பக்கங்கள்

திங்கள், 9 ஜனவரி, 2017

உங்கள் எதிரிகளை அழிக்க இதோ ஒரு வேடிக்கையான வழி!


நம்மில் பலரும் ஏதாவது முக்கிய முடிவுகள் எடுக்கும் முன்பு மிக மிக வேகமாக, அளவுக்கு அதிகமான - ஆராய்ச்சியில் ஈடுபட்டு, அதற்காக ஏதோ ஒரு பி.எச்.டி., (Ph.D.) ஆய்வே செய்வது போல் முடிவு எடுத்து, மாதக் கணக்கில் நேரம், நினைப்பு, உழைப்பு, (பணம்) நிதி முதலியவைகளை தேவைக்கு அதிகமாகவே செலவழிப் பார்கள்.

எடுத்துக்காட்டாக, தங்களது பிள்ளை உயர்நிலை மேனிலைப்பள்ளி மட்டத்தில் படிப்பை, முடித்து (அதற்கும் Graduation) பட்டம் பெறுதல் என்பது போன்ற நிகழ்ச்சி வைத்துத்தான் அமெரிக்காவில் பள்ளிகளிலிருந்து வெளியே (பாஸ் செய்த பிறகு) செல் லும் மாணவர்களை ஊக்கப்படுத்த, பெற்றோர்கள், நண்பர்கள் முன்னி லையில் நடத்திடுவர்.

இது ஒருபுறம் இருந்தாலும் அடுத்து பிள்ளைகளை எந்த மேல் படிப்பு கல்லூரிக்கு பல்கலைக் கழகத்திற்கு அனுப்புதல் என்று முடிவு எடுப்ப தற்குள் தலையைப் பிய்த்துக் கொள் ளுவது அங்கே சர்வ சாதாரணம்! (பெற்றோருக்கு பொறுப்பு இருப்பதால் தான் அந்தக் கவலை; மற்றும் நிதிச் சுமைப் பொறுப்பும் உள்ளதே) அதற்காக பல மாத இடைவெளியில் ஊண் -  உறக்கம் இன்றிக்கூட பலரையும் அணுகி அறிவுரை - ஆலோசனை கேட்பார்கள். நம் நாட்டில் அவ்வளவு தூரம் ஆராய் வார்களா என்றால் அதில் சில பெற்றோர்கள் 75 அல்லது 80 விழுக்காடு கவலை எடுத்துக் கொள்ளும் நிலை உண்டு.

கல்லூரி, பல்கலைக் கழகங்களில் சேரத்தான் என்பது ஒரு உதாரணத்திற்குச் சொல்லப்பட்டதே தவிர வேறில்லை!

அதே போன்று நம் நாட்டில் பெண் பார்ப்பதற்கு - மகளிர் பலர் புடவை, நகைக் கடைகளில் சென்று பொருள் வாங்கு வதிலும் சரி, ஆராய்ச்சி மேல் ஆராய்ச்சி - கேள்வி மேல் கேள்வி, பல புடவைகளை சளைக்காமல் சர்வே செய்தல் இவைகள் எல்லாம் உண்டு; காரணம் பணம் அதிகம் கொடுத்து வாங்கும்போது; கவலையோடு ஆராய வேண்டாமா?

(மருந்துகளை டாக்டர்கள் பரிந் துரைத்த நிலையில் அவசரமாகச் சீட்டைக் கொடுத்து வாங்கிடும் இவர்கள் அதன்  காலக் கெடுவைப்பற்றிக்கூட (Expiry Date) 
கவனித்து ஆராய்வதில்லை. சில நேரங்களில் காலாவதியான மருந்து களைக்கூட கவனிக்காமலே உட் கொள் ளவும் செய்கின்றனர்!)

அதிக தகவல்களைச் சேர்த்து, மாய்ந்து மாய்ந்து அதன் பிறகே இறுதி முடிவு என்று செயல்படும் வழமை உள்ளவர்கள் மனோ தத்துவ ரீதியில் ‘Information Bias’  தகவல் தேடிடும் சார்பு நிலை மையாளர் என்றே பெயரிடப்பட்டுள்ளனர்!

தேவைக்கு அதிகமான - களைப்பும், சோர்வும் அடையும் அளவு மண்டை யைக் குடைந்து கொள்ளுதல் பற்றி உளவியலாளர்கள் கூறும்போது,

உங்கள் எதிரிகளைத் தோற்கடிக்க நீங்கள் வேறு எதுவும் செய்ய வேண்டாம்; மிக அதிகமான தகவல்களை அவர்களுக் குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருங்கள் குழப்பத்தில் ஊறியே அவர்கள் தோற்று விடுவார்கள் என்று வேடிக்கை யாகச் சொல்கிறார்கள். அதற்குத்தான் சதா தகவல் தேடும் சார்பாளர்களாக அவர்கள் அமர்ந்து எளிதில் முடிவு எடுக்க வேண்டிய முடிவுகளைக்கூட, மண்டை பிளந்து, ‘Cerebral  Hemorrhage’ மூளையே ரத்தக் கொதிப்பின் உச்சத் திற்குச் சென்று, மூளை வெடித்தது மாதிரி ரத்தம் வழியும் அவலத்திற்கு சென்று விடுகிறார்கள் என்று பரிதாபப்பட்டுக் கூறுகிறார்கள்!

எனவே, எண்ணித் துணியுங்கள்; என்பதன் முழுப் பொருள் புரிகிறதா?

தேவைக்கேற்ற (ஓரளவு) தகவல் களை வைத்தே முடிவுக்கு வாருங்கள் - பிரச்சினைகளைச் சந்தித்து தீர்வு காணுங்கள்.

அதற்காக அளவு மிஞ்சிய தகவல் திரட்டி பயனற்றுப் போகாதீர்கள் என்பது நல்ல உளவியல் சார்ந்த அறிவுரைதானே!

என்ன பின்பற்றுவீர்களா? எதிரி களை அடக்க ஏராள தகவல் களைத் தீனியாகத் தந்தால் அது செரிக்குமா? செரிமான மாகாமல் வயிற்றில் புரட்சி உண்டாக்கி சோதனைக்கும் சோர்வுக் கும் ஆளாக்கும் அல்லவா அது போலத் தான்.

அளவுக்கு அதிகமானால் அமிர்த மும் நஞ்சு  - என்பதற்கு இதனையும் ஒரு புது விளக்கமாக -  உளவியல் ரீதியில் எடுத்துக்கொண்டு, ஒரு குறிப் பிட்ட அளவிலேயே தெளிவான, குழப்பமில்லாத முடிவு எடுங்கள் - வெற்றி நிச்சயம்!

- கி.வீரமணி - வாழ்வியல் சிந்தனைகள்

-விடுதலை,27.6.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக