பக்கங்கள்

செவ்வாய், 20 டிசம்பர், 2016

22.இவ்வுலகை மாற்றிய நூறு மனித நேயம் மிக்க நிகழ்ச்சிகள்!

நேற்றைய வாழ்வியலின் தொடர்ச்சி....

நிகோலஸ் கோபர்னிகஸ், விண் வெளிப் பகுதிகளின் புரட்சிகள் பற்றி

இறுதியில் சூரியனையே நாம் விண்வெளியின் மய்யத்தில் வைத்து விட்டோம்.

அவர்கள்கூறுவதுபோல, இரு கண்களையும் திறந்து வைத்துக் கொண்டு உண்மைகளை எதிர் கொள்ள நம்மால் இயலுமானால், இவை அனைத்துமே -

ஒரு ஒழுங்குமுறையில் நடை பெறும் நிகழ்வுகளின் தொகுப்பாகவும், நடைமுறையாகவும் இருப்பதாக, விண்வெளிஅனைத்திலும்ஒரு ஒத்திசைவு இருப்பதாகத் தெரிவிக் கின்றன.

நீட்சேயின் ‘ஜராதுஸ்டிரா இவ்வாறு பேசுகிறார்’ (1883)

கடவுளின் இறப்பு என்னும் கருத்தைபொதுமக்களிடையேபிர பலமாக்கியவர்;மதத்தின் செல்லு படியாகாத தன்மையைக் கண்டு கொண்டதால்,புதியஅழகியதோற் றங்களைக் கொண்ட 19 ஆம் நூற் றாண்டின் மேற்கத்திய மனத்தினை அழுத்தமாக வலியுறுத்தும் அறிவிப்பு.

எலிசபெத் கேடி ஸ்டான்டன் ‘பெண்களின் பைபிள் பகுதி-1’  நூலை வெளியிட்டார் (1895)

பெண்களின் உரிமைகளுக்கு, சுதந்திரத்திற்கு, தன்மதிப்பிற்கு பாரம் பரியமான கிறிஸ்துவ மதம் செய்துள்ள அழிவை, தீங்கை அங்கீகரிக்கும் செல்வாக்கும், ஆற்றலும் பெற்ற முதல் படைப்பு.

மத நம்பிக்கைகள் பற்றிய

மனவியல் பற்றிய பிராய்டின் அனுமானங்கள் (1920)

இன்று பெரும்பாலும் மதிப் பிழந்திருந்தபோதும்,மதக்கோட் பாடுகளுக்குஇவ்வுலகக்காரணங் களை,விளக்கங்களைத்தேடிக் காண்பது என்ற கருத்தை பொது மக்களிடையே பிரபலமாக்கியவர்.

டிவியின் ‘பட்டறிவும் இயற்கையும்‘ (1925), ‘தத்துவ இயலில் புனரமைப்பு’ (1948)

அறிவியல், கலை, மதிப்பீடுகள் பற்றிய ஒரு செல்வாக்கு நிறைந்த இயல்பான கோட்பாட்டை உருவாக் கியது.

பெர்ட்ரன்ட் ரஸ்ஸலின் ‘நான் ஏன் கிறிஸ்துவன் அல்ல’ என்ற நூல் வெளியிடப்பட்டது (1927)

பைபிளுக்கும், பெயினின் ‘நியா யத்திற்கான காலம்‘ ஆகியவற்றிற்கும் அடுத்தபடியாக, தங்களது மத நம்பிக்கைகளில் இருந்து வெளியே வர கிறிஸ்தவர்களை ஊக்குவித்த பயன் மிகுந்த நூலாகும்.

‘ஆக்கப்பூர்வத்தன்மை என்பது பற்றிய தத்துவமுன்னேற்றம்' (1930)

பருப்பொருள் வாதத்தை விட ஆய்வு செய்து அறியும் அறிவியல் சிறந்ததென ஆதரிப்பது; மதக் கூற்று கள் ஆழ்ந்த பொருளற்றவை என்ற கருத்தை பொது மக்களிடையே பிரபலமாக்கியது.

சைமன் டி ப்யூவரின் - “பெண் (இரண்டாவது) பால்” என்னும் நூல் வெளியிடப்பட்டது (1949)

மில்லட், ப்ரீடான், ஸ்டெய்னெம் போன்ற மற்றவர்களைக் கவர்ந்து பெண்ணுரிமை என்னும் இரண்டாவது அலை வரிசையைத் துவக்கியது.

ஜூன் பால் சாத்ரே மற்றும் அவரது வட்டத்தினரால் உருவாக்கப்பட்ட அழகுணர்வு கொண்ட வாழ்க்கை முறை (1950)

மத, சமூக நிறுவனங்களைச் சார்ந்திருப்பதற்குப்பதிலாக,மக் களின் வாழ்க்கைக்கு அவர்களே பொறுப்பானவர்என்றகருத்தை பொதுமக்களிடையே பிரபலமாக்கி யது.

அரசியலும் சட்டமும்

மதப் படையெடுப்புகள்,

போராட்டங்கள் (1096-1251)

கிறிஸ்தவர்களின் புனித மண்ணி லிருந்து முஸ்லீம்களை வெளியேற்ற இயலாத கிறிஸ்துவ மதத்தின் தோல்விகடவுளின்விருப்பம்,தேவா லயங்களின் அதிகாரம் ஆகியவை பற்றி பரவலான அவநம்பிக்கையை உருவாக்கியது.

‘மேக்னா கார்டா’

கையெழுத்திடப்பட்டது (1215)

சர்வாதிகார மனம் படைத்த அரசர்களிடமிருந்து நிலப் பிரபுக் களுக்கு முதன் முதலாக அதிகார மாற்றம் செய்யப்பட்டது, பின்னர் மக்களுக்கு முழுமையாக அதிகார மாற்றம் செய்யப்பட வழிகாட்டியது.

ஆக்ஸ்பர்க் அமைதி

உடன்படிக்கை (1555)

ஜெர்மனிக்குள் மதச் சண்டைகளை முடிவுக்குக்கொண்டுவந்தது;மத பன்முகத்தன்மை, சுயநிர்ணயம் ஆகியவற்றை நோக்கி மேற்கொள் ளப்பட்ட முன்னெச்சரிக்கை கொண்ட ஒரு நடவடிக்கை.

நெதர்லாந்தின் உட்ரெச்ட் உடன்படிக்கை (1579)

ஸ்பெயினின் யதேச்சாதிகாரத்திலிருந்து விடுவிக்கப்பட்ட நெதர் லாந்து தன்னையே சுதந்திரத்திற்கும், சகிப்புத் தன்மைக்குமான ஒரு சொர்க்கமாக நிலைநிறுத்திக் கொண் டது.

நான்டிஸ் பிரகடனம் (1598)

கத்தோலிக்க பிரான்ஸ் நாட்டில் பிராட்டஸ்டன்டுகளுக்கான சமூக உரிமைகள் வழங்கப்பட்டது.

வெஸ்ட்பாலியா  உடன்படிக்கை (1648)

முப்பதாண்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்து,அய்ரோப்பியபிராட் ஸ்டன்டுகளுக்கும், கத்தோலிக்கருக் கும் இடையே தொடர்ந்து அமைதியை நிலைநாட்டி, புனித ரோம சாமராஜ் யத்தின் அதிகாரத்தைக் குறைத்தது.

சகிப்புத் தன்மை பற்றிய

பிரிட்டிஷ் சட்டம் (1689)

இங்கிலாந்தில் நிலவும் புதிய மதச் சுதந்திரத்திற்கான அடித்தளம் அமைத்தது.

‘சுதந்திரப் பிரகடனம்' கையெழுத்திடப்பட்டது (1776)

ஒளியூட்டப்பட்ட கோட்பாடுகள் மற்றும் லாக்கியின் அரசியல் தத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில், தனிப்பட்ட மனிதரின் தன்நிர்ணய உரிமையினைஅரசரின்அதிகாரங் களுக்கும் மேலானதாக, முதன்மை யானதாக நிலைநிறுத்திக் கொண்டது.

- கி.வீரமணி

(தொடரும்)

-விடுதலை,17.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக