பக்கங்கள்

திங்கள், 15 பிப்ரவரி, 2021

இதோ ஓடிவரும் ஒரு அன்பு நதி!


வாழ்வியல் பற்றிய பல கூறுகளை - பல்வேறு கருத்தாக்கங்களை அறிந்து கொள்ளவும்புரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் நான் பற்பல நூல்களைப் படிக்கத் தயங்குவதில்லை - பலவகை உணவுகளையும் சுவைத்தல் போலஅறிவுக்கு உணவுத் தேடலில் இந்த முறை பெரிதும் உதவும்சுவைத்தலில் ஒரு சில நேரங்களில் மட்டும் தான் ஏமாற்றம் ஏற்படும்பற்பல நேரங்களில் பயனுறு அறிவின் திரட்டு நிச்சயம் நமக்கு அவைமூலம் புதிய அறு வடையாக கிடைக்கும்.

அண்மையில் 'மஞ்சுள்‘ பதிப்பகத்தார் (மும்பைஇரண்டு ‘பாக்கெட் சைஸ்புதிய ஆங்கில நூல்களை எனக்கு அனுப்பியிருந் தார்கள்நன்றியுடன் பெற்றுக் கெண்டேன்.

ஒன்று.

His Holiness the Dalai Lama on Love, Success, Happiness & the Meaning of Life  என்ற ஆங்கில நூல்.

மற்றொன்று,

Kahlil Gibran's Little Book of Wisdom  என்பது.

முதல் நூலின் தொகுப்பாசிரியர் டெடி கம்மிங்ஸ் & டிராவிஸ் ஹெல்ஸ்ட்ரே (Dede Cummings and Travis Hellstrom).

இரண்டாவது நூல் தொகுப்பாசிரியர் நீல் டக்ளஸ் எக்லோட்ஸ் (Neil Douglas-Klotz)

தலாய் லாமா அவர்கள் நோபல் பரிசு பெற்ற வர்பல்வேறு பல்கலைக்கழகங்கள் தொடங்கி அய்நாசபை வரையில் கூட கருத்துரைக்கும் பவுத்த - திபேத்திய புத்த கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் உலக சிந்தனையாளர்!

அவரது அந்நூல் அருமையான எளிய இனிமையான ஆங்கில நடையில் எவருக்கும் உரைக்கும் அறிவுரைகளின் கருத்தாக அமைந் துள்ள ஒரு சுவையான புத்தகம் அது!

மூளையும் இதயமும் இணைந்து சிந்திக்க அறிவு உணவு தரும் புது மார்க்கம் பகுத்தறிவு நெறி - புத்த நெறி!

"மனித வாழ்க்கை என்பது கிடைத்தற்கரிய வாய்ப்பு - இந்த விலை மதிப்பற்ற மனித வாழ்வை வீணாக்கி விடக்கூடாதுமுழுமையாக பயன்படுத்திக் கொண்டு வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

என்னைப் பொறுத்தவரை அன்புதான் என் மதம்எவருக்கும் தீங்கு இழைக்காதீர்பேரன்புகருணை சமூகப் பொறுப்புணர்வு உலகளாவிய பண்பு தான் சாந்தி சமாதானம் மகிழ்ச்சியைத் தரக்கூடியது” என்று கூறுகிறார்.

ஆரோக்கியமான உள்ளமே ஆரோக்கிய மான உடலுக்கு மிக முக்கியத் தேவையான அம்சம் ஆகும்.

எப்போதும் பிறருக்கு உதவுங்கள்'

உங்களுக்கு நீங்கள் உதவிக் கொள்வது போன்றே செய்யுங்கள்.

அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தான் நாம் வாழ்கிறோமா என்பதற்கான அளவு கோல் என்ன தெரியுமாமேலே சுட்டியபடி மற்றவர் களுக்கு உதவும் அவ்வாழ்க்கை முறைதான்!

இதைப் படிக்கும் போதுதந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவனின்மனித குலம் ஒரு கூட்டுறவு வாழ்க்கையாக இயல்பாகவே அமைந்துள்ளதை உணர்த்தும் வகையில் தந்தை பெரியார் எளிமையாக தொண்டறத்தின் மேன்மையை விளக்கினார்.

ஒரு குருவி மற்றொரு குருவிக்கு கூடு கட்டிக் கொடுப்பதில்லை.

ஆனால் ஒரு மனிதன் மற்றவனுக்கு வீடு கட்டிக் கொடுக்கிறான்.

நம் நாட்டில் இன்றும் ஒரு தனித்த பரிதாப நிலை என்னவென்றால்மற்றவருக்கு வீடு கட்டிக் கொடுப்பவனுக்கு ஒரு தனி வீடு இருப்ப தில்லை.

மற்றவர்களுக்கு நகை செய்து கொடுப்பவரது இல்லத்தில் ‘புன்னகை‘ தவிர பொன்னகை ஏதும் கிடையாது!

பட்டுச்சேலை நெய்துதரும் நெசவாளியின் மகளோமனைவியோ உடுத்த பட்டுச் சேலை உள்ளதாஇல்லை என்றாலும் அலுப்பு சலிப் பின்றி உழைக்கிறார்கள்சமூகம் ‘மனிதர்களின் கூட்டுறவுப் பண்டக சாலைபோல்உள்ள தல்லவா?

எனவே மற்றவர்களுக்கு உதவுதல் தான் தூய்மையான வாழ்வுஅறநெறி அறம் என்பதுபிச்சை போடுதல் என்பதே தர்மம் அல்லஅறம் என்பது மனத்துக்கண் மாசிலன் ஆதல் அல்லவோ?

எனவேதான் பவுத்தம் மனித வாழ்க்கையைப் பொய்யானது என்று கூறுவதில்லை.

அன்பால்உதவிடும் பண்பால்பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் சமதர்ம நெறியால் உலகம் தழைக்க வேண்டும் என்பதை பல கேள்வி பதில்கள் - விளக்கம் மூலம் சுவைபடத் தருகிறது இந்நூல் - படித்து ஒழுக வேண்டும்.

கற்க - நிற்க - செயல்படுக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக