பக்கங்கள்

திங்கள், 9 ஜனவரி, 2017

சர்க்கரை நோயாளிகளுக்கு மகிழ்வூட்டும் செய்தி!




அமெரிக்கத் தலைநகர் வாஷிங் டன் நகரிலிருந்து இன்று (1.7.2014) வெளி வந்துள்ள ஓர் அருமையான செய்தி:

ஆஃபிரிசா Afrezza என்ற மூக்கு வழியாக இழுத்தே, உடலுக்குத் தேவையான இன்சூலின் மருந்தை உட் செலுத்தினால், Type II என்ற சர்க்கரை நோயாளிகளுக்கு, ரத்தச் சர்க்கரை யைக் கட்டுப்படுத்த அது உதவி செய் யும். தினமும் உடலில் ஊசி குத்திக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை; அந்த உபாதை இல்லை.

(ஊசி குத்துவதில்கூட- ஆராய்ச்சி களின் பலனாக, அளவு எவ்வளவு தேவை என்பதை அதே கருவி நிர்ண யம் செய்து அதை உடலில் ஏற்றிடும் நவீன சிகிச்சை முறை செயற்பாட்டிற்கு வந்துள்ளது)

இந்த ஆஃபிரிசா என்ற மூக்கு அருகில் வைத்து உள்ளே இழுக்கும் (Inhale) மருந்தாக அமெரிக்காவின் மருந்து தர நிர்ணய, அங்கீகார அரசு அமைப்பான Food and Drug Administration (F.D.A.) இதனை அங்கீ கரித்துள்ளது; இனி நடைமுறையில், மக்களுக்கு பயன்படப் போகிறது - இந்த இன்சுலினைச் சுவாசிப்பது என்ற முறையின் மூலம்.

உணவு உட்கொள்ளத் துவங்குமுன் இதை மூக்கு அருகில் வைத்து (Inhaler)   மூச்சு இழுத்து விடுவதுபோல செய்துவிட வேண்டும். அல்லது உணவு உட்கொள் ளும் 20 நிமிடங்களுக்குள் உள்ளே இழுப்பது அவசியம்.

இப்படிச் செய்வதினால் சிலர் அள வுக்கு அதிகமாகக்கூட பற்பல நேரங்களில் - பயப்படும் ஊசியால் குத்தி இன்சூலினை உடலுக்குள் ஏற்றும் வலி - தொல்லை - பயம்  இல்லாத நிலை ஏற்படுவது நன்மை தானே!

ஆனால், எதிலும் மறுபக்கம் - எதிர் விளைவுகளும்கூட உண்டல்லவா? அதுபோல,

இந்த மூச்சு இழுப்பது போலே முகர்ந்து மூக்கினால் உறிஞ்சிடும் இந்த முறை யினால் இன்சூலின் நேரே, நமது சுவாசப் பை (Lungs)க்குள் செல்லும் நிலை உண்டு. இது சுவாசப் பையைப் பழுதாக்கிடவோ அல்லது வேறு விளைவுகளையோ ஏற்படுத்தக் கூடும் என்றாலும் போகப் போக இதைத் தவிர்க்கவும் அல் லது அதன் பாதிப்பு ஏற்படா வண்ணம் ஏதாவது புது வழியைக் கண்டுபிடிப் பார்கள் தொழில் நுட்ப விஞ்ஞானிகள் - நிபுணர்கள் என்பது உறுதி.

ஆஸ்த்துமா நோய் உள்ளவர்களும், நுரையீரல் வியாதி  உள்ளவர்களும், இம்முறையைக் கையாளுவது ஏற்கத் தக்கது அல்ல என்று கூறி மருத்துவர்கள் அத்தகையவர்கள் இதனைப் பயன்படுத் தக் கூடாது என்று அறிவுறுத்துகின்றனர்.

பிரான்கோஸ்பாசம்ஸ் (Broncho- spasms) என்ற ஆபத்தான (மூச்சு விடாமல் இறுகி கட்டிக் கொள்ளுதல் - ஷிஜீணீனீ திடீர் அடைப்புகள் போன்றவை).

புகைப்பிடிக்கும் வழக்கம் உள்ள வர்கள் - ஏற்கெனவே இழுக்க இழுக்க இன்பம் என்ற தீவிர புகைப் பழக்கத்தை உடையவர்களோ அல்லது புதிதாகப் புகைப்பிடிக்கத் துவங்கியுள்ளவர்களோ,  இந்த இன்சூலின் உறிஞ்சான் (Inhaler)  மூலம் உள்ளே இழுப்பதும் அனுமதிக்கத் தல்ல என்று மருத்துவர்கள் சொல் கிறார்கள்.

இந்த மருந்து - ஆஃபிரிசா எந்த அளவுக்கு பயனுறு மருந்தாக, சர்க் கரையைக் குறைக்கப் பயன்படுகிறது என்பதை அமெரிக்காவில் 3017 பேருக்குக் கொடுத்து - இழுப்பதுபற்றி ஆராய்ந்து பார்த்தனர்.

இதில் 1026 பேர்கள் Type I  ஊசி இல்லாமல் மருந்து மாத்திரை சர்க்கரை நோயாளிகள் ஆவர்

இதில் Type II  பிரிவினர் 1991 பேர்களுக்கு தந்து ஆய்வு செய்தனர். (24 வாரங்கள் தொடர் சோதனை நடந்தது)

இன்னொரு தகவல்: இந்த சர்க்கரை வியாதி நமது பாரம்பரிய மாக பெற்றோர்கள், தாத்தா, பாட்டிக்கு இருப்பது தொடரலாம்; மனிதர்களின் மரபணு மூலம். மற்ற நோய்களால் மரணம் ஏற்படுவது எவ்வளவு தெரியுமா?

அதில் இதய நோய் 40  முதல் 55 - 60 விழுக்காடு வரை - ரத்த கொதிப்பு  50% எனவே DNA வையும் 50க்குள் உள்ளவரை பரிசோதிப்பது அவசியம் ஆகும். (மரபு அணு சோதனை களுக்கான உடற்பரிசோதனை நிலையங்களும் நாட்டில் உள்ளன).

-விடுதலை,1.7.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக