6. இளைஞர்களே - உங்களுக்குப் பிடித்தமான ஒரு பணியை - உங்கள் அறையை அலங்கரிப்பதோ, நீங்கள் தங்கியுள்ள வீட்டில் ஒளிவிளக்கு அலங்காரம் செய்தலோ அல்லது தனியே இருப்பவர்கள் தாங்களே அடுப்பைப் பற்ற வைத்து, சமைக்க முயற்சித்து 'சமையல் எனக்கும் தெரியும்' என்ற பெருமிதம் கொள்ளவோ, எஞ்சிய நேரத்தில் நடைபயிற்சி செய்து - இயற்கையழ கினை ரசித்தோ - வாழ்க்கையின் பிற இன்பங்களையும் அனுபவித்து மகிழக் கற்றுக் கொள்ளுங்கள்.
7. உங்கள் மனதிற்குள் ஆயிரம் பிரச்சினைகள் ஏற்பட்டு உங்கள் மூளையைக் குடையலாம்; அதனால் நீங்கள் மன இறுக்கத்திற்குக்கூட ஆளாகக் கூடும். அதனைத் தவிர்ப்பதற்கும், மனதை லேசாக ஆக்கிக் கொள்ளும் வகையில், மனம்விட்டு உங்களுக்கு வேண்டியவர்களிடம் அல்லது உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களிடம் அவிழ்த்துக் கொட்டி விட்டால், மனபாரம் குறையும். மகிழ்ச்சி ஊற்று தடைபடாது! இதய நோய்க்கு விடை கொடுத்து அதைத் துரத்திடவும் முடியும்! தேவைப்பட்டால் மதியுரைஞர்களை ஆலோச னைக்கு (சிஷீuஸீsமீறீறீவீஸீரீ ஷிமீssவீஷீஸீ) அணுகுவதில்கூட தவறில்லை. அதற்காக அச்சமோ, கூச்சமோ படத் தேவையே இல்லை.
8. எல்லா நேரங்களிலும் மன உறுதி குலையாதிருப்பது வாழ்க்கையில் எளிதான செயல் அல்ல. உபதேசிப்பது சுலபம்; ஆனால் அதை நடைமுறையில் கொண்டு வந்து நிலை நிறுத்திட நிறைய மனப்பக்குவம் ஏற்பட வேண்டும். நம்மில் பலரும் பிரச்சினைகள் ஏற்படும் போது அதிகமான கவலையையும், பயத்தை - பீதியைத் தான் பெறுகிறோமேயன்றி, தீர்வு நோக்கி நமது சிந்தனைகளை ஓட்டுவதில்லை.
கவலையோ (ஷ்ஷீக்ஷீக்ஷீஹ்வீஸீரீ), பயமோ (திமீணீக்ஷீ) பிரச் சினைகளைத் தீர்த்து விடாது ஒருபோதும்! மாறாக, அது பற்பல நேரங்களில் உடல் நிலையையும்கூட பாதிக்கும் நிலை தான் ஏற்படக் கூடும்.
எல்லா நேரமும் நாளில் 'இருட்டு' கிடையாது. இருட்டின் விடியல் வெளிச்சத்தில் துவங்குகிறது என்று நன் நம்பிக்கையுடனும், துணிவுடனும் தீர்வைத் தேடுங்கள், சரியான விடை கிடைக்கவே செய்யும்!
பயிற்சி காரணமாக இது படிப்படியாக வருமே தவிர, ஒரே நாளில் - எடுத்த எடுப்பிலே வந்துவிடாது இளையர்களே!
'ஒவ்வொரு தோல்வியும் ஒவ்வொரு அனுபவம்' என்று கருதி எதிர் கொண்டால் வெற்றி என்ற வெள்ளி முளைப்பது தெரியும்.
9. நமது உறவுக்காரர்கள்கூட சில நேரங்களில் சரியான காரணமில்லாமல் நம்மிடம் குற்றங் காணும் வகையில் நம் உறவில் விரிசல் ஏற்படும் வண்ணம் புண்படுத்திடும் நேரத்தில் இனி இந்த உறவே கூடாது என்று அதை முறித்துக் கொள்ளும் அளவுக்கு உங்களுக்குக் கோபம் 'பொத்துக் கொண்டு வரக் கூடும்!'
அதைப் பின்னுக்குத் தள்ளிட இளமையிலிருந்தே பழகுங்கள் - 'பட்டிமன்றங்கள் நடத்தி, வாதாடி வெற்றி பெறுவதால்' நமக்கு கணநேர இன்பம் மட்டுமே; எஞ்சிய வாழ்நாள் முழுதும் இழப்பே என்பதை எண்ணி பொறுத்துப் பழகுங்கள்; உறுத்துப் பார்க்க நினைக்காதீர்கள்!
'ஒருவர் பொறை; இருவர் நட்பு' என்ற முது மொழியினை நடைமுறைப்படுத்தி, உங்களை உயர்த்திக் கொள்ளுங்கள்; அதன் மூலம் உங்கள் உறவையும் நட்பை - தோழமையையும் வைப்பு நிதியாகவே வளர விடுங்கள்! புரிகிறதா? கவிழ்ப்பது நொடிப் பொழுது; கட்டுவது சேர்ப்பது பல நாள் - பல ஆண்டு!
பல நாள் - பல மணி நேரம் நெய்த ஆடையை சில மணித்துளிகளிலே கிழித்து விட முடியுமே! மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு செல்ல முடியுமா? யோசியுங்கள்!
10. எல்லாரும் எல்லா நேரங்களிலும், எல்லா இடங்களிலும், எல்லா நிலைமைகளிலும் சரியாகவே இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாதல்லவா? அப்போது நாம் அந்த உலகியலைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப விட்டுக் கொடுத்துப் பழகிட பாடம் கற்றுக் கொள்ளுதல் வாழ்வின் வெற்றிக்கு மிகவும் தேவை.
'எந்த சூழ்நிலையிலும் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும்' என்பதை இளமையிலிருந்து பயிற்சி பெற்ற வாழ்வாக உங்களின் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள்.
மகிழ்ச்சி என்பது மற்றவர்கள் நமக்குத் தரும் பிச்சை அல்ல. மாறாக நம் உள்ளம் நமக்கு வழங்கும் கொடை! அதை ஊற்றாக ஆக்கிக் கொள்ள இடையில் ஏற்படும் அடைப்புகளை அகற்றி விட்டு ஊற்றுத் தண்ணீரை, அதன் சுவையை நீங்கள் ருசித்திட வேண்டாமா? இளைஞர்களே, 'இளமையிற்கல்' என்பது இதுவும்தான், மறவாதீர்!
- விடுதலை நாளேடு, 2.7.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக