பக்கங்கள்

வியாழன், 12 ஜனவரி, 2017

“குழந்தைகளின் சுதந்திரமே மனித சுதந்திரத்தின் தொடக்கம்!’’ (2)

தனித்தன்மையான சிந்தனை யாளரான ஓஷோவின் எழுத்தோவியம் இன்றும் தொடருகின்றன - குழந் தைகள் மொட்டுக்களாக, பிஞ்சுகளாக இருக்கையில் அதனைக் கிள்ளிக் கிள்ளி அவற்றின் சுதந்திரத்தைப் பறித்தவரைப்பற்றிய தொடர்ச்சி இது....

‘‘மனிதன் ஏன் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறான் என்பதற்கு இதுதான் அடிப்படையான காரணமாக இருப் பதாக தெரிகிறது. ஏனெனில் எந்த ஒரு மனிதனும் சுதந்திரமானவனாக இயங்க வில்லை என்று ஒரு மனிதனும் தானாக உணர்வதில்லை, தனது சொந்த பேருணர்வின் மூலம் அவன் தனது சொந்த பாதையை தட்டுத்தடுமாறி தேடுவதில்லை. அவன் வேரிலேயே களங்கப் படுத்தப்பட்டு விட்டான்.

ஆனால் அந்த ஜெர்மன் சிந்த னையாளர் இதை ஒழுக்கக் கட்டுப்பாடு என்று அழைத்தார். எல்லாப் பெற் றோர்களும் அதை அப்படியே அழைக் கின்றனர். குழந்தைகள் ஆறுமாத காலம் இருக்கும் போதே அவர்களை கட்டுப்படுத்திவிட்டால், அதன் பின்னர் அவர்கள் தங்களது பெற்றோர்களை கேள்வி கேட்க மாட்டார்கள். மேலும் அவர்கள் தங்களின் சொந்த விருப்ப ஆற்றலில் செயல்புரிவதாகவும் நம்பிக் கொண்டு இருப்பார்கள். அந்தக் குழந்தைக்கென்று சுயமான விருப்பாற்றல் வருவதற்கு முன்பு அதை உடனடியாக நிறுத்திவிடுங்கள். அதை உடனடியாக கொன்று போட்டு விடுங்கள் என்று அவர் எழுதுகிறார். ஒரு குழந்தையை நீங்கள் ஒரு நபராக, ஒரு தனிமனிதனாக பார்க்கும் போதே உடனடியாக அவனுக்கு தனிமனிதத்தன்மை என்கிற முதல் ஒளிக்கதிர்புகுவதற்கு முன்பு நீங்கள் அதைஅழித்துவிடவேண்டும். ஒரு நொடிப் பொழுதுகூட இழக்கப் படக்கூடாது என்று அவர் கூறுகிறார்.

அந்தக் குழந்தையிடம் தனது சுய விருப்பாற்றல் முதல் முதலாக தோன்றும் போது ஒருவர் நேர்மறையான எண் ணத்தோடு முன்னால் அடி எடுத்து வைக்க வேண்டும். கண்டிப்பான வார்த்தைகள், பயமுறுத்துகின்ற உடல் அசைவுகள், படுக்கையில் தள்ளுதல், உடல்ரீதியான நயமான எச்சரிக்கை கொடுத்தல் ஆகிய செயல்கள் அந்த குழந்தை அமைதியாகும் வரையில் அல்லது ஆழ்ந்து தூங்குகின்றவரையில் இடைவிடாமல் திரும்பத்திரும்ப செய்யப்படவேண்டும் என்று அவர் கூறுகிறார்.

ஒருமுறை அல்லது இருமுறை அல்லது அதிகபட்சமாக மூன்று முறை மட்டுமே இந்த வகையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் மக்களிடம் கூறினார்.

அந்த அளவுக்கு குழந்தை பயப் படும்படி ஆகிவிடுவார்கள். அவனை வேரோடு அசைத்து விடுங்கள்! இப் போது அந்த வேர்கள் இன்னமும் மென்மையாகஇருக்கின்றன.ஒரு ஆறுமாதம் ஆன குழந்தை அல்லவா! கை ஜாடைகளில் அவனை பயமுறுத்துங்கள் ஆழ்ந்த வெறுப்புடன், உங்களது கண்களில் குரோதத்துடன் அந்த குழந்தையை நீங்கள் அழித்து விடுவதைப் போன்று பயமுறுத்துங்கள். ஒன்று அவன் இருக்க வேண்டும் அல்லது அவனது சுய விருப்பாற்றால் இருக்கவேண்டும் என்பதை அவனிடம் தெளிவாகச் சொல்லி விடுங்கள். இரண் டுமே ஒன்று சேர்ந்து இருப்பதற்கு அனுமதி இல்லை என்று கூறிவிடுங் கள். அந்தக் குழந்தை தனது சுய விருப்பாற்றலை விரும்பினால் அதன் பின்னர் அவன் உயிரை விட்டுத்தான் தீர வேண்டும். குழந்தையானது தனது சுய விருப்பாற்றலை கைவிட்டால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்பதை அறிந்து கொண்டு விட்டால் அவன் தனது சுய விருப்பாற்றலை கைவிட்டு விடுவான். மேலும் அவன் உயிர் வாழ வேண்டும் என்பதைத்தான் தேர்வு செய்வான். அதுதான் இயல்பு. ஒருவன்முதலில் உயிர் வாழ்வதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் மற்றவை எல்லாம் இரண் டாம் பட்சமானவை.

அதன் பின்னர் ஒருவர் எப்போ தைக்கும் அந்தக் குழந்தைக்கு எஜமானாக இருக்கிறார். அப்போதில் இருந்து, ஒரு பார்வை, ஒரு வார்த்தை அல்லது ஒரு சிறு பயமுறுத்தும் ஜாடை காட்டினால் போதும், அந்த குழந்தையை நீங்கள் அடக்கி ஆள முடியும் என்று அவர் கூறுகிறார்.

தனது சொந்தக் குழந்தைக்கு என்ன நடக்கிறது? யாரும் அதுபற்றி கவலைப்படுவதில்லை.

இந்தக் கருத்தை எல்லோரும் விரும்பினார்கள். உலக முழுவதிலும் உள்ளபெற்றோர்கள்மிகவும்ஆர்வ முள்ளவர்களாகஇருந்தனர்.எனவே ஒவ்வொருவரும் தங்களது குழந்தைகளை கட்டுப்படுத்த முயற் சிப்பதை ஆரம்பித்தனர். அப்படித்தான் ஸ்செரபரின்கொள்கைப்படிஒட்டு மொத்த ஜெர்மனியும் கட்டுப்படுத்தப் பட்டது. அது அடால்ப் ஹிட்லருக்கு வழி அமைத்துக் கொடுப்பதாக ஆகி விட்டது.''

(‘‘திடீர் இடியோசை’’- ஓஷோ நூலின் பக்கம் 274-276)

(மற்றவை நாளை )

-விடுதலை,12.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக