பக்கங்கள்

செவ்வாய், 20 டிசம்பர், 2016

21.இவ்வுலகை மாற்றிய நூறு மனித நேயம் மிக்க நிகழ்ச்சிகள்!

நேற்றைய வாழ்வியலின் தொடர்ச்சி....

கலைகளும் இலக்கியமும்

மத நம்பிக்கையற்ற புரவலரால் ஆதரிக்கப்பட்ட முதல் கலைப் படைப்பு (1434)

மேற்கத்திய நாடுகளில் கலைப் படைப்புகள் மீது ரோமன் கத்தோலிக்க தேவாலயம் கொண்டிருந்த தனி உரிமையை, ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்தது.

மறுமலர்ச்சி (1450-1550)

கலை, இசை, கட்டடவியல், அர சியல் ஆகியவற்றில் கடவுளைவிட மனிதத் தன்மைக்கும், அடுத்த உலகைக் காட்டிலும் இந்த உல கிற்கும் மனித முயற்சிகளின் முக்கி யத்துவத்தை நிலைநாட்டியது.

ஷேக்ஸ்பியர், கிறிஸ்துபர் மார்லோ ஆகியோரின் படைப்புகள் (1500 பிற்பகுதி)

நிகழ்ச்சிகளை வடிவமைப்பதில், விதியோகடவுளர்களோஅன்றி, தனிப்பட்ட மனிதரின் தனித்தன் மையேமுதன்மையானது என்ற கருத்தைஇந்தமாபெரும்நாடக ஆசிரியர்கள்தங்களதுதெளிவான பாத்திரப்படைப்புகள்மூலம் பொதுமக்களிடையே பிரபலமாக்கி னர்.

கவிஞர் பெர்சி பைஷி ஷெல்லி அவரது நாத்திகக் கருத்துக்காகத் தாக்கப்பட்டார் (1811)

‘நாத்திகத்தின் இன்றியமையாத தன்மை’ என்ற புத்தகத்திற்கு பதிப் பாசிரியராக இருந்தமைக்காக ஆக்ஸ் ஃபோர்ட் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட போதும், வெற்றி கரமான இலக்கிய வாழ்வினை, தொழிலை மேற்கொண்ட மேற்கத்திய முதல் வெளிப்படையான நாத்திகராக ஷெல்லி இருந்தார்.

கவிஞர் எட்வர்ட் பிர்ஸெரால்ட்டின் கண்டுபிடிப்பும், ஒமர் கய்யாமின் ரூபியாத்தின் மொழிபெயர்ப்பும் (1859)

கிறிஸ்துவமல்லாத ஒரு பண் பாட்டில் வேர்கொண்டிருக்கும் இவ் உலகைப்பற்றியகண்ணோட்டம்என் னும்வாழ்க்கைக்குஉற்சாகம்,உறுதிப் பாடு,அளிக்கும்கருத்தைபொது மக்களிடையே பிரபலமாக்கியவர்.

ஹேர்லம் மறுமலர்ச்சி (1920)

பொதுவான விமர்சகர்களி டையே தங்களது இசை, இலக் கியங்களுக்கான மரியாதை, அங் கீகாரம் ஆகியவற்றை வென்றடைந்த தனித் தன்மை கொண்ட முதல் ஆப்பிரிக்க அமெரிக்கக் குரல்கள்.

தத்துவமும் மதமும்

இஸ்லாமைப் பற்றிய ஆய்வில் அவரோஸ் பகுத்தறிவினைப் பயன்படுத்தியது

(1126-1198)

மதம் உட்பட்ட அனைத்துப் பொருட் களைப் பற்றியும் ஆய்வு செய்ய, பகுத்தறிவு கொண்டு கேள்வி கேட்பதைப் பயன்படுத்தலாம் என்பதை நிரூபித்தவர்.

மைமோனைடின்  ‘குழப்பமடைந்தவருக்கான வழிகாட்டி’ என்னும் நூல் வெளியிடப்பட்டது (1176)

யூத பாரம்பரியத்தில் மதநம்பிக்கை, புராணக் கதைகள் ஆகியவற்றை மறுக்கும் முதல் மாபெரும் படைப்பு.

‘அறிவீனத்தைப் புகழ்ந்து’ என்ற எராஸ்மஸ்ஸின் புத்தகம் வெளியிடப்பட்டது (1509, ஆங்கில பதிப்பு 1549)

வேதவேதாந்தங்களையும், கிறிஸ்துவ மதகுருக்களையும் விமர்சித்தவர்களின் முன்னோடி.

மாக்யவல்லியின் ‘இளவரசன்’ (1513)

ஒரு அரசின் மதநம்பிக்கையற்ற செயல்பாடுகள்,மதவிதிகளின் விருப் பத்தினாலன்றி, அதன் விளைவு களினால் மட்டுமே மதிப்பிடப்படுகிறது என்பதை, இரக்கமற்ற முறையிலே யானாலும், அரசர்களுக்கு எடுத்துக் காட்டிய வழி காட்டியாகும்.

மாண்டெய்ன் படைப்பு

(1500-இடையே)

அவருடைய கட்டுரைகள் வாழ் வின் ஒவ்வொரு பகுதியினையும் உள்ளடக்கியதாகவும், சுயசரிதையை ஒரு மனித நேயம் மிக்க இலக் கிய வடிவமாக இருப்பதை நிலை நாட்டியதும் ஆகும்.

ஹொப்பீஸின் ‘லெவித்தியான்’ வெளியிடப்பட்டது (1651)

அரசரின் ஆற்றல், அதிகாரம் தெய்வீக அருளில் இருப்பதில்லை என்பதையும், ஆட்சி செய்யப்படும் மக்களின் சம்மதத்திலேயே இருக்கிறது என்பதையும் ஆதாரமாகக் கொண்டது, சமூக ஒப்பந்தத்தைப் பற்றிய அதன் கருத்து.

வால்டேரின் இலக்கிய, தத்துவப் படைப்புகள் (1694-1798).

புகழ் பெற்ற கட்டுரையாளர், நாடக ஆசிரியர், தத்துவ ஞானியான இவரது எழுத்துக்களும், வாழ்க்கையும் கேள்விகேட்டு ஆய்வுசெய்து தெளிவு பெறும், உருவவழிபாட்டினை மறுக்கும் உணர்வினைப்பிரதிபலிக்கிறது. கிறிஸ்துவ மதக் கோட்பாடுகளுக்கு எதிரான ஆழமான வாதங்களை பொது மக்களிடையே பிரபலமாக்கியவர்.

லாக்கியின் ‘சகிப்புத் தன்மை பற்றிய கடிதம்‘ (1689)

மத நம்பிக்கை என்பது தனிப்பட்ட மனிதனின் உரிமை என்பதை முதன் முதலாகத் தெரிவித்த அறிவிப்பு. (ஆனாலும் நாத்திகர்களுக்கு சகிப் புத் தன்மை கூடாதென லாக்கி மறுத்துள்ளார்).

“இயற்கை மதம் பற்றிய கலந்துரையாடல்” என்ற ஹுமின் படைப்பு (1779).

அற்புதங்கள் மற்றும் பொதுவாகக் காணப்படும் இயல்பற்ற மத நம்பிக் கைகள் மீதான ஒரு தீவிரமான தாக்குதல் நடத்திய புகழ் பெற்ற இப்படைப்பு, இன்றும் ஆற்றல் நிறைந் ததாக உள்ளது.

மேரி வுல்ஸ்டோன்கிராப்டின் ‘பெண்களின் உரிமைகளை நிலை நாட்டுதல்’ என்ற நூல் வெளியிடப்பட்டது (1792)

பெண்களின் உரிமைகளுக்கான கட்டுரைகளில் முன்னோடியான இது, 19 ஆம் நூற்றாண்டு பெண் உரிமையாளர்கள் பலரைக் கவர்ந்த முக்கியமான பெண்ணுரிமைக் கருத்து களை அறிமுகப்படுத்தியது.

தாமஸ் பெய்னின் ‘நியாயத்திற்கான காலம்‘ என்ற நூல் வெளியிடப்பட்டது. (1794).

கிறிஸ்துவ மதக் கோட்பாடுகளைப் பற்றி மத நம்பிக்கையுடன் செய்யப் பட்ட இந்த விமர்சனமே, பைபிள் நீங்கலாக வேறு எந்த ஒரு புத்தகத் தையும் விட அதிகப்படியான அய்யம் கொண்டவர்களுக்கு அவர்களது நம்பிக்கையின் ஊடே வழிகாட்டியாக இருந்து இருக்க முடியும்.

பயன்பாட்டுக் கோட்பாட்டை ஆதரித்த ஜெரெமி மெந்தேம் (1700 பிற்பகுதி), ஜே.எஸ்.மில் (1800 இடையே).

முன்னரே நிலைபெற்றுள்ள, பெரும் பாலான மத விதிகளின்படியன்றி, ஒழுக்கக்கோட்பாடுகளின்விளைவு களைக்கொண்டேஅவைமதிப்பிடப் படவேண்டுமென்ற கருத்து பொதுமக் களிடையே பிரபலமாக்கப்பட்டது.

ஷொபன்ஹாரின் மதத்தைப் பற்றிய மறுதலித்தல்கள் (1818-1851).

மாந்தரின் மனஉறுதிப்பாடு, உணர் வுகள், நியாயத் தன்மை ஆகியவற்றின் இன்றியமையாத தன்மைக்கு முக்கியத் துவம்அளிக்கும்முழுமையானஇவ் வுலகக் கண்ணோட்டத்தை பொது மக்களிடையே பிரபலமாக்கியது.

லூட்விக் ஃபோயர்பாக் ‘கிறிஸ்துவ மதத்தின் சாரம்‘ என்னும் நூலை வெளியிடப்பட்டது (1841)

இந்த ஆற்றல் மிகுந்த படைப்பின் மூலம் கிறிஸ்துவ மதத்தை மனிதத் தன்மையற்றது என எடுத்துக் காட்டி, அதனுடைய தோற்றம், வளர்ச்சி பற்றி மனவியல் அடிப்படையில் விளக் கியவர்களின் முன்னோடியாகத் திகழ்ந்தவர்.

ஜே.எஸ்.மில்லின் ‘சுதந்திரம் பற்றி’ என்ற நூல் (1859)

தனி மனித சுதந்திரம், விருப்பம், தனித்தன்மை ஆகியவற்றினை மதிப்பது என்ற குறிக்கோளினைக் கொண்ட தாராளமான அரசியலுக்கு ஈடு இணையற்ற ஆதரவளித்தது.

மார்க்ஸின் ‘மூலதனம்‘ (1867-1894)

நல்லவைக்கோ கெட்டவைக்கோ, இருபதாம் நூற்றாண்டில் மகத்தான செல்வாக்குப் பெற்றிருந்த சீர்திருத்த வாதிகளுக்கும், சர்வாதிகாரிகளுக்கும் ஒற்றுமையான கருத்தான முழுமை யான ஒரு மதமற்ற வரலாற்று, பொரு ளாதார, மத மாதிரி அமைப்பைப் பரிந்துரைத்தது.

பைபிளின் ‘உயர்ந்த விமர்சனம்‘ பிறந்தது (1800 துவக்கம்)

மத நூல்களும் மற்ற பழமையான நூல்களைப் போலவே வரலாற்றுப் பகுத்தாய்விற்கு உட்படுத்தப்பட இயலும் என்பதை நிரூபித்துக் காட்டியதுடன், பெரும்பாலான மதக் கூற்றுகள் ‘உண்மை’யற்றவை என்பதை பல அய்ரோப்பிய இலக்கியவாதிகளை ஏற்றுக்கொள்ளச் செய்துள்ளார்.

(தொடரும்)
-விடுதலை,16.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக