பக்கங்கள்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2021

சமூகநீதிக்கு - இதோ ஓர் அறிவாயுதம்!

 

கரோனா காலத்து இடர்ப்பாடுகளிலும்இன்னல் சூழ்நிலைகளிலும்கொள்கை உறவு களும்கொண்ட நட்புறவுகளும் பலர் நம்மிடமிருந்து பறிக்கப்படும் பரிதாபம் நம்மை வாட்டி வருந்த செய்கிறது.

என்ன செய்வதுஇது நம்மால் பரிகரிக்க முடியாத துன்பம்தான்துயரம்தான் என்றாலும் அதிலிருந்து மீளுவதற்கு ஒரு சிறந்த வழிமேலும் அதிகமாக உழைப்பில் கவனஞ் செலுத்திஉள்ளத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளல் என்பதே சரியான வழி முறை!

அன்றாடம் அலுவலகத்திற்குச் செல்லுதல்சுற்றுப் பயணங்களில் ஈடுபடுவது இப்போது சாத்தியமில்லை என்பதால்சோம்பிக் கிடக்காமல்சுறுசுறுப்பான பணியில் நாட்டம் செலுத்துதல்நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க ஒரு நல்ல வழி முறை என்பதை கரோனா கொடுந்தொற்று நம்மில் பலருக்குக் கற்றுக் கொடுத்து வருகிறது.

பயனடைந்தவர்களில் ஒருவன் யான்நிறைய படிக்கஎழுத வாய்ப்புகள் கிட்டியுள்ளன.

"நூலைப்படிநூலைப்படி

காலையில் படிமாலையில் படி

கடும்பகலில் படிஎன்று ஆணையிட்டு அறிவுரை வழங்கும் புரட்சிக் கவிஞரின் வாக்கு செயல்வடிவம் பெற்றுள்ளது என்னைப் பொருத்தவரை -

விடுதலை’, ‘உண்மை’, ‘பெரியார் பிஞ்சு’, 'The Modern Rationalist’ - புத்தகங்களை உருவாக் குதல்,  மற்ற நிர்வாகப் பணிகள்ஆறுதல் கூறும் ஒத்தறிவுக் கடமைகள் - இவைகளுக்கு பஞ்சமே இல்லைஎனவே நேரம் பறந்து சென்று விடுகிறது!

பல அரிய நூற்களை படிக்கிறேன்குறிப் புகளை எடுக்கிறேன்எழுதினால் கூட உடனே ‘விடுதலையில் (4 பக்கங்களாக குறுகி விட்ட தாலும்நானே அவைகளை ஆக்கிரமித்துக் கொண்ட குற்றத்தைச் செய்து விடக்கூடாது என்பதாலும் பல விஷயங்கள் நம் வேகத்திற்குத் தடைகளாகத்தான் அமைகின்றன.

தருமபுரி மேனாள் நாடாளுமன்ற உறுப் பினரும் சிறந்த அறுவை சிகிச்சை மருத்துவரும்சீரிய கொள்கையாளருமான டாக்டர் செந்தில் அவர்கள் சீரிய சிந்தனையுள்ள எழுத்தாளர் - பல நூல்கள் எழுதியுள்ளார்நான் அவைகளைப் பற்றி எழுதியுமுள்ளேன்.

அவர் நல்ல மொழி பெயர்ப்பாளராகவும் உள்ளார் என்பது அண்மையில் அவரால் தமிழாக்கம் செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு நூல் இந்தியாவின் நிகர் நோக்கு நடவடிக்கைகள் என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அஸ்வினி தேஷ்பாண்டே எழுதிய ஆங்கில நூல் ‘Affirmative Action in India’ என்ற நூல் ஆகும்.

அவர் அனுப்பியிருந்ததை படித்து முடித்து பல நாள் ஆனபோதிலும்வாழ்வியலை எழுதஅதன் வரிசை இப்போதுதான் வாய்த்தது போலும்காரணம் நேர நெருக்கடிஏட்டில் இட நெருக்கடிஇப்படிப் பல நெருக்கடி.

'மிக அருமையான நூல்என்று கூறுவதற்கு முன் நல்ல புரியும்படியான கருத்தமைவு கெடாத தமிழாக்கம் - அருவி நீரோடை போல!

'இடஒதுக்கீடுஆங்கிலத்தில் பல நாடுகளில் பல பெயர்களில் நடைமுறையில் உள்ளன.

நம்மில் பலருக்கும் Reservation (’இட ஒதுக்கீடு’) என்பது, ‘சமூகநீதி’ என்றும், 'வகுப் புரிமைஎன்றும் இப்படிப் பல பெயர்களில் அக்கொள்கை தலைப்பிடப்பட்டு விளக்கப் படுகிறது.

Affirmative Action  என்பது அமெரிக்க அரசு சார்பில் தரப்படும் இடஒதுக்கீட்டிற்கு அளிக்கப் படுகிற பெயர்.

அதன் கருத்தாக்கம் அப்படியே புரியும் வகையில் ஒரு நல்ல தமிழ்ச் சொல்லாக்கம்தான் ‘நிகர்நோக்கு’ என்ற டாக்டர் செந்தில் அவர்களின் சிறப்பான மொழிபெயர்ப்பு.

சென்னை பாரதி பதிப்பகத்தார் வெளியிட்ட இந்த அருமையான தமிழ் நூல், 168 பக்கங்கள் கொண்டதுவிலை 175 ரூபாய்.

'இடஒதுக்கீடுபற்றி திட்டமிட்டே குழப்பும் வகையில் தங்களது ஆதிக்கச் சரிவு இதன் மூலம் ஏற்படுகிறதே என்ற பார்ப்பனர் மற்றும் மேலாண்மை ஜாதியினர் திட்டமிட்டுப் பரப்பும் பல பொய்யுரைகளுக்கு தெளிவான மறுப்புகளை அஸ்வினி தேஷ் பாண்டே ஆணியடித்ததுபோல கூறுகிறார்!

அதை நன்றாகஅனைவருக்கும் புரியும் தமிழில் வாசகர் மனதில் பதியும் வண்ணம் மொழியாக்கமாக்கித் தந்துள்ளார் நமது புத்தாக்க எழுத்தாளர் தருமபுரி டாக்டர் செந்தில் அவர்கள்.

இச்சிறிய நூல் சமூகவியலாளர்களை மட்டு மல்லாமல்அதில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் மற்றவர்களுக்கும்,  இந்தியாவில் எடுக்கப்பட் டுள்ள நிகர்நோக்கு நடவடிக்கைகளுக்கான காரணங்களையும் விவரங்களையும் அறிந்து கொள்ளப் பயன்படும் கையேடு என்ற நூலாசிரியர் அஸ்வினி தேஷ் பாண்டே கூறுவது சரியானதே.

 பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் அளித்துள்ள அணிந்துரையில் முத்தாய்ப்பாக இந்நூல் தமிழ்நாட்டைப் பற்றி, “மருத்துவர் செந்தில் இம்மொழி பெயர்ப்பின் வாயிலாக சமூகநீதிக்கானப் போரில் கையிலேந்துவதற்காகதமிழ்ச் சமுதாயத்திற்கு ஓர் அறிவாயுதத்தை அளித்துள்ளார்என்ற கூற்று ஓர் ஒப்பற்ற உண்மை!

  இதுபோன்ற பல நல்ல நூற்களை டாக்டர் செந்தில் மொழி பெயர்த்து தமிழுக்கும் தமிழ் கூரும் நல்லுலகத்திற்கும் தொண்டு செய்கவாழ்த்துகள்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக