அமெரிக்காவின் அடாவடி அதிபர் டொனால்ட் டிரம்ப் தோல்வி முகத்தோடு தேர்தல் முடிவுகளைச் சந்திக்கும் நிலையில், அவரை நோக்கிப் பாய்ந்த அம்புகளில் மிகவும் கூர்மையான ஒன்று - யாரும் எதிர்பார்க்காத - கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை விட சக்தி வாய்ந்த சொற்களைக் கொண்ட ஏவுகணையானது ஒரு விசித்திரமான அரசியல் பாடம் ஆகும்!
அப்பாடம் அனைத்து அரசியல்வாதிக ளுக்கும், பொது வாழ்வில் உள்ளவர்களுக்கும் மட்டுமல்ல, (ஏன் தனி வாழ்வில் கூட முக் கியம்தான்!).
வள்ளுவரின் குறளும்கூட அமெரிக்க அதிபர் தேர்தலில் நமக்கு நல்ல பொழிப்புரை விளக்கமாக அமைந்துவிட்டது! காரணம் தேவையற்ற தனது - பெருநிலைப் பதவி பற்றிக் கூட கவலைப்படாமல், பேசிய பேச்சு - பழிப்புரை - அதற்கான பொழிப்புரை உரிய காலத்தில் தகுந்த பாடமாக அவருக்கு ஒரு 17 வயது இளம் பெண், அதுவும் சுவீடன் நாட்டைச் சார்ந்தவரால் சரியான முறையில் திருப்பித் தரப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. அதே நாணயத் தைத் திருப்பிக் கொடுத்து முகத்தில் அடிப் பது, அடிக்கப்படுவது என்று.
இதோ சுவைக்க வேண்டிய ஒரு செய்தி - டிரம்ப் பற்றி!
சுவீடன் நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க், சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் ஆவார்.
சுவீடன் நாடாளுமன்றம் முன்பு போராட் டம், மாணவர்களுக்குக் காலநிலை குறித்த விழிப்புணர்வு வழங்குதல், சூழலியல் தொடர்பான கட்டுரைகளை எழுதுதல் எனத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார், கிரேட்டா. ‘டைம்ஸ்' பத்திரிகையின் இந்த ஆண்டின் சிறந்த நபராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார். அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
உலக நாடுகளின் தலைவர்களைக் கடு மையாக விமர்சனம் செய்யக்கூடியவர் கிரேட்டா. இதுதொடர்பாக, டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பதிவில், “மிகவும் கேலிக்குரியது. கிரேட்டா தன்பர்க் தன்னு டைய கோபத்தைக் கட்டுப்படுத்த முயல வேண்டும். தனது நண்பர்களுடன் நல்ல க்ளாசிக் திரைப்படங்களைப் பார்க்க வேண் டும். Chill கிரேட்டா, Chill !” என்று கிரேட்டா வின் கோபத்தை விமர்சனம் செய்து பதி விட்டிருந்தார்.
கிரேட்டா தன்பெர்க் இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, தன்னுடைய ட்விட்டர் பதிவில்,
“So ridiculous. Donald must work on his Anger Management problem, then go to a good old fashioned movie with a friend! Chill Donald, Chill!”
என்று பதிவிட்டுள்ளார்.
அதன் தமிழாக்கம்:
“மிகவும் அபத்தமானது. டொனால்ட் தம் முடைய கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகு நண்பரு டன் நல்ல பேஷன் திரைப்படங்களைப் பார்க்கட்டும். Chill டொனால்ட்Chill” என்று பதிவிட்டார்.
“என் மீது அவ்வப்போது அரசியல் சாயம் பூசுகிறார்கள். ஆனால், நான் எந்தவொரு கட்சிக்கோ, அரசியல்வாதிக்கோ, சித்தாந்தத் திற்கோ ஆதரவாகப் பேசியதே இல்லை. அறிவியலையும், சுற்றுச்சூழலையும் காப் பாற்ற நாம் எதுவும் செய்யாமல் விட்டால் நடக்கப்போகும் ஆபத்துகளைப்பற்றி மட் டுமே நான் பேசுகிறேன்.
இன்றைக்குத் தேவைப்படும் அரசியல் வலதிலும் சரி, இடதிலும் சரி, நடுநிலையான நிலைப்பாட்டிலும் சரியாக இல்லவே இல்லை!” என்று தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டையும், அரசியல் குறித்த விமர்சனத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எப்படி சரியான பதிலடி பார்த்தீர்களா?
யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்இழுக்குப் பட்டு (குறள் 127)
ஒருவர், தாம் காக்க வேண்டியவைகளில், எவற்றை காக்கத் தவறினாலும், தம் நாவை மட்டுமாவது கட்டாயம் காக்க வேண்டும். அப்படிக் காக்கத் தவறினால், அவர் சொற் குற்றத்தால் அகப்பட்டுக் கொண்டு பெரிதும் துன்பப்படுவார் - என்பதே இதன் கருத்துரை யாகும்.
அரசியல் தோல்வியைவிட இது மிகவும் மோசமானது - தவிர்க்கப்பட வேண்டியது. டிரம்பின் அரசியல் வாழ்விலிருந்து அரசியல் நடத்துவோர் கற்க வேண்டிய அதாவது தவிர்க்கப்பட வேண்டிய - பாடங்கள் - ஆயிரம் உண்டு இந்த நான்காண்டு - பதவிக் காலத்தில்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக