வாழ்க்கையில் நம்மில் பலருக்குத் துன்பம் ஏற்படுவதற்கு நாம் கையாளும் நடைமுறை பழக்க வழக்கங்கள் பெரிதும் காரணமாகும்.
எளிய பழமொழிகள் பல அனுபவத் தின் அடிப்படையிலேயே முகிழ்த் தவை. அவற்றிற்கு நாம் அதிக முக்கி யத்துவம் தராமல் அலட்சியப்படுத் துவதே துன்ப, துயரங்களுக்குக் காரணமாக அமைந்து விடுகின்றன.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற மூதுரையின் முக்கியத் துவத்தை அலட்சியப்படுத்தியோ, வாழ்வில் கடைப்பிடித்தொழுகு வதையோ நாம் செய்வதில்லை. (அமிழ்து என்பது இனிய சுவை தரும் பண்டம்)
எதையும் அளவுவோடு விரும்புதல் ஆசை என்பதாகும்.
அளவின்றி மோக முள் அதன்மீது குத்திக் குத்தி, இரத்தம் சிந்தினாலும் கூட அந்த ஆசைக்கு எல்லைக்கோடு - வரையறை செய்யாது, அலையோ அலை என்று அலைந்து பணம், சொத்து, புகழ் சேர்க்க வேண்டும் என்று நடப்பது பேராசை என்பதாகும்.
மீதூண் விரும்பேல் என்பது எவ்வளவு பெரிய அறிவுரை!
நன்கு சுவைத்து உண்ணும் அளவுக்கு உணவு வகைகள் மிகுந்த சுவைமிக்க தாயினும், அளவு - வரம்பு கடந்தால் செரிமானக் கோளாறுதானே!
பிறகு அதற்குரிய மருத்துவம், மருந்து, அவதி - இவையெல்லாம் தவிர்க்க இய லாத அவசியமற்ற விளைவுகள் தானே!
நம்மில் எத்தனை பேர் இதனைக் கடைப்பிடித்து ஒழுகுபவர்களாக உள் ளோம்?
வயிற்றில் ஒரு பகுதி எப்போதும் காலியாக வைத்துக் கொண்டே (முக்கால் + கால்) எந்த விருந்தாயினும் உடனே எழுந்து கை கழுவி விட்டீர்களானால், அது கையை மட்டும் கழுவியதாகாது, அஜீரணக் கோளாறு என்ற நோயை யும்கூட கை கழுவியதாகவே ஆகும்!
வயிறுமுட்டச் சாப்பிடுவது என்பதும் அதனைக் குறைத்துச் சாப்பிடுவது என்பதும் எல்லாம் நம் கையில் - நம் முடிவில் தான்! இருக்கிறது!
உண்ணும்போது சபல அலைகள் நம்மை, தம்பக்கம் சாய்த்து விடாமல் காக்க வேண்டிய பொறுப்பு பிறருக்கா? நமக்கா? உபசரிக்கிறவர்கள் விளைவை அனுப விப்பவர்கள் அல்லவே?
அப்படி மறுக்கும்போது கனிவுடன் அதனை மறுப்பதே நல்லது. விருந்தளிப் போரைச் சங்கடப்படுத்தி எரிச்சல் ஊட்டி ஏண்டா இந்த மனுஷனை வீட்டிற்கு அழைத்து விருந்து போட்டோம்! என்று தன்னைத்தானே நொந்து கொள்ளும் நிலையை ஏற்படுத்தலாமா?
அதில் சற்று நயத்தக்க நாகரிகம் ததும்ப வேண்டாமா?
உணவு - பரிமாறல் - விருந்து பற்றி பரவலான ஒரு உண்மை, பலராலும் சொல்லப்படும் கருத்து, சாப்பாடு ஒன்று தான் போதும் என்று சொல்லும் அளவுக்கு நிறுத்தச் சொல்வது; மற்றவை களுக்கு இது மாதிரி உச்சவரம்பு கட்டுவதே இல்லையே!
அண்மைக்கால அன்றாடச் செய்திகள் பணத்தாசை, திடீர் பணக்காரராக பிறரை வஞ்சித்து, களவாடி, பறித்து, கொள்ளை யடித்து, அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்து - அதன் விளைவாக தீராத சங்கடங்களையும், ஆறாத அவலத்தை யும் அனுபவித்தாலும், போதையை விரும்பி மது குடிப்பவன் - வேட்டி அவிழ்ந்து வீதியில் கிடந்து அவதியுற் றாலும் மறுநாளும் நேற்று குடித்த அளவுக்குமேல் குடித்துக் கும்மாளம் போட்டு, அதே இடத்தில் மீண்டும் முழு நிர்வாண கோலத்தில் மூச்சுப் பேச்சின்றி விழுந்து கிடப்பதில் ஒரு சுயஇன்பம் காணுவது போன்ற பரிதாபம் அல்லவா?
பணம் - காசு - செல்வம் தேவை மூச்சு விடுதலுக்குத் தேவையான பிராண வாயு போல - மறுக்கவில்லை நாம்!
அதையே மூச்சு முட்டித் திணறும் அளவுக்கு ஒரு வழிப்பாதையாக்கி, மறுவழி செலவோ, நன்கொடையோ, பொதுத் தொண்டோ, செய்யாமல் பாடுபட்டுப் பணத்தைச் சேர்த்து அனுபவிக்கக்கூட முடியாதபடி ஊர் சிரிக்க, உலகம் கெக்கெலி கொட்ட, சட்டம் தண்டிக்க, உச்சியிலிருந்து அதல பாதாள பள்ளத்தில் வீழ்ந்து எழ முடியாமல் நாதியற்று பிறர் நெருங்க அஞ்சிடும் நிலைக்குத் தள்ளப்பட்ட வர்களாவது எதனால்?
அளவுக்கு மிஞ்சி பொருள் சேர்த்த குற்றம் புரிந்ததினால்தானே!
புகழேகூட போதையில் பெரும் போதையாகும். அதையேகூட ஒரு கட்டுக்குள் வைத்திருக்காவிட்டால் அது நம் உயிர்க்கு இறுதியாகி விடும்.
புகழுக்காக வேட்டையாடுதல், செலவழித்தல் அறவிலை வணிகர் ஆவது விரும்பத்தக்கதா? ஆராய்ந்து பார்க்க!
(எஞ்சியது நாளை)
-விடுதலை,20.6.16
எதுவும் அளவுக்கு மிஞ்சிட வேண்டாம்!-2
எதுவும் அளவுடன் இருப்பதே எல்லா வகையிலும் வாழ்க்கையின் சிறப்புக்கு வரப்பு கட்டியதாகும். என்பதை சனிக்கிழமையன்று (20.5.2015) வெளிவந்த வாழ்வியல் சிந்தனைக் கட்டுரை கூறியது.
மேற்கொண்டும் சிந்திப்போமா? அளவுடன் இருப்பதுடன் அதே நேரத்தில் குறையாமலும் பார்த்துக் கொள்வது அச்சிறப்பிற்கு மேலும் சீர் சேர்க்கக் கூடியதாகும்.
இதற்கு ஆங்கிலத்தில் ‘Optimum’ என்ற ஒரு சொல்லைப் பயன்படுத்துகின்றனர் ‘Optimum Level’ என்றெல்லாம் கூடக் கூறுவர்.
எது இரண்டு நிலைகளுக்கும் நடுவில், பொருத்த மாகவும் மிகாமலும், குறையாமலும் அமைந்து நல்ல பயனையும் விளைவையும் தருமோ அதுவே அந்த போதிய அளவுத் திறன் (Optimum) ஆகும்!
உடலில் உள்ள ஒவ்வொரு சத்தும்கூட இப்படி மிகவும் - அதிகமாகவும் கூடாது; அதே நேரத்தில் சீரான - போதிய தேவை அளவைவிட - குறைந்து விடவும் கூடாது!
எடுத்துக்காட்டாக நம் உடலில் இருக்கும் சத்துக் களின் அளவையேகூட காட்டலாம்!
எடுத்துக்காட்டாக நம் உடலில் இருக்கும் சத்துக் களின் அளவையேகூட காட்டலாம்!
உப்பு (Sodium)ச் சத்து நமக்கு அதிகமாகக் கூடாது; அதே நேரத்தில் மிகவும், குறையவும் கூடாது. அதிகமானால் சிறுநீரகத்தைப் பாதிக்கும் என்பர் மருத்துவர்கள்.
குறைந்து போனால் அது பல நேரங்களில் மூளையின் இரத்த ஓட்டத்தைக்கூட பாதித்து, பேசுவது, செயல்படுவது போன்றவற்றினைக்கூட தடுத்து விடும் என்பதையும் புரிந்து கொண்டால் உப்புக்குப் பெறாத விஷயம் என்ற சொற்றொ டரைக்கூடத் தயங்கித்தான் இனி நாம் பயன் படுத்துவோம் - இல்லையா?
இரத்தத்தில் சர்க்கரை அளவும்கூட இது போலத்தான்!
சர்க்கரை நோயாளிகள் - சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் இன்சூலின் ஊசி போடுவதோ (Type I) அல்லது மருந்து எடுத்துக் கொள்ளும்போதோ (Type II)கூட சர்க்கரை அளவினை திடீரெனச் சரிந்து விட்டால் அது பற்பல நேரங்களில் மாரடைப்பில் கொண்டு போய் நிறுத்தி விடக் கூடும்.
‘Hyper’ என்றால் அதிகம் - மிகை
‘Hypo’ என்றால் அளவு குறைதல் என்பதாகும்.
‘Hypo’ என்றால் அளவு குறைதல் என்பதாகும்.
நம் உடலேகூட நமது வாழ்க்கைக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நல்லாசான்; நம்மில் பலரும் கூர்ந்து கவனஞ் செலுத்தி மனதைப் பக்குவப்படுத்த அதனையே படித்துக் கொண்டு வாழலாமே!
அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும் (குறள் - 479)
இல்லாகித் தோன்றாக் கெடும் (குறள் - 479)
பொருள்: தனக்குள்ள பொருளின் அளவைத் தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கையானது, முதலில் வசதி உள்ளது போலத் தோற்றமளித்துப் பின்னர் அந்தத் தோற்றமும் இல்லாமல், கெட்டுப் போய் விடும்.
உடம்பிலிருந்து எல்லாவற்றிலுமே அளவறிந்து- அளவு குன்றாமலும், மிகாமலும் வாழ்ந்தால் பின்னால் வலியோ, வம்போ ஏற்படவே ஏற்படாது.
உடம்பிலிருந்து எல்லாவற்றிலுமே அளவறிந்து- அளவு குன்றாமலும், மிகாமலும் வாழ்ந்தால் பின்னால் வலியோ, வம்போ ஏற்படவே ஏற்படாது.
இதே அதிகாரத்தில் வள்ளுவர் கூறிய மற்ற இரண்டு குறள்களும்கூட நம் அனைவருக்குமே வாழ்நாள் வாழ்க்கைப் பாடங்கள் ஆகும்!
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் (குறள் - 475)
பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின் (குறள் - 475)
பொருள்: மிக மெல்லியதான மயில் இறகுகள் ஏற்றப்பட்ட வண்டியேயானாலும்கூட, அந்த இறகு களை அளவுக்கு மீறிய வகையில் மிகுதியாக வண்டி யில் ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு, ஒரு கட்டத் தில் பளு தாங்க முடியாமல் முறிந்து போய் விடும்.
எளிய உவமை! அரிய உண்மைப் போதனை!!
அடுத்த மற்றொரு குறள்; அதே அதிகாரத்தில்,
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதியாகி விடும் (குறள் - 476)
நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதியாகி விடும் (குறள் - 476)
பொருள்: ஒரு மரக்கிளையின் நுனி வரை சென்றவர் அதற்கு அப்பாலும் ஏற முயலுவாரே யானால்; அம்முயற்சி, அவரது உயிருக்கு அழிவைத் தந்து விடும்.
குறைந்த உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடிகூட சற்றுக் குறைவாக இருக்கும்; ஆளைக் காப்பாற்றி விடலாம்; ஆனால் மிக உயரத்திலிருந்து வீழ்ந்தால் அடியும் பலமாக, உயிர் பிழைக்கும் வாய்ப்பும் அரிதாகி விடக் கூடுமே! இல்லையா?
அதிகாரத்திற்கு வந்து தலைகால் புரியாமல் ஆடும் நுனிக்கொம்பர்களுக்கு பிரான்சிஸ் பேகன் என்ற ஆங்கில எழுத்தாளர் ஓர் அரிய உண்மையை நினைவூட்டினார்!
கீழே விழுகின்றவரை அந்த நுனிக்கொம்பர் களுக்கு இது விளங்காது, விளங்கவே விளங்காது; விழுந்து உயிருக்குப் போராடிடும் நிலைமைக்குப் பின்னரே அது விளங்கும்.
அப்போது விளங்கி யாருக்குப் பயன்?
“Power Corrupts;
Absolute Power;
Corrupts Absolutely”
Absolute Power;
Corrupts Absolutely”
ஆட்சி - அதிகாரம் - கெடுக்கும்; அதிகமான செல்வாக்குப் படைத்த ஆட்சி - அதிகாரமோ - முழுமையாக - தேற முடி யாத அளவு அவர்களைக் கெடுக்கும் என்றார்!
எனவே, அளவுடன் தூக்கம், அளவுடன் செலவு, அளவுடன் மகிழ்ச்சி, புகழ் எல்லாம் கொண்டு மகிழ்ச்சி ஊற்று வற்றாத வாழ்க்கை வாழக் கற்றுக் கொள்ளுவோம்!
- வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி
-விடுதலை,21.6.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக