நீண்ட காலம் வாழ்ந்த மக்களிடமிருந்து கிடைத்த
12 வாழ்க்கை ரகசியங்கள்! (2)
நேற்றைய வாழ்வியலின் தொடர்ச்சி...
காய்கறி உணவுக்கு, மாமிச உணவுக் காரர்களே மாறுங்கள் என்ற அறிவுரை பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒன்று. அதனால் பெரும் விளைவு - நல வாழ்வுக்கு ஏற்படுகிறது என்பதை மருத்துவ நிபுணர்களும், வாழ்க்கையை அனுபவித்த பலரும்கூட ஒப்புக் கொள்வதில்லை. அது ஒருபுறம் இருக்கட்டும். அந்தக் கருத்தாளரின் கருத்து களையே நான் இங்கு உங்களுக்குத் தருகிறேன்.
நடுத்தர வயதுள்ள 55 வயது தாண் டியவர்கள் சுமார் 73,308 பேரிடம், ஆறு ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு செய்ததில், அவர்களில் சரி பகுதியினர் காய்கறி உணவுக்காரர்கள் என்றே தெரிவித்து தங்களை அடையாளப்படுத்திக் கொண்டனர்!
இப்படி ஆய்வு நடக்கையில், சுமார் 2,570 பேர் இறந்துவிட்டனர்! என்றாலும், மேலும் ஆய்வினைத் தொடர்ந்து நடத்தியபோது, சுமார் 12 விழுக்காட்டினர் சாகும் வாய்ப்புக் குறைவு அதனால் என்று கண்டறியப்பட்டது!
காரணம், அமெரிக்க சத்துணவு பற்றிய ஆய்வு ஏட்டில், (The American Journal of Clinical Nutrition) மார்ச்2013இல்கண்டறிந்ததுஎன்ன வென்றால்,இப்படிகாய்கறிஉணவு சாப்பிடுபவர்களில் 32 விழுக்காட்டின ருக்கு இதயநோய் மாரடைப்பு (Ischemic heart disease) வருவதில்லை என்றும், இவ்வகை மாரடைப்பினால் (‘இஸ்கிமிக்‘ காரணமாக) மறைபவர்களே அமெரிக்காவில் அதிகம் என்று அறிவுறுத்துகிறது.
7. வைட்டமின் D
வைட்டமின் D பற்றி நன்கு ஆய்வு செய்யப்பட்டு சில முடிவுகள் - இதன் பலனால் என உறுதி செய்யப்பட்டுள்ளது!
பலமுள்ள பற்கள்; ஆரோக்கியமான எலும்புகள், நோய் எதிர்ப்பு சக்தியின் மிகை - இவை ஏற்படுகின்றன என்பது உண்மை.
கனடாவின் மருத்துவச் சங்கத்தினர் நடத்தும் ஏட்டில் (Canadian Medical Association Journal) ஒரு செய்தி வெளிவந்துள்ளது!
வைட்டமின் D அளவுக்கும், குடும்பத்தின் ஆயுள் நீட்சிக்கும் ஒரு வகைத் தொடர்பு உண்டு என்று கண்டறியப்பட்டுள்ளது.
90 வயதுக்குமேல் வாழுபவர்களின் பிள்ளைகளில் ஒன்று அவர்களது சந்ததியில் வைட்டமின் D குறைந்து, புரதச் சத்து அதிகமாகி, வயதினை அதிகரித்திடக் காரணமாகி, அவர்கள் வயதானவர்களாக வாழ உதவுகிறது என்றாலும், இதன் விளைவு...?
அப் பரம்பரையினரும் 90 வயதுக்குமேல் வாழுபவர்களாகி விடுவார்களாம்! அப்படிப்பட்டவர்கள் வைட்டமின் ஞி க்குப் பதிலாக போதிய பழ வகைகளையும், காய்கறிகளையும் ஒவ்வொரு நாளும் எடுத்தால், அது சம அளவாகி, எல்லாம் ஒரு சீராகி ஆயுள் நீட்சிக்கும் உதவுமாம்!
8. சீனாவில் மிகப்பெரிய மூலிகை வைத்தியரான லி சிங் யுவன் 1933 இல் இறந்தபோது, என்ன செய்தி வெளியாகியது தெரியுமா? அதுவரை அதிக காலம் வாழ்ந்தவர்களில் அவரே மூத்தவர் என்பதுதான் அச்செய்தி. அப்போது அவருக்கு 197 வயதாம்! நம்ப முடிகிறதா?
இதற்குக் காரணம் மன இறுக்கத்திற்கு இடம் தராத, மன அமைதியாக வாழ்ந்ததுதானாம்!
மன இறுக்கத்திற்கு இடம்தராமல், மன அமைதியுடன் வாழ்ந்தால், எப்போதும் மன இறுக்கத்தில் வாழுபவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளான இதய மார டைப்பு, மறதி நோய் (Alzheimer’s) முதலிய நோய்கள் ஏற்படாதாம்.
வயதான பலருக்கு உள்ளே ஏற்படும் மனப் போராட்டமே மன வருத்தத்தினை அவர்களுக்கு ஏற் படுத்தி விடுகிறது. எனவே, அதைத் தவிர்க்க அமைதியான மகிழ்ச்சியான வாழ்வு ஆயுள் விருத்தியைத் தானே கொண்டு வரும். நன்கு போடப்பட்ட ஒரு கப் கிரீக் காஃபி (a cup of boiled Greek Coffee) அதிகாலையில் சாப்பிடுங்கள்.
கிரேக்கத் தீவுகளில் ஒன்றான அய்க்காரியா என்பதன் வெள்ளை மணல் சூழ்ந்த கிராமங்களில் வாழுவோரில் ஒரு சதவிகிதத்தினர் 90 வயதுக்கு மேல் வாழுபவர்கள். அய்ரோப்பாவில் இப்படி 90 வயதுக்குமேல் வாழுவோர் எண்ணிக்கை 0.1 சதவிகிதமே!
அதன் ரகசியம் என்ன? மேலே குறிப்பிட்ட அவித்த கிரீக் காபியே! - (Boiled Greek Coffee)
2013 மார்ச் மாதம் - Vascular Medicine-ல் வெளிவந்த ஒரு ஆராய்ச்சியின்படி, அத்தீவில் அப்படி 90 வயதுக்குமேல் ஒரு சதவிகிதத்தினர் வாழுவதற்கு மூல காரணம் இந்த ‘கிரீக் காபி’ தானாம்!
அதிகமான ஃபோலிபெனோல்ஸ் (Polyphenols) மற்றும் Antioxidants காபியை மிகவும் பக்குவப்படுத்தி, ரத்தக் குழாய் ஓட்டம் நன்கு இருக்கவும், இதயக் குழாய்கள் அடைப்பு வராமல் தடுக்கவும் - - endothelial function நன்கு நடைபெற, இதய அடைப்பு ஏற்படாமல் தடுக்க இது பெரிதும் உதவுகிறதாம்!
122 வயது வாழ்ந்தவரைப் பார்த்து ஒரு கேள்வி. நீங்கள் supercentarian- நூற்றாண்டையும் தாண்டிய ‘சூப்பர் நூற்றாண்டு நாயகன்’ என்றார்கள்.
1885 இல் பிறந்து 1997 இல் இறந்தார் அவர்!
அவருக்கு போர்ட் ஒபின், சிலம்பம் ஆடுதல், சைக்கிள் ஓட்டுதல் இவற்றில் மிகவும் பிரியமாம்! ஏன் காதலாம்!
ஜீன் கால்மெண்ட் என்ற அவருக்கு இவ்வளவு நாள் வாழ்நாள் நீண்டதற்கு ஒரு முக்கிய காரணம் ‘ஆலிவ் ஆயில்’ பயன்பாடாம்!
ஆலிவ் எண்ணெயில் உள்ள Antioxidants அதிகமாக உள்ளதாம் Monounsaturated lipids இவைகள் ஆயுள் விருத்திக்கான காரணிகளாம்!
எனவே, நீங்களும் கூடுமானவரை ஆலிவ் (ஆயிலையே) எண்ணெய்யை பயன்படுத்திடுங்கள். உணவுத் தயா ரிப்பிலும், மற்ற தலைமுடிக்கான மிருதுத் தன்மையைப்பற்றிய முயற்சி எல்லாவற்றிற்கும் ஆலிவ் எண்ணெய் நிச்சயம் உதவிடக் கூடும்!
(நாளை பார்ப்போம்)
-விடுதலை,23.12.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக