நீங்கள் பிறரை எடை போட்டுப் பார்க்கும் முன்பு, உங்களை எடை போட்டுப் பார்க்கத் தவறாதீர்கள் - எல்லா வகையிலும்!
குறிப்பாக, உடல் எடையும் உள்ள எடையைப் போலவே முக்கியம்! ஒரு வேறுபாடு - குறிப்பிட்ட காலத்திற்குப் பின்பு வயது ஏற, ஏற உடல் எடை குறைய வேண்டும் - கூடக் கூடாது.
உள்ளத்தின் எடை, கூடவேண்டும்; உயரவேண்டும். அனுபவம் உள் ளத்தை உயர்த்திட ‘எடையைக்‘ கூட்ட வேண்டும்.
உடல்நலத்திற்கு உடல் எடை குறையவேண்டும். திடீரென்று அது தானாகவே குறைந்தாலும் ஆபத்து! மறவாதீர்! திட்டமிட்டு - அதிக எடை யானால் அதைக் குறைக்க முயலுங்கள்!
வரவுக்குட்பட்டுசெலவழிக்கவேண் டும் - பொருளாதாரத்தின்படி இதுவே சரியான விதி!
வரவு எவ்வளவோ அதைக் கொழுப்பு - என்ற வகையில் சேமிக் காமல், ‘எரித்து’ முழுவதையும் செலவு செய்தலே சரியானது.
எதிர்கால நலன் கருதி இதில் மட்டும் ‘சேமிப்பு’ - ‘சிக்கனம்’ கூடாது; கூடவே கூடாது.
எனவே, நடைப்பயிற்சி, மெதுவான ஒட்டம் (ஜாகிங்) மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் கூடுதல் கொழுப்பு - குறைக் கப்பட்டாகவேண்டும்!
அதிக எடையைக் குறைக்க - உணவு முறையிலும் மாற்றம் செய்தல் நலம்!
ஆறுகால உணவு- ‘உண்ணாத கடவுளுக்குப்’ படைக்கப்படுகிறது!
உண்ணும் மனிதர்கள் மூன்று வேளையை ஆறு வேளையாக்கிச் சிறுகச் சிறுக உண்டால் அது உடல் நலத்திற்கு பலம் தருவதாக அமையும்.
சீனர்களின் உணவுப் பழக்கத் தினைக் கண்டறியுங்கள்!
அவர்கள் சிறுகச் சிறுக ஒரு கோப் பையில் வைத்து அடிக்கடி குறிப்பிட்ட நேரத்தில் உண்ணத் தவறுவதில்லை; நாமும் இதைப் பழகலாமே!
இன்னும் பசி என்கிறபோதே ‘முக்கால் வயிறுடன்’ உண்பதைவிட்டு எழுதல் நம்மை இன்பமயமாக்கும்!
வயிறுமுட்டத் தின்று விடுவது துன்பத்திற்குத் துவக்கமாகும்!
உண்ணல் பற்றி நிறைய எண்ணல் வேண்டும்.
பலூனுக்குக்கூட ஒரு கொள்திறன் உண்டே; அதிகம் ஊதினால் வெடிக் கிறது! அதிகம் உண்டால் நம் உடல் நலமும் இடிக்கிறது!
நோயற்ற வாழ்வுக்கு இவை மூலம் நம்மால் மருந்தின்றி ஒழுங்கு படுத்திக்கொள்ள முடியாதா?
சிந்தித்து முடிவு எடுங்கள்!
-விடுதலை,25.11.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக