பக்கங்கள்

புதன், 16 டிசம்பர், 2020

அறிந்து கொள்வோமா - ‘ANOSOGNOSIA‘ பற்றி...! (1)&(2)



பல அரிய தகவல்களை கைத்தொலை பேசி கட்செவி - ‘வாட்ஸ் அப்' மூலம் அனுப்பி உதவிடுவார் அருமை டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் அவர்கள்.


சில நாட்களுக்கு முன் அனுப்பி வைத்த ஆங்கிலத்தில் ஆன இந்த அரிய செய்தி களை உங்களோடு பகிர்ந்து கொண்டு மகிழ லாம் என்று விரும்பி இதை எழுதுகிறேன்.


தற்காலிக மறதித்தன்மை (Temporary forgetfulness) என்பது பற்றி பிரெஞ்சுப் பேராசிரியர் புருனோ துபே என்பவர், (பாரீ சில் உள்ள ஒரு மருத்துவமனை - இன்ஸ்டி டியூட் ஆப் மெமெரி அண்ட் அல்ஷைமர்ஸ் நோய் (Institute IMMA, AP-HP Pitie-Salpetriere Hospital) கூறிடும் சில தகவல்களும், கருத்துரைகளும் இதோ:


நம்பிக்கையூட்டும் தன்மையால், அவரது இத்தகவல்கள் நமக்குப் பயன் அளிக்கக் கூடும்!



யாராவது தங்களது நினைவு வன்மையை, ஞாபக சக்தியைப் பற்றி சிந்திக்கிறார்கள் - கவலைப்படுகிறார்கள் என்றால் அவர்க ளுக்கு மறதி நோய் என்று அழை க்கப்படும் அல்ஷைமர்ஸ்‘ (Alzheimer's) இல்லை என்றே நாம் வைத்துக் கொள்ளலாம்! (எவ் வளவு நம்பிக்கையூட்டக்கூடிய அரிய தக வல் இவை. மேலே செல்லுவோமா?


சிலர் அடிக்கடி கவலைப்பட்டுக் கூறுவ துண்டு.



  1. "இப்போதெல்லாம் நான் நெருக்கமான குடும்பத்தவர்களின் பெயர்களைக் கூட மறந்துவிடுகிறேன்; ‘சட்'டென்று நினைவுக்கு வரமாட்டேங்கிறது!"


"சில பொருள்களை எங்கே வைத்தேன் என்பது கூட உடனே ‘விர்'ன்னு ஞாபகத்திற்கு வர மறுக்கிறது!"


60 வயதுள்ளவர்களும், மேற்பட்டவர் களும் இப்படி நினைவு இழத்தல்பற்றி அடிக் கடி குறை சொல்லிக் கொள்ளுகிறார்கள்!


மூளையில் அந்தத் தகவல்கள் எப்போதும் உள்ளன. அதை 'பிராசஸ்' செய்து உடனடி யாக நினைத்தவுடன் வெளியே கொணர மறுக்கும் நிலைதான் மேற்காட்டிய தற்காலிக மறதி - நினைவுத்தப்பல்.


ANOSOGNOSIA  என்பது 60 வய துக்கு மேற்பட்ட பலரும் இந்த தற்காலிக நினைவு இழத்தல் - மறதியை பெற்றுள்ளது என்பது வயதினால் ஏற்பட்ட ஒன்றே தவிர, இது ஒரு நோய் அல்ல (மறதி நோய் என்று பயப்பட வேண்டாம்).


பொதுவாக அடிக்கடி இதுமாதிரி ஏற்படும் அனுபவங்கள் - நிகழ்வுகள் என்ன தெரி யுமா?


சரி - சில நபர்களின் பெயர்களை மறத்தல். (எனக்கே கூட கூட்ட நிகழ்ச்சிகளின் துவக் கத்தில் மற்றவர்களை விளிக்கும் போது மிகவும் பழகியவர்கள் பெயர்கூட சிற்சில சமயங்களில் 'சட்'டென்று நினைவுக்கு வராமல் சில மணித்துளிகள் தடுமாற்றத்திற்குப் பிறகே கூட வருவது எப்போதாவது உண்டு).



  1. சில அறைக்குள் நம் வீட்டுக்குள்ளேயே ஏதோ ஒரு எண்ணத்தோடு நுழைவது - எதற்கு இங்கே வந்தோம் என்று புரியாது குழம்புவது.

  2. சில திரைப்படங்கள், தலைப்புகள், நடித்த நடிகர், நடிகைகள் பெயர்களை மறந்து விடுதல்.

  3. மூக்கு கண்ணாடியை, சாவிக் கொத்தை எந்த இடத்தில் வைத்தோம் என்று தேடுதல் - இவை மறதி நோயின் அறிகுறி என்று அச்சப்பட வேண்டாம்!


60 வயதுக்குப்பிறகு இது சர்வ சாதாரண மாக அன்றாட வாழ்வில் பலருக்கும் நடப்பது தான்!


வயது மூப்பின் விளைவுகளான இவை சகஜமானவை தான்!


(தொடரும்)

அறிந்து கொள்வோமா - ‘ANOSOGNOSIA‘ பற்றி...! (2)

நேற்றைய வாழ்வியல் தொடர்ச்சி....



இதுகுறித்துபெரிதும் கவலைப்படுவது பற்றி பிரபல மருத்துவர் மேற்காட்டிய டாக் டர் புருனோவின் கூற்று என்ன தெரியுமா?


“தனக்கு மறதியால் அடிக்கடி இப்படி தற் காலிகமாக தடுமாறுகிறது என்று உணர்ந்து கூறுகிறார்கள் என்றால் அத்தகைய விழிப் புணர்வுள்ளவர்களுக்கு மறதி நோய் என்ற மிக ‘சீரியஸ்’ பிரச்சினை ஏதும் இல்லை என் பதாகவே எழுதிக் கொள்ளலாம்!”


யார் நினைவு இழத்தல் நோயால் அவதி யுறுகிறார்களோ, அவர்கள் மறதி நோயான ‘அல்ஷைமர்ஸ்’ (Alzheimer’s) காரணமா கவே பாதிக்கப்படுகிறார் - அவர்களுக்கு இப்படி ஒரு நினைவோ, விழிப்புணர்வோ வரவே வராது என்பதைப் புரிந்து கொள் ளுவோம்.


“நமது மறதி பற்றி யார் அடிக்கடி கவனத் தோடு குறை காணுகிறார்களோ அவர்க ளுக்கு அந்த நோய் இல்லை; அந்த நோய் அவர்களைத் தாக்கவில்லை என்பதை புரிந்து கொண்டு தைரியமாய் இருங்கள்” என்கிறார் பேராசிரியர் டாக்டர் புருனோ துபே (Dr. Bruno Dubois) என்ற அந்த இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர்.



இதுபற்றி அதிகமாக குறைகூறிக் (complaint) கொண்டே இருந்தால்.


அதாவது, அது தேவையற்ற மனோ வியாதிக்குத்தான் நம்மை அழைத்துச் செல்லுமே தவிர வேறு பயன் ஏற்படாது.


இப்போது உங்களுக்கு சில சின்ன பரிசோதனைகள்!


நீங்கள் உங்கள் கண்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.



  1. கீழே உள்ள அட்டவணையில் C என்ப தைக் கண்டுபிடியுங்கள்.


OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOCOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO
OOOOOOOOOOOOOOOOOOOOOOOOOO


மேலே சொன்னதில் கண்டுபிடித்து விட்டீர்களா? சரி  வெற்றி பெற்று விட்டீர்கள்.


அடுத்து இரண்டாவது,



  1. கீழ்க்காணும் அட்டவணையில் 6 என்ற எண்ணைக் கண்களைக் கொண்டு கண்டு பிடியுங்கள்.


999999999999999999999999999999999


999999999999999999999999999999999


999999999999999999999999999999999


699999999999999999999999999999999


999999999999999999999999999999999


999999999999999999999999999999999



  1. அடுத்தக் கட்டத்திற்குப் போவோமா?


இதோ, இப்போது ழி என்பதை கீழ்வரும் அட்டவணையில் கண்டுபிடியுங்கள் (இது சற்று கடினம் தான்).


MMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMNMM
MMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMM
MMMMMMMMMMMMMMMMMMMMM


இந்த மூன்று பரிசோதனைகளில் நீங்கள் வெற்றி பெற்று விட்டால், நீங்கள் நரம்பியல் நிபுணர்களிடம் (Neurologist)  போக வேண் டிய அவசியமே இல்லை. சரிதானே!


மறதியைப் பற்றி இவ்வளவு கவலைப்படு கிறோமே அதன் இன்னொரு பக்கத்தைப் பற்றி நாம் நினைத்துப் பார்க்கத் தவறலாமா?


மறதி மட்டும் இவ்வுலகில் இல்லாவிட்டால் இந்த உலகில் மனித வாழ்வு எவ்வளவு வேனைத் தீயில் வெந்து, நொந்து நூலாகிப் போகும் என்பதையும் ந¤னையுங்கள்!


எல்லாவற்றிலும் ஓர் அளவோடு இருப் பது அவசியம் என்ற விதி இதற்கும் கூடத் தானே பொருந்த வேண்டும். இதோ,


நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு


மறக்கத் தெரியாதா?


அர்த்தமுள்ள கேள்விதான் - வாழ்க்கை யின் துன்பங்களும், துயரங்களும் நம்மை மிரட்டும் போதும், விரட்டும்போதும்!


ஓ மனிதா! மறக்க வேண்டியவைகளை மறக்கக் கற்றுக் கொள். மறக்கக் கூடாதவை களை மறக்காமல் இரு! மனிதம் தானே தழைக்கும் அப்போது!


(நிறைவு)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக