மகிழ்ச்சிக்கான வேர்கள், தொண்டு என்னும் நிலத்தில்தான் ஆழமான வகையில் முளைத்துச் செழிப்புடன் ஊன்றும்!
மகிழ்ச்சி என்பது போராட்டங்களே இல்லாத வாழ்வைத் தருவது என்பதல்ல, அவைகளை எதிர்கொண்டு சந்திப் பதில்தான் இருக்கிறது!
செயல்களின் தொடர்ச்சியில்தான் மகிழ்ச்சிப் பெருக்கெடுத்தோடுகிறது. தேக்கமான குட்டையால் ஏற்படும் பயனைவிடப் பாயும் ஆற்றினால்தானே பலன் அதிகம்? அதுபோல!
மகிழ்ச்சியை விரும்பும் எவரும், அதனைப் பிறருடன் பகிர்ந்து கொள் ளவும் எப்போதும் ஆயத்தமாக இருக்கவேண்டும்!
நமக்குக் கிடைத்துள்ள மலர் களைக்கொண்டே நல்ல மலர்ச் செண்டைத் தயாரிக்க முடியுமே!
நல்லஇலட்சியத்திற்கு,ஒருவர் தன்னை இழப்பதற்குத் தயாராவதை விட மிகுதியான மகிழ்ச்சி வேறு எதிலும் கிடையாது!
நாம் கோபப்படும் ஒவ்வொரு மணித் துளியிலும், 60 வினாடிகளுக்குரிய மகிழ்ச்சியை இழக்கிறோம் என்பதை மறந்துவிடக்கூடாது
நன்றி உணர்வு என்பதை மறந்த வர்கள் எவரும் மகிழ்ச்சியைப் பற்றிப் பேச உரிமை இழந்தவர்கள் ஆவார்கள்!
ஒருவர் தன் உள்ளங்கையைப் பார்த்து, பகல் எல்லாம் உண்மை உழைப்பினைத் தருவேன். இரவெல் லாம் சரியான ஓய்வினைப் பெறுவேன் என்று கூறுவதைப் பொறுத்தே உள்ளது அவனது மகிழ்ச்சிப் பெருக்கம்!
மகிழ்ச்சியை எவரும் எட்டிப் பிடிக்கலாம்;ஆனால்,சந்தைப்பொரு ளைப்போல விலை போட்டு வாங்க முடியாது!
நமது இதயம் மற்றவர்களுக்காகத் துடிக்கும் பொழுதுதான் மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தை அடைகிறோம்!
நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா - இல்லையா என்றுகூட சிந்திக்க நேரமில்லாமல் உழைத்துக்கொண்டே இருப்பவர்களைவிட உண்மையான மகிழ்ச்சியாளர்கள் வேறு எவர் உளர்?
மகிழ்ச்சி என்பது ஒரு விசித்திர மான கணிதம். ஆம். அதனை மற்ற வர்களுக்குத் தருகையில்தான் அது கூடுதலாகிறது. பன்மடங்குப் பெருக்கமடைகிறது. கழித்தல், கூட்ட லாகவும், பெருக்கலாகவும் மாறிவிட்ட விசித்திர கணிதத்தை அல்லவா பார்க்கிறோம்!
சிலரால் மகிழ்ச்சியைத் தேடி ஓடத்தான் முடியும். சிலரால் மட்டுமே மகிழ்ச்சியை உருவாக்க முடியும்!
மகிழ்ச்சியான வாழ்வின் ரகசியம் எங்கே இருக்கிறது தெரியுமா? அதைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதில்தான்!
பெருமகிழ்ச்சி எதில் கிடைக்கிறது தெரியுமா?விளம்பரமில்லாமல்ஒரு நற்காரியச் செயலைச் செய்து விடு வதில்தான்!
மகிழ்ச்சியான நிறை வாழ்வுக்குத் தேவையானவை மூன்று.
1. நல்ல உடல் நலம் 2. கடனற்ற வாழ்வு 3. தூய மனசாட்சி!
உண்மையான மகிழ்ச்சியை விரும் புவோர் அற்புதங்கள் நிகழ்வதை ஒரு போதும் ஏற்கமாட்டார்கள்!
சமுதாயத்திற்குத்துளியும்பயன் படாத பலர், தாங்கள் மிகுந்த மகிழ்ச் சியுடன் இருப்பதாகக் கூறினும், பய னற்றவர்களே!
எதையும் குறிப்பிட்ட கால வரம் புக்குள் செய்து முடிப்பதைவிட சிறந்த மகிழ்ச்சி வேறு எதிலும் இல்லை!
மகிழ்ச்சி ஒருவருக்கு ஏற்படுவது என்பது அவர் எப்படி எண்ணுகிறார் என்பதைப் பொருத்ததேயாகும்!
மகிழ்ச்சி என்பது ஒரு பரிசல்ல-அது ஒரு விளைவு!
துன்பம் என்பது தண்டனை அல்ல; அது ஒரு பலாபலன் அவ்வளவே!
அறிவற்ற மனிதன், மகிழ்ச்சியைத் தொலை தூரத்தில் தேடுகிறான். அறி வுள்ள மனிதன், அவனின் காலடியிலேயே அதனை உருவாக்குகிறான்!
செல்வந்தர்கள்எல்லாம்மகிழ்ச்சி யாக இருப்பவர்கள் என்று எண்ணு வதைவிட பெரிய தவறு வேறு இல்லை!
கடமையின் இயல்பான மலர்ச்சியே மகிழ்ச்சி என்பது!
மகிழ்ச்சியாக இருப்பவர்களால்தான் மற்றவர்களையும் மகிழ்ச்சியாக ஆக் கிட இயலும்!
- கி.வீரமணி
-விடுதலை,8.12.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக