பக்கங்கள்

வியாழன், 26 ஜூலை, 2018

வெல்க திருமாவேலனின் கருத்துப் போர்!



தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் இன்று இளைஞர், மாணவர் உலகத்தால் பெரிதும் காதலிக்கப் பட்டு ஈர்ப்புக்கு உள்ளான புவி ஈர்ப்பு சக்திகள்!

'ஈரோட்டுப் பெரியாராகி' - தமிழ் நாட்டுத் தந்தையாகி, திராவிடர்களின் இன முரசாகி, இந்திய சமூக நீதிப் பேரொளியாய் ஆகி, இன்று உலகம் தொழும் மண்டைச் சுரப்புக்குச் சொந் தக்காரர் ஆவார் உலகத் தலைவர் பெரியார்.

சில விளம்பரந்தேடிகளும், வியாக்யான கர்த்தாக் களான ஒரு சில ஏடுகள் - பெரியார் கருத்தின் கொள் கைகளில் எதிரிகளின் 'அபார' விளம்பர 'சடகோபம்' கிட்டும் என்ற எண்ணியவர்கள், தந்தை பெரியார் பற்றி தாழ்த்தப்பட்ட சமுதாய நம் சகோதரர்களின் குறிப்பாக புதிதாக வரும் மாணவர், இளைஞர்களிடையே ஒரு தவறான புரிதலை திட்டமிட்டு ஏற்படுத்த உண்மை யல்லாத குற்றச் சாற்றுகளை உலக விட்டார்கள்!

சருகுகள் மரத்தின்மீது விழுந்தாலோ, மரங்கொத் திகளாலோ எந்த மரமும் சாய்ந்து விடாது என்ற கருத்தியலால் நாம் (தி.க.வினர்) அவர்களுக்குப் பதில் சொல்வதில்லை.

ஒருபொய்யையே திரும்பத் திரும்பச் சொன்னால் அது உண்மைபோல் மக்களிடம் வலம் வந்து நிலை பெறும் என்று இன்றும் சில பொய் - புனைவு - புரட்டு வியாபாரம் செய்வோர் பற்றி, தந்தை பெரியார் அலட்டிக் கொண்டதே இல்லை; அலட்சியப்படுத்தியே தனது பணியைத் தொடர்ந்தார்.

முன்புபோல இல்லை - அறிவியலின் அருங் கொடையான இணையம் வந்த பிறகு தொற்றுநோய்க் கிருமிகளைவிட, இந்த புரட்டுக் கிருமிகள் வேகமாக ஒரு ரவுண்டு உலகை வலம் வரத் தொடங்குகின்றன. பிறகு அற்ப ஆயுள் என்பதால் இருக்குமிடம் தெரியாமல்   முடங்குகின்றன!

என்றாலும் இந்த தொற்றுநோய் கிருமிகளால் நம் இளையர்களின் மூளைக்குக் காய்ச்சல் ஏற்பட்டு விடக் கூடாது என்ற மருத்துவ நோக்கு போல் தமிழ்நாட்டின் தலை சிறந்த பத்திரிக்கையாளர் - எழுத்தாளர் - ஆசிரியத் தகுதியாளர்  ஆகிய சிந்தனையாளர் ப. திருமாவேலன் அவர்கள் ஒரு அரிய கருத்துக் கரு வூலப் பேழையை, கடுமையான உழைப்பின் மூலம் 'பிரசவித்துள்ளார்'.

அது 'இயற்கைப் பிரசவம்'  - செயற் கையான அறுவை சிகிச்சையைப் போன்றதல்ல. சிந்தனையும், உழைப் பும் ஈன்றெடுத்த அரியதோர் நூல் - அற்புதப் படைப்பு.

"ஆதிக்க சாதிகளுக்கு' மட்டுமே அவர் பெரியாரா?" என்ற கேள்விக் கணையால், பொய்மையை, ஆயிரம் ஆதாரச் சான்றுகளால் சல்லடைக் கண்ணாகத் துளைத்து புரட்டர்களின் பொல்லாங் கினை பொடிப் பொடி யாக ஆக்கியுள்ளார்!

நாம் புளகாங்கிதம் அடைந்து பூரிப்பால் மகிழ் கிறோம். தோழர் ப. திருமாவேலன் அவர்கள் பெரியார் திடலின் விளைச்சல்! வீரிய விதைகள்  ஒரு போதும் வீண் போகாது; பாதுகாக்கப்பட்டு உழவாரத்திற்குப் பின் உயர் தனி ரகம் என்று உயரத்தை, ஒப்புக் கொள்ளாத வர்களே இல்லை என்ற அளவுக்கு எந்தப் பிரச் சினைபற்றி அவர் எழுதினாலும் அதை மறுப்போர் வெற்றி பெற இயலாது; காரணம் சரக்கு அவ்வளவு உயர்ந்தது - உண்மைகளின் தொகுப்பே!

தந்தை பெரியாரை விமர்சித்தால், தங்களுக்கு தனி விளம்பரம் எளிதில் கிடைக்கும் என்ற சில தலையில்லாத தகைமையாளர்கள் எழுதியது எத்தகைய புரட்டு - இமாலயப் புரட்டு என்பதை இவர் எதிர் கொள்ள முயன்றது எழுத்துலகத்திற்கே ஓர் எடுத்துக்காட்டு!

இந்நூல் தந்தை பெரியார் அவர்களின் உரைகள், எழுத்துகள் - தக்க தரவுகளாகி ஆவ ணங்களால் அறைந்து உலுக்கு கின் றன. பொய் மூட்டைகள் பொல பொலவென, கலகலகத்து காணாமற் போகும்!

எப்போதும் உண்மைக்கு ஒரு முகம்தான் ஆனால் ஒப்பனைக்கோ ஆயிரமாயிரம் பொய் முகங்கள்! போலித்தனப் பொலிவுகள்!! இவரது எழுத்தின் வெப்பத்தால்  சாம்பலாகிக் கரைந்தோடி கலக்க வேண்டிய இடத்தில் கலந்து விட்டன.

இந்நூல் தந்தை பெரியார்பற்றிய புரிதலுக்கு இது ஒரு கலங்கரை விளக்கின் வெளிச்சம்! நுண்ணாடி! பொய்க் கிருமிகளின் நெஞ்சத்தை நெற்றியடி வாதங்கள் மூலம் தவிடு பொடியாக்கும் தகத்தகாய முயற்சி!

நன்றி மறந்த மக்கள் மத்தியில் நன்றிக்குத் திருவிழா எடுக்கும் நன்றிக்கொத்து சாசனம்.

இது அவரது எழுத்துச் செல்வங்களில் பதினைந் தாவது இந்த புதுமைப் படைப்பில் பதினாறு தலைப் புகளில் பலமுள்ள தரவுகளைக் கொண்ட காலத்தை வெல்லும் கருத்து ஆவணம்!

ஒவ்வொருவரும் வாங்கிப் படிப்பதுடன் தங்களின் வீட்டு நூலகத்தின் கருத்து ஒளி வீச்சாக்கிட வேண்டும்!

இந்நூல் முழுவதும் பக்கத்துக்குப் பக்கம் தந்தை பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவனின், காரிருள் விரட்டும் கதிரொளி.

அவர்தாம் பெரியார்!

அவர் அனைவர்க்கும் உரியார்!

நரியார் இதை அறியார்!

உரியாரை உணரவைக்கும் மாமருந்து இந்நூல்!

வெல்க திருமாவேலனின் கருத்துப் போர்!

- விடுதலை நாளேடு, 26.7.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக