தமிழ் ஆராய்ச்சி உலகின் தன்னேரில்லாத பேராசிரியர் ஆய்வறிஞர் தொ.பரமசிவன் அவர்கள்!
புராண கால 'பழைய பரமசிவனுக்கு கற்பனையான நெற்றிக்கண் இருந்ததாக எழுதி பரப்புவது வாடிக்கையான வேடிக்கை!
ஆனால், இந்த புதிய தொ. பரமசிவனுக்கோ அறிவுக்கண் - அதில் எப்போதும் பெரியாரின் ஆராய்ச்சி ஒளி வீசிக் கொண்டே இருக்கும்;
புதுப்புது வெளிச்சங்களையும், புத்தாக்கச் சிந்தனைக்கான விருந்துகளும், வாசகர்களுக் கும், தமிழ் இலக்கிய ஆய்வாளர்களுக்கும் வற்றாது கிடைத்துக் கொண்டே இருக்கும்.
நிறங்களால் உலகில் இன்றளவும் நடைமுறை யில் உள்ள ஏற்றத் தாழ்வுகளும், பேதங்களும், அதன் காரணமாக ஏற்படும் கலகங்களும், நாளும் பெருகி வரும் நிலையில், நிறம்பற்றி ஒரு அற்புத மான ஆய்வினை - "கறுப்பு" என்ற தலைப்பில், எந்த நிறத்தை சற்று மட்டமாகவும், மாற்றுக் குறைந்ததாகவும் மூடத்தனமாக இன்ன மும் உலகத்தில் உள்ள பலரும் - ஏன் மண மக்களைத் தேடுவோரும்கூட கறுப்பு என்றால் முகம் சுளிப்பதும், பிறகு அதே கறுப்பு வண்ணத் தினை பல மணி நேரம், பல ஆயிரம் ரூபாய்கள் செலவில் கறுப்பு அடித்து, முதுமையை மறைத்து, இள மையை நாடி, தேடுகின்ற நிலையும் ஒரு வேடிக் கையான நகை முரண்தான்! ஆய்வறிஞர் தொ. பரமசிவன் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பு "பண்பாட்டு அசைவுகள்" என்ற நூல்.
அதில் 'கறுப்பு' என்ற தலைப்பில் உள்ள கட்டுரை அவரது அறிவுக் கண்ணொளியை நமக் கெல்லாம் பாய்ச்சி, படிப்போருக்கு கருத்தொ ளியை வழங்கி மகிழும் தொ.ப.வின் சிந்தனை கருவூல ஆய்வினை படியுங்கள்!
"இயற்கை பல்வேறு நிறங்களை உடையது. இயற்கையின் நிறங்களில் மனிதன் சுவை, அழகு, பயன் ஆகியவற்றைக் கண்டான். எனவே அவன் படைத்த செயற்கைப் பொருள்கள் பல நிறங்களில் அமைந் தன. இக்காலத்தில் நிறத்தை யும் குறிக்கும் ‘வண்ணம்' என்ற சொல் அக்காலத் தில் அழகு, இசை, ஒழுங்கு ஆகிய பொருள்களை மட்டுமே தந்தது.
எல்லா இயற்கைப் பொருள்களிலும் நிறவேறு பாடு இருப்பது போல, மனித உடம்பிலும் அதாவது, தோலிலும் நிற வேறுபாடுகள் உண்டு. அந்த வேறுபாடுகள் இன்றைய உலகில் வறு மைக்கு அல்லது வளமைக்கு, உயர்வுக்கு அல் லது தாழ்வுக்கு, அதிகாரத்திற்கு அல்லது அடி மைத்தனத்திற்கு, ஒடுக்குமுறைக்கு அல்லது அதற்கு எதிரான போராட்டத்திற்கு உரிய குறி யீடுகளாக மாற்றப்பட்டுவிட்டன. இட ஒதுக்கீட் டுக்கெதிராக ஒரு கருத்தைச் சொல்லும் திரைப் படத்தில் கறுத்த நிறமுடையவன் கல்லூரிக்குச் செல்லுகிறான். சிவந்த நிறமுடையவன் இடங் கிடைக்காமல் வெளியே நிற்கிறான். கருத்தைச் சொல்லுவதற்கு இங்கே தோலின் நிறம் ஒரு குறியீடாகப் பயன்படுத்தப்படுகிறது. கறுப்பு, சிவப்பு ஆகிய இரண்டு நிறங்கள் கீழ்ச் சாதிக் காரன், மேல்சாதிக்காரன் என்பதைக் குறியீடு களாகச் சுட்டி நிற்கின்றன. சமூக முரண்பாடுகள் மனிதனின் தோலின் நிறத்தைக்கொண்டு வெளிப் படுகின்ற வழக்கம் எவ்வாறு உருவானது? மனி தத்தோலின் நிறத்தையும், அழகையும் இணைக் கும் கோட்பாடுகள் தமிழ்ச் சமூகத்தில் எவ்வாறு வளர்ந்துள்ளன என்பதை விளக்க முயலுவோம்.
இன்றைய சமூக நிகழ்வுகளிலும் அசைவுகளி லும் கறுப்பு நிறம் கீழ்ச்சாதிக்காரன், வறுமைப் பட்டவன், கல்வியறிவு இல்லாதவன் அல்லது நாகரிகமறியாதவன், அழகற்றவன் என்ற பொருள்களிலேயே ஆளப்படுகிறது. திருமணச் சந்தையில் பணம் என்பதைப் போலவே, அதற் குக் குறையாத அழுத்தத்துடன் பெண்ணின் நிறமும் தீர்மானிக்கிற சக்தியாக விளங்குகிறது. அதாவது சாதாரண மனிதனின் அழகுணர்ச்சி யைப் பொறுத்தமட்டில், கறுப்பு என்பது அழகற்ற நிறம் என்று அனைத்து மனிதர்களும் கருது கிறார்கள். அழகுணர்ச்சியில் இந்தப் பாகுபாடு புகுந்த முறை ஆய்வுக்குரிய ஒன்றாகும்.
ஒரு சமூகத்தின் வாழ்க்கை நெறிகளை வரலாற்றுப் போக்கில் அளவிட்டு அறிய உதவும் சான்றுகளில் இலக்கியம் முதன்மையானது. தமிழ்ச் சமூகம் மிக நீண்ட இலக்கிய மரபினை உடையதாக இருக்கிறது. எனவே மனிதத் தோலின் நிறமும் அழகுணர்ச்சியும் பற்றிய மதிப் பீடுகளை அறிய இலக்கியச் சான்றுகளைக் காண்போம். நிறங்கள் மனித உணர்வுகளைப் புலப்படுத்தும் என்னும் செய்தி தொல்காப்பியத் தில் காணப்படுகிறது. ஆனால் இரண்டு நிறங்க ளைப் பற்றியே தொல்காப்பியர் பேசுகிறார்.
கறுப்பும் சிவப்பும் வெகுளிப் பொருள
நிறத்துரு உணர்த்தற்கும் உரிய என்ப.
கறுப்பு, சிவப்பு என்பன சினத்தை உணர்த்தும் சொற்களாகவும் வரும் என்பது தொல்காப்பிய இலக்கணமாகும். இந்த இலக்கணம் பிற்கால இலக்கியங்களில் பின்பற்றப்பட்டிருக்கிறது.
கறுத்தின்னா செய்த அக்கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
என்ற திருக்குறளில் 'கறுத்து' என்ற சொல் ‘சினந்து' என்ற பொருளைத் தருகிறது.
செருநரை நோக்கிய கண்தன்
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவேன்
என்ற ஔவையாரின் புறப்பாடலில் சிவப்பு என்ற சொல் வெகுளி என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளது. ஆயினும் இந்தச் சொற்கள் தோலின் நிறம் பற்றிப் பேச வரவில்லை.
சங்க இலக்கியங்களிலும் அதற்குப்பின் வந்த நீதி இலக்கியங்களிலும் சிலம்பு, மேகலை போன்ற காப்பியங்களிலும் ஆண், பெண் இருவரின் உடல் சார்ந்த வருணனைகள் ஏராளமாக இடம் பெறுகின் றன. ஆனால் அவையனைத்தும் மனித உறுப்புகளின் அளவும், வடிவும் சார்ந்தாகவே அமைந்துள்ளன. இந்த வருணனைகளும் அளவு மட்டுமன்றி உறுப்புக்களின் பயன் கருதியதாகவும் அமைந்துள்ளன. பெருத்த முலை என்பது வளமை அல்லது தாய்மையின் குறியீடாகவும் வீரரின் பெருத்த தோள் என்பது வலிமையின் சின்னமாகவும், பாதுகாப்பின் சின்னமாகவும் அமைந்துள்ளன. உயர்வு, தாழ்வு என்ற கருத்தோட்டங்கள் இந்த வருணனைகளில் காணப்படவில்லை. மாறாக, அழகு என்பது உடல் நலம் சார்ந்ததாகவே பேசப்பட்டிருக்கிறது. இவ்வருணனைகளில் ஓரிடம் தவிர ஏனைய இடங்களில் மனிதத் தோலின் நிறம் பேசப்படவே இல்லை. காதலன் அல்லது கணவனைப் பிரிந்த பெண்ணின் உடலில் பொன் நிறத்தில் பசலை பூக்கும், என்னும் ஓரிடத்தில் மட்டுமே "மனிதத் தோலின் நிறம்" பேசப்படுகிறது.
இவை ஒருபுறமாக, மற்றொரு புறத்தில் தெய்வங்களைப் பேசும் இடத்தில் அவற்றின் நிறங்கள் பேசப்படுகின்றன. மாயோன் மலை போன்று நீலநிறத்தில் இருக்கிறான்; பலராமன் (வாலியோன்) அருவி போல வெள்ளை நிறத்தில் இருக்கிறான் என்று ஒரு சங்கப் பாடல் கூறும். திருமாலுக்கும், பலராமனுக்கும் நிறம் சொல்லப் பட்டாலும், முருகன், கொற்றவை போன்ற தெய்வங்களுக்கு நிறம் சொல்லப்படவில்லை. சிவபெருமானின் கழுத்து நஞ்சுண்ட காரணத்தால் கருமையும், நீலமும் கலந்த வண்ணத்தில் அமைந்திருப்பதாக மற்றொரு பாட்டு கூறும்.
(நாளை தொடரும்)
பக்தி இலக்கியக் காலந்தொட்டுத் தெய்வங் களுக்கும், மனிதர் களுக்கும் பல்வேறு நிறங்கள் பேசப்படுகின்றன. கடவுள் எல்லாமாக இருக் கிறான் என்று குறிக்க வந்த மாணிக்கவாசகர், “நிறங்களோர் அய்ந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான்” என் கிறார். எனவே நிறங்கள் மொத்தம் அய்ந்து என் பது பழந்தமிழர் கருத்து என்று தெரிகிறது. வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, புகை நிறம் என அவற்றை உரையாசிரியர் விளக்குகின் றனர். தேவாரம் சிவபெருமானைப் 'பவள வண் ணத்தினர்' என்றும், உமையவளை ‘மரகதக் கொடி' எனப் பச்சை நிறமுடையவளாகவும் குறிக்கின்றது. இருளின் வண்ணமும் அந்தியின் வண்ணமும்கூடச் சிவபெருமானின் வண்ண மெனக் குறிக்கும் மற்றொரு தேவாரப் பாடல். வண்ணம் என்ற சொல் அழகு என்ற பொருளி லும் வழங்கப்பட்டிருப்பதனை ‘வண்ண மார்பில் தாரும் கொன்றை' என்ற சங்கப் பாடலாலும் அறிகின்றோம்.
பக்தி இலக்கியங்களில் நாம் காணும் மற் றொரு செய்தி கறுப்பு அழகுக்குரிய நிறம், அது ஒளி வீசும் என்பது. திருமாலை ஆண்டாள் 'கண்ணன் என்னும் கருந்தெய்வம் காட்சி பழகிக் கிடப்பேன்' என்கிறார். ஆழ்வார்கள் பலரும் திருமாலைக் 'கரிய மாணிக்கம்' என்று பாடியுள்ள னர். இராமனது கரிய உடம்பிலிருந்து ஒளி கிளர்ந்தது என்ற செய்தியை 'வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறைய' என்று கம்பர் பாடுகிறார். கண்ணப்பர் பிறந்தபோது அவரது கறுத்தமேனி ஒளியுடையதாக இருந்தது என்பதனைக் 'கருங்கதிர் விரிக்கும் மேனி காமருகுழவி' என்று பாடுகிறார் சேக்கிழார். தன் மீதுபட்ட ஒளியைப் பளபளப்புடைய கருப்புநிற மனிதத்தோல் 'எதிரொளி' செய்துகாட்டும் என் பது கம்பரும் சேக்கிழாரும் காட்டும் அழகுக் காட்சியாகும்.
நன்னூல் 301ஆம் சூத்திரத்துக்கான விருத்தி யுரையில் அவ்வுரைகாரர் 'கண்' என்னும் வேற் றுமை உருபினை விளக்குகிறார். எடுத்துக்காட் டாகத் தரப்படும் சொற்றொடர் 'கறுப்பின் கண் மிக்குள்ளது அழகு' என்பதாகும். நெருப்பின் உள்ளார்ந்த தன்மை தெறல் (சுடுதல்) என்பது போலக் கறுப்பின் உள்ளார்ந்த தன்மையே அழகுதான் என்பது அக்காலத்தில் நிலவிய கருத்து எனத் தெரிகிறது. அக்காலம் வரை அழகோடு சேர்த்து எண்ணப்பட்ட கறுப்பு நிறம் பின்னர் ஏன் தனது மதிப்பை இழந்தது? அழ கின்மை என்பதற்கு எடுத்துக் காட்டாக அது எப்படி மாறிப் போனது? தாழ்வுக்கும், இழிவுக்கும் உரியதாகக் கறுப்பு நிறம் கருதப்பட்டதன் சமூக வரலாற்றுக் காரணிகள் யாவை? இக்கேள்வி களுக்கான விடையினைச் சமூக அமைப்பில் காண இயலாது. மாறாக அதிகாரம் சார்ந்த அரசியல் அமைப்புக் குள்ளே தேடவேண்டும். அதுவும் தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்த 13ஆம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின்னரே தேட வேண்டும்.
கி.பி. 1310 முதல் 1323 வரை தமிழ்நாடு இசுலாமியர் படையெடுப் பால் அலைக்கழிந்தது. மீண்டும் 1383இல் விசய நகரப் பேரரசின் தளபதிகளின் படையெடுப்பால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. விசய நகரப் பேரரசு இசுலாமியருக்கு எதிராக வைதிக நெறியை உயர்ந்த இலட்சியமா கக் கொண்டு தோன்றிய அரசமரபாகும். ஆட் சியதிகாரம் விசயநகரப் பேரரசின் தளபதிகளின் கைக்கு மாறியவுடன் தமிழ் நாடு ஒரு பண்பாட்டு நெருக்கடியை எதிர்கொண்டது. அதாவது வரலாற்றில் முதல்முறையாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பிறமொழி பேசும் ஆட்சி யாளர்களிடம் நிலையாக மாறியது. இந்த ஆட்சி யாளரைத் தொடர்ந்து தெலுங்கு மொழி பேசும் மக்கள் பெருமளவு குடியேறத் தொடங்கினர். பிராமணர் தொடங்கிச் சக்கிலியர் ஈறாக இந்தக் குடியேற்றம் அமைந்தது பிராமணர், பிராமணரை அடுத்த 'மேல் சாதியினரான' புலால் உண்ணாத ரெட்டியார், ராஜுக்கள் இவர்களுக்கு அடுத்த படிநிலைகளில் அமைந்த நாயுடு (வெலமா, கம்மவார், கவர, காப்பு, பலிஜா), இவர்களுக்கும் அடுத்த நிலையில் உள்ள ஆசாரிகள், பெரும் பாலும் புன்செய் நிலத்து விவசாயிகளான நாயக்கர், மிகத்தாழ்நிலையில் உள்ள செருப்புத் தைக்கும் சக்கிலியர், தோட்டி வேலை செய்யும் சக்கிலியா என இவர்களை வகைப்படுத்திக் காணலாம். இவர்களோடு சவுராட்டிரப் பகுதியிலி ருந்து ஏற்கனவே வெளியேறி ஆந்திரத்தில் இருந்த நெசவுத் தொழில் செய்யும் சாதியான சவுராட்டிரர்களும் தமிழகத்தில் வந்து குடியேறி னர். இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் தனித்து வளர்ந்திருந்த சைவ, வைணவ மதங்கள் பின் னுக்குத் தள்ளப்பட்டன. வைதிக நெறியே முன் னிறுத்தப்பட்டது. 'இந்து மதம்' அதிகாரத்தில் அமர்ந்தது. தமிழ் அக்காலத்தில் ஆட்சி மொழி யாக இல்லை. ஆட்சியாளர்களின் மொழியாகிய தெலுங்கு பேணப்பட்டது. அரசியல் அதிகாரத் தில், வைதிக நெறியின் காவலர்களான பிராம ணர்க்கும் சமசுகிருதத்திற்கும் முன்னுரிமை தரப் பட்டது.
இவர்கள் ஆட்சி முடியும் தறுவாயில் கி.பி. 1700க்குப் பிறகு உருது பேசும் வடநாட்டு முசுலிம் கள் அங்கங்கே சில பகுதிகளில் ஆட்சியதிகாரத் தைக் கைப்பற்றினர். மிகச்சில பகுதிகளில் பிரஞ்சுக்காரரும் ஏனைய பகுதிகளில் பிரிட்டிஷ் காரர்களும் ஆட்சியைக் கைப்பற்றினர்.
கி.பி. 14ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதலாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத் தைக் கையிலே வைத்திருந்த அனைத்து ஆட்சி யாளர்களும், தமிழர்களின் சராசரி நிறத்திலிருந்து வேறுபட்ட சிவந்த நிறமுடையவர்கள். அவர் களால் ஆதரிக்கப்பட்ட வடநாட்டில் இருந்து வந்த இசுலாமிய ஞானிகள், அய்ரோப்பியப் பாதிரிமார்கள், பிராமணர்கள் ஆகிய அனை வரும் தமிழர்களைவிடச் சிவந்த நிறம் உடைய வர்கள். எனவே அய்ந்து நூற்றாண்டுக்கு மேலா கத் தமிழ்நாட்டில் அரசியல் அதிகாரமும், அர சியல் சித்தாந்தங்களையும் நடைமுறைகளையும் உயர்த்திப் பிடிக்கின்ற ஆன்மீக அதிகாரமும் சிவந்த நிறமுடையவர்களின் கையிலேயே இருந்தது. எனவே இந்த நிறம் அதிகாரத்தின் நிறமாக, உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக, மேட்டிமையின் சின்னமாக, அழகு நிறைந்ததாகக் காட்டப்பட்டது. சுருக்கமாகச் சொல்வதானால், தமிழ் பேசும் பெருவாரியான மக்கள் கூட்டத் தாரின் மரபுவழி அழகுணர்ச்சி மனிதத் தோலின் நிறத்தைப் பொறுத்தமட்டில் திசைமாற்றம் பெற் றது. எதிர்நிலையில் சொல்வதானால், கறுப்பு நிறமுடைய மக்கள் அழகற்றவர்களாகவும், ஆளப்படுபவர்களாகவும், அதிகாரத்திற்குத் தகுதியற்றவர்களாகவும், இழிவின் சின்னமாகவும் கருதப்பட்டனர். இன்றளவும் இதுவே தொடர் கதையாகி வருகிறது. எனவேதான் தளைகளி லிருந்து தங்களை விலக்கிக் காட்ட விரும்பும் தனி மனிதர்கள், அதாவது தனிவாழ்வின் பொரு ளாதார மேன்மையிலும் அதிகாரத்தின்மீதும் வேட்கை உடையவர்கள் சிவப்புத் தோலை வெறியுடன் விரும்புகிறார்கள். எனவே 'கறுப்பு - சிவப்பு' என்பது வெறும் அழகுணர்ச்சி சார்ந்த பிரச்சினையன்று. அது மரபுவழி அழகுணர்ச்சியிலிருந்து திசை மாற்றப்பட்டவர்களின் அதிகார வேட்கைக்கும் மரபுவழிச் சங்கிலியால் பிணைக் கப்பட்ட எளிய மக்களுக்கும் இடையிலே நிலவி வரும் ஒரு முரண்பாடு ஆகும்."
கறுப்பு, சிவப்பு, - நிறம் எப்படிப்பட்ட கோணத்திலிருந்து இவரது அறிவுக்கண்ணால் பார்க்கப்பட்டு, அந்த கண்ணொளிக் காட்சி இலக்கியச் செல்வமாக செம்மொழிக்குச் சிறப்புச் சேர்த்துள்ளது பார்த்தீர்களா?
தமிழாய்வு அறிஞரும், பெரியார் சிந்தனைப் பட்டறையின் படைக்கலனுமான பேராசிரியர்
தொ.பரமசிவன் அவர்களது அறிவுச் செல்வம், ஆய்வுகளை அள்ளி அள்ளித் தரும் வற்றாத ஊற்று என்ற செய்தியின் இதோ மற்றும் ஓர் ஒளிமுத்துக் கருத்தோவியம்!
‘பண்பாட்டு அசைவுகள்' நூலில் "உணர்வும் உப்பும்" என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் உப்புப் பற்றிய செய்திகளைப் படிக்கப் படிக்க உப்பு கரிக்கவில்லை. நாவுக்கு ருசியாக இனிக்கவே செய்கிறது!
உண்ணுவதற்கும் எண்ணுவதற்கும் தயார் தானே! இதோ:
"'உப்புப் பெறாத வேலை' என்று ஒன்றுக்கும் பயனற்றதைக் குறிப்பிடுவார்கள் (உணர்ச்சியற்ற வனை உப்புப் போட்டுத் தான் சாப்பிடுகிறாயா என்றும் கேட்பார்கள்). ஆனால் மனிதகுல வரலாற் றில் உப்புக்குத் தனி இடம் உண்டு. மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நெருப்பை உருவாக்கக் கற்றது போல உப்பினைப் பயன்படுத்தக் கற்றதும் முக்கியத்துவமுடையதுதான். அப்போதுதான் வேதியியல் என்ற விஞ்ஞானம் தொடக்கம் பெறுகிறது.
‘உப்பு' என்ற தமிழ்ச் சொல்லுக்குச் ‘சுவை' என்பதே முதற்பொருள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகளெல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டே பிறந்தவை. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உப்பிற்கு ‘வெள்ளுப்பு' என்று பெயர். பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும், தமிழ்ப் பண்பாட்டிலும் உப்புக்கும் தனி இடம் உண்டு. பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாக வும், வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது. தன் உருவம் தெரியாமல் பிற பொருள்களோடு கலந்து பயன்தருவது 'வெள்ளுப்பு'.
செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பா வும்), உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் ‘சம்பளம்‘ என்ற சொல் பிறந்தது என்பர். ஆங்கிலத்திலும் ‘Salary‘ என்ற சொல் ‘salt' என்பதன் அடியாகப் பிறந்தது என் றும் கூறுவர்.
இன்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான சாதியா ரிடத்தில் புது மணமகள் தன் கணவன் வீட்டிற்குள் நுழையும்போது ஒரு சிறு ஓலைக்கூடையில் உப்பை எடுத்துக்கொண்டே நுழைகிறாள். அது போலவே புதுமனை புகுவிழாக்களில் உறவினர் கள் அரிசியினையும், உப்பினையும் அன்பளிப்பா கக் கொண்டு வருவர். மதுரை மாவட்டக் கள்ளர் களில் ஒரு பிரிவினர் திருமணத்தை உறுதி செய் யும்போது மணமகன் வீட்டில் இருந்து அரிசியும், உப்பும் கொண்டு செல்கின்றனர்.
ஒருவர் இறந்த எட்டாவது அல்லது பத்தாவது நாளில் இறந்தார்க்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்னமும் பல சாதியாரிடத்து இருக்கின்றது. உப்பு உறவின் தொடர்ச்சிக்கு உள்ள ஒரு குறியீடு ஆகும். இறந் தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக்கொள்ளவே இவ்வாறு செய்கிறார்கள். உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாய் ஆகவும் கருதப்படுகிறது. ‘தின்ற உப்பிற்குத் துரோகம் செய்வது‘ என்பது நன்றி மறந்ததனைக் காட்டும் வழக்குமொழி.
நன்றி கெட்ட விதுரா - சிறிதும்
நாணமற்ற விதுரா
தின்ற உப்பினுக்கே - நாசம்
தேடுகின்ற விதுரா
என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதி இந்த நம்பிக்கை யைப் பதிவு செய்கிறான்.
பழந்தமிழ்நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியிருக்கிறது. கடற்கரையில் விளையும் உப்பினை வண்டிகளில் ஏற்றிச் செல்லும் ‘உமணர் ‘ என்ற வணிகர்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படு கின்றன. கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகர் மலைத் தமிழ்க் கல்வெட்டு உப்பு வணிகன் ஒருவனையும் குறிக்கிறது. உப்பு விளை யும் களத்திற்கு ‘அளம்‘ என்றும் பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப்பெயர்க ளைச் சூட்டியிருக்கிறார்கள். அவை பேரளம், கோவ ளம் (கோ+அளம்) என்று வழங்கப்பட்டுள்ளன.
- தொடரும்
தமிழாய்வு அறிஞரும், பெரியார் சிந்தனைப் பட்டறையின் படைக்கலனுமான பேராசிரியர்
தொ.பரமசிவன் அவர்களது அறிவுச் செல்வம், ஆய்வுகளை அள்ளி அள்ளித் தரும் வற்றாத ஊற்று என்ற செய்தியின் இதோ மற்றும் ஓர் ஒளிமுத்துக் கருத்தோவியம்!
‘பண்பாட்டு அசைவுகள்' நூலில் "உணர்வும் உப்பும்" என்ற தலைப்பில் உள்ள கட்டுரையில் உப்புப் பற்றிய செய்திகளைப் படிக்கப் படிக்க உப்பு கரிக்கவில்லை. நாவுக்கு ருசியாக இனிக்கவே செய்கிறது!
உண்ணுவதற்கும் எண்ணுவதற்கும் தயார் தானே! இதோ:
"'உப்புப் பெறாத வேலை' என்று ஒன்றுக்கும் பயனற்றதைக் குறிப்பிடுவார்கள் (உணர்ச்சியற்ற வனை உப்புப் போட்டுத் தான் சாப்பிடுகிறாயா என்றும் கேட்பார்கள்). ஆனால் மனிதகுல வரலாற் றில் உப்புக்குத் தனி இடம் உண்டு. மனிதனின் நாகரிக வளர்ச்சியில் நெருப்பை உருவாக்கக் கற்றது போல உப்பினைப் பயன்படுத்தக் கற்றதும் முக்கியத்துவமுடையதுதான். அப்போதுதான் வேதியியல் என்ற விஞ்ஞானம் தொடக்கம் பெறுகிறது.
‘உப்பு' என்ற தமிழ்ச் சொல்லுக்குச் ‘சுவை' என்பதே முதற்பொருள். இனிப்பு, கசப்பு, துவர்ப்பு என்று சுவைகளெல்லாம் உப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டே பிறந்தவை. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் உப்பிற்கு ‘வெள்ளுப்பு' என்று பெயர். பழந்தமிழ் நாட்டுப் பொருளாதாரத்திலும், தமிழ்ப் பண்பாட்டிலும் உப்புக்கும் தனி இடம் உண்டு. பழந்தமிழர்களால் சுவையின் சின்னமாக வும், வளத்தின் சின்னமாகவும் உப்பு கருதப்பட்டது. தன் உருவம் தெரியாமல் பிற பொருள்களோடு கலந்து பயன்தருவது 'வெள்ளுப்பு'.
செய்த வேலைக்கு மாற்றாக நெல்லும் (சம்பா வும்), உப்பும் (அளத்தில் விளைவது) கொடுத்த வழக்கத்தினால்தான் ‘சம்பளம்‘ என்ற சொல் பிறந்தது என்பர். ஆங்கிலத்திலும் ‘Salary‘ என்ற சொல் ‘salt' என்பதன் அடியாகப் பிறந்தது என் றும் கூறுவர்.
இன்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான சாதியா ரிடத்தில் புது மணமகள் தன் கணவன் வீட்டிற்குள் நுழையும்போது ஒரு சிறு ஓலைக்கூடையில் உப்பை எடுத்துக்கொண்டே நுழைகிறாள். அது போலவே புதுமனை புகுவிழாக்களில் உறவினர் கள் அரிசியினையும், உப்பினையும் அன்பளிப்பா கக் கொண்டு வருவர். மதுரை மாவட்டக் கள்ளர் களில் ஒரு பிரிவினர் திருமணத்தை உறுதி செய் யும்போது மணமகன் வீட்டில் இருந்து அரிசியும், உப்பும் கொண்டு செல்கின்றனர்.
ஒருவர் இறந்த எட்டாவது அல்லது பத்தாவது நாளில் இறந்தார்க்குப் படைக்கும் உணவுகளை உப்பில்லாமல் செய்யும் வழக்கம் இன்னமும் பல சாதியாரிடத்து இருக்கின்றது. உப்பு உறவின் தொடர்ச்சிக்கு உள்ள ஒரு குறியீடு ஆகும். இறந் தாரோடு உள்ள தொடர்பை அறுத்துக்கொள்ளவே இவ்வாறு செய்கிறார்கள். உப்பு நன்றி உணர்ச்சியின் தோற்றுவாய் ஆகவும் கருதப்படுகிறது. ‘தின்ற உப்பிற்குத் துரோகம் செய்வது‘ என்பது நன்றி மறந்ததனைக் காட்டும் வழக்குமொழி.
நன்றி கெட்ட விதுரா - சிறிதும்
நாணமற்ற விதுரா
தின்ற உப்பினுக்கே - நாசம்
தேடுகின்ற விதுரா
என்று பாஞ்சாலி சபதத்தில் பாரதி இந்த நம்பிக்கை யைப் பதிவு செய்கிறான்.
பழந்தமிழ்நாட்டின் மிகப் பெரிய சந்தைக்குரிய உற்பத்திப் பொருளாக உப்பு விளங்கியிருக்கிறது. கடற்கரையில் விளையும் உப்பினை வண்டிகளில் ஏற்றிச் செல்லும் ‘உமணர் ‘ என்ற வணிகர்களைப் பற்றிய செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படு கின்றன. கிறித்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அழகர் மலைத் தமிழ்க் கல்வெட்டு உப்பு வணிகன் ஒருவனையும் குறிக்கிறது. உப்பு விளை யும் களத்திற்கு ‘அளம்‘ என்றும் பெயர். பெரிய உப்பளங்களுக்கு அரசர்களின் பட்டப்பெயர்க ளைச் சூட்டியிருக்கிறார்கள். அவை பேரளம், கோவ ளம் (கோ+அளம்) என்று வழங்கப்பட்டுள்ளன.
- தொடரும்
அறிஞர் தொ.ப.சி.யின் அறிவுக்கு உணவு - 'வயிற்றுப் பசி தீர்க்கும் உணவு' பற்றிய ஆராய்ச்சி மிக மிக அற்புதம். தனித்தன்மை!
நெல்லைச் சீமையில் இலக்கிய வட்டம் அக்காலத்தில், 'வட்டத் தொட்டி' என்ற பெயரில் டி.கே.சி. (டி.கே. சிதம்பரநாத முதலியார்), மீ.ப. சோமு (மீ.ப. சோமசுந்தரம்) முதலியவர்களும் மற்றும் ராஜாஜி போன்றவர்களும்கூட கலந்து கொண்டு இலக்கிய சர்ச்சைகளை செய்ததாக பலர் கூறுவதுண்டு.
தமிழரசுக் கழகத் தலைவர் மா.பொ.சி. இலக்கியத்தை தானே கற்றவர் - அச்சுக்கோர்க்கும் தொழிலாளியாக இருந்து இலக்கிய வல்லுநராக மாறினார்.
இடதுசாரிகளில் சிறந்த முற்போக்கு எழுத் தாளரான தி.க.சிவசங்கரன். அவர் பெயரை சுருக்கி ‘தி.க.சி.' என்றே அழைப்பார்கள்.
இப்படி பல 'சி'கள் இருந்தாலும் - 'சி' என்றால் முதல் எழுத்து அவர்தம் பெயரின் முதல் எழுத்து. அரசியல் பரிபாஷையில் 'c' 'சி' என்பதற்கு கோடிகளின் முதல் எழுத்து என்பதை நினைத்துக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
இலக்கியச் செல்வம்தான் இவர்கள் பெற்ற செல்வம் - கோடியை காணாதவர்கள். அந்த வரிசையிலும் தொ.ப.சி. ஓர் எளிய நடுத்தரக் குடும்பத்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பூத்த வாடாத வண்ண மலர் ஆவார்.
அவர் சோறு விற்றல் பற்றி தனது அறிவுக் கண்ணை அகல விரித்து நமக்கெல்லாம் ஒளி பாய்ச்சுகிறார்!
அறிந்திராத அரிய செய்திகள் நமக்கு அரும் புதையலாகக் கிடைத்துள்ளது. படியுங்கள் - சுவையுங்கள்,
இதோ:
"சோறு, அவிழ்பதம் ஆகிய இரண்டு சொற் களும் பழைய இலக்கியங்களில் வழங்குகின்றன. இன்று நெல்லரிசி சோறு மட்டுமே சோறு என்ற பொருளில் வழங்கப்படுகிறது. ஆனால் புஞ்சை நிலத்தில் வாழும் மக்கள் கம்பு, சோளம், குதிரை வாலி ஆகிய தானியங்களைச் சமைத்து உண்ணும்போது கம்பஞ்சோறு, சோளச்சோறு, குதிரை வாலிச்சோறு என்றே கூறுகின்றனர். அதுவும் அன்றிக் கற்றாழையின் சதைப்பற்றினையும், பனை, தென்னை ஆகிய மரங்களில் திரட்சியில்லாத சதைப்பற்றினையும் 'சோறு' என்றே வழங்குவர்.
'அரிசி' என்னும் சொல்லும் நெல் அரிசியை மட்டுமல்லாது, அவித்து உண்ணும் சிறிய தானியங்கள் அனைத்தையும் குறிக்கும், 'ஆரி' என்னும் வேர்ச் சொல்லுக்குச் 'சிறிய' என்பதே பொருள் (அரி மணல், அரி நெல்லிக்காய்). வெள்ளைப் பூண்டின் சிறிய கீற்றுக்களையும் வெள்ளைப் பூண்டு அரிசி என்று பெண்கள் கூறும் வழக்கமுண்டு.
இன்று எல்லா ஊர்களிலும் உணவு விற்கும் கடைகள் உள்ளன. சில ஊர்களில் குடிநீரும் விற்பனைப் பொருளாகி விட்டது. தமிழர் பண்பாட்டில் "சோறும் நீரும் விற்பனைக்கு உரியவையல்ல" என்ற கருத்து இலக்கியங்களைக் கூர்ந்து நோக்கும்போது தெரிகிறது. 'வறியார்க்குச் சோறிடுதல் அறம்' என்கிற கோட்பாடு மட்டுமே திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் ஊர் தடத்தில் (காலடி) வழிச் செல்வோர் யாரும் உண்ணாமல் இரவில் படுத்திருந்தால் ஊர்க்காரர்கள் "இரவுச்சோறு' கொடுக்கும் வழக்கம் அய்ம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்புவரை நடைமுறையில் இருந்திருக்கிறது. தங்கள் இடத்தில் இரவில் பசியோடு யாரும் உறங்கச் செல்வது தங்களுக்கு மானக்கேடு என்று கருதியுள்ளனர். சிறுகுடிக்கிழான் பண்ணன் வறியார்க்குச் சோறளித்த செய்தி சங்க இலக்கியத்தில் பேசப் படுகிறது. 'உயிர் மருந்து' எனச் சோற்றினை வருணிக்கும் மணிமேகலை வறியவர்களுக்கும், ஊனமுற்றோர்க்கும், கைவிடப்பட்டவருக்கும், நோயாளிக்கும் உணவளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டில் புகுந்த சமண சமயமும் நால்வகைக் கொடைகளில் சோறு, மருந்து, கல்வி, அடைக்கலம் என உணவுக் கொடையையே முதலாவதாகப் பேசுகிறது. 'அன்னதானம்' செய்யும் வழக்கம் சமணர்களால் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும். பக்தி இயக்கத்தின் எழுச்சியோடு கோயில்களில் அடியார்க்கு உணவு வழங்கப்பட்டிருக்கிறது என்பதனை "அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்" என வரும் அப்பர் தேவாரத்தால் அறியலாம்.
ஒன்பதாம் நூற்றாண்டு முதல் நெடுவழிகளில் அமைந்த தாவளங்களையும் (சத்திரங்களையும்), மடங்களையும் காண்கின்றோம். விசய நகர மன்னர் வருகைக்குப் பின்னர் கி.பி.11ஆம் நூற்றாண்டு அளவில் தான சத்திரங்களில் சோறு விற்கப்பட்ட குறிப்புக்களைக் காண முடிகிறது. பிற்காலச் சோழர் கல்வெட்டுக்களில் கோயில்களிலும், மடங்களிலும் 'சட்டிச் சோறு' வழங்கிய செய்தி குறிக்கப்படுகிறது. இவ்வழக்கம் 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நடைமுறையில் இருந்துள்ளது. அக்காலம் வரை சோறும் நீரும் மட்டுமே இந்த விற்பனை விதி விலக்கைப் பெற்றிருக்கின்றன. சாலையோரக் கடைகளில் பிற உண்பண்டங்கள் விற்கப்பட்ட செய்தி சிலப்பதிகாரத்திலேயே பதிவாகி இருக்கிறது.
இதுவன்றி, 'பெருஞ்சோறு' என்னும் சொல்லும் இலக்கியங்களில் காணப்படுகிறது. இது அரசன் போருக்குச் செல்லுமுன் வீரர் அனைவரோடும் கூடி உண்டதைக் குறிக்கிறது. எனவே இது ஒரு போர்ச் சடங்கு நிகழ்ச்சியாகச் செய்யப்பட்டது எனத் தோன்றுகிறது. இந்த உணவு ஊனும் சோறும் கலந்தது என்பதனை "ஊன்துவை அடிசில்" என்று குறிக்கிறது பதிற்றுப் பத்து.
விசய நகரப் பேரரசு காலம் தொடங்கித் தமிழ்நாட்டுச் சத்திரங்களில் சோறு விற்கப்பட்டு, பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 'ஹோட்டல்' எனப்படும் உணவு விடுதிகள் தொடங்கப்பட்டன. கடந்த நூற்றாண்டின் பிற் பகுதியில்தான் நகரங்களிலும், சிறு நகரங்களிலும் காசுக்குச் சோறு விற்கும் கடைகள் உண்டாயின. அப்பொழுதும்கூட, பிராமணரும், பிராமணரை அடுத்த மேல் ஜாதியினரும், முசுலிம்களும் தங்கள் தங்கள் ஜாதியினருக்கு மட்டுமே உரிய உணவகங்களை நடத்தி வந்திருக்கின்றனர். நாட்டு விடுதலைக்குப் பின்னரே பிற ஜாதியார் உணவகம் நடத்தும் தொழிலை மேற்கொள்ளத் தொடங்கினர். நாட்டு விடுதலைக்குப் பின்னரும் பிராமணர் மட்டும் உண்ணும் உணவகங்கள் இருந்தன. அவற்றை எதிர்த்துப் பெரியார் ஈ.வெ.ரா.வின் தொண்டர்கள் மறியல் செய்தபின் அவ்வழக்கம் கைவிடப்பட்டது நாமறிந்த செய்தியே."
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக