பக்கங்கள்

புதன், 3 பிப்ரவரி, 2021

ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்" - நூல்கள் ஆய்வுரை

"ஒப்பற்ற தலைமை", "வாழ்வியல் சிந்தனைகள்",

"

ஆசிரியர் வீரமணி அவர்களின் 88ஆவது பிறந்த நாள் விழாநூல்கள் அறிமுக விழா 3.1.2021 அன்று மாலை 6 மணியளவில் குடந்தை பெரியார் மாளிகையில் நடைபெற்றதுசட்டப்பேரவை உறுப் பினர் கோவி.செழியனின் நூல்கள் ஆய்வுரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு

வாழ்வியல் சிந்தனைகள்-விலைமதிப்புற்ற கருத்துகள்

ஆழ்ந்த தத்துவங்களையும்கொள்கை விளக்கங் களையும்நல் வழியில் செய்திகளையும் உல்லாசம் போல மலையேறி மகிழும் புத்தாக்கமாக தேடப்பட்ட தின் விளைச்சலே இந்த வாழ்வியல் சிந்தனைகள். 15ஆம் தொகுதி உங்கள் கையில்  - ஆங்கில பேராசிரி யர் டாக்டர் சங்கீதா கிருபாகரன்பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர்.சோம.இளங்கோவன்பேரா.முனைவர்அரசு செல்லைய்யா போன்ற விடு தலை வாசக நண்பர்களின் செயல் விளக்கும் மகிழ வைக்கும் ஆசிரியர் கருத்துஉச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர்களுக்கு ஆசிரியர் அய்யாசிறப்பான செந் தமிழில் பசுமரத்தாணிபோல் எல்லோருக்கும் எளிதில் புரியும்படி விலைமதிப்புற்ற கருத்துகளை எடுத்துரைத் துள்ளார்எடுத்துகாட்டுகளோடு வர்ணித்துள்ளார்.

.வே.விசுவநாதன் முன்னாள் இந்திய கூடுதல் சொலிசிடர் ஜெனரல் மூத்த வழக்குரைஞர் உச்சநீதி மன்றம் 09 நவம்பர் 2020. சொல்வன்மைமொழி யாழுகைநேர்த்தியான எழுத்துக்குஎடுத்துகாட்டுவாழ்வியல் சிந்தனைகள் கட்டுரைஅறிமுகம் செய்யும் பாங்குஎண்ணக்கோர்வை,சொல் வன்மை இவற்றை திருவள்ளுவரின் ஏழு சொற்களில் அடக்கி விடலாம்.

"கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்

வேட்ப மொழிவதாம் சொல்". (திருக்குறள் 643).

இங்கு வேட்ப மொழிவது என்பது அய்யாவின் எழுத்து வன்மையையும் குறிக்கும் ஓர் குறியீடுஅமெரிக்காவை சேர்ந்த பேராசிரியர் அரசு செல் லையா மேரிலேண்ட் பல்கலைக்கழகம்பால்டிமோர் (University of Meryland, Baltimore) குறிப்பிடுகையில்மனித நேயர்களும்,பகுத்தறிவாளர்களும் தம்மை மேம்படுத்திக் கொள்ளவும்உலகை புரிந்து கொள்ள வும் நல்ல புத்தகங்களை தொடர்ந்து படிக்க வேண் டும்செய்திகளை ஆழமாக சொல்வது வாழ்வியல் சிந்தனைகள் புத்தகம்.

புத்தகப் படிப்புபெரியாரின் மாணவர்:

"புத்தக படிப்பு பற்றி நாங்கள் தெரிந்து கொள்ள விரும்பிக்கேட்ட கேள்விகளுக்கு மிகப் பல பணி களுக்கிடையே நேரமெடுத்து விளக்கியிருக்கிறீர்கள்என்று கூறுகிறார்.

ஜப்பானிய முதியவர்களின் சிறந்த வாழ்வியல் "இக்கிகைஎப்போழுதும் சுறுசுறுப்புடன் நூற்றாண்டு களுக்கு மேல் வாழ வைக்கும் அருமருந்து.

புத்தாண்டு சபதங்களும்உறுதிமொழிகளும்

முதுமை பற்றி மூத்த மருத்துவர்களின் விளக்கம்

வைக்கம் போராட்டம்

தந்தை பெரியார் மாநாடு நடத்துவது "ஒரு பாடமே"!

ஜோதி பாபூஃலேவின் கல்விப் புரட்சிக்கலை.

நல்வரவாகட்டும் நடைப்பயிற்சிகள்

மிக்க பண்பின் குடியிருப்பு அவர் தாம் பெரியார்.

புரட்சி கவிஞர் பேசுகிறார் "நூலறிவும் உணர் வும்தலைப்பு

சேவையே உன் பெயர்தான் "செவிலியமா"

சுயமரியாதை வீரர்-பெரியார்

இணைய வழியும் - சமூக உறவுப் பாலமும்

> 90 ஆண்டுகளுக்கு முன் ஈரோட்டில் நடந்த பெண்ணியப் புரட்சி

குஷ்வந்த் சிங் கூறும் மகிழ்வான வாழ்வு

ஏமாற்றாதீர் - ஏமாறாதீர்

வகுப்புரிமை வீரர் ..சியின் இறுதிக்காலம்.

அச்சத்திற்கு தந்த விலை - நியாயந்தானா?

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி எப்படி வந்தது தெரியுமா?

ஜோ பைடன் என்ற மாமனிதர்

வைக்கம் போராட்டம்:

வைக்கம் போராட்டம் என்ற நூலின் வைர ஒளி. 1924 - 25இல் திருவிதாங்கூர் இராஜ்ஜியத்தில் 90 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்திய வரலாற் றில் நடைபெற்ற முதல் மனித உரிமைகளுக்கான அறப்போர்கீழ் ஜாதியினராக பிறந்துவிட்டனர் என்கிற ஒரே காரணம் காட்டி,நடக்கும் உரிமை (கோயிலுக்குள் நுழைந்து வழிபடும் உரிமை கூட அல்லமறுப்பது எவ்வகையில் நியாயம்இந்த தடைபெரியார் கேட்ட கேள்விகள் அனைத்தும் மக்களை யும் சிந்திக்க வைத்தது (20 மாதங்கள் 604 நாட்கள்தொடர்ந்து அற வழியில் ஒரு போராட்டம் வெற்றி வாகை உலக வரலாறு. 1924 மே 1 ஆம் தேதியில் திருவனந்தபுரத்தில் நடந்த கூட்டத்தில் பெரியார் பேச்சின் ஆவணத்தில் பக்கம் 380-388). திரு.வி.. "நவசக்தி யில் பெரியார் சிறையில் நடத்தப்படும் விதம் குறித்துத் தன் வருத்தத்தைத் தெரிவித்தார்இடுப்பில் சிறை உடையோடும்கரத்தில் விலங் கோடும் மற்ற சத்தியாகிரகச் சிறைக் கூட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டுத் தனி அறையில் எந்த கஷ்டத்தையும் சகிக்கும் சக்தி வாய்ந்த வர்.("நவசக்தி 29, ஆகஸ்ட் 1924, நூலின் பக்கம் (396 - 398)").

தந்தை பெரியார் மாநாடு

நடத்துவது - ஒரு பாடமே!

தந்தை பெரியாரும்திராவிடர் கழகமும் நடத்திய பல மாநாடுகளுள் ஈரோட்டில் அறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் 1948இல் நடைபெற்ற ஸ்பெஷல் மாநாடு பல வகையில் சிறப்புற்ற வரலாற்று சிறப்புமிக்க மாநாடு.

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா இடையே இருந்த கருத்து மாறுபாட்டினை போக்கல்.

அறிஞர் அண்ணா மாநாடு திறப்பாளர்

பட்டுக்கோட்டை அழகிரிசாமி அம்மாநாட்டில் ஆற்றிய உரை கேட்டவர்களைக் கண்ணீர் கடலில் ஆழ்த்தியதுஅவர் கலந்துகொண்ட கடைசி மாநாடு.

பல அறிஞர்கள் - என்.எஸ்கிருஷ்ணன் போன்றவர்கள் கலந்து கொண்ட மாநாடு.

பெட்டி சாவியை தருகிறேன் என்று கூறி பெரியார் அண்ணாவை முன்மொழிந்த மாநாடு.

ஜோதி பாபூஃலேயின் கல்விப் புரட்சி:

1848இல் தாழ்த்தப்பட்ட சிறுமிகளுக்காக முதல் பள்ளியைத் தொடங்கிய முதல் புரட்சியாளர்இன்றும் ஜோதி பாபூஃலேசாகு மகராஜ்தந்தை பெரியார்அண்ணல் அம்பேத்கர்,நாராயண குரு போன்றவர் களும் தேவைப்படுகின்றனர் இன்றுபுரட்சியாளர் களின் கல்வியின் நோக்கம் புரிகிறதா?

மிக்க பண்பின் குடியிருப்புபெரியார்-மணியம்மையார் பொதுமேடையில் அறிமுகம்:

புரட்சிக் கவிஞர் அவர்கள் அறிவு ஆசான் தந்தை பெரியார்.

தொண்டு செய்து பழுத்த பழம்.

மிக்க பண்பின் குடியிருப்பு

பெரியாரின் பெருந்தொண்டர் எஸ்.எம்.ஜக் கரியா தந்தை பெரியாரின் வாழ்க்கை நிகழ்வுபண்பு நலன் கவிதை வரிகளில் இலக்கிய ஓவியமாய் தீட்டி காட்டியது என்று விளம்பர வெளிச்சத்துக்கு வராத அரிய சம்பவத்தை ஆய்வாளர் .திருநாவுக்கரசு அவர்கள் மிக அருமையாக எழுதி வெளியிட்டுள்ள ஒரு பகுதி (பக்கம் 69-71).

முஸ்லீம் லீக்கின் தலைவர் முகமதலி ஜின்னா படத்தை முதன்முதலில் "கதிரவன்இதழில் வெளி யிட செய்தவர்.

> 1944இல் காயல்பட்டினத்தில் வள்ளல் சீதக்காதி விழாவில் (குலசேகரன்பட்டினம்மணியம்மையார் முதன் முதலில் பொதுமேடையில் அறிமுகமாகிறார்.

மனிதமாமனிதர்களா?

நாம் மட்டும் வாழ்ந்தால் போதாதுநமது சமு தாயமும் வாழ வேண்டும்,மற்றவர்களின் பிள்ளைக ளும் வாழ வேண்டும்நம் பிள்ளைகள் மட்டும் சுகம் அடைந்தால் போதாதுஏனையவர்களின் வாழ்வு சுகம் அடைய வேண்டும் நம்மால் ஆனமட்டிலும் நம் வாழ்க்கை அவர்களின் நன்மைக்கு அமையும் முறையில் நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதே முக்கியமானதுஇந்த வேலையைச் செய்பவர்கள் மிக குறைவுகாண்பது அரிது 17.03.1956இல் பெரியார் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் அய்யாவின் உரை.

பெண் பதிப்பாளர்கள்பெண் புரட்சி:

1930இல் சுயமரியாதை தாக்கம் நிறைந்த "குடியரசு ஏட்டின் பதிப்பாளராக இருந்ததால் சிறை தண்டனை கூட ஏற்றவர் தமிழ்நாட்டில் (எஸ்.ஆர்.கண்ணம்மாள்.வெ.ராமணியம்மையார்).

ஆய்வுத் திரட்டுசொல் விளக்கம்:

பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்களின் நூல் மூலம் தான் "கிராமம் என்ற பகுதி எப்படி அந்தப் பெயர் பெற்றதுஎன்பது விளங்கிற்று.

கிராமங்கள் நகர்ப்புற வசதி அப்துல்கலாம் குடியரசு தலைவர் (PURA-Providing of Urban Amerities to Rural Areas) திட்டத்தை சிந்தித்து செயல் படுத்தினார்வல்லத்திற்கு வந்து பார்த்து பாராட்டி தன் நூலிலும் சிறப்பாக செய்துள்ளார். (ஜிணீக்ஷீரீமீt & ஙிவீறீறீவீஷீஸீஎனும் தலைப்பில் வெளிவந்துள்ள நூல்.

நம் அன்றாட வாழ்வின் செயல்பாடுகள்

உடல் நலம்              

உணவு மூளை

உளவியல் 

கலைத்துறை

மருத்துவம்              

சுற்றுச்சூழல்

இலக்கியம்             

சட்டம்

அரசியல்   

குழந்தைகள்

மனவளம்

சமூகவியல்            

பகுத்தறிவு

பெண்ணியம்       

மனித நேயம்

பொருளாதரம்     

நிர்வாகம்                 

பல்வேறு நாடுகளின்  மக்களின் பண்பாடு 

நேர மேலாண்மை            

வரலாறு 

அறிவியல்

ஏராளமான துறைகளில் இந்தக் கட்டுரைகள்கருத்து செறிவுடன்எதுகை மோனைஎளிய நடை யில்வாசகர்களின் மூளையில் அழியாத கல்வெட்டாக

"உலகத்து எழுத்தாளர்கள் அறிஞர்களின் அரிய சிந்தனைகள் நல்ல தமிழில் எளிய நடையில் கட்டுரை இலக்கியத்தில் வளம் சேர்க்கும் நம் அனைவரின் வீட்டிலும் இருக்க வேண்டிய பெட்டகம்".

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக