பசியைப் போக்க நல்ல உணவுகள் தேவைதான்; அவைகள் நமக்கு ஊட்டச் சத்தினைத் தருபவையாக அமைந்தால், அதைவிட உடல்நலம் பெருக்கும் வாய்ப்பு வேறு ஏது?
வாய்க்கு ருசி என்பது பற்பல நேரங் களில் கேடான உணவுகளாகவே அமையும்.
அமெரிக்கத் துரித உணவுகள் (ஃபாஸ்ட் புட்) என்பது எங்கெங்கும் கடைகள் திறக்கப்பட்டு, சுமாரான நடுத்தர வகுப்பினைச் சார்ந்த மாணவ இளைஞர்கள் - இருபாலரும்தான்! இத்த கைய உணவுகளுக்காக நேரத்தை, பொருளை வீணே செலவழிப்பது வேதனையைத்தான் தருகிறது!
வீட்டில் எவ்வளவு நல்ல உணவு, ஆரோக்கியமான வகையில் அவர்களது தாய் - தந்தையர் தந்தாலும், அதனைச் சாப்பிட மறுத்து - பிடிவாதமாக - மேலே சொன்ன துரித உணவுக் கடைகளில் சாப் பிடுவதில்தான் தங்கள் மகிழ்ச்சி - கும்மாளம் அமைந்துள்ளது என்று நினைக்கிறார்கள்!
இது வயிற்றுப் பசியைத் தீர்க்க - ஆனால், நம்முடைய அறிவுப் பசி யினைத் தீர்க்க நாம் நம் கையில் வைத்துள்ள கைத்தொலைப்பேசியைப் பயன்படுத்தினால் எந்த செய்தியை வேண்டுமானாலும் ஓர் நொடிப் பொழுதில் அறிந்துகொள்ளும் வசதியும், வாய்ப்பும் ஏற்பட்டு விட்டது - இப்போது!
‘கூகுள்’ (Google) என்ற ஒரு பேரா சானிடம் எதைக் கேட்டாலும் உடனே விநாடிகளில் அல்லது சில நிமிடங்களில் தருகிறார்!
என்னே, வியக்கத்தக்கச் சாதனை! அத்தோடு தொலைதூரத்தில் உள்ளவர் களிடம் உருவத்தோடு முகம் பார்த்துப் பேசிடும் வசதி இலவசமாகவே கிடைத்து விடுகிறது!
முப்பத்து முக்கோடி ரிஷிகளுக்கு ‘முகநூல்’ தெரியுமா? அறிவு வளர்ச்சிக் காலம் நம் காலம் என்பது நமக்குள்ள பெருமைதான்!
ஆனால், இதைத் தவறாகப் பயன் படுத்தி, முகநூல் போன்ற பகுதிகள் ஆபாசம், அருவருப்பு, கேலி, கிண்டல் இவைகளுக்கான தளம் அது என்று கருதி, பயன்படுத்தும் அடாவடித்தனப்போக்கு எவ்வளவு மோசம் என்பதைப் புரிந்து செயல்படவேண்டும்.
புனேயிலுள்ள ‘பேங்க் ஆஃப் மகா ராஷ்டிரா’ கிளை ஒன்றில் பிரேமலதா ஷிண்டே என்ற பெண் ஒருவர் காசா ளராகப் (காஷியராக) பணியாற்றுகிறார். அவருக்கென தனி ‘‘கவுண்ட்டரை’’ அமைத்துத் தந்துள்ளது அவ்வங்கி.
அவர் படத்தை முகநூலில் போட்டு ‘‘உலகிலேயே மிக வேகமான காசாளர்’’ என்று அவரைக் கேலி செய்து - அதாவது மிகவும் வேகக் குறைவாக - மெதுவாகப் பணியாற்றிடுவதை மறைமுகமாகச் சுட்டி கேலி செய்யும் வகையில் போட்டுள்ளனர்!
இதை ஒருவர் பெண்கள்மீது சிறிதும் ஈவிரக்கம், பச்சாதாபம், மனிதநேயம் இன்றி வெளியிட்டுள்ளார். 49 லட்சம் பேர் பார்த்துள்ளனார்; 1,49,203 பேர் பகிர்ந்து கொண்டுள்ளார்; 72 ஆயிரம் பேர் ‘லைக்‘ செய்துள்ளனர்.
எவ்வளவு பெரிய முட்டாள்தனமான கொடுமை இது?
அந்த அம்மையார் ஏற்கெனவே பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டு, மார டைப்பு ஏற்பட்டு காப்பாற்றப்பட்டு, மீண்ட நிலையில் மீண்டு வந்து இந்தப் பணியை கடமை உணர்வோடு செய்ப வர் என்பதையே மறந்துவிட்டு இப்படி செய்யலாமா? மனநோயாளிகளா அவர்கள்?
அந்த வங்கியே இவர்பால் அனு தாபங்கொண்டு, தனியே இவருக்கு ஒரு சிறப்புக் கவுண்டர் அமைத்துத் தந்து பணிபுரிய வாய்ப்பளித்துள்ளது. இந்த உண்மைகளையெல்லாம் ‘கள பலியாக்கி‘ விட்டு, முகநூலில் இவருடைய படத்தைப் போட்டுக் கேலி, கிண்டல் செய்வது எவ்வளவு அற்பத்தனம்? எத்தகைய கேலிக்கூத்து?
எவரது உடல்நலக் குறைவையும் வைத்து இப்படிக் கேலி, கிண்டல் செய்வது மனிதநேயத்திற்கு முற்றிலும் முரணான‘‘விஞ்ஞானபூர்வகாட்டு மிராண்டிமனப்பான்மை!’’எவ்வளவு நல்ல அறிவியல் சாதனமும் பயன்படுத் தப்படுவதைப் பொறுத்தே அது மதிப் பையும், மரியாதையையும் பெறுகிறது!
மற்றவர்களை சிரிக்க வைக்க, நாம் உலகின் சிரிப்புக்குரியவராக கீழிறக்கம் ஆகலாமா?
நல்லோர் சிந்திக்கட்டும்!!’
-விடுதலை,3.11.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக