பக்கங்கள்

வெள்ளி, 25 நவம்பர், 2016

அறிவியல் சிந்தனைகள் 5. நடைப் பயிற்சி


உடலுக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் உடற்பயிற்சியும்கூட!

உண்ணாமல் வாழமுடியாது என்று எப்படி நினைக்கிறோமோ, அதேபோல், உடற்பயிற்சி இல்லாமல் நலவாழ்வுக்கு வாய்ப்பில்லை என்பதை நாம் அனை வரும் உணரவேண்டும்.

அவசியம் என்ற உணர்வு நமக்குள் தோன்றின், அதற்கான நேரம் தானே கிடைத்துவிடும்.

எல்லா வயதினரும் - குழந்தை கள், இளைஞர்கள் முதல் வயோதி கர்கள்வரை - இருபாலரும் அன்றா டம் சிறு சிறு உடற்பயிற்சிகளில் அவரவர் உடல்தன்மை, வயது - இவைகளுக்கேற்ப, தக்க ஆசிரியர், மருத்துவர்களைஅணுகியோ,இதற் கான நூல்கள், வீடியோ முதலிய வைகளைத் துணைக் கொண்டோ தேர்வுசெய்துகொள்ளல் நன்று.

எல்லா உடற்பயிற்சிகளிலும் எளி யது- ஆபத்து இல்லாதது- எவராலும் செய்துமுடிக்கக்கூடியது - நாள்தோறும் நடைப் பயிற்சியேயாகும் (வாக்கிங்).

வாரம் 3 அல்லது 4 நாள்களாவது குறைந்தபட்சம் நடைப் பயிற்சி எனும் உடற்பயிற்சியை - சுமார் அரை மணிநேரம் ஒதுக்கிச் செய்தாலும்கூட நல்ல பயன் ஏற்படும்.

ரத்த ஓட்டம், நல்ல மூச்சுப் பயிற்சி, கொழுப்புச் சத்து சேராமல் செலவழித்தல், இனிப்பு- சர்க்கரைச் சத்து கூடுதலாகாமல் கரைய வைத்தல் எல்லாம் அன்றாட நடைப் பயிற்சி மூலம் சாத்தியமாகும்.

இரத்தக் கொதிப்பு,  நீரிழிவு,  இருதய நோய் இவைகளைக் கட்டுப்படுத்த இப்பயிற்சி மிகவும் நல்லது!  எளிதானது. இயற்கைச் சூழலில் நடப்பதன்மூலம் மன அழுத்தம் (ஸ்ட்ரெஸ்) நீங்க வழிவகை ஏற்படும்.

அதிகாலை எழுந்து நடப்போம்; அன்றாடம் நடப்போம்; நன்றாக நடப்போம்.

நல்ல உடல்நிலைக்கு இவ்வளவு எளிதான வாய்ப்பு இருக்கும்போது ஏனோ அதனை நழுவவிட வேண்டும் மருத்துவச் செலவும், மன சஞ்சலமும் இதனால் தவிர்க்கப்படுமே!

நடக்கத் துவங்குங்கள்! நன்றாக இருங்கள்! சரிதானே!
-விடுதலை,24.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக