இந்திய தொல்இயல் வரலாற்றின் சுவடுகள் எப்படியெல்லாம் பதிந்துள் ளன என்பதையும், 'ஆதி இந்தியர்கள்' எப்படிப்பட்டவர்கள், எங்கிருந்தவர் கள், ஆரியர் - திராவிடர் - பழங்கால மொகஞ்சதாரோ, ஹராப்பா நாகரிகம் எப்படி மூத்த நாகரிகம் என்பதைப் பற்றி பல்வேறு சர்ச்சைகளும், விவா தங்களும் நடைபெற்று வரும் நிலை யில், டோனி ஜோசஃப் அவர்கள் மேற்கொண்ட மரபு அணு ஆராய்ச்சி சான்றுகள் ஆரியர்கள் குறித்து அறி வியல் பூர்வமாக எடுத்துரைப்பது தான் இந்நூலின் தனித்தன்மை என மதிப்புரை எழுதிய ரவி கேரிகெட்டர் கூற்று நூற்றுக்கு நூறு சரியானது.


பிரபல நோபல் பரிசாளர், விஞ்ஞானி வெங்கி இராமகிருஷ்ணன், "சமீபத்திய இந்த ஆய்வுகளின் முடி வுகளை டோனி ஜோசஃப் இந்நூலில் எளிமையான வகையில் விவரித்து உள்ளார்! இன்றைய இந்தியாவில் ஒரு செறிவான இனக்கலவையாக முடிந்துள்ள மக்களின் பழங்கால இடப் பெயர்ச்சி மற்றும் இனக்கலப்பு குறித்து ஆர்வம் கொண்டவர்களுக்கு இந்நூல் நிச்சயமாக சுவாரசியமான தாக இருக்கும்" என்கிறார் அவர்!


இப்படி உலகின் பிரபல வரலாற்று ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், மொழி ஆய்வாளர்கள் என பலதரப்பட்ட பல் சான்றோரின் பாராட்டுப் பெற் றுள்ள இந்த "ஆதி இந்தியர்கள்" ஆங்கில நூலை, "மஞ்சுள் பப்ளிஷிங் அவுஸ்" தமிழில் PSV குமாரசாமி அவர்களைக் கொண்டு அண்மை யில் (2020) - (ஆங்கிலம் 2018இல் வெளிவந்தது). வெளியிட்டி ருப்பது அரிய தமிழ்த் தொண்டு என்றே சொல்லிப் பாராட்ட வேண் டும்.



இந்த நூலை மொழி பெயர்த்த போது, ஒரு மொழி பெயர்ப்பாளர் என்ற முறையில் அவர் சந்தித்த சவால்களை நன்றாகவே எதிர் கொண்டு வெற்றி அடைந்துள்ளார் மொழிப் பெயர்ப்பாளர் பி.எஸ்.வி. குமாரசாமி அவர்கள்.


(இந்த நூலில் இடம் பெற்றுள்ள முக்கியமான பெயர்ச் சொற்களுக் கான ஆங்கிலப் பெயர்களின் பட்டி யல் ஒன்றை இந்நூலின் இறுதியில் அவர் கொடுத்துள்ளது வரவேற்கத் தக்கது).


சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி பல திரிபுவாதங்களும், திருகுதாளங் களும் அரங்கேற்ற முயற்சிக்கப்படும் இந்த காலகட்டத்தில் இந்நூல் அரு மையான ஆய்வின் அடிப்படையில் உண்மைகளை நிறுவ உதவும் ஓர் அறிவாயுதம் ஆகும்!


280 பக்கங்களை கொண்ட இந் நூல் 350 ரூபாய் விலை உள்ளது.


நம்முடைய மூதாதையர் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்?


"நாம் இந்தியர்களாக உருவான கதை" என்ற தலைப்பில், முதல் இந்தி யர்கள், முதல் உழவர்கள், முதல் நகர வாசிகள், ஹரப்பர்கள், இறுதியாகக் குடியேறியவர்கள் ஆரியர்கள் என்ற அரிய தகவல்களை சுவைபடக்கூறும் இந்நூல், தமிழில் வரவில்லையே என்ற ஆதங்கத்தைப் போக்கியுள் ளனர் வெளியீட்டாளரும், மொழி பெயர்ப்பை நேர்த்தியாகச் செய்த எழுத்தாளர் திரு. பி.எஸ்.வி. குமார சாமி அவர்களும்.


தமிழ் கூறும் நல்லுலகத்தின் பாராட் டும், நன்றியும் இத்தொண்டுக்குரிய வையாகும்.


கற்க; புரிக; தெளிக.


 


தெற்காசிய வரலாறு தொடர்பான பழைய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் துணை புரியும் புதிய மரபியல் கண்டுபிடிப்புகளை ஜோசஃப் திறமையாகவும் புத்திசாலித்தனமாகவும் தொகுத்தளிக்கிறார். அதோடு, நாம் எல்லோருமே இங்கு குடியெர்ந்தவர்கள்தாம், சகோதரர்கள் தாம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டுகிறார். இப்போது கண்டிப்பாகத் தேவைப்படுகின்ற சுவாரசயிமான மற்றும் துணிச்சலான ஒரு நூல் இது.


- ஷெல்டன் போலக்


சமீபத்திய இந்த ஆய்வுகளின் முடிவுகளை டோனி ஜோசஃப் இந்நூலில் எளிமையான விதத்தில் விவரித்துள்ளார்.


- வெங்கி ராமகிருஷ்ணன்


ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மத்திய ஆசியாவிலிருந்து வந்து குடியேறியவர்களும் அதில் இடம் பெற்றிருந்தனர்.


- ரொமிலா தாப்பர்


வேதக் காலகட்டம்வரை, பண்டைய இந்திய வரலாற்றின் தொடக்கக் காலம் குறித்தத் தெளிவான பார்வையை டோனி ஜோசஃப்பின் இந்நூல் கொடுக்கிறது.


- மைக்கேல் விட்ஸெல்