பக்கங்கள்

திங்கள், 21 நவம்பர், 2016

அறிவியல் சிந்தனைகள் 2. உழைப்பும் - உயிர்ப்பும்! (Hard Work and Longevity)

கடின உழைப்பு என்பது மனித குல வளர்ச்சிக்கும், மக்களின் முன் னேற்றத்துக்கும் மட்டும் முக்கியமல்ல; உயிர்ப்பு நிலை - ஆயுள் - பெருக் கத்துக்குக்கூட அவசியமான ஒன்று என்பது உயிரியல் தத்துவக் கோட்பாடு!

கடினஉழைப்பாளிகளின்வாழ்வு - ஓய்வு, சோம்பல், உல்லாசம் என்பதில் திளைத்தவர்களின் வாழ்வு - ஆகிய இரண்டையும் ஒப்பிட்டால் அதிக காலம் வாழும் வாய்ப்பு, முன்னவருக்கே உண்டு என்று கற்றுத் தருகிறது அறி வியல்!

கடினமாக உழைப்பவர்களே மாமனிதர்களாக உயர்கிறார்கள் என் பது உலகியல் உண்மை. வேலை செய்யாமல், ஓய்வில் அதிகமாக ஈடுபாடு கொண்டவர்கள்-மீண்டும் திரும்பி வர முடியாத, விலை மதிப்பற்ற காலத்தை மட்டும் அவர்கள் கொல்லுகிறார்கள் என்றே பொருள்.

வேலை ஒன்றும் செய்யாமல் சும்மா இருப்பதைவிட மிகப் பெரிய கொடூரமான தண்டனை மனிதர் களுக்கு வேறு எதுவுமே இருக்க முடியாது.

உயிரியல்ஆராய்ச்சிப்படி,அதிக வேலைப்பளு என்பதால் செத்தவர்கள் எவரும் இலர். மாறாக, சோம்பல் வாழ்வால் மாண்டவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதிர்ச்சியாக இருக்கிறதா? இது அறிவியல் அனுபவம் தரும் புள்ளி விவரம்!

செல்கள் வளர்ச்சிக்குப் பணிகள் அவசியம்

நமது உடலில் உள்ள பல்வேறு உயிர் அணுக்கள் (செல்கள்) சரியான வளர்ச்சி பெற்று, நலத்துடன் வளர, அவைகளுக்குச் செயல்பாடுகளும், பணிகளும் முக்கியம் ஆகும்.

இயந்திரமும் உழைக்கிறது. மனித னும் உழைக்கிறான். எனினும் இரண்டு உழைப்பிலும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு.

இயந்திரங்களைப் பொறுத்தவரை, உழைக்க உழைக்க அதன் பாகங்கள் தேய்மானத்துக்கு ஆளாகி, கடைசியில் பயன்பட முடியாத அளவுக்குக் கழிக்கப்படும் நிலைக்கு அவைகள் செல்லுகின்றன.

ஆனால் ‘மனித உறுப்புகள்’ ஆகிய இயந்திரமோ (Biological Machine) உழைக்க உழைக்க மேலும் வளர்ச்சியும், பயனுறு தன்மையும் அடைகிறது; செம் மைப்பட்டுச் செழுமையான வாழ்வுக்கு வழிகோலுகிறது.

உயிரணுக்களான இந்த “செல்கள்” (Cells) உழைக்க உழைக்க ஒருவகை ரசாயனக் கலவையை உண்டாக்கி உடலில் மாறுதலை உருவாக்குகின்றன. (இதில் கடவுள், ஆண்டவன் - என்பவர்களுக்கு வேலையே இல்லை!)

இந்தச் சக்தியை-மின் சக் தியை “பைசோ எலக்டிரிசிடி”

(Piezo Electricity) என்று உடலியல் வல்லுநர்கள் அழைக்கிறார்கள்.

பைசோ மின்சக்தி

படிகங்களை (Crystals) பயன்படுத்தி, பலபுதியஇயந்திரங்களைக்கொண்டு அறிவியல்அறிஞர்கள்இந்த‘பைசோ எலக்டிரிசிடி’ மூலம் ஒலி அசைவு களை மேலும் பல மடங்காக்கி ஒலிக்கச்செய்துசாதனைசெய்கின் றனர்.(இதேபடிகங்களைஉயர்தர கைக் கடிகாரங்களிலும் பயன்படுத்து கின்றனர்).

மனித வாழ்வு வளர்ச்சிக்கு இந்த ‘பைசோ எலக்டிரிசிடி’ சக்தி மிகவும் அவசியமான ஒன்றாகும்.

சுறுசுறுப்பான வேலை, கடுமையான உடற்பயிற்சி - ஆகியவைகளுக்குத் தேவையான சக்தி, இந்த பைசோ மின்னாற்றல் மூலமே, மனித உடலுக்குக் கிடைக்கிறது

இந்த உடலியல் ‘செல்களை'ப் பொறுத்து மற்றொரு முக்கிய தகவல்:

இவைஒருவரிசைமுறைப்பழக் கமுடையவை (Rhythmical Conscious). அடிக்கடி மாற்றத்தினை அவை விரும்புவதில்லை. அதிலும் திடீர் மாற்றத்தினையும் அவ்வளவு எளி தாக அவைகளால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை! பெரும் மாறுதல்களை நமது வாழ்க்கை முறையில் நாம் மேற்கொள்ளும்போது நெருக்கடி ஏற்படுவதும் தவிர்க்க இயலாத ஒன்று.

உடலைப்பற்றி விவரிக்கும்போது - நமது உடலாகிய கடிகாரம்(Biological Clock) சிலவற்றிற்கு முறையான வரி சையில் பழகிவிட்டால், அவற்றை அதுவே ஒரு தானியங்கி போல் செய்யப் பழகி விடுகிறது. இந்த நிலையில் அரசுப் பணியிலிருந்தோ அல்லது வேறு நிரந்தர வருமானப் பிரிவுப் பணியிலிருந்தோ, ‘ரிட்டயராகும்‘ சிலர், ஓய்வுறுவதால் உண்டாகும், திடீர் மாற்றத்தினை உட னடியாக இசைந்தேற்றுக் கொள்ள இயலாமற்போய் இறப்புக்குக்கூட இலக்காக நேரிடுகிறது. சில ஆண்டு களிலேயே மரணத்திற்கு ஆளாவது இதனால்தான். பணி ஓய்வு பெற்ற வர்களில் சிலருக்கு அதற்கு முன் வந்திராத நோய்களும் திடீரென்று வரும் நிலையும் கூட ஏற்படுகிறது.

ஏனெனில், இந்த வரிசைமுறை (Rhythm) திடீரென்று மாறிவிட்டதை அவர்களது உடல் செல்களால் செரி மானம் செய்து, புதிய மாறுதலுக்கேற்பச் சரி செய்துகொள்ள எளிதில் முடிவ தில்லை!

(1999ஆம் ஆண்டு பெரியார் பகுத்தறிவாளர் நாள் குறிப்பு).

தந்தை பெரியார் போன்றவர்கள் மூளை உழைப்பை மேற்கொண்டது-ஏன்?

மன அழுத்தம் (Stress) ஏற் படும்போதோ,உயிரணுக்கள் அதற்கு உடன்பட்டு வேலை செய்ய மறுக்கின்றன. ஓரளவு போரிட்டுப் பார்க்கின்றன. சில நேரங்களில் தோற் றுப்போய் விடுகின்றன!

மகிழ்ச்சியோடு, மனச்சுமை, அழுத் தம், உளைச்சல் இல்லாத ஒருவர் - ஒரு நாளில் 20 மணி நேரம் உழைத்தாலும்கூட அவருக்குச் சோர்வோ, களைப்போ ஏற்படாததற்குக் காரணம், இந்த உடல் செல்கள் அப்போது பிரமாதமான ஒத்துழைப்பைத் தருவதுதான்!

தந்தை பெரியாரும், தரணி புகழ் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் போன்றவர்களும் 18 மணி நேரத்திற்குமேல்,களைப்போ, சோர்வோ இன்றி மூளை உழைப்பைச் செய்தனர் என்பது எதனால் என்பது இப்போது புரிகிறதா?

எனவே, வேலை என்பது கால அளவினால் சோர்வை ஒரு போதும் ஏற்படுத்தாது. விரும்பாத வேலை, மன உளைச்சல், அழுத்தம் - இவைகளை மீறி நமக்கு நாமே திணித்துக்கொண்டு செய்யும் வேலைதான் நமக்குச் சோர் வையும், களைப்பினையும் தருகிறது.

உழைப்பை நிறுத்தக் கூடாது

வேலை செய்யப் பயப்படும் நிலையோ(WorkPhobia) சோம் பலோஇருப்பின்அதுமனிதர்க ளுக்கு டி.பி. மற்றும் புற்றுநோயை விட மோசமானதாகும். உயிர்க்கொல் லியும்கூட! இதை அனைவரும் உணர வேண்டும்.

‘ரிட்டயரான’-ஓய்வுபெற்றவர் களும், முதுகுடிமக்களும் (Senior Citizens) 
ஒன்றைத் தத்தம் மனதில் பதியவைத்துக் கொள்ளவேண்டும்.

எந்நிலையிலும் உழைப்பை நிறுத் தக்கூடாது என்பதே அவ்வுண்மை.

உடலில் உள்ள (செல்களை) உயிர் அணுக்களைப் பட்டினி போடாதீர்! பட்டினி போட்டால், பிறகு அது அதிகப் பசியால் உடலின் உறுப்புகளை - உழைப்புக்குப் பதிலாக - தீனியாக எடுத்துக்கொண்டு தின்று தீர்த்து, நம்மையும் தீர்த்துவிடும்! உடல் உழைப்பாளர்களானால் உடலால் உழைப்பதை, வேறு எவ்வகையிலாவது (ஒய்வுக்குப்பின்னர்) தொடருங்கள்! மூளை உழைப்பாளிகள் அதற்கேற்ற பணியைத் தேடுங்கள்!

அதற்காகத்தான் வெளிநாடுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம்தொண்டறப்பணியில்ஈடு பட்டுஎப்போதும்தங்களைசுறு சுறுப்புள்ளவர்களாகவும், சமூகத்திற் குப் பயன்படுபவர்களாகவும் ஆக்கிக் கொள்ளுகிறார்கள்! அதை நாம் பின்பற்றலாமே!

மூளை முதுமை அடைவதில்லை

உடலுக்கு முதுமை (Ageing) தவிர்க்க இயலாதது. இதுபற்றி யாரும் கவலைப்படுவதில் பொருள் இல்லை. 21 ஆவது நூற்றாண்டில் இதற்கும்கூட மாற்றுக் கண்டுபிடிக்கக்கூடும்) பிரபல மூளை சம்பந்தப்பட்ட அறிஞர் சார்லஸ் ‘ஷெவிங்ஸ்டன்’ என்பவர், மூளையைப் பற்றிக் கூறும்போது “மூளை எப்போதும் முதுமை அடைவதில்லை” என்று கூறுகிறார்!

எனவே, வயது காரணமாக முதுமை அடைகிறோமோ என்று எவரும் கவலைப்படாமல், மூளை அணுக்கள் மிகவும் இளமை வேகத்துடனும், சுறுசுறுப்புடனும் இயங்கும் வகையில், அதற்குரிய வேலையைக் கொடுத்துக் கொண்டேயிருங்கள். எப்போதும் இளமை பூத்துக் குலுங்கும் உள்ளத் தோடு அமைந்த புதுவாழ்வு பெறு வீர்கள்!

தந்தை பெரியார் அவர்கள் உடல் உபாதைகளையும் மீறி - எழுதிக் குவித்தார்! பேசிச் சாதனை புரிந்தார்! போராட்டக் களத்தில் குதிக்க அஞ்சவே இல்லை - இவைகள் அவருக்கு எப்படி முடிந்தன?

வயதில், அறிவில் முதியார்; வாய் மைப் போருக்கு என்றும் இளையாராக அறிவு ஆசானால் எப்படித் திகழ முடிந்தது?

இந்த நிலையில் அவர் வேலை கொடுத்ததினால்தானே முடிந்தது! ஓய்வு எனக்கு நோய் என்றாரே! அதன் தத்துவம் புரிகிறதா? அது அறிவியல் அடிப்படையில் அமைந்த தத்துவம்; வெறும் பேச்சல்ல!

ஆக்க ரீதியான, உருவாக்க (Creative) சிந்தனைப் பணியை மூளை அணுக்களுக்கு அளித்து வாருங்கள்! அதற்காக வரைமுறையற்றுப் பணி யாற்றவேண்டும் என்று தவறாகப் புரிந்து கொள்ளவேண்டாம்|

பணிகளை ஒழுங்குபடுத்தி, மன உளைச்சல், மன அழுத்தம், சுமை உணர்வு (Stress and Strain) இன்றிப் பணிகளை அமைத்து, உழைத்துப் பழகுங்கள்.

ஆசையோடும்! ஆர்வத்தோடும்! ஈடுபாட்டோடும், ஏற்கும் எப்பணியாலும் நம் வாழ்வுக்கு முடிவு வராது. மாறாக அந்த உற்சாகம், ஊக்கம் நம் வாழ்வின் உயிர்ப்பை நீட்டிக்கொண்டே போகும்.

‘குடி செய்வார்க்கில்லை பருவம்‘ என்பது பொது வாழ்வுக்காரர்களுக்கு நல்ல அறிவுரை.

“மூட்டை தூக்கும்போது நான் பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே தவிர, அவமான உணர்வினால் ஒரு போதும் கஷ்டப்பட்டதில்லை” என்று கூறிய தந்தை பெரியார் அவர்களது அனுபவ மொழி - இந்த அறிவியல் கூற்றை அகிலத்திற்கு உணர்த்தும் அரிய செய்தியல்லவா?

எனவே, உழைக்கத் தயங்காதீர்!

உழைப்பு உயர்வு தரும் என்பது போலவே, உழைப்பு உயிர்ப்பை (ஆயுளை)  நீட்டும் என்பதும் அறிவியல் உண்மையாகும்.
-விடுதலை,21.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக