பக்கங்கள்

செவ்வாய், 22 நவம்பர், 2016

அறிவியல் சிந்தனைகள் 3. ஊட்டச்சத்து

நீங்கள் உங்கள் உடலை ஒரு மோட்டார் காருடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

காரில் தடைபடாது பயணம் செய்யவேண்டுமானால், கார் நல்ல நிலையில், எவ்வித பழுதுக்கும் இடம் தராமல் இருக்குமாறு நாம் பார்த்துக் கொள்ளுவது அவசியமல்லவா?

காரின் பாடி, ஃபிரேம் - போன்றதே நமது உடலின் தசைகள் ஆகும். உங்கள் இடுப்பு, வயிறு, தொடைகள், மார்பு இவைகளை வைத்து, அதன் மொத்த எடை இவைகளுடன் ஒப் பிடலாம்.

அடுத்து, காரின் என்ஜினும் அதன் பற்பல பாகங்களும் சரியாக இயங்கினால்தானே வண்டி சரியான படி ஒடும்.

அதுபோல, சரியான அளவு காற்றடைப்பு  சரியான உணவு - பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் வேலை செய்துகொண்டே இருக்கவேண்டும்.அதைப்பயன் படுத்தாமல் வெறுமனே வைத்து விடக் கூடாது ஓடாத வண்டி - என்ஜின் எப்படி நாளடைவில் பய னற்றதாகிவிடுமோ,அதுபோல சுறுசுறுப்புடன் இயங்காத உடல் பகுதிகளும்கூட செயல்திறனைக் கொஞ்சம் கொஞ்சமாகவே இழந்து விடும் அபாயம் உண்டு.

நமது வாழ்வின் இலக்கு, நோக்கு, கண்ணோட்டம் இவற்றை காரின் ஸ்டியரிங்,ஆக்சிலேட்டர், பிரேக் (தடை) போன்றவைகளுடன் ஒப்பிட லாம்

உங்கள் பயணத்தில் எப்போது வேகமாகப் போகலாம், எப்போது மெதுவாகப்போகவேண்டும்?எப்படி வேகத்தடைகளைத் தாண்டவேண் டும்? என்பதையொட்டி அக்கருவி களைப் பயன்படுத்துவதால் உங்கள் பயணம் எவ்விதம் பாதுகாப்பான-பயணமாக்கப்படுகிறதோ, அதே முறையை, வாழ்க்கைப்பயணத்திற்கும் கூட மேற்கூறிய கருவிகளைப் போன்ற இலக்கு, நோக்கு, கண்ணோட்டம் இவற்றின் உதவியைப் பயன்படுத்தி வெற்றி பெறலாமே

காருக்கு எப்படி காசோலைன், பேட்டரிகள்முக்கியமோ,அப்படித் தான்மனிதவாழ்வுக்கும்,ஊட்டச் சத்துள்ள உணவுதான் முக்கியமான தாக அமைந்து மற்ற பாகங்களை சரியாகப் பராமரித்துச் செயல்பட வைக்கும்.

காரின் டயர்கள் எப்படி கார் ஓட்டத்திற்கு முக்கியமானவைகளோ, அது போன்றதே, மன அழுத்தத்தின் மாற்றம் அல்லது எதிர்கொள்ளும் மனத்திட்பம். இந்த அய்ந்தும் (காருக்கு எவ்வளவு முக்கியமோ, அதுபோல) வாழ்க்கை ஓட்டத்திற்கும் கூட முக்கியமானவை

ஒரே வேறுபாடு, நீங்கள் காரை மாற்றலாம்;புதுக்காரில்சவாரிசெய் யலாம்; உடல் முழுவதையும் செய லற்றது என்று கருதி ஒதுக்கிவிட்டு வாழ முடியாது

ஆனால் காரின் பாகங்களை மாற்றிக்கொண்டே,ஆயுளைநீட்டிக் கலாம், நலவாழ்வு வாழலாம் காருக் கும் பை-பாஸ் உண்டு; உடலில் ‘பை-பாஸ் முறை உண்டு.

காருக்கு பல உதிரி பாகங்களை மாற்றிப் புதுப்பிப்பது போல, உடல் உறுப்புகளையும் மாற்றிடும் மானிட அறிவின் ஆற்றல் 21ஆம் நூற்றாண்டில் மிக அதிகமாகிவிடும்.
-விடுதலை,22.11.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக