பக்கங்கள்

செவ்வாய், 20 டிசம்பர், 2016

அறிவியல் சிந்தனைகள் 19. எப்படி இருந்தபோதிலும்...

Compassion என்ற ஆங்கிலச் சொல்லுக்குக் கருணை அல்லது இரக்க உணர்வு என்று பொருள் கூறப்படுகிறது.

பொதுவாக ‘இரக்கம்‘ எப்போது ஏற்படுகிறது? யார்மீது ஏற்படுகிறது? என்று ஆராய்வோமானால் அதன் உண்மையான ஆழம் நமக்குப் புரியும்.

இரக்கம் என்பது பிறர்மீது நாம் காட்ட வேண்டிய பரிவான பண்பு என்று சொல்லப்பட்டாலும், தன்மை கருதி யோசிக்கும்போது மிகவும் ஆழமான பொருளையே தன்னிடம் கொண்டு உள்ளது என்பது புலப்படும்.

‘ஜீவகாருண்யம்‘ என்ற பெயரில் மாட்டின்மீது தார்க்குச்சி போடக்கூடாது என்பதற்காக, (மிருகங்களைக் கூடக் கொடுமையாகநடத்தக்கூடாதுஎன் பதைக் கண்காணிக்க), S.P.C.A. போன்ற அமைப்புகள் உலகம் முழு வதும் பரவியிருக்கின்றன. ஆனால், ஆறறிவு படைத்த மனிதரை மற்றொருவர் அடிமைப்படுத்தி அடக் கியாளும்போது (மனிதர் என்பது இரு பாலரையும் எண்ணியே கூறப்படுகிறது இங்கே) அதைத் தடுத்து நிறுத்த, ஏதாவது ஒரு தண்டனை கொடுப்பதோ நீதிமன்றங்களுக்கு அழைத்துச் சென்று நீதி வழங்குதலோ இன்று நடைமுறையில் உள்ளதா?

பல வளர்ப்பு மிருகங்களிடம் (Pet-Animals) காட்டும் பாசம், பரிவு இவைகளை இந்நாட்டின் அடிப்படை - உழைக்கும் வர்க்கத்தின்மீது காட்ட ஏதாவது அமைப்பு ரீதியான, சட்ட வற்புறுத்தல்கள் உண்டா? இல்லையே!

அங்கே மனித நேயத்தைவிட மிருக நேயமே மேலோங்கி நிற்கிறது!

அண்மைக்காலத்தில் மனிதநேயம் என்ற சொல் மிகவும் அதிகமாகப் புழக்கத்தில் இருக்கிறது. அச்சொல் புழக்கத்தில் இருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றுதான்என்றபோதிலும்,அதை நடைமுறையில், செயல் வடிவில் காண்பதே நம் அனைவர் உள்ளத் துக்கும் நெகிழ்ச்சியைத் தருவதாக அமையக்கூடும்.

சில நாள்களுக்குமுன், ஒரு சுவரில் மாட்டி, சிந்தித்து அசைபோடும் வண்ணம் அச்சிடப்பட்ட ஒரு அரு மையான அறிவுரைத் தொகுப்பை, புதுதில்லி நடைபாதைகளிலே விற் பதைக் கண்டு அதை வாங்கி வந்து இல்லத்தில் சுவரில் மாட்டி வைத்தேன்.

ஆங்கிலத்தில் ‘Anyway’ ‘‘எப்படி யிருந்த போதிலும்‘’ ‘என்றாலும்‘ என்கிற தலைப்பில் அச்சிடப்பட்ட அந்த அறிவுரைக் கொத்து மிகவும் சிறப்பான வாழ்வியல் கருத்தினை நம் அனைவருக்கும் தருவதாக அமைந்துள்ளது என்பதால், அதனை அப்படியே தமிழாக்கித் தருகிறேன்.

‘‘பொதுவாக மனிதர்களில் பலர் காரண காரியமின்றி, எவ்வித நியாயத்திற்கும் கூட உட்படாது, சுயநலக்காரர்களாகவே வாழ்கிறார்கள். எப்படியிருந்தபோதிலும்கூட அவர் களையும் நேசியுங்கள்.’’ (செயல்களை மட்டும் வெறுக்கலாம்).

‘‘நீங்கள் நல்லதையே செய்தால்கூட, உங்களுக்கு உள்நோக்கம் கற்பித்து, உங்களை ஒரு சுயநலவாதிபோல் கருதிக் குற்றம் சுமத்துவார்கள் - பலர். அது எப்படியிருந்தபோதிலும்கூட, நல்லதையே செய்யுங்கள்.’’

‘‘பல நேரங்களில் நீங்கள் வெற்றியை அடைகிறபோதுபோலியானநண் பர்களையும், உண்மையான விரோதி களையும்கூடப் பெறுவீர்கள். என் றாலும்கூட, வெற்றியையே பெறுங்கள்.’’

‘‘இன்று நீங்கள் பிறருக்குச் செய்யும் நன்மையை அவர்கள் நாளையே மறந்துவிடுவார்கள். எனினும் நன் மையே செய்யத் தவறாதீர்.’’

‘‘நேர்மையும், ஒளிவு இன் மையும் உங்களைப் பிறர் தாக்க வழிவகுக்கவே செய்யும். எனினும் எப்போதும் நேர்மையோடும், ஒளிவு இன்மையோடுமே வாழுங்கள்.’’

‘‘மக்களில் பலர் சமுதாயத்தின் அடித்தள மக்களின் ஆதரவினைப் பெற்றுவிட்டு மேல்தள மக்களின் பின்னாலேயே ஓடுவார்கள். எனினும் அடித்தள மக்களின் உரிமைக்காகப் போராடுவதை நிறுத்தாதீர்!’’

‘‘நீங்கள் பல ஆண்டுகளாக முயன்று கட்டியது ஓர் இரவில் தகர்க்கப்பட்டுவிடக்கூடும். என்றாலும் அதைக் கட்டுவதை எப்போதும் தொடருங்கள்!’’

‘‘உதவி தேவைப்பட்டபோது, உங்கள் உதவியைப் பெற்றுக் கொண்டவர்கள் பிறகு உங்களையே தாக்குவார்கள். எனினும் மக்களுக்கு உதவுவதை என்றும் செய்யுங்கள்!’’

‘‘உங்களிடம் உள்ள சிறப்பான ஆற்றலை உலகத்திற்கு வழங்குங்கள்; உங்களைப் பிறர் கடுமையாகத் தூற் றினாலும், எதிர்த்தாலும்கூட உங்களிடம் உள்ள நல்லாற்றலை உலகுக்கு அளிக்கத் தவறாதீர்! தொண்டறம் என்பது அதுதான்!’’

அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள், 1933-லேயே எழுதினார்; ‘‘நன்றி என்பது பயனடைந்தவர் காட்டவேண்டிய பண்பே தவிர, உதவி செய்தவர் ஒருபோதும் எதிர்பார்க்கவே கூடாது’’ என்றார்!

மனிதநேய உணர்வுடன் தொண் டறம் புரிந்த பலரை உலகம் தூற்றி வந்துள்ளதே தவிர, போற்றியதில்லை. அதற்காக அவர்கள் அதை நிறுத் தியிருந்தால் உலகம் இவ்வளவு செழிப்பாக ஆகியிருக்க முடியுமா? மனித குலம்தான் இந்த அளவு வளர்ச்சி பெற்றிருக்க முடியுமா?

எப்படியிருந்தபோதிலும், எந்தச் சூழ்நிலையிலும் தொண்டறத்தைத் தொடருவோமாக!

மானிடத்தின் ஒரு பகுதியை மண்ணுக்கும் கேடாய் மதிக்கும் மனப்பான்மையை மாற்றிடவே தந்தை பெரியார் மனித நேய இயக் கமான சுயமரியாதை இயக்கம் கண்டார் என் பதை இதன்மூலம் புரிந்து கொள்வோமாக!

-விடுதலை,14.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக