ஒரு நாளுக்குத் தேவையான ஊட்டச்சத்தில் நான்கில் ஒரு பங்கைக் காலை உணவு அளிக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? காலை உணவு மூளைக்குத் தேவையான சக்தியையும் தந்து, குழந்தைகளை சுறுசுறுப்பாகவும் வைக்க உதவுகிறது. உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் காலை உணவைத் தவிர்ப்பதால் அவர் களின் எடை குறைவதில்லை. மாறாக அவர்கள் மதிய மற்றும் இரவு உணவை அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். காலை உணவு உண்பவர்களை உணவினால் உண்டாகும் நோய்கள் அவ்வளவாக பாதிப்பதில்லை.
அத்துடன் காலை உணவு நம் உடலை அளவாகவும், வைத்துக் கொள்ள உதவுவதோடு நமக்கு தெளிந்த சிந்தனையையும் தருகிறது. மற்றும் உணவு உட்கொள்ளும் காலத்தையும் மிச்சப்படுத்துகிறது. டில்லியில் நடந்த கருத்தரங்கின் ஆராய்ச்சி முடிவுகள் காலை உணவை அரசன் என்றும், மதிய உணவை அடிமை என்றும், இரவு உணவை வறியவன் என்றும் வர்ணிக்கின்றது.
டாக்டர் வீணு சேத் (தலைவர், இந்திய உணவுக் கட்டுப்பாட்டுக் கழகம், டில்லி) டாக்டர் கல்யாண் பக்கி (உலக சுகாதார நிறுவனத்தின் இந்திய ஆலோசகர்), டாக்டர் சந்தீன்தர் பஜாஜ் (இயக்குநர், டில்லி மாண்பமை லேடி இர்வின் கல்லூரி) மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள், மருத்துவர்கள், உணவுக் கட்டுப்பாடு நிபுணர்கள் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்டார்கள்.
டாக்டர் பஜாஜ் மேலும் கூறுகையில், ஒரு நாளுக்குத் தேவையான புரோட் டீன், விட்டமின்கள், கால்சியம் மற்றும் இரும்புச் சத்துக்களை காலை உணவு நமக்கு அளிக்கிறது. காலை உணவை உட்கொள்ளும் குழந்தைகளைவிட, காலை உணவைத் தவிர்க்கும் குழந்தை களுக்கு, தாது மற்றும் வைட்டமின்கள் - சத்துக்கள் குறைவாக இருப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இந்தச் சத்துக் குறைவானது - பள்ளி செல்லும் குழந்தைகளுடைய நடவடிக் கைகளின் செயல்திறன் மந்தமடைய வழிவகுக்கிறது.
பசியுடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் கல்வித்தரம் உண்மை யில்மிகவும்குறைவாகஉள்ளதுஎன ஊட்டச்சத்துவல்லுநர்களின்ஒரு பிரிவினர்கருதுகின்றார்கள்.காலை உணவை தவிர்ப்பதால்குழந்தை களின் திறமை மற்றும் கல்வியாற்றல் பாதிக்கப்படுகிறது என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. ஊட்டச்சத்து வல்லுநர்கள் மேலும் கூறுகையில், காலை உணவு அதிகமாகவும், மதிய உணவு குறைவாகவும், இரவு உணவு மிகவும் குறைவாகவும் இருக்கவேண்டும் என வலியுறுத் துகின்றார்கள். இந்த உணவுப் பழக்க மானது நம் உடல்நலத்தை நீண்டகாலம் பாதுகாக்கின்றது.
ரேணுகா சேகல், தன்னுடைய ஏழுவயதுமகன்வகுப்பில்கவனக் குறைவாகவும், வீட்டில் சுறுசுறுப்புட னும் இருப்பது புரியாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறும் வேளையில் தன்னுடைய மகன் பள்ளி செல்லும் பரபரப்பிலும், பேருந்தைப் பிடிக்கும் அவசரத்திலும் காலை உணவைத் தவிர்த்துவிடுகிறான் என்று கூறுகையில், காலை உணவை தவிர்ப்பதுதான் அவன் வகுப்பில் கவனக்குறைவாக இருப்பதற்குக் காரணம் என மருத்துவர் கூறினார்.
டாக்டரின் ஆலோசனைப்படி காலை உணவு எடுத்துக்கொண்ட பிறகு ரேணுகா சேகலின் மகன் சுறுசுறுப்பாகவும் கல்வியில் திறமை யாகவும் இருப்பதை, அடுத்து வந்த முன்னேற்ற அறிக்கை (றிக்ஷீஷீரீக்ஷீமீss ஸிமீஜீஷீக்ஷீt) கூறியது.
நாம் சாப்பிடும் நேரத்தை கணக்கில் கொள்ளாமல் நமது மூளை 24 மணி நேரமும் நிலையான குளுக்கோஸ் சக்தியைப் பெறுகின்றது என்று பல ஆண்டுகளாக மருத்துவ அறிவியல் கூறுகின்றது. ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி இதைத் தவறு என்று கூறுகின்றது. நாம் இரவு உணவைத் தவிர்ப்பதால் நமது மூளைக்குக் குறைவான குளுக்கோஸ் சக்தியே கிடைக்கிறது என்று ஆராய்ச்சி கூறு கின்றது. நமது உடலில் குளுக்கோஸ் சத்து குறைவதால் நமது மூளையின் நினைவுத்திறன் முக்கியமாக பாதிக் கப்படுகிறது.
சர்க்கரை கலந்த காலை உணவு மூளைச் சுறுசுறுப்பை மேம்படுத்துவதில் விந்தை புரிகிறது. பள்ளி செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னர், சர்க்கரைச்சத்துள்ள தானியக் காலை உணவு கொண்ட சிறுவர்கள், இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் காலை உணவு அருந்திய குழந்தைகளைக் காட்டிலும்சிறப்பாகத்திறமைகாட் டினர்என்றுஅண்மையில்நிகழ்ந்த அமெரிக்க ஆய்வு ஒன்று வெளிப் படுத்துகிறது.
மூளை நினைவுத் திறனிலும் , அதன் தொடர் செயல்பாடுகளிலும் முக்கியப் பங்கு வகிக்கின்ற அசிட்டில்கொலின் (கிநீமீtஹ்றீநீலீஷீறீவீஸீமீ) என்று அழைக்கப்படும் நியுரோ டிரான்ஸ்மீட்டரை குளுக்கோஸ் சத்து தூண்டுகிறது. காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் சர்க்கரைச் சத்து இழப்பினால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும், நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது.
ஒரு நாளைக்குத் தேவையான உணவின் கால்பங்கான 500 கலோரிக்கு அதிகமான சத்து கொண்ட காலை உணவைச் சாப்பிடுபவர்கள் 200 கலோரி சத்து கொண்ட காலை உணவை சாப்பிடுபவர்களைவிடத் திறமைசாலிகளாக விளங்குகின்றார்கள். காலை உணவைத் தவிர்ப்பவர்கள் திறமை குறைவாகக் காணப்படுகின் றார் கள். குழந்தைகளின் காலை உணவுப் பழக்கம் அவர்களின் திறமையில் நேரடித் தாக்கத்தை உண்டாக்குகிறது.
சர்க்கரைச்சத்தோடுவைட்ட மின் பி-6 மற்றும் பி-12 சத்துக் களும்நினைவுத்திறனுக்குஉறுதுணை யாக உள்ளன என கண்டுபிடிக் கப்பட்டுள்ளது. வைட்டமின் ‘பி’ குறைவானது , மூளை நோய்களான மன அழுத்தம், மனச்சிதைவு போன்ற வைகளுக்கு காரணமாகின்றது. வய தானவர்களுக்கு வயது அதிகமாக அதிகமாக வைட்டமின்-பி குறைவு அதிகரிக்கிறது.
பொதுவாக மக்களின் ஆயுட்காலம் அதிகமாக உள்ளதால் மருத்துவ விஞ்ஞானம் வயதானவர்களின் மூளை செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்துகின்றது.ஆராய்ச்சிகள்வைட் டமின் ‘பி’ தொகுதியின் இன்றியமை யாத் தன்மையைக் கூறுகின்றன. பல்வேறு சத்துக்கள், பல்வேறு உண வுகளில் உள்ளதால் பல உணவு வகைகளைக்கொண்ட சத்துணவு நமக்கு அவசியமாகின்றது. பாலிலும், முட்டையிலும்வைட்டமின்பி-12 அதிகமாகஉள்ளது.பருப்புவகை கள், நிலக்கடலை மற்றும் வாழைப் பழங்கள் வைட்டமின் பி-6 என்ற சத்தைக்கொண்டுள்ளன.
பொதுவாக - சாப்பிடுவதும், காலை உணவில் கவனமும் நமது உடல் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன. கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடுபவர்களை விட கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து நிறைந்த உணவை சாப்பிடுபவர்கள் அளவான உடலுடனும், வளமான உடல் நலத்துடனும் உள்ளார்கள் என ஆராய்ச்சி கூறுகின்றது.
எனவே, தானியம், பழங்கள் மற்றும் ரொட்டி ஆகியவற்றைக்கொண்ட அதிக கார்போஹைட்ரேட் சத்து நிறைந்தகாலைஉணவுநமதுதசை களுக்குத் தேவையான கார்போ ஹைட்ரேட் சத்தை அளிக்கின்றது. நமது உடலில் உள்ள கிளைக்கோஜன் என்ற சத்து உடற்பயிற்சி மற்றும் வேலை செய்வதற்கான சக்தியை நமக்கு அளிக்கின்றது. கிளைக்கோஜன் சத்து போதுமான அளவு இல்லாவிடில் நமது உடலின் செயல்பாடு குறைந்து சோர்வு நம்மை ஆட்கொள்ளுகின்றது.
உடலின் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் கொழுப்பு நிறைந்த உணவைத் தவிர்க்கவேண்டும். மிகவும் ஒல்லியானவர்கள் மன அழுத்தமும், செயல் நாட்டமும் குறைந்தவர்களாக இருப்பார்கள்.
எனவே அவர்கள் ஊட்டச்சத்து நிறைந்தகாலைஉணவை எடுத்துக் கொண்டால் - காலை உணவைத் தவிர்ப்பவர்களைவிட திருப்தியுடனும் உற்சாகத்துடனும் விளங்குவார்கள். வைட்டமின் ‘பி’ நரம்பு மண்டலத் திற்கும், மன அழுத்தத்தைத் தவிர்ப்ப தற்கும் உதவுகின்றது.
காலை உணவைத் தவிர்ப்பவர் களைவிட காலை உணவு உட்கொள் ளும் பழக்கமுடையவர்கள் அதிகமான வைட்டமின் சத்துக்களான ஏ.ஈ.டி., இரும்புச் சத்து மற்றும் கண்ணாம்புச் சத்துக்களைப் பெறுகிறார்கள். இந்தச் சத்துக்களின் குறைவானது, குறிப்பாகப் பருவப் பெண்களுக்கும் மற்றும் வயதான பெண்களுக்கும் ரத்த சோகை நோயை (அனீமியா) உண்டாக்குகின்றது. சுண்ணாம்புச் சத்துக் குறைவானது எலும்பு மற்றும் தசைகள் சம்பந்தமான நோய்களைப் பெண்களின் வயதான காலத்தில் ஏற்படுத்துகின்றது.
காலை உணவு நமக்குத் தேவை யான பலத்தையும், சக்தியையும் அளிக்கிறது என்றாலும் நமது தூங்கும் நேரம், விழிக்கும் நேரம், சாப்பிடும் நேரம் ஆகியவை மாறுபடுவதால் நம்மில் பலர் சரியான நேரத்தில் காலை உணவை எடுத்துக்கொள்ள முடிவதில்லை.
இரவு விருந்துகளில் தாமதமாக உணவு உட்கொள்வதாலும், சரியான உறக்கம் மற்றும் உடற்பயிற்சி இல்லா ததாலும் காலை உணவைத் தவிர்க்க நேரிடுகிறது.
நமது அன்றாட வாழ்க்கை மற்றும் உணவு முறைகளை நாம் நெறிப்படுத்துவது அவசியம். குழந் தைகள் பள்ளிக்குச் செல்லுமுன் அவர்களை, சத்து நிறைந்த உணவு களை உட்கொள்ளச்செய்வது பெற் றோரின் கடமையாகும்.
இரவு உணவை சீக்கிரம் உண் பது, நல்ல இரவு உறக்கம், சத்து நிறைந்த பழங்கள், பால், தானியங்கள் ஆகியவற்றைக்கொண்ட காலை உணவு ஆகியவைகள் மனித வாழ்க் கையின் சிறந்த மற்றும் பொருத்தமான பழக்கவழக்கங்களாகும்.
சத்து நிறைந்த காலை உணவிற்குப் பிறகு எந்த வகையான மதிய உணவையும், இரவு உணவையும் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே அநேக மக்களின் கேள்வியாகும்.
காலை உணவு அதிகமாகவும், மதிய உணவு குறைவாகவும், இரவு உணவு மிகக் குறைவாகவும் இருத்தல் வேண்டும் என ஊட்டச் சத்து நிபுணர்கள் பதிலளிக்கிறார்கள்.
இந்த பழக்கமானது மனிதனுக்குச் சிறந்த உடல் வளத்தையும், நோயற்ற வாழ்வையும் மற்றும் நீண்ட ஆயு ளையும் அளிக்கிறது என மேலும் கூறுகின்றார்கள்.
-விடுதலை,23.11.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக