புரட்சிக் கவிஞரின் ஆத்திச்சூடி என்பது மிக அருமையான கருத்துக் கருவூலம், காலத்தால் போற் றப்படும் காலப்பெட்டகம்; ஞாலமுழு வதற்கும் ஆன ஞானச்சுடரொளி!
இதைக் குழந்தைகள் மட்டும் தான் படிக்கவேண்டும் என்று நினைத்து ஒதுக்கி விடாதீர்கள் இளைஞர்களே!
வயதானவர்களும் கூட இதைக் கற்றறிந்து கடைப்பிடித்து ஒழுகினால் நிச்சயம் கடைத்தேறுவர். தாமும் மகிழ்ந்து, தன்னைச் சார்ந்தோரையும் மகிழ்விக்கும் வாய்ப்பை வையகத் திற்கு வழங்கிடக்கூடும்.
புரட்சிக் கவிஞரை பாவேந்தராக் கிட்ட (அது அவரின் தனித்தன்மைக் குச் சரியான எடுத்துக்காட்டு ஆகாது) பல புலவர்கள் அவரது பிற நூல்கள் பற்றிய ஆய்வினை விளக்கி விரிவுரை களைக் கூறுவோர் இனி மேலாவது பாரதிதாசன் ஆத்திச்சூடி என்ற இந்த இளையர் வழிகாட்டும் நூலைப்பற்றி எளிமையான விளக்க நூல்களை எழுதட்டும்!
பள்ளிச் சுவர்கள், வீடுகளில் கூட நல்ல இடத்தில் நாளும் குழந்தைகள் உட்பட அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இதனை எழுதிடுங்கள்.
84 வரிகளில் - குறளுக்குகூட இரு வரி. இதோ ஒரே வரி எவ்வளவுச் சுருக்கமாத்திரைகளை (CAPSULES) எடுத்துக்காட்டாக இதோ எண் 1 அனைவரும் உறவினர்
1) உலகில் உள்ள மக்கள் அனை வரும் நமது உறவினர்
2) யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது புறநானூறு, யாரையும் உறவின ராகக் கருதுவதற்கு அன்பு வேண்டும் என்பது குறிப்பு
எண் 44 தொன்மை மாற்று
1) நடப்பு நிலைக்கு ஒத்துவராத பழைய கொள்கைகளை காலத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்
2) மூடப்பழக்க வழக்கங்களையும், பொருந்ததாத சடங்குகளையும் பழைமை என்ற பெயரால் ஒத்துக் கொள்ளவேண்டாம்.
எண் 48 நினைவினில் தெளிவு கொள்
1) ஆழ்ந்த சிந்தனையும் தெளிந்த அறிவும் பெற்றிடுக
2) இதுவோ, அதுவோ என்ற அய்யம் அகற்றுக
எண் 50 நுண்ணிதின் நுண்மை தேர்
1) மிகச்சிறிய பொருளிலும் உள்ள நுட்பத்தை ஆராய்ந்து அறிந்து கொள்.
2) அணுவையும் பிளந்த அறிவியல் அணு சக்தியினைக் கொடுத்துள்ளது, அதன் தீயவிளைவுகளைத் தள்ளி நன்மையினை ஆய்ந்து பயன்படுத்த வேண்டியது நமது பொறுப்பு
எண் 54 நைந்தார்க்கு உதவி செய்
1) வாழ்வில் இன்னல் அடைந்து தொல்லைப்படுவோரின் துயரினைத் துடைத்திடுக
2) தனி ஒருமனிதனுக்கு மட்டுமல்ல, போராலும் வறுமையாலும், இயற்கை யின் சீற்றத்தாலும் தொல்லைப்படும் நாடுகளுக்கும் உதவி செய்க என்பதே இப்பாடலின் தத்துவம்
எண் 39 துன்பம் இன்பத்தின் வேர்
1) துன்பம் தொடர்ந்து வருவது அன்று; எனவே அதனை இன்பத்தின் தொடக்கம் எனலாம்.
2) உலக வாழ்வில் இன்ப, துன்பங் கள் மாறிவரும் தன்மையன; எனவே அவற்றைக் கண்டு மருளவோ, மயங்கவோவேண்டாம்!
எண் 41 தெருவெலாம் மரம் வளர்
1) தெருக்கள் தோறும் வரிசையாக நன் மரங்களை வளர்க்கவும்
2) பழமும், விறகும், நிழலும் தருவ தோடு மரங்கள் சுற்றுப்புறத் தூய்மை யினையும், குளிர்ச்சியையும், மழை யினையும் உண்டுபண்ணுகின்றன. எனவே மரங்களை நட்டு வளர்த்துப் பேணவும் வேண்டும்.
- பார்த்தீர்களா? படித்தீர்களா? என்னே அற்புதமான அறிவுரைக் கொத்து! புரட்சிக்கவிஞரின் வாடாத பூங்கொத்துகள்!!
- கி.வீரமணி
-விடுதலை,29.5.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக