்க் கொள்ள வேண்டும்.

கருணை காட்டுவதற்கும்அன்பைப் பொழி வதற்கும் எதிரிகள் மூட்டும் கோபத்தையும் (ஆத்திரமும்), வெறுப்பையும் பொருட்படுத்தாதுபொறுமை கொள்ள வேண்டும்இந்த இரண் டையும் தாண்டினால் மட்டுமே உண்மையான கருணை ஊற்றெடுக்கும் - வற்றாத அன்பு பாய்ந்து நம்மை வளப்படுத்தும்.

நம்மில் பலரும் நம் எதிரிகளைப் பற்றியே எண்ணி அவர்களை எதிர்ப்பதுடன் அழிப்பதுஒழிப்பது என்பது எப்படி என்று சாதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டே அதே வழியில் செயல்பட்டு வருவர்.

ஆனால் நம் எதிரிகளை வெளியே தேடு வதைவிடநமக்குள்ளே தேட முயலுங்கள்மேற் சொன்ன ஆத்திரம் (வன்மம்), வெறுப்பு என்ற இரு பெரும் எதிரிகள் நம்முள் நண்பர்களைப் போல் புகுந்து இடம் பெற்று நிலைத்து நாளும் நம்மை அலைக்கழித்து வருகின்றனர்.

அதனால்தான் மனிதர்களாகிய நம்மில் பலருக்கு எளிதில் மன்னிக்கும் மனப்பான் மையோதவறை உணர்ந்து அவற்றிற்காக மன்னிப்புக் கேட்டு திருத்திக் கொள்ளுவதோ எளிதானதாக இல்லாத நிலை!

பவுத்தப் பேரறிஞர் தலாய்லாமா எளிமையாக விளக்குகிறார் மேற்சொன்ன முறையால்!

திபெத்திய பழமொழி ஒன்றை நமக்குச் சுட்டிக் காட்டி அறிவுறுத்துகிறார்!

"எந்தத் துன்ப நிகழ்ச்சியானாலும் (Tragedyஅதை நாம் ஓர் அருமையான பலம் தரும் வாய்ப்பு என்று கருதி (Source of Strength) எதிர்கொண்டு வாழ்க்கையின் பாடங்களாகக் கருதி கற்றுக் கொண்டு ஒழுக வேண்டும்பிறகு நிச்சயம் வெற்றி பெறலாம்.

எந்த நிலையிலும் நம்பிக்கையை இழக்கவே கூடாதுஅந்நிலைமையால் ஏற்படும் இக்கட்டை விடநம்பிக்கையின்மையால் - அச்சத்தால்ஏற்படுவது தான் உண்மையான பெருங்கேடு (Disaster)" என்று அறிவுறுத்துகிறார்.

லட்சியவாதிகள் பல்வேறு எதிர்ப்புகளையும்,  அடக்கு முறைகளையும்சோதனைகளையும் வென்றெடுப்பதில் வெற்றி கொள்ளுகிறார்களேஅதன் ரகசியம் இதுதான்!

எந்த சூழலிலும் நம்பிக்கையை தளர்த் தாதீர்கள்,

நம்பிக்கையை இழக்காதீர்கள்!

இரவுகள் இரவுகளாகவே தொடர்ந்தாலும்பகலும்வெளிச்சமும்விடியலும் தொடரச் செய்யும்அந்த நபிக்கைதான் நாம் விடும் மூச்சுக்காற்றுமறவாதீர்கள்!

தனிவாழ்வானாலும்,

குடும்ப வாழ்வானாலும்

பொது வாழ்வானாலும்

எந்த நிலையிலும் நம்பிக்கையோடு நின்று எதனையும் எதிர்கொண்டு வெற்றி பெறுங்கள்.

எடுத்துக்காட்டாககரோனா தொற்று சில மாதங்கள் முன்பு வரை பெரும் உயிர்ப் பலி களும்மரணங்களும்மறக்க முடியாத இழப்பு களும் ஏற்படுத்தியது என்றாலும்புயல் ஓயத் தானே வேண்டும்நோய் மாயத்தானே வேண் டும்முதன்முதலாக புத்தர் சொன்னது போன்று, "மாற்றம் என்பதே மாறாத ஒன்று!" - அதை நாம் நினைவூட்டிக் கொண்டும்நம்பிக்கை விளக்கை ஏந்தி, "இருட்டை" - சோதனைகளைக் கடந்து நமது வாழ்க்கையை லட்சியப் பாதையாக ஆக்கிக் கொண்டுபக்குவத்தால் பகைமையை விரட்டும் பண்பாட்டை வளர்த்துக் கொண்டால் நம்மை நாமே வென்று விட்டோம் என்றே ஆகும்!

"தம்மை வென்ற மனிதர்களே தரணியில் தன்னேரில்லாத தகைமையாளர்கள்என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் அனுபவம் என்ற ஆசான் நமக்கு நன்கு பாடம் எடுப்பவராவார்.

"தன்னை வெல்வான்தரணியை வெல் வான்!" என்பது அறிஞர் அண்ணாவின் அனுபவ உரை யாகும்!

(நாளையும் சிந்திப்போம்)

திங்கள், 15 பிப்ரவரி, 2021

அடிகளார் என்ற தருநிழலின் குளுமை...! (5)


முற்போக்குச் சிந்தனையாளரும், சீலருமான மகாசந்நிதானம் தவத்திரு.குன்றக்குடி அடிகளார் அவர்கள்பற்றி, தோழர் தா.பாண்டியன் அவர்கள் தந்துள்ள பதிவுகளைப் போலவே, நம்மிடத்தில் அவர் காட்டிய ஒரு பெரும்பாசமும், அன்பும், வாஞ்சையும் என்றும் மறக்க முடியாதவையாகும்!

தந்தை பெரியாரைப் பார்க்க ஒருமுறை பெரியார் திடலுக்கு தவத்திரு. அடிகளார் வந்தார். அய்யாவைப் பார்த்து நலம் விசாரிக்கிறார்; அடுத்து அய்யா சிரித்துக் கொண்டே அடிகளாரிடம் ‘‘உங்க வீரமணி இப்பல்லாம் ‘பார்ப்பானாகி விட்டான்''' என்று சொன்னாராம். உடனே அடிகளார், ‘‘என்னய்யா அப்படி ஒரு விஷயம்'' என்றவுடன்,

அய்யா அவர்கள், ‘‘தினம் தினம் எழுந்தவுடன் குளித்துவிட்டுத்தான் வருகிறார்'' என்றவுடன்,

இருவரும் ஒருவருக்கொருவர் சிரித்து மகிழ்ந் தனர்இதை அடிகளார் போகும்போது என்னிடம் சொல்லிமகிழ்ந்துவிட்டுப் போனார்!

சென்னைக்கு வரும்போதெல்லாம் மயிலாப்பூர் தெற்கு மாடவீதி கற்பகம் விடுதி என்ற மடத்துக்குச் சொந்தமான பகுதியில் தங்குவார்அதை இடித்துப் பழுது பார்த்தபோதுமயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஓட்டலில் ஒரு தனிப் பகுதியில் தங்குவார்.

வந்தவுடன் எனக்குத் தொலைபேசி அழைப்பு தவறாமல் வரும்பலரும் சந்திப்பார்கள்தனியே பல் வேறு அரசியல்சமுதாய நடப்புகளைப்பற்றி அறிந்து கொள்ளவும்கருத்தாடவும் இரவு 10 மணிக்குமேல் சென்னை கடற்கரை சீரணி அரங்கு மேடைக்குப் பின்புறம் மணல் அருகே அடிகளாரின் கார் வந்து நிற்கும்.

அவர்கள் முன்கூட்டியே தெரிவித்தபடிசற்று 5 மணித்துளிகள் முன்பே சென்று காத்திருப்பேன்அவரது உதவியாளர் ஒரு தரை விரிப்புடன்அதில் என்னை அமர வைத்து ஓரடுக்கு டிபன் கேரியரில்  எடுத்துவந்த உணவை இலையில் இட்டுஉணவு உண்ணச் செய்வார்அடிகளார் இரவில் பால்பழம் மட்டுமே சாப்பிடுவார்அருகில்  அமர்ந்தபடி மணிக்கணக்கில் கருத்தாடிவிட்டு விடைபெறுவார். 11.30 அல்லது இரவு 12 மணி -  நாட்காட்டி குறிப்புப்படிஅடுத்த நாள் வந்துவிடும் - வீட்டிற்குப் போய்ச் சேரும்போது!

அமெரிக்காவில் தமிழ்நாடு பவுண்டேசனும்வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கமும் இணைந்து ஜூலை முதல் வாரத்தில் ஆண்டுதோறும் (பல ஆண்டுகள் இணைந்துபிறகு பிரிந்துநடத்தும் அந்த ஆண்டிற்குரிய விழாவிற்கு தவத்திருஅடிகளார்நீதியரசர் ஜஸ்டீஸ் பி.வேணுகோபால் ஆகியோரை அழைத்திருந்தனர்.  ஏற்கெனவே நான் எனது மகள் அருள் - பாலு இல்லத்தில் டெட்ராய்ட் (Detroit) நகரில் தங்கியிருந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எனக்கும் அழைப்பு விடுத்தனர் - ஓகியோ (Ohio)  வில் நடைபெற்றது அந்த நிகழ்ச்சி - அதில் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் பெற்ற பிரான்ஸ் நாட்டு ‘செவாலியேவிருதுக்கென பாராட்ட அழைத்திருந் தனர்!

தவத்திருஅடிகளார் அவர்களும்நீதியரசர் அவர்களும்நாங்களும் (குடும்பத்தாருடன்ஓகியோ பவுலிங்கீரின் பல்கலைக் கழக வளாகத்தில் சந்தித்து மகிழ்ந்தோம்.

அந்த கொட்டும் குளிரிலும்கூட அடிகளார் மேல் சட்டை இல்லாதுஇங்கு வருவதுபோலவே ஒரு மேல் துணியை மட்டுமே தோளில் போட்டு வந்தார்.

உடனே எனது வாழ்விணையர் அவர்கள், ‘‘இப் படி குளிரில்இந்தக் கோலத்தில் வந்துள்ளார்களே'' என்று சொன்னார்!

நான் அவர்கள் அனைவர் எதிரில் ‘சாமிக்கு (அப்படியே அய்யா அழைப்பதுபோல் அவரை அழைப்பேன்இங்கே குளிர் விட்டுப் போய்விட்டதுஎன்றேன்ஒரே சிரிப்புடன் என் முதுகில் ஒரு தட்டும் அடிகளார் கையால் விழுந்தது - பேறு பெற்றேன்!

அந்த செல்லத்தட்டு எல்லோருக்கும் கிடைக் காதது அல்லவா?

‘‘தந்தை பெரியாரும்அன்னை மணியம்மையா ரும் இல்லாத இடத்தை வெறிச்சோடிப் போய்விடாமல் நண்பர் வீரமணி அவர்கள் சிறப்பாக காத்து கடமை யாற்றி வருவது மெத்தவும்மெச்சத்தகுந்தது தமிழ் கூறும் நல்லுலகம் இவருக்குக் கடன்பட்டிருக்கிறது'' என்று பெரியார் திடலில் கண்கலங்கப் பேசியதைக் கேட்டுஎன் கண்களிலிருந்து ஊற்றுபோல கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது!

அந்த அறிவுரை எனக்கு ஒரு பாதுகாப்பு அரண்ஒரு நல்ல கலங்கரை வெளிச்சம் - அன்றுமுதல் இன்றுவரை!