பக்கங்கள்

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

மறதி நோய் தாக்குதல் ஏன்? ஓர் அதிசய ஆய்வு!

மீதூண் விரும்பேல் என்ற அறிவுரை, அதிகம் சாப்பிட்டால் எடை கூடும்; ஊளைச் சதை - கொழுப்புச் சத்துக் கூடும்; கொலஸ்ட் ரால் - கூடுவதோடு, சர்க்கரை நோய்க்கும் அழைப்பு விடுக்கும் என்பது மட்டுமல்ல.
பழைய ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரை ஒன்றில் ஒரு மருத்துவ ஆய் வாளர் இதை மற்றொரு கோணத்திலும் ஆய்வு செய்து நிறுவியுள்ளார்!
மறதி நோய் (Dementia)” என்பது இப்போது பலருக்கு முதுமை முளைப்பதற்கு முன்னதாகக்கூட வந்து விடுகிறது!
அதற்கு ஒரு முக்கிய காரணம் அதிகம் சாப்பிடுவதும், சில உணவு களே அப்படி ஒரு நிலையை இன் சுலின் சுரக்காத அளவுக்கு ஆகி மூளையைத் தாக்கி - மறதி நோய்க்குக் காரணமாகியிருப்பதைக் கண்டுபிடித்துள்ளதோடு
சர்க்கரை நோய்  - Type I,  Type II என்று இதுவரை இரு வகையாகப் பகுத்தனர் மருத்துவர்கள்.
இவரோ, Type III என்றால் இந்த Alzheimer’s Disease ஆகிய இரண் டையும் தோற்றுவிக்க காரணமான மூன்றாம் வகை சர்க்கரை நோய் Type III Diabetes என்று கூறியுள்ளனர். டாக்டர் டி லா மாண்டி என்பவர் இப்படி ஒரு பெயரையும் தந்துள்ளார்.
மூளையில் உள்ள செல் மெம்பி ரேன்களுக்கு அதிக புரதச் சத்தை அளித்து உதவக் கூடியது பீட்டா ஆம்லாய்ட் (Beta amyloid) என்ற ஒரு வகை புரதச்சத்தின் துண்டு துகள் ஆகும்.
முக்கியப் பணிகளை மூளை செய்ய இதுதான் பெரிதும் உதவக் கூடியதாம்!
மைக்ரோப்ஸ் என்பவைகளை எதிர்த்துப் போரிடுதல், கொலஸ்ட்ராலை வேறு இடத்திற்கு அனுப்பி குழாய் அடைப்பை தடுக்க உதவுதல், சில மரபணுக்களை (Genes)
ஒழுங்குபடுத்தும் பணி இவைகளையும் இந்த துகள் துண்டுதான் செய்யும் இந்தப் பணியை  செய்யவிடாமல் செய்கிறது மீதூண் உணவு என்பதே முக்கிய கருத்தாகும்!
ஹார்மோன்கள் பல வகை நோய்களை உடல் பலவீனங்களை - நோய் தாக்குதலை எதிர்க்க உதவி செய்யும் படை வீரர்கள்.
நம் மூளையைப் பொறுத்தவரை நியுரான்கள் என்பவைகள் குளுக் கோஸ் - சர்க்கரையை சக்தியாக மாற்றி நியூரோடிரான்ஸ் மீட்டர்களை நினைக் குதிர் நன்றாக இயங்கும் வண்ணம் உதவும் பணிக்குக் காரணமாக உள்ளது. இரத்தக் குழாய் அவற்றின் பணி செய்ய, பிராண வாயு போதிய அளவில் கிடைக்க வழி செய்யும் பல பணிகள் மூலம், மூளைக்குப் போதிய குளுக்கோஸ் - சர்க்கரைச் சத்து - சக்தி கிடைப்பதை - சில வகை உணவு - கொழுப்பு கூடுதலாக, இன்சுலின் சுரத்தலைத் தடுத்து விடுகிறது.
அது மறதி நோய்க்கு அடித்தளம் இடுகிறது!
கணையம் அதிகமாக ஓவர் டைம் வேலை செய்து பழுதாகி விடுவதால் இந்த ஆபத்து. இதைப் புரிந்து அளவோடு சரியான உணவைத் தேர்வு செய்து, முக்கால் வயிற்றுடன் எழுந்து வாழுங்கள்.
வாழுவதை நினைவுபடுத்திக் கொண்டு, பிறருக்குச் சுமையாய் இராத வாழ்வு வாழுங்கள் - வாழ முனை யுங்கள்.
விடுதலை,7.3.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக