பக்கங்கள்

புதன், 7 டிசம்பர், 2016

அறிவியல் சிந்தனைகள் 13. பார்க்கப் பழகுவோம்!

இதென்ன விந்தையான தலைப்பாக இருக்கிறதே என்கிறீர்களா?  இல்லை. அன்றாட வாழ்வில் நம்மில் பலரும் அறிந்து நடந்துகொள்ளவேண்டிய முக்கியமான நெறிகளில் ஒன்று- ஒருவரை பார்க்கச் செல்லும்போது, எப்படிப் பார்ப்பது? எப்போது பார்ப்பது? என்று தெளிவாக முடிவுசெய்து அதன் படி செயல்படுவது நம்மைப்பற்றி மற்றவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதால்தான் இது முக்கியம்.

வெளிநாடுகளில், எவரை, எப்போது சந்திப்பதானாலும்கூட முன்கூட்டியே அவர்களிடம் நேரம் கேட்டு அவர்கள் கொடுக்கும் நேரத்திற்குச் சென்று சந்திப்பதே வழக்கமாகும்.

ஆனால், நமது நாட்டில்....? எவரும், எப்போதும், எவரையும் சென்று சந்திப்பது என்ற பேரில் தொல்லை கொடுக்கலாம் என்பது வாடிக்கையாகவே ஆகிவிட்டதாகும்!

குறிப்பிட்ட நேரத்திற்கு - அவர்கள் கொடுத்த நேரத்திற்கு - நாம் செல்லப் பழகவேண்டும். அதை மிகவும் அலட்சியமாகக் கருதி அரை மணி நேரமோ அல்லது ஒரு மணி நேரமோ தாமதமாகச் செல்வது, அவர்களை தொல்லைப்படுத்துதல் - இவைகளினால் எதிர் விளைவுகளே பல நேரங்களில் ஏற்பட்டுவிடும். நம்மைப் பற்றி பிறர் தவறான எண்ணங்கொண்டு விடுவதற்கு அதுவே வாய்ப்பளிக்கும்.

குறிப்பிட்ட நேரத்திற்கு நாம் வர இயலாததற்கு ‘ஆயிரம்‘ காரணங்கள் இருக்கலாம்; சொல்லலாம் என்றாலும், அவைகளைப் பயன்படுத்தி நாம் காலந்தாழ்ந்து செல்லாது, குறித்த நேரத்தில் குறித்தபடி காணச் செல்வதே சாலச்சிறந்தது!

காலத்தை நாம் வெகுவாக மதிப்போமேயானால், இதில் சிக்கல் ஏற்படவே ஏற்படாது. காலத்தைச் சிறப்பாகச் செலவழிக்க நாம் அனை வரும் கற்றுக்கொள்ளுதல் அவசியம் - மிகவும் அவசியம்! நிதிச் செலவுகளை விடவும் கூட முக்கியமானது- காலத்தை நாம் எப்படிச் செலவழிக்கிறோம் என்பது!

பணத்தைச் செலவு செய்தால் மீண்டும் சம்பாதித்துக் கொள்ள நம்மால் முடியும்! ஆனால், காலத்தைச் செலவிட்டு விடுவோமேயானால், அதை மீண்டும் எவரும் ‘சம்பாதிக்கவே’ முடியாது என்பது அடிப்படை உண்மை அல்லவா?

கால தாமதத்திற்குப் போக்குவரத்து நெரிசலை நாம் காரணம் காட்டுகிறோம். அது பெரும் அளவுக்கு உண்மைதான் என்றாலும், அதற்கும் ஒரு அளவு இடம்விட்டு அல்லவா நம்முடைய புறப்பாட்டை முன்கூட்டியே ஒழுங்கு படுத்திக்கொள்ளவேண்டும்?தேவை யற்ற விளக்கங்கள், மன்னிக்கக் கோரு தல்கள், வருத்தம் தெரிவிப்புக்களை அதன்மூலம் தவிர்த்துவிடலாமே!

அதோடு நாம் ஒருவரைச் சந்திக்கக் காத்திருக்கும்போது, நாம் அளவு கடந்த பொறுமையைக் கடைப்பிடிக்கவும் பழகிக்கொள்ளவேண்டும். நாம் யாரைக் காணச் சென்றுள்ளோமோ அவருக்குப் பல பிரச்சினைகள் இருக்கக்கூடும்! அவர் பணிகளால் நம்மைச் சந்திப்பதுகூட தாமதம் ஆகக் கூடும். அதற்காக அவர்மீது ஆத்திரப்படுவதோ, எரிச்சல் அடை வதோ கூடாது. நாம் எவ்வளவு உயர்ந்தவராகத்தான் இருந்தபோதிலும் - நாம் ஒன்றை மறந்துவிடக் கூடாது. நாம் அவரைக் காணச் சென்றிருக்கிறோம் என்கிறபோது முதன் நிலை உரிமை அவருக்கே; இரண்டாவதே நமது நிலை!

நமதுஇருப்பிடத்திலிருந்துபுறப் படுகையில்அவரைக்காணச்செல் லும்ஒருவராகஇருந்தநாம்அவரது இருப்பிடத்தை அடையும்போது அவரை காணச் சென்றவர்களில் ஒருவராகி விடுகிறோம். எனவே காத் திருப்பது அவசியம். அதற்காக நம்மை ஒருவர் அவமானப்படுத்துவதைப் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்பது பொருள் அல்ல; புரிந்துகொண்டால், அதை நினைவிற்கொண்டு அடுத்த முறைஅப்படிப்பட்டவர்களைச்சந் திப்பதையேகூட நாம் தவிர்த்து விடலாமே!

பரிந்துரைக்குச் செல்லும் பல பேர் பரிசுகளோடும், அன்பளிப்புகளோடும் செல்வது நாகரிகமான பண்பு அல்ல என்பதையும் நாம் நினைவில் கொள்வது நல்லது!

எல்லோரிடமும் வாஞ்சையுடனும், அன்புடனும் கலந்துரையாடும் பண் பாளரான தந்தை பெரியார் அவர்கள், தனக்கு வேண்டிய அறிமுகமான தொண்டர்கள், தோழர்கள் அன் போடு கொண்டு வந்து தரும் உணவுப் பண்டங்களைக்கூட அன் போடு வாங்கிக்கொள்ளுவார்கள் (பழங்கள் உட்பட). அவர்களை மன நிறைவுகொள்ளச் செய்ய அவர்கள் எதிரிலேயே ஒரு பழத்தை எடுத்து உரித்துத் தின்பார். வந்தவருக்கு, ‘கொள்ளை இன்பம் குலவும் கவி தையாக’, அந்தக் காட்சியிருப்பதை நாமே நேரில் கண்டிருக்கிறோம்.

பழங்கள் மட்டுமல்ல, உணவுப் பண்டங்களைஉடனே பிரித்துசாப் பிடத்தயங்கார்.அது,அவர்சாப் பிடக்கூடாததாகவும்சிலவேளை களில் இருக்கும். அன்னை மணியம் மையாரோ, புலவர் இமயவரம்பனோ - உடனிருந்து உரிமையுடன் கட மையாற்றுபவர்கள்என்பதால்,அவர் கள் தடுத்து தட்டிப் பறித்தும் இருக் கிறார்கள்.குழந்தைத்தனமானஏமாற் றத்துடன்அய்யா,அவர்கள்- தலைவர்க்கெல்லாம் தலைவரான அத்தகைசால் தந்தையவர்கள் ஒரு புன்சிரிப்பையோ, மென் சிரிப்பையோ உதிர்த்து விட்டுவிடுவார்!

ஆனால், அத்தகைய தோழரோ, தொண்டரோ அய்யா அவர்களிடம் ஒரு பரிந்துரைக்காகச் சென்றுள்ள நிலையில், சில பழங்கள் அல்லது பிஸ்கட் பாக்கெட்டுகள், இனிப்புத் தின்பண்டங்கள் - இவைகளுடன் சென்றால், அவர்கள் அதை ஏற்காது திருப்பிவிடத் தயங்கவே மாட்டார்கள்!

சிற்சில நேரங்களில் கடிந்துகொள்ள வும் செய்வார்; ரொம்பவும் ‘தாட்சண் யத்திற்கு’உட்படவேண்டியஅள வுக்கு ‘வேண்டியவர்களாக’ அவர்கள் அமைந்துவிட்டால், ‘ஒரே பழம்‘ போதும்;எஞ்சியதைதிருப்பிஎடுத் துச் சென்றுவிடுங்கள் என்று திட்ட வட்டமாகக் கூறத் தயங்கவே மாட்டார்.

முன்கூட்டியே சொல்லிவிட்டுப் போகவேண்டும் - துக்க விசாரிப்புக் களைத் தவிர - என்பதில் நம் அறிவு ஆசான் அவர்கள் எப்போதும் குறியாய் இருப்பார்!

நோயாளிகளாக இருந்து சிகிச்சை பெறுகிறவர்களைப் பார்க்கப் போகும் போது நாம் நமக்கு மேலும் பல ‘சுயக்கட்டுப்பாடுகளை’ போட்டுக் கொள்ளுவது நல்லது.

அவர்களுக்கும்- மருத்துவர் அனுமதிக்கு ஏற்பச் சென்று காணுவது; அதிக நேரம் அவர்களிடம் உட்கார்ந்து அலைக்கழிக்காமை; அவர்களிடம் மேலும் தெம்பையும், துணிவையும், நல்ல நம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் மட்டுமே உரையாடுதல் இவைகளைச் செய்யவும் நாம் பழகுதல் மிகவும் அவசியம்! நாம் இதற்கு மாறான பழக்கவழக்கங்களைப் பல ‘பெரிய மனிதர்களிடம்‘ கூட பார்க்கிறோமே! அடுத்தவர்கள் அலுத்துக் கொள்ளாமல் பார்த்துத் திரும்புதல், அருகில் இருந்து அவர்களைக் கவனிப்பவர்களுக்கும் நன்றி கூறி மகிழ்ச்சி அளிப்பது இவைகள் எல்லாம் தோற்றத்தால் சிறு செயல்கள்தான் என்ற போதிலும், தன்மையில், மிகவும் ஆழமான தாக் கத்தையும், பலனையும் உருவாக்கித் தருவதாகும்.

பார்க்கவும் நாம் பழகுதல் முக்கியம் என்பது இப்போது புரிகிறது அல்லவா?

- கி.வீரமணி
-விடுதலை,5.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக