18.12.2016 அன்று வெளிவந்த வாழ்வியலின் தொடர்ச்சி....
மேடிசானின் ‘நினைவுச் சின்னமும், எதிர்ப்பு காட்டலும்‘ (1785)
மதசுதந்திரம்மற்றும்நாட்டுஅர சையும்,தேவாலயத்தையும் பிரித்துக் காண்பது என்ற புதிய அமெரிக்கக் கொள்கைகள் தெளிவாக வரையறுக் கப்பட்டன.
வெர்ஜினியாவின் மத சுதந்திரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது (1786)
ஜெபர்சன், மேடிசன், ஜார்ஜ் மேசான் ஆகியோரை உள்ளடக்கியது; மூன்றாண்டுகளுக்குப்பின்உரி மைகளின் சட்டத்தில் தெரிவிக்கப் பட்ட மத சுதந்திரம் என்ற அதே கோட்பாட்டினை நிலைநாட்டியது.
பிரெஞ்சுப் புரட்சி (1789)
சுதந்திரம், சமத்துவம், சகோதரத் துவம் என்ற மக்களாட்சிக் கோட் பாடுகளைபொதுமக்களிடம்பிரபல மாக்கியது; அரசரையும், தேவாலயத் தையும் தூக்கி எறியும் மக்கள் ஆற்றலை உறுதிப்படுத்தியது.
அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது (1789)
தனி மனித சுதந்திரம், தன் நிர்ணய உரிமை என்ற ஒளியூட்டப்பட்ட கோட்பாடுகளை வெளிப்படையாக முற்றிலும் அடிப்படையாகக் கொண்ட முதல் நாடு உருவாக்கப்பட்டது.
உரிமைகள் சட்டம் அமெரிக்க அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது (1789)
அமெரிக்கமக்களாட்சியின்வழி காட்டும் ஒரு கொள்கையாக மனித உரிமைகளுக்கு முக்கியத் துவம் அளிப்பது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இங்கிலாந்து நாட்டில் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது (1807)
அடிமை முறையினைக் கடைப் பிடித்து வந்த பெரிய மேற்கத்திய நாடுகளில்முதன்முதலாகஅடிமை முறை கைவிடப்பட்டது; 56 ஆண்டு களுக்குப் பின்னர் அமெரிக்காவில் இம்முறை ஒழிக்கப்பட பாதை அமைத்தது.
1848 ஆம் ஆண்டுப் புரட்சி
வெற்றிபெறாதபுரட்சிகள்,பின் னாட்களில்அய்ரோப்பாவில்மக்க ளாட்சியில் சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்படவழிகோலியது;இத் தகைய தோல்வியுற்ற போராட்டங் களில் ஈடுபட்ட சுதந்திர சிந்தனை கொண்டவர்கள் அகதிகளாக அமெ ரிக்காவுக்குச் சென்று, அந்நாட்டின் முன்னேற்றத்திற்கு முக்கியமான பங்களிப்பு ஆற்றினர்.
அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது (1803)
மனிதசுதந்திரத்திற்குப்பெரிய தாக்குதலை ஏற்படுத்திய சட்டத்திற் குட்பட்ட, உலகிலேயே மிகப்பெரிய அடிமை முறையானது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, இனவேற்றுமை ஆப்பிரிக்க அமெரிக்கரிடையேயான போராட்டத்திற்கான களம் அமைத் தது.
உலகளாவிய பெண்கள் உரிமைப் போராட்ட இயக்கம் (1900 தொடக்கம்)
அரசியல் சமத்துவத்திற்காகவும், பெண்களுக்கு நியாயமற்ற முறை யில்பாதிப்பைஏற்படுத்தும்இதர சமூக, மத அமைப்புகளின் சீர்திருத் தத்திற்காகவும் போராடியது.
துருக்கியில் கமால் ஆடாதுர்க் கடுமையான மதச்சார்பற்ற ஒரு குடியரசை நிறுவினார் (1923)
தனது நாட்டினை நவீனப்படுத் துவதற்கு, இஸ்லாமிய பாரம்பரியமற்ற, மதச்சார்பற்ற மக்களாட்சி முறைதான் மிகச் சிறந்த சாதனம் என்பது அங்கீகரிக்கப்பட்டது.
இத்தகைய உண்மைகள் தங் களையே நிரூபித்துக் கொள்ளுமாறு வைத்துள்ளோம்;
அனைத்துஆண்களும்பெண் களும் சமமாகவே உருவாக்கப்பட்டுள் ளனர்.
-செனக்கா பால்ஸ், பெண்கள் உரிமை மாநாடு, மன உணர்வுகளை வெளியிடுதல்.
ஸ்கோப்பின்
‘குரங்கு வழக்கு’ (1925)
உயிரினத் தோற்றக் கருத்து வேறு பாடுகளின் மீது தேசிய கவனத்தைக் குவித்தது; ஆசிரியர் ஸ்கோப்பிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட போதும், பொது மக்களின் கருத்து என்னும் நீதிமன்றத்தில் உயிரினத் தோற்றம் வெற்றி பெற்றதுடன், இத் தகைய கருத்து வேறுபாட்டைத் தோற்றுவித்தவர்களுக்குஒருபெரிய இழப்பை ஏற்படுத்தியது. இந்த இழப்பிலிருந்து அவர்கள் மீள அறு பதாண்டு காலம் அவர்களுக்குத் தேவையாக இருந்தது.
அய்க்கிய நாடுகள் மன்றம் அமைக்கப்பட்டது (1945)
சமூக சேவை, பொருளாதார முன்னேற்றம், சர்வதேச வழக்குகளில் முற்றிலும் ஒரு மதச்சார்பற்ற முறை யில் சண்டைகளைத் தீர்ப்பது போன் றவற்றுக்கான நீடித்து நிற்கக்கூடிய ஒரு உலக அமைப்பு உருவாக்கப்பட்டது.
அய்க்கிய நாடுகள் மன்றத்தின் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் (1948)
உலக சமுதாயத்திற்கு, மேற்கு நாடுகளில்நிலவுவதுபோன்றதனிப் பட்ட மனிதரின் உள்ளார்ந்த உரி மைகள் என்னும் கோட்பாடு விரிவு படுத்தப்பட்டது.
லெமோன் - குர்ட்ஸ்மேன் வழக்கில் அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முடிவு (1971)
தாய்மை அடையும் வயதுள்ள பெண்களைக் கொல்லும் முதல் தரமான, சட்டத்திற்குப் புறம்பான கருச்சிதைவு என்னும் தீமையின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, முதல் இரண்டு பிரசவங்களில் கருச்சிதைவை சட்டப்படி அனுமதித்தது.
சோவியத் யூனியனிலும், கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலும் கம்யூனிசம் தோல்வியடைந்தது (1980-1990)
மனித நேய மதிப்பீடுகள், தனிப் பட்டவரின் முயற்சி ஆகியவற்றின் மார்க்ஸிய முறையில் மய்யத்தில் திட்டமிடும் நடைமுறை செல்லுபடி யாகாது என்பது நிரூபிக்கப்பட்டது.
- கி.வீரமணி
(தொடரும்)
-விடுதலை,19.12.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக