பக்கங்கள்

புதன், 3 பிப்ரவரி, 2021

வன்மம் - கசப்பு - வெறுப்பு வன்மமும், கசப்பும், வெறுப்பும் யாருக்கு இட்ட விஷம்?


மனிதர் என்பதற்கு பகுத்தறிவு எப்படிப்பட்ட சிறந்த உயர் தனித்தன்மையோ அதுபோலத்தான் மனிதரின் மன்னிக்கும் மனப்பான்மை எனும் உயர் குணமும் மனிதரிடம் இன்றியமையாததாக அமைய வேண்டும். அது அமைந்துவிட்டால் அவரைவிட சிறந்த மனிதர் வேறு எவரும் இருக் கவே முடியாது.

மனிதர்கள் பல குற்றங்களைப் புரிகிறார்கள். சிலருக்கு இயல்பாவே சில குறைகளும் இருக் கின்றன. குற்றம் குறை இல்லாது முழுமையான அல்லது சுயநலமில்லாத, செம்மையான மனிதர் களைத் தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும் இப்புவியில்!

சிலரது குற்றம் வெளியே தெரிகிறது - பலரது குற்றங்களும், குறைகளும் வெளிச்சத்திற்கே வராமல் இரும்புத் திரையாலோ அல்லது பகட்டான பட்டுச் சீலைத் திரையாலோ போட்டு மூடி வைக்கப்படுகின்றன!

மேலை நாட்டுத் தலைவர்களில் வரலாற்றில் இடம் பெற்றவர்களின் குற்றங்களும், இழைத்த தவறுகளும் அவர்களது வாழ்வு முடிந்தபின்தான் வெளிவந்த புத்தகங்களில் இடம் பெற்றுள்ளன!

சில ரகசியங்கள் கல்லறைக்குச் செல்லாத வரைப் பாதுகாக்கப்படுகின்றன.

பல ரகசியங்கள், சில்லரைகள் கொடுக்கும் வரை பத்திரமாகப் பூட்டப்பட்டு, வரவு நின்ற வுடன், வெளிச்சத்திற்கு, வெளி உலகத்திற்கு உலா வருகின்றன!

வேடிக்கையான உலகம் இது! வாழ்க்கை வரலாறுகளும், தன் வரலாறுகளும் கூட ஒப் பனைகளாகவும், ஓவியங்களாகவும் பல இருக்கின்றன!

ஒரு சிலது மட்டுமே ‘ஸ்கேன்‘ ரிப்போர்ட்டு களாக உள்ளது உள்ளபடியே அச்சில் ஏற்றப் பட்டுள்ளன!

அண்ணல் காந்தியடிகள் ‘சத்தியசோதனை' என்று தனது தன் வரலாறுக்குப் பெயர் சூட் டினார் (My Experiments with Truth). ஒளிவு மறைவின்றி சில தவறுகளை மறைக்காமல் எழுதி, உலகத்தின் நியாயமான பாராட்டைப் பெற்றார்!

எனவே, தவறு செய்வது வாழ்வில் சகஜம் - திருந்தி வாழுவதே பாராட்டத்தக்கதும் - பின் பற்றத்தக்கதுமாகும். மன்னிக்கும் மனப்பாங்கே உயர்ந்த மனிதம்!

பல நேரங்களில் நமக்குத் திட்டமிட்டே - தெரிந்தே - தொல்லை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தே கேடான செயல்களில் ஈடுபட்டவர்களைக் கூட மன்னிப்பதற்கு பக்குவப்பட்ட பெரிய மனம் வேண்டும், அது அவ்வளவு எளிதானதல்ல.

‘மறப்போம் மன்னிப்போம்' என்பது ஓர் அனுபவச் சொல்லாடல். அதில்கூட சிலர் மன்னிப்பார்கள்; ஆனால், மறக்க மாட்டார்கள்!

சிலர் மறப்பார்கள்; ஆனால் மன்னிக்க மாட்டார்கள்!

இரண்டும் இணையும்போது, மன்னிப்பவ ருக்கு அதைவிட அதை உடனடியாக மறந்து விடுதலும், ஏதும் நடக்காததுபோல நடந்து கொள்ளும் பெருந்தன்மையும் அரிதினும் அரிது என்றாலும், அதுதான் வாழ்க்கையின் அருமையிலும் அருமை! பெருமையிலும் பெருமை!

வன்மம் - கசப்பு - வெறுப்பு (Resentment) ஒரு வகையான பழி தீர்க்கும் உணர்வின் வெளிப்பாடு, வெறுப்பை உமிழ்வது, நெருப்பை அணைக்க பெட்ரோலை ஊற்றுவது மாதிரி!

அது அணையாது, மேலும் மேலும் அத் தீ பரவி அழிக்கவே செய்யும்! இதை பெரிதும் உலகத்தார் உணர்வதில்லை.

மனிதரின் மிருக உணர்வின் வெளிப்பாடு தான் வன்மமும், எரிச்சலும்!

நம் விரல்கள் நம் கண்களைக்கூட சில நேரங்களில் குத்தி விடுகின்றன! அதற்காக வெட்டி வீசியா எறிந்து விடுகிறோம் - இல் லையே! இது பெருந்தன்மையால் அல்ல; விரல் தனக்கு இனிமேலும் பயன்பட வேண்டுமே என்ற சுயநலத்தால் தானே!

சில நேரங்களில் இந்தத் ‘தாராளமான பண் புக்கும்', சுயநலம் காரணமாக மன்னிப்பு வழங்கு வதற்கும் இடையே உள்ள கோடு மிக மெல்லிய கோடுதான்!

27 ஆண்டுகள் தனிச்சிறையில் வதிந்த (ரோபென் அய்லண்ட்ஸ் தீவு சிறையில்) நெல்சன் மண்டேலாவைப் பார்த்து "உங்களை இப்படி நடத்தியவர்கள் மீது உங்களுக்கு கடுமை யான வன்மம் (Resentment)  ஏற்படவில் லையா?" என்று கேட்கப்பட்டபோது,

அவர் அளித்த பதில் நமக்கு, நாம் கற்று நிற்க வேண்டிய கனமான பாடம் ஆகும்!

அதற்கு அவர் சொன்ன பதில் என்ன தெரி யுமா?

"Resentment is like drinking poison and then hoping it will kill your enemies!" 

"வன்மம் - கசப்பை வெளிப்படுத்துதல் என் பது எப்படிப்பட்டவை என்றால், நான் விஷம் குடிக்கிறேன்; அது எதிரிகளைக் கொல்லும் என்று சொல்வது போன்றதே!"

என்ன அழகான உவமை! நம்மவர்களில் பலர் எதிரிகள் சாவதற்காக வெறுப்பு என்னும் விஷத்தைக் குடித்து, அவர்களே மாண்டு போகிறார்கள்.

அந்தப் பட்டியலில் நாம் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டாமா?

சற்றே யோசியுங்கள் நண்பர்களே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக