பக்கங்கள்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

தமிழனே, இது கேளாய்! (பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் )

 

கடந்த ஒரு திங்களுக்கு முன் எனக்குக் கிடைத்த சிறப்பான நூல் "ஆற்றல் மிகு அருங்கவிஞர் வா.மு.சே." என்ற வல்லிக்கண்ணன் அவர்கள் எழுதிய நூல் அவரது நூற்றாண்டு விழா வெளியீடாகதமிழ்மணி புத்தகப் பண்ணையினர் பதிப்பித்துள்ள நூலாகும்.

வல்லிக்கண்ணன் முதுபெரும் எழுத்தாளர் மட்டுமல்லமுற்போக்குப் புரட்சிகர சிந்தனையாளர் ஆவார்அவர் எத்தகைய திறமைமிகு திறனாய்வு அறிஞர் என்பதை இந்நூல் உலகோர்க்கு புலப்படுத்துவதாக அமைந்துள்ளது!

பெருங்கவிக்கோ வா.முசேதுராமன் அவர்களைப் பற்றியதுதான் இந்நூல்.

வாழும் கவிஞர்களைஅறிஞர்களைதலைவர்களைவித்தகர்களை அவர்களது திறமைக்கும்ஆற்றலுக்கும்தமிழ்த் தொண்டுக்குமாக மனமுவந்துப் பாராட்ட முதலில் பலர் முன் வருவதில்லைநிறையைக் காணுவதைவிட குறையைப் பெரிதுபடுத்தியே தமிழ்ச் சமுதாயம் தன்னை வீழ்த்திக் கொண்டே உள்ளது.

பாராட்ட நல்ல மனம் வேண்டும்சிறந்த குணம் வேண்டும்பலருக்கு அது வருவதில்லைஅதிலும் விளம்பர வெளிச்சம் பட்டுவிட்டவர்கள் தங்களை மற்றவர்கள் புகழ வேண்டும் என்பதை ஒரு வழிப் பாதையாகவே ஆக்கிக் கொண்டு தாங்களே தங்களுக்குக் கூண்டு போட்டுக் கொள்வர்!

ஆனால் வல்லிக்கண்ணன் போன்றோர் எழுத்துப் பணிகள் நாட்டிற்கு நிறைய தேவை.

அதிலும் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அதிகம் தேவை!

"பாரதிக்குப் பிறகு தமிழில் கவிதை இலக்கியம் வளரவில்லை என்று சிலர் சொல்கிறார்கள் அதுசரியான நோக்கு இல்லை

பாரதிக்குப் பின் கவிதை வளர்ச்சி பற்றி பேசுகிறவர்கள்கூட பாரதிதாசன்கண்ணதாசன்பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் என சில பெயர்களை மட்டும் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்இதுவும் முழுமையான பார்வை ஆகாது!"

சரியான இலக்கிய சாட்டையின் சொடுக்கு இது!

ஆயிரம் மலர்கள் மலர்ந்தால்தான் தோட்டத்திற்குப் பெருமை - மணமும் வீசும்,

".. ஆர்வமுள்ள வாசகர்கள் குறைவாக இருக்கிறார்கள்படிப்பவர்களிலும் கவிதைகளைத் தேடிப் படிக்கிறவர்கள் எண்ணிக்கைக் குறைவுதான்கவிதைகளை அதிலும் மரபு வழி படைப்புகளை படிப்பவர்கள் மிகவும் குறைவு.

ஆனால் படிக்காமலே அல்லது ஒருவரின் ஒரு சில எழுத்துக்களைப் படித்து விட்டுத் தடாலடியாக அபிப்ராயம் சொல்கிற இயல்பு - ஓங்கி அடித்து ஒதுக்கி விடுகிறபோக்கு வளர்ந்துள்ளதுஇந்நிலை மாற வேண்டும்."

இப்படி யதார்த்தத்தை உள்ளடக்கிய நூலின் முன்னுரையில் வல்லிக்கண்ணன் நல்ல அறிமுகத்துடன் தனது நூலை - திறனாய்வு போன்ற பெருங்கவிக்கோவின் படைப்புகளின் சுவடாய் நமக்குத் தருகிறார்!

அவரது நூற்றாண்டில் இந்நூல் இரண்டாம் பதிப்பாக வெளிவந்துள்ளது!

அதில் உள்ளவற்றில் சில பருக்கைகள்நமது இலக்கிய பசியாற்ற கொள்ளை இன்பம் குலவும் கவிதைகள் என ஏராளம் உண்டு என்ற போதிலும் - இக்கட்டுரையை - வாசக நேயர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

சம்மட்டி அடி கொடுக்கிறார் - தனது எழுதுகோலை அறிவாயுதமாக மக்களுக்குச் சூடு போட்டு சொரணை ஏற்ற சுயமரியாதை உணர்வுடன், 'எக்ஸ்ரேபார்வையோடுதமிழர்களில் பலரும் எப்படி இருக்கின்றனர் என்பதை அப்பட்டமாகக் காட்டுகிறார்!

"தமிழரின் பெருமைகளை எண்ணி மகிழும் பெருங்கவிக்கோ இன்றைய தமிழரின் இழிதன்மைகளை எடுத்துக்கூறப்பின் வாங்குவதில்லை.

தமிழனுக்குப் பகை யார் எனக் கேட்டு இந்தத் தமிழன்தான்தமிழன்தான்தமிழன்தான் என்று அழுத்தமாகக் கூறுகிறார்.

"நன்றியைச் சொல்வதில்லை - அன்றாடமாச்சு

நம்பினபேருக்கு துரோகம் செய்வதே மூச்சு

பன்றிகள்போல் அலைந்து பணம் பற்றியே பேச்சு

படித்தவன்கூட அய்யோபண்பினை விடலாச்சு!

...............................

காட்டிக் கொடுப்பதிவன் கைவந்தகலை என்பான்

கண்மூடித் திறக்குமுன்னே காதகக் கொலைசெய்வான்

ஊட்டி வளர்த்த தமிழ் உயர்வுக்கு உலை வைப்பான்

உண்மையைத் துணிந்து செய ஊமஞ்சி சிலையாவான்"

என்று ஓங்கி அடிக்கிறார் பெருங்கவிக்கோ!

அது மட்டுமா?

வல்லிக்கண்ணன் தொடர்கிறார்.

"பெருக்கவிக்கோவின் புதிய பார்வைக்கும்,

புதிய சிந்தனைக்கும் சான்றாக,

"கோவிந்தன் கொடுங்கோலன் - கடவுள் எனக்குக் கடன்காரன்என்று அவர் பாடியுள்ள பாடல்களைக் குறிப்பிட வேண்டும்.

"கோவிந்தா கோவிந்தா என்றொருவன்

குரலெழுப்பிகொடும் வெய்யில்

சாலையிலே உருள்கின்றான் வயிற்றுக்காய்,

"கோவிந்தா கோவிந்தாஎன்றே மற்றொருவன்

கோபுரம்போல் மாளிகையில்  பணச் செருக்கில் புரள்கின்றான்

கும்பிட்ட இருவருக்கும் கொடுத்ததிலே வஞ்சமென்றால்

கும்பிட்ட ஒருவன் நீ கொடுங்கோலன் அன்றோசொல்!"

என்று திருப்பதி ஏழுமலையானைக் கேட்கிறார் கவிஞர்.

"வம்புக்குச் செல்லும் வடவேங்கடத்தானே வந்துகுவிகின்ற பொருள் உனக்கு ஏன்வறியார்க்கே தந்து விடுஎன்கிறார் பெருங்கவிக்கோ.

இப்படிப் பல அருமையான வகையில் பெருங்கவிக்கோ என்பதற்கு முழுப் பொருள்பருப்பொருள் - தருகிறார் வல்லிக்கண்ணன்.

நல்ல திறனாய்வு!  மனந்திறந்த பாராட்டுகள்!!

பெருங்கவிக்கோ‘ அவர் - எப்படிஎதனால்என்பதற்கு சான்றாவணம் இந்நூல்.  இதை வாங்கி படியுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக