கடந்த 4.6.2015 அன்று தி.மு.க. பொதுச் செயலாளரும், இனமானப் பேராசிரியரும், தமிழ்நாட்டின் மூத்த சுயமரியாதைக்காரருமான க. அன்பழகனார் அவர்களைச் சந்தித்து நலம் விசாரித்து சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்து விடை பெற்றுக் கொண்டோம்.
என்னுடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பேராசிரியர் மங்கள முருகேசன் ஆகியோரும் உடன் வந்திருந்தனர்.
அப்போது அங்கே, பேராசிரியர் அவர்களது மூத்த மருமகனும், பிரபல இதய நோய் மருத்துவ நிபுணருமான டாக்டர் வி. சொக்கலிங்கம் அவர்களும் அவரது வாழ்விணையர் (பேராசிரி யரின் மூத்த மகள்) டாக்டர் செந் தாமரை அவர்களும் உடன் இருந் தனர்.
டாக்டர் வி. சொக்கலிங்கம், இதயப் பாதுகாப்பு - நலன் பற்றி தொலைக் காட்சிகளிலும் மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளிலும் எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் எடுத்து விளக்கி, இதய நோய் வராமல் தடுக்க வழி முறைகளைச் செய்வதைக் கடமையாக கொண்ட மக்கள் நல மருத்துவர்.
அவர் 2008இல் எழுதி, இதுவரை பதினான்கு பதிப்பாக வெளிவந்த நூல்-
இதயம் காக்க..
இதயம் காக்க..
மாரடைப்பு தடுக்கும் குணப் படுத்தும் வழிமுறைகள்! என்ற மிக அருமையான நலப் பாதுகாப்பு கவசம் போன்ற புத்தகத் தினை எங்களுக்கு அளித்து மகிழ்ந் தார். நன்றியுடன் பெற்றுக் கொண்டேன்.
சிறு குழந்தைகள் எப்படி புது பொம்மையை அவரது பெற்றோர் களோ, நண்பர்களோ வாங்கிக் கொடுத்த பின், உடனடியாக அதனைத் திறந்து பார்த்து மகிழ அவசரப்படு வார்களோ, அதுபோன்ற சுபாவம் - பழக்கம் எனக்குப் புத்தகங்களைப் பொறுத்தவரை நிரம்ப உண்டு!
காரில் ஏறி அமர்ந்து அடையாறு இல்லம் சேருமுன் நான் ஏறத்தாழ பாதி நூலை வேகவேகமாகப் படித்து முடித்தேன்; பெரிதும் சுவைத்தேன். 45 மணித் துளிகள் பறந்தன!
எளிய பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில், அரிய செய்திகளை வினயத் தோடும் விவரங்களோடும் எழுதியுள்ளார் டாக்டர்!
முதல் பகுதி மனமும் இதயமும் என்ற தலைப்பில் பல்வேறு அடிப்படைக் கருத்து விளக்கம். பகுதி 22: மாரடைப்பு, வருமுன் காக்க, வந்த பின் காக்க என்ற பகுதி மிக முக்கியமானதாகும். மாரடைப்பு, மாரடைப்பு வர அபாய காரணங்களும் அதிலிருந்து விடுபடுவ தற்கான வாழ்க்கை முறைகளும், மனதின் போராட்டமும், மனதின் அழுத்தமும், மனதின் வலி, மனப் போராட்டத்தைத் தவிர்க்க கையாளும் வாழ்க்கை முறைகள் என்று துவங்கி சுமார் 30 தலைப்புகளில், வகுப்புப் பாடங்களைப் போன்று, எழுதி மகிழ்ந்தார். மூன்றாம் பகுதி (3): மாரடைப்பு - அவரவர் பார்வையில் எனது அனுபவங் களைப் பகிர்ந்து கொள்ள இப்படி மிகவும் பயனுள்ள முக்கிய தகவல்கள்!
மருத்துவத்தைத் தாண்டி அந்நூலில் டாக்டர் வி. சொக்கலிங்கம் கூறும் சில முக்கிய கவன ஈர்ப்புப் பகுதியை எடுத்துக்காட்டாகத் தர விரும்புகிறோம்.
ஒவ்வொரு சிந்தனைக்கும், செய லுக்கும், நாமே நமக்குத் தடையை விதித்து (Limiting belief) நம்மைச் சிறைப்படுத்தி, நாம் கட்டுண்டு போவதால் (invisible Chains) நம் சக்தியை முழுமையாகப் பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.
உதாரணம்; யானை, குட்டியாக இருக்கும் பொழுது, எங்கும் ஓடாமல் இருக்க ஒரு காலில் சங்கிலியால் கட்டி வைப்பான் - யானைப் பாகன். அதே யானை வளர்ந்த பிறகும், சங்கிலியால் கட்டுண்ட காலை மட்டும் அசைக்கா மலும், மற்ற கால்களை அசைத்துக் கொண்டும் ஒரே இடத்தில் நிற்கும். சிறு வயதில் இருந்தே பதிந்த ஆழ்ந்த எண்ணங்களால் அதன் உண்மைப் பலத்தையும், சக்தியையும் மறந்து, செயற்படும் திறமையற்ற நிலைமையில் இருக்கின்றது.
உண்மையில், காலில் கட்டியுள்ள சங்கிலி அந்த யானைக்கு, ஒரு பொருட்டே இல்லை. இதே நிலை யில் தான், பல மனிதர்கள், சிறு வயதில் தம் மனதில் பதிந்த எண்ணங்களால், மனதளவில், தங்களைத் தாங்களே கட்டிப் போட்டுக் கொண்டு, வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் அடையாமல் இருக் கிறார்கள். இவர்கள் வலது மூளையின் திறனை வளர்த்துக் கொண்டால், கட்டிப் போட்ட மனநிலையில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு வாழ்வில் முன் னேற்றம் காண முடியும்.
உதாரணம்: 1. பள்ளியில் படிக்கும் குழந்தைகளை சிறு வயதில் இருந்தே, நீ உருப்படவே மாட்டாய், எதற்கும் லாயக்கு இல்லை என்று திரும்பத் திரும்பச் சொல்லி, அந்தக் குழந்தை யின் மனதில் அது பதிந்து விடுமா யின், அவன் உண்மையிலேயே உருப்படாமல் போய் விடுவான்.
எரியும் விளக்கிற்கே கூட தூண்டு
கோல் வேண்டும் என்ற நிலையில், அது மனிதனுக்கும் இன்றியமை யாதது அன்றோ!
உதாரணம்: 2 ஜாதகத்தையே முழுமையாக நம்பியவர்களால் தண்ணீரில் தான் உனக்கு கண்டம் உண்டு என்று அடிக்கடி சொல்லிச் சொல்லி, அந்த மாணவன் நீச்சல் அடிக்கும் திறமையையே இழந்து விட்டவனாகிறான்.
அஸ்ட்ராலஜிஸ்ட், நேமாலஜிஸ்ட், நியூமராலஜிஸ்ட், ஜெம்மாலஜிஸ்ட் போன்றவர்களின் கற்பனைக் கூற்றை ஏற்று, அதனால் நம்பிக்கையைப் பெற்று, மன நிம்மதியுடன் வாழ்வதற்கு மறுப்புச் சொல்பவனாக நான் இல்லா விடினும், நீங்கள் இந்த கார்டிய லஜிஸ்டின் கூற்றையும் எண்ணிப் பார்த்து ஏற்று, மனதை மாற்றிக் கொண்டு, தம் நிலை அறிந்து, அமைதியுடனும், மகிழ்ச்சியுடனும், நீண்ட காலம் நலத்துடன் வாழ வழி செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே நான் இவற்றைத் தெரிவித்துள்ளேன்.
- இன்னும் சுவையான, தேவை யான நல வாழ்வுக்கான வழிகாட்டும் அறிவுரைகள், நம் வாழ்வை மகிழ்ச் சிப் பூங்காவாக்கிடக் கூறுகிறார்.
வாங்கிப் படியுங்கள் - இந்நூல் ஒவ்வொரு வீட்டுப் புத்தக அல மாரியிலும் இருக்க வேண்டும் - அதைவிட முக்கியம் படித்து, உள் வாங்கி நடைமுறைப்படுத்த வேண் டும்.
இத்தகைய நல்ல பணி - அவர் அறிவுடைமையைப் பொது உடை மையாக்கிய போற்றத்தக்கப் பணி யாகும்!
வளர்க அவர்தம் தொண்டறம்!
வளர்க அவர்தம் தொண்டறம்!
-விடுதலை,9.6.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக