இன்று உலக இதயப் பாதுகாப்பு நாள்!
இது ஒரு வரலாற்றில் அதன் தேவையை, முக்கியத்துவத்தை வலி யுறுத்த ஒரு பிரச்சார நாள்.
மற்றபடி என்றும் இதயப் பாதுகாப்பு என்பது எல்லோருக்கும் எந்த நாளும் இன்றியமையாத ஒன்றல்லவா?
அண்மைக் காலத்தில் பல ஆண்டு களுக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு. 25, 30 வயதுள்ள இளைஞர் களுக்குக்கூட இதய நோய் தாக்குதல், மாரடைப்பு மரணங்கள் ஏற்படுவது அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உரியதாக உள்ளது!
அதற்குரிய காரணங்கள் என்ன வென்று ஆராய்ந்து மருத்துவர்களும், நல்வாழ்வத் துறை விற்பன்னர்களும் கூறும் விளக்கம்:
இளைஞர்கள் பலரும் வாழும் இன் றைய நவீன வாழ்க்கை முறையே யாகும் சதா உட்கார்ந்து கொண்டு மணிக்கணக்கில் டி.வி. என்ற தொ(ல்)லைக் காட்சியில், திளைத்து படுக்கை உருளைக்கிழங்குகளாக இருப்பது பல மணி நேரம் இணையத்தி லும் - கைத் தொலைப்பேசியிலும் மூழ்கி இருப்பது, எல்லாவற்றையும் விட மோசம் - இந்த வேக உணவுகள் என்ற கொழுப்புகளையும், கேடுகளை யும் அவர்கள் உடலில் ஏற்றும் மோசமான ரசாயனக் கலவைகளைக் கொண்ட சுவைமிக்க (விலை அதிகம் - என்றாலும்) சாப்பிடும் உணவு - பிட்சா, பர்கர், குடிக்கும் பானங்களோ பெப்சி கோலா,7up - இப்படி உடலுக்குக் கேடு செய்யும் ஆட்கொல்லி திட, திரவ உணவுகள் ஆகும்!
முன்புபோல கால்பந்து, சடுகுடு என்ற கபாடி, கைப்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி போன்றவைகளின் முக்கியத்துவத்தைக் குறைத்து, சோம்பேறி விளையாட்டு - இங்கிலாந்து நாட்டில் சில மாதங்களே வரும் சூரிய வெளிச்சத்தில் நளினிமாக மகிழ, 11 பேர்கள் கொண்ட விளையாட் டான கிரிக்கெட் போதை கிராமத்து இளைஞர்கள் மத்தியில்கூட பரவியுள்ள கொடுமை!
அதன்மீது நடக்கும் சூதாட்டக் கொள்ளை வியாபாரம் என்ற ஒழுக்கக் கேடுகளில் பெரும் பெரும் அரசியல் தலைகளுக்கெல்லாம் பங்கு என்ற தொத்து நோய் - இத்தியாதி! இத்தியாதி!
திரைப்படங்கள், சின்னத்திரைகளைப் பார்த்து, புகைபிடித்தல், மது குடித்தல், இப்படி இதயத்தை மெல்லக் கொல்லும் நச்சுகள்! நாளும் இளைஞர்கள் மத்தியில் பரவி வருகின்றன.
பொது இடங்களில், அலுவலகங்களில் புகைபிடிப்பது பெரிதும் குறைந்துள்ளது என்றாலும்கூட இன்னமும், இந்த பழக் கங்கள் தொலைந்து விடாத நிலைதான் தொடருகிறது!
உடற்பயிற்சி, நடைப்பயிற்சி என்பது வெகுவாகக் குறைந்து விட்டது. சைக்கிள்களைப் பயன்படுத்துவது பெரிதும் காணாமல் போய் விட்டது!
சிலர் சின்னச்சின்ன, அலட்சியப் படுத்தப்பட வேண்டிய செய்திகளை மேல் போட்டுக் கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாகுவதும் ஒரு முக்கியக் காரணம் அதையும் தவிர்த்தல் அவசியம்.
அய்ரோப்பாவில், நெதர்லாந்து நாட்டில் சைக்கிள்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.
சீனாவில் - பீகிங் போன்ற தலைநகர் பகுதியிலேயே பெரிதும் பயன்படுத்துகின்றனர் சைக்கிள்களை.
இப்பழக்கத்தை நம் பொது நல நிறுவனங்களும், தலைவர்களும் வற்புறுத்த வேண்டும். சாலைகளில் சைக்கிள்களுக்கென, நடைமேடை போலத் தனியே உருவாக்கினால் அது அவர்களுக்கும் பாதுகாப்பு மற்ற வாகன ஒட்டிகளுக்கும் தொல்லை - விபத்து ஏற்படுத்தாமல் காப்பாற்றிட உதவக் கூடும்.
ஒவ்வொரு கல்வி நிலையத்திலும் (பிளஸ் 2) முதல் கல்லூரி பல்கலைக் கழக வகுப்புகள்வரை ஆண்டு தோறும் மாணவர்களுக்குக் கட்டாய மருத்துவப் பரிசோதனை (Compulsory Medical Checkup) செய்து அறிக்கையை ஆவணப்படுத்தினால் நல்லது!
வருமுன்னர் காப்பது நல்லது என்பதால், பல வகையான இதய நோய் - மாரடைப்பு, - இவைகளைப் பற்றி பெரிய மருத்துவர்கள் அவ்வப் போது விளக்குவதால் அதைத் தவிர்த்து, பொதுவாக எழுதியுள்ளேன்.
-விடுதலை,29.9.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக