இதனை நமது வாசக நேயர்கள் படித்துப் பயன்பெற வேண்டியே ஒரு வாழ்வியல் கட்டுரையாக எழுதுகிறோம்.
1. குளியல் அறைக்குச் செல்லும்போது வீட்டில் (இது கழிப்பறைக்கும் கூடப் பொருந்தும்) கதவை சும்மா சாத்தி வைங்க - தாழ்ப்பாள் போடவேண்டாம்.
2. வீட்டின் தரையை தண்ணீர் கொண்டு மற்றவர்கள் துடைத்து சுத்தப்படுத்தும் பணி நடக்கும் போதோ, அல்லது அந்த ஈரம் காயுமுன்போ அத்தரையில் நடக்க வேண்டாம். அதைத் தவிர்ப்பது மிகவும் நல்லது.
3. ஸ்டூல், நாற்காலி, பெஞ்ச் போன்றவற்றின் மீது ஏறி, பொருட்களை எடுப்பது, சுத்தம் செய்வது, துணிகளை காயப் போடுவது போன்ற வேலைகளை தவிர்க்க வேண்டும்.
4. கார் இருந்தால் தனியாக ஓட்டவே கூடாது. கூட யாராவது கண்டிப்பாக இருக்க வேண்டும்.
5. மாத்திரை, மருந்துகளை வேளா வேளைக் குத் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும் (கூடுமானவரை அவரவர் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்து, மாத்திரைகளை அவர்களே வேளை தவறாமல் எடுத்துக் கொள்ளும் பழக் கம் சிறப்பானது. அதுகூட முதுமையில் பல மாத் திரைகளை எடுத்துக் கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தியிருப்பார்கள் - வைட்டமின் மாத் திரை உட்பட. அவற்றை தனியே எடுத்து வைத்து, ஒரு முறை சரி பார்த்து, எதுவும் விட்டுப் போகாமல் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம். தனித்தனியே எடுக்கும்போது நமக்கே சிற்சில வேளைகள் எடுத்தோமா இல்லையா என்ற சந்தேகமும், மறதியும் ஏற்படுவதை, மனக் குழப்பத்தைத் தவிர்க்க அது பெரிதும் உதவும்).
6. உங்களுக்கு எது மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதைச் செய்து மகிழ்ச்சியோடு இருங்கள். அதை யாருக்காகவும், காம்ப்ரமைஸ் செய்ய வேண்டாம்.
7. வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றால் தனியாகச் செல்ல வேண்டாம். தெரிந்த துணை யுடன் செல்லுங்கள் (புதியவர்கள் உதவ அனு மதிக்காதீர், பாதுகாப்பாகச் சென்று திரும்ப அந்த அறிமுகத் துணை பயன்படும்).
8. வீட்டில் தனியாக இருக்கும் பொழுது அறிமுகமில்லாதோர் யாராவது வந்தால் கூடிய வரை அச்சூழலை தவிர்க்கவும் - அல்லது மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவும்.
9. கூடியவரை, படுக்கையறை, குளியலறை, கழிப்பறை ஆகியவற்றில் காலிங்பட்டன் (Calling Button) அவசியம். அசாதாரண திடீர் நெருக்கடி - சூழலில் மற்றவரை அழைப்பதற்கு அது பயன்படும்.
10. சைக்கிள் முதல் கார் வரை அனைத்து வாகனங்கள் ஓட்டுவதை முடிந்த அளவு தவிர்த் தல் நல்லது.
11. வாழும் காலத்தில் உடல் நலம், மன அமைதி, உறவின் நண்பர்கள் தொடர்பு மற்றும் துணை போன்றவை மிகவும் முக்கியம். மிக மிக அவசியம். எல்லோரிடமும் இனிமையோடு பழ குங்கள். (எக்காரணம் கொண்டும் பொறுமையை இழக்காதீர்).
12. கடந்த காலம் மற்றும் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் வேண்டாம். நிகழ்காலம் உன்னத மானது. அதை முழுமையாக, மகிழ்ச்சியாக, இனிமையாக அனுபவித்து வாழுங்கள்.
(பிறரின் நிறை - குறை இவற்றில் குறையைப் பெரிதுபடுத்தாமல் நிறையை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். 60 மதிப்பெண் பெற்றவர் முதல் வகுப்பு பெற்றவர் ஆவார். விடுபட்ட 40 மதிப் பெண் பெறவில்லையே என்று கவலைப்பட்டா மகிழ்ச்சியை துறப்பது? அது விவேகம் அல்ல!)
(நன்றி: டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன்)
அடைப்புக் குறிகளுக்குள் இருக்கும் கருத்து கள் நம்மால் எழுதப்பட்டவை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக