பக்கங்கள்

வெள்ளி, 4 நவம்பர், 2016

பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியுமா?

நாம் வாழும் சமூகத்தை உற்று நோக்கி ஆராயும்போது சில விசித்திர மான மனிதர்களையும் நாம் பார்க்க நேரிடுகிறது!

பெரும் பதவியாளர்களாக, தொழில் அதிபர்களாக,பணக்காரர்களாக,பெரி தும்விளம்பரமானஅரசியல்தலை வர்களாகவும்கூடஅவர்கள்உயர்ந்தும் கூட அவர்களுக்கு, ‘பரமபத விளை யாட்டில்’ ஏணியில் ஏறிக்கொண்டே போகும்போது, ‘பாம்பு கடித்து’ சர்ரென்று கீழே வந்து விடுவது போன்ற நிலை திடீரென்று நிகழ்ந்து விடுவதையும் பார்க்கிறோம். உலகம் முழுவதும் இக்காட்சி மிக சர்வசாதாரணமாகக் காணப்படுகிறது!

அவர்களது திடீர் வீழ்ச்சிகளுக்கும், கீழிறக்கத்திற்கும் காரணம் வேறு யாருமல்ல, அவர்களேதான். வியப் படைகிறீர்களா? விடை இதோ:

அவ்வளவுஉயர்ந்தவர்கள்,செல் வத்தில் புரளுகிறவர்கள், புகழ் போதையில் தள்ளாடுபவர்கள் தங் களின் வாழ்க்கையின் கொள்கைத் திட்டமாக ஒன்றை நம்பியதும் அதன் படி செயல்பட்டதும்தான் முழு முதற் காரணம்.

தம்மிடம் உள்ள பணத்தினால் எவரையும் விலைக்கு வாங்கலாம்;

எதையும் சாதித்து அடைந்து விடலாம்; எனவே யாரையும் மதிக்க வேண்டியதில்லை. பணமிருந்தால் எல்லோரும் ‘நாய்க்குட்டி’ ஓடி வரு வதைப்போல, நம்மை நோக்கி ஓடி வருவார்கள் என்ற மமதையும், அகங் காரமுமே அவர்களை நடத்திச் செல்லும் நிலை ஏற்படுகிறது!

பணத்தால் சில காரியங்களைச் சாதிக்கலாம் என்பது உண்மைதான்; அதற்கு ஓர் எல்லை உண்டு; ஆனால், அத்தகைய மனிதர்கள் அப்படி நினைக்காமல், ‘‘ஒவ்வொரு மனிதனுக்கும் ஓர் விலையுண்டு.’’ எனவே, அவர்களை எளிதில் நாம் வளைத்துப் போட்டு விலைக்கு வாங்கி அடிமையாக்கிக் கொள்ளலாம்! என்று கருதுகின்றனர்.

பணம் சேருவதில் உள்ள தவிர்க்க முடியாத தீமையே - அதனுடன் பெரிதும் இணைந்தே உள்ள தீமையே! அது நமக்கு எஜமானன் ஆகும்போதுதான்!

அது  நமது ‘வேலைக்காரனாக’ இருக் கும்வரை நாம் ‘நாமாக’ - ‘மனிதத்துடன்’ இருப்போம்.

ணீஆனால், அது நம்மை ஆட்டிப் படைக்கும் போதையாகி விட்டால் நமது வீழ்ச்சி உறுதி என்பதை தேவைக்குமேல் - குறுக்கு வழிகளில் பணத்தைச் சேர்த்து, வாழ்க்கையை ரணமாக்கி அறுவடை செய்து ஆபத்துக்குள்ளாவோர் யோசிக்க வேண்டும்!

பணம் - சில பொருள்களை வாங்கித் தரும்! சபலமுள்ள மனிதர்களையும் கூட வாங்கித் தரும். ஆனால், அது பொது அறிவை(Common Sense) வாங்கித் தருமா?

நமது ஆயுளின் நீட்டத்தை (Longivity) பெற்றுத்தருமா?

நம்பிக்கைக்குரியவர்இவர்என்று பிறர் நம்மீது வைக்கும் அபார நன்னம் பிக்கையை உருவாக்கித் தர உதவுமா?

உண்மையான கைம்மாறு கருதாத அன்பினை - பாசத்தைப் பெற்றுத் தருமா?

அறிவு, நுண்ணறிவு, பகுத்தறிவு, ஒத்தறிவு (Empathy) இவைகளை கரை உடைத்து ஓடும் பணம் பெற்றுத்தருமா?

மகிழ்ச்சியை, பணத்தால் வாங்கிக் குவிக்க முடியுமா?

சுயநலமின்மை,பொதுநலவேட்கை இவைகளை - பணப் பெருக்கத்தின்மூலம் பெற்றுவிட முடியுமா?

அறிவை, ஆற்றலை பணத்தால் சம்பாதித்துத் தர முடியுமா?

வேண்டுமானால் அறிவு பலத்தால் பணத்தைப் பெற்று அங்கீகாரம் பெறக்கூடும்; எடுத்துக்காட்டு நோபல் பரிசு பெறும் உலக அறிவாளிகள் - சாதனையாளர்கள்!

பணத்தால் பெரிய வீடுகள் (அம்பானி, பில்கேட்ஸ் போன்றவர் களின்) அதிநவீன பன்மாடி - தளம், கற்பனைகளைத் தாண்டி நவீன வசதி களைக் கொண்டவைகள் அமைக் கலாம்!

அதிசய, நல்ல வீடுகளாக அவை களை உருவாக்கி, உலகத்தைத் திரும்பிப் பார்க்கச் செய்யலாம்!

மகிழ்ச்சி நிறைந்த நல்ல இல்லங் களாகி குடும்ப உறவை (Happy Home) அப்பணத்தால் நிரந்தரமாக அனுபவிக்கும் நிலையை பெற்றுத்தர முடியுமா?

அறிவு, ஆய்வு, புத்தி கூர்மை, எதையும் உருவாக்கும் கற்பனா சக்தி, ஆக்கச் சிந்தனைகளின் கருவூலத்தை, பணக்கருவூலம் உருவாக்கித் தருமா?

எவ்வளவு விலை உயர்ந்த காரில் ஃபெராரி  (Ferrari) பயணம் செய்தாலும், அதை விட்டு கீழிறங்கி, வீட்டில்தானே படுத்து உறங்கப் போகிறோம்?

விலை அதிகமான காரில் செல் லும்போது - அதைப் பாதுகாக்கும் பத்திரப்படுத்தும் கவலையையும் நாம் விலை கொடுத்து வாங்குகிறோமா இல்லையா?

எனவே, பணம் என்பது உலகிய லுக்கு, வாழ்க்கையின் தேவைக்கு அவசியம்தான். பொருளிலார்க்கு இவ் வுலகம் இல்லைதான்; அதற்காக பணமே எல்லாமும் ஆனால், குணம் - நோய்க் குணமாகத்தானே ஆகும்!

அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தும் நஞ்சாவதுபோல், பணமும் எல்லை தாண்டினால் துன்பத்தைத் தொடர் கதையாக்கி, இன்பத்தை இழக்கச் செய்யும் விஷமாகவே  மாறிவிடும் என்பதை குறுக்கு வழியில் பணம் சேர்ப்போர் - ஆடம்பரப் பிரியர்களான ‘டம்பாச்சாரிகள்’ உணருவார்களாக!

 

- கி.வீரமணி

-விடுதலை,4.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக