பக்கங்கள்

செவ்வாய், 20 டிசம்பர், 2016

24. இவ்வுலகை மாற்றிய நூறு மனித நேயம் மிக்க நிகழ்ச்சிகள்!


நேற்றைய தொடர்ச்சி....

சமூகமும் கல்வியும்

அய்ரோப்பிய நாடுகளின் வெளி உலகக் கண்டுபிடிப்பு முயற்சிகள் பல்கிப் பெருகின (1400 இறுதி)

மேற்கத்திய நாடுகளின் செல்வமும், ஆற்றலும் அதிகரித்தது; உலகம் அனைத்தையும் முழுமையான ஒன்றாகக் காணும் ஒரு அகண்ட பரந்த அறிதலுக்கு வழிகோலியது.

பிரெஞ்சு ‘என்சைக்ளோஃபிடியா' முதல் தொகுதி வெளியிடப்பட்டது (1751)

டிடோரெட், டி அலம்பர்ட் ஆகியோரால் தயாரிக்கப் பட்ட 'என்சைக்களோ ஃபிடியா', மனித அறிவின் எல் லையற்ற பரந்த தன்மையை எடுத்துக் காட்டுவதாகவும், ஒளியூட்டப்பட்ட கருத்துக்களின் கருவூலமாகவும் ஒரே நேரத்தில் திகழ்ந்தது.

சார்லஸ் பவுரியரால் வெளி முதல்

மாபெரும் கற்பனைப் படைப்பு (1808)

நிலவிவரும் அரசியல், பொருளியல், சமூக ஏற்பாடுகளைப்பற்றி அச்சமின்றி கேள்வி கேட்டதுடன், மாறுபட்ட வாழ்க்கை முறைகளை சோதித்துக் காணவும் கற்பனைவாதிகள் ஊக்கமளித்தனர்.

பொதுக் கல்வி நிறுவனம் (1800 பிற்பகுதி)

கல்வி அளிப்பதற்கான பொறுப்பு தேவாலயங்களி டமிருந்து அரசுக்குச் சென்றடைந்தது; அனைத்து மதங்களின் குழந்தைகளையும் வேறுபாடின்றி ஒன்று போலவே நடத்தும் மதசார்பற்றக் கல்வி முறை என்னும் கருத்து ஊக்குவிக்கப்பட்டது.

ஃபிரடரிக் டக்லாஸின்  'ஒழிக்கப்படுதல்'

என்னும் கோட்பாடு (1841-1865)

முன்னாளில் அடிமையாக இருந்த இவர், அடிமை முறைக்கு எதிரான உலகின் தலைசிறந்த பேச்சாளராக திகழ்ந்தவரும் சீர்திருத்தத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடியவரும் ஆவார்.

செனாகா அருவியில் பெண்கள்

உரிமைகளுக்கான மாநாடு (1848)

இறுதியாகப் பெண்கள் விடுதலை பெற வழி வகுத்த பெண்கள் உரிமைகளுக்கான இயக்கத்தின் முதல் அலை வரிசை துவக்கப்பட்டது.

ராபர்ட் இங்கர்சாலின் சொற்பொழிவுச் சுற்றுப் பயணங்கள் (1872-1899)

மாபெரும் நாத்திகரான இவர் தனது மதத்தின் மீதான விமர்சனத்தை அமெரிக்காவின் அனைத்துப் பெரிய நகரங்களுக்கும் கொண்டு சென்று, சுதந்திரமான சிந்தனை என்னும் கருத்தினை, முதன் முறையாக, ஏன் ஒரே முறையாகவும் கூட, கோடிக்கணக்கான மக்களுக்கு அளித்தார்.

பகுத்தறிவு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டது (1899)

ஆங்கில மொழி பேசும் உலகம் முழுவதும், சுதந்திர மான சிந்தனைப் படைப்புகளைப் பரப்பியது; குறிப்பாக இந்தியாவில் மனிதநேய வளர்ச்சிக்கு செல்வாக்கு நிறைந்ததாக விளங்கியது.

டு போய்ஸின் 'கருப்பு மக்களின் ஆன்மா' என்ற நூல்

வெளியிடப்பட்டது (1903)

ஆப்பிரிக்க அமெரிக்க மக்களின் வாழ்வினை மேம்படுத்தும் கருவிகளான கல்விக்கும், பண்பாட்டிற்கும் முக்கியத்துவம் தரப்படுவதை வலியுறுத்தியது.

மார்கரெட் சாங்கர், முதல் குடும்பக் கட்டுப்பாட்டு

மருத்துவ மனையினைத் தொடங்கினார் (1916)

குடும்பத்தின் அளவு பெண்ணின் விருப்பத்தின்படி இருக்கவேண்டும் என்ற கருத்தின் முன்னோடி; இனப் பெருக்கம் பற்றிய மதக் கட்டுப்பாடுகளை எதிர்த்து, இனப் பெருக்கத்தை பாலியல் உடல் உறவு என்பதி லிருந்து பிரித்துக் காண்பதை ஊக்குவித்தது.

சுற்றுச் சூழல் இயக்கம் (1960 பிற்பகுதி)

உயிரின வாழ்க்கை பற்றியும், மாந்தரது தார்மீகக் கடமைகளை, கவலைகளை விரிவுபடுத்தியது.

விலங்குகள் உரிமை இயக்கம் (1970)

உணர்வுமிக்கவர்பால் கொள்ளப்பட்ட பரிவு, கவலை மாந்தருக்கு மட்டுமின்றி அய்ந்தறிவு கொண்ட உயர் விலங்குகட்கும் விரிவுபடுத்தப்பட்டது.

ஓரினப் புணர்ச்சி உரிமை இயக்கம் (1970 இடையே)

பழைய ஏற்பாட்டுக் கோட்பாடுகளின் அடிப்படை யில் முக்கியமாக ஓரினப் புணர்ச்சியாளர்கள் மீது காட்டப்பட்ட வெறுப்பின் ஆற்றலைத் தணித்தது.

நெதர்லாந்தில் கருணைக்கொலை சட்டப்படியாக்கப்பட்டது (1993)

தனிப்பட்ட மனிதரின் வாழ்வின் இறுதிக்கட்டத்தை தானே நிர்ணயித்துக் கொள்ளும் ஆற்றலையும், உரிமையையும் அளித்தது.

1960 ஆம் ஆண்டைய பெண்கள் உரிமைகள் இயக்கம்

முந்தைய பெண்ணுரிமை இயக்கங்கள் பெண்களுக் கான வாக்குரிமையைப் பெற்றுத் தந்தது போல், 1960ஆம் ஆண்டைய பெண்ணுரிமை இயக்கம் வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமத்துவத்தைக் கோரியது.

அணு ஆயுத ஒழிப்பு இயக்கம் (1980)

கோபத்தில் அணு ஆயுதங்களைப் பிரயோகம் செய்வதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட அய்ம்பதாண்டு கால முயற்சி வெற்றி பெற்றது.

மனித நேயப் பிரகடனம் -1 கையெழுத்தானது (1933)

அமெரிக்க மனிதநேய இயக்கத்தின் தோற்றம்.

அனைத்துலக மனிதநேய, ஒழுக்கநெறிக்

கூட்டமைப்பு தொடங்கப்பட்டது(1952)

மனித இன மேம்பாட்டிற்கு மனித நேயமே உண்மை யான உலகளாவிய இயக்கம் என்பதை உறுதிப்படுத் தியது.

அமெரிக்க அய்க்கிய நாடுகளில் சமூக உரிமை இயக்கங்கள் (1950)

மில், லாக்கி, ஜெபர்சன் போன்றோரால் விளக்கப் பட்ட மனித உரிமைகளை, சொல் அளவிலும், செயல் அளவிலும் ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு விரிவு படுத்தக் கோரப்பட்டது.

'மனித நேயப் பிரகடனம்-2' வெளியிடப்பட்டது (1973)

1933இல் வெளியிடப்பட்ட மனித நேய பிரகடனம்-1 நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. எண்ணற்ற அறிஞர்கள், சமூக, அரசியல் தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மனிதநேய இயக்கத்திற்கு ஒரு தெளிவான உயர்ந்த பார்வையை அளித்தது.

'மதமற்ற மனிதநேயப் பிரகடனம்' வெளியிடப்பட்டது (1980)

மனிதநேயப் பிரகடனங்கள் 1-ஆம், 2-ஆம் நாளது தேதி வரை புதுப்பிக்கப்பட்டது; அமெரிக்க மனிதநேய இயக்கத்துள் ஒரு தன் உணர்வு பெற்ற, மதச் சிந்தனை யற்ற, ஒரு குழு உதயமாவதற்கான அறிகுறிகள் தோன்றின.

‘ப்ரீ என்குயரி' தொடங்கப்பட்டது (1980)

அனைத்திலும் செல்வாக்கு மிகுந்த, உலகிலேயே அதிகமான பிரதிகள் விற்பனையாகப் போகும் மனித நேயம் பற்றிய ஆங்கில மொழிப் பத்திரிகை துவங்கப் பட்டது.

மதச்சார்பற்ற, மனித நேய ஆலோசனைக் குழு

தொடங்கப்பட்டது (1980)

அமெரிக்க அய்க்கிய நாடுகளில், மிகப் பெரி யதாகவும், மனிதநேய அமைப்புகளிலேயே மிகுந்த செயல்பாடு நிறைந்ததாகவும் பிற்காலத்தில் விளங்கிய அமைப்பு தொடங்கப்பட்டது.

‘மனிதநேயப் பிரகடனம் 2000' வெளியிடப்பட்டது (1999)

1933 ஆம் ஆண்டின் மனிதநேயப்பிரகடனத்தின் மூன்றாம் தொடர் வெளியீடு. நாளது தேதி வரையிலான நிகழ்ச்சிகள் இணைக்கப்பட்ட இது, வரும் ஆயிரம் ஆண்டுகளில் மனிதநேய, சமூக, ஒழுக்கநெறி ஆகிய துறைகளில் மேற்கொள்ள உள்ள பொறுப்புகளை உள்ளடக்கியது.

(நிறைவு)
-விடுதலை,20.12.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக