கோவிந்தன்’ என்ற தனது இயற்பெயர் மாற்றப் பட்டு, ‘விந்தனாகவும்‘ (வேறு ஒரு கட்டத்தில் ‘நக்கீரனாகவும்‘ ஆன) காட்சியளித்த தோழர், சென்ற நூற்றாண்டு தமிழ் உலகத்திற்கு அளித்த தன்னேரில்லாத எழுத்துப் போராளி; கருத்து ‘வெடிகுண்டு!’
எழுத்துக்கு எத்தனை ஆற்றல் என்பதை தன் பேனா முனை மூலம் காட்டிய ‘மாற்றுச் சிந்த னையாளரான’ அந்த மகத்தான மாமனிதர்பற்றி ‘‘விந்தன் நினைவாக... சில பதிவுகள்’’ என்ற தலைப்பில், அண்மையில் வெளிவந்த நூலினை - விந்தன் அவர்களது நூற்றாண்டுக் காலமான இந்தப் பருவத்தில், அவரது உற்ற தோழர், ஆலோசகர், தனது தோழர்களை - முற்போக்காளர்களை தன் தலைமீது வைத்து உலகமும், ஊரும் அறியச் செய்யும் அரிய இலக்கியப் பணி ஆற்றும் தொண்டறச் செம்மல், 87 வயது இளைஞர் அய்யா மானமிகு செ.து.சஞ்சீவி அவர்கள் எழுதிய நூலை, பெரியார் நூலகர் வாசகர் வட்ட நிகழ்வில் (29.9.2016 அன்று) எனக்கு அளித்தார்.
பேராசிரியர் மெய்கண்டார் அவர்கள் அவரது ‘‘இளந்தமிழன்’’ ஏட்டில், அய்யா சஞ்சீவி அவர்கள் எழுதிய - ‘‘விந்தன் நினைவுக் கட்டுரைகளின் தொகுப்பு’’ - 104 பக்கங்கள் கொண்ட நூல், சுவை குன்றா பல்வகைச் செய்திகளை அடக்கிய பாராட் டத்தகுந்த பனுவல் ஆகும்!
தனது இளமைக் கால நண்பர்களையும், அவர்களது கருத்தோவியங்களையும் இலக்கிய உலகின் புரட்சிக் கருவூலங்கள் என்று அறி முகப்படுத்தியது - தனது வருவாயை ஈத்துவக்கும் இன்பம் கொண்ட, ‘பரந்த மனமும், தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத’ (மயிலை பாலு அவர்கள் பொருத்தமாகக் குறிப்பிடுவதுபோல) இயல்பும் கொண்ட பெரியவர் சஞ்சீவி அவர்கள் அரிய தகவல்களை சுவைபடத் தொகுத்துக் கூறி, ‘விந்தன் புகழ்க்கெல்லை வியனுலகு எல்லையோ’ என்று வியக்கத்தக்க வகையில் விரித்துக் கூறியுள்ளார்!
கவிஞர் ‘தமிழ் ஒளி’யின் கருத்தொளியை உலக மெங்கும் பரப்பிப் பரவசம் கொண்டவர் அய்யா சஞ்சீவி அவர்கள்.
அவரது நூலில் சுயமரியாதைக்காரரும், பகுத்தறிவுவாதியுமான ‘விந்தன்’ எப்படி மற்ற எழுத்தாளர்களிடமிருந்து மாறுபட்டு தனது சிந்தனைகளை இலக்கியமாய், எழுத்தோவியமாய் படைத்தார் என்பதைக் கூறுகிறார், கேளுங்கள்!
அவரது நூலில் சுயமரியாதைக்காரரும், பகுத்தறிவுவாதியுமான ‘விந்தன்’ எப்படி மற்ற எழுத்தாளர்களிடமிருந்து மாறுபட்டு தனது சிந்தனைகளை இலக்கியமாய், எழுத்தோவியமாய் படைத்தார் என்பதைக் கூறுகிறார், கேளுங்கள்!
இதோ ஒன்று..............
‘‘அந்தக் கதையின் தலைப்பு: ‘என் பெயர் கமலா!’ இந்தத் தொடர் ஒரு பாலியல் தொழி லாளியின் நாட்குறிப்பாக அமைகிறது. விந்தன் அவர்களுக்கு இது அறவே பிடிக்கவில்லை. காரணம், இது பாலியல் உணர்வைத் தூண்டுகிறது. இதற்கு மாற்றாக அதாவது பாலியல் கிளர்ச்சியை மனிதாபிமானமாக மாற்ற ஏதாவது எழுத எண் ணினார்.
அந்தக் காலகட்டத்தில் சென்னையிலுள்ள அய்ந்து நட்சத்திர விடுதிகளில் இளம் பெண்கள் ஆடை அவிழ்ப்பு நடனம் நித்தமும் நடந்து வந்தது. அது குறித்த பல செய்திகள் ஏடுகளில் வெளியாகி வந்தன.
அந்தக் காலகட்டத்தில் சென்னையிலுள்ள அய்ந்து நட்சத்திர விடுதிகளில் இளம் பெண்கள் ஆடை அவிழ்ப்பு நடனம் நித்தமும் நடந்து வந்தது. அது குறித்த பல செய்திகள் ஏடுகளில் வெளியாகி வந்தன.
இளைஞர்கள் உள்ளத்தில் பாலுணர்ச்சி ஏற்படு வதும், வசதி படைத்தவர்கள் அவ்விடுதி நோக்கிச் செல்வதும், ஏழை இளைஞர்கள் ஏக்கப் பெருமூச்சு விடுவதும் இயல்பாகிறது.
இந்த நிலைப்பாட்டை மய்யமாக வைத்து, ‘அந்தக் குடிசையை அவர்கள் தாண்டிய போது’ என்ற நீண்ட தலைப்பில் ஒரு கவர்ச்சிக் கதையை எழுதி ‘தினமணிக் கதிரில்’ வெளியிட்டார் விந்தன்.
அந்தக் கவர்ச்சிக் கதையின் சுருக்கத்தை இங்கே சொல்லட்டுமா?
ஒரு திருட்டுப் பயலுக்கு வாழ்க்கைப்பட்ட ஓர் ஏழைப் பெண், இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகிறாள். அவள், தனக்காகவும், தன் பிள்ளை களுக்காகவும் ஒரு கட்டிட கட்டுமான நிறுவனத்தில் சித்தாள் வேலையில் சேர்ந்து தினமும் உழைத்து வருகிறாள்.
அவள் குடியிருப்பு சென்னை மாநகரின் சீர்கெட்ட பகுதியில் ஒரு சிதைந்த பாலம் அருகே உள்ள குடிசைகளில் ஒன்று.
அந்தக் குடிசைவாசிகளுக்காக அங்கே ஒரு தெருக்குழாய். அங்குதான் அவள் வேலை முடித்து வந்ததும் குளிப்பது வழக்கம். அவள் குளித்து முடித்து, உடுத்திய சேலையை துவைத்து உலர்த்தி மீண்டும் உடலில் சுற்றிக் கொண்டு, தன் குடிசைக்குள் நுழைவாள்.

இந்த நிகழ்வுகளைக் குழாய் அருகில் இருந்த சிதைந்த பாலத்தின்மீது அமர்ந்தபடி தினமும் இரண்டு இளைஞர்கள் பார்த்து வந்தனர். ஒருவன் கரிக்கடை தொழிலாளி; மற்றவன் டீக்கடை தொழி லாளி. அவர்கள் இருவரும் அய்ந்து நட்சத்திர விடுதிக்குச் சென்று காண முடியாத ஒன்றை இங்கே இலவசமாகக் கண்டு ரசித்து வந்தனர்.
ஒரு நாள் காட்சி முடிந்து அவர்கள் எழுந்து சென்றபோது, அந்தக் குடிசையிலிருந்து ஒரு பெண் கதறி அழும் குரல் கேட்டு, எட்டிப் பார்த்தனர்.
ஒரு நாள் காட்சி முடிந்து அவர்கள் எழுந்து சென்றபோது, அந்தக் குடிசையிலிருந்து ஒரு பெண் கதறி அழும் குரல் கேட்டு, எட்டிப் பார்த்தனர்.
அவளேதான். இத்தனை நாட்களாக அரை குறையாக பார்த்து ரசித்த மேனி இப்போது முழுமையாக தரையில் புரண்டு புலம்பிக் கொண் டிருந்ததை பார்க்க முடிந்தது. என்ன விஷயம் என்கிறீர்களா?
குளித்து முடித்து வீடு வந்த அவள், தான் வாங்கி வைத்த புதிய புடவை வைத்த இடத்தில் இல்லை. பிள்ளைகளிடம் கேட்டாள், ‘தெரியாது’ என்றனர்.
‘‘அது வந்துச்சாடி’’ என்றாள்.
‘‘ஆமாம் அப்பா வந்துட்டுப் போனார்.’’ பதில் வந்தது.
‘‘அடப்பாவி மனுசா, பொண்டாட்டி பிள்ளைக்கு சோறு போட துப்பு இல்லே, நான் கஷ்டப்பட்டு வாங்கி வச்ச புடவையையும் திருடிக்கிட்டு போயிட்டியேடா பாவி. அய்யோ நான் அம்மணமா ஆயிட்டேனே என்ன செய்வேன்’’ என்று தலையில் அடித்துக் கொண்டே கதறி அழுகிறாள்.
அவளுடைய பெண் குழந்தைகள் இருவரும் தாயின் புடவையை இரண்டாகக் கிழித்து ஆளுக்கு ஒன்றாக உடம்பில் சுற்றிக் கொண்டிருந்தன. இந்த அலங்கோலக் காட்சி அந்த இரண்டு தொழி லாளிகளையும் கதிகலங்கச் செய்கிறது.
அவர்கள் அங்கிருந்து ஓடுகிறார்கள். எங்கோ பணத்தைப் புரட்டி, புதுப் புடவை ஒன்றை வாங்கி வந்து குடிசைக்குள் வீசிவிட்டுச் செல்கின்றனர்.
இந்தக் கதையின் தொடக்கத்தில் எழுந்த கவர்ச்சி முடிவில் மனிதாபிமானமாக மாறி விடு வதை வாசர்களுக்கு உணர்த்தி விட்டார் விந்தன்!''
(நாளையும் விந்தனுடன் சந்திப்போம்)
- கி.வீரமணி
பொதுவாக மனிதன் தனக்குள்ள பகுத்தறிவைச் சரியாகப் பயன்படுத்துவதில் அதிக கவனம் செலுத் தாமல், அதனால் அதிக ஆணவம் கொள்கிறான்!
மனிதனுக்கு இல்லாத வசதி குற்றவாளிகளை - மனிதர்களை ‘மோப்ப சக்தி’யின்மூலம் கண்டறியும் திறன், நாய்க்கு உள்ளதே!
அந்தத் திறமை மனிதனுக்கு இல்லையே. இப்படி பல உவமைகளை தந்தை பெரியார் அவர்கள் சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவில் உள்ள ஒரு ஊரில் (கண்ணனூர்) பேசியபோது குறிப் பிட்டுள்ளார்-
அதேபோல் விந்தன் - அவர் ஒரு பகுத்தறிவாளர். சுயமரியாதைக்காரர் என்பதால் சுதந்திரமான தனித்த சிந்தனையுடையவராக இருந்து அதையே எழுத்துலகத்தில் தனது ஆக்கங்களில் தந்துள்ளார்.
இதோ அய்யா திரு.சஞ்சீவி அவர்கள் தந்துள்ள “விந்தன் நினைவாக” எனும் நூலில் மற்றொரு பகுதியில் விந்தன் எழுதுகிறார்:
‘‘இயல்பாகவே மனிதர்களைவிட மிருகங்கள் உயர்வானவை என்ற எண்ணம் உதித்தது.
மிருகங்கள் அன்றாட தேவைக்கு மட்டுமே அலைகின்றன. நாளைய தேவையை நாளையே தேடும். ஆனால், அடுத்த தலைமுறைக்கும் சேர்க்க அல்லவா மனிதன் ஆசைப்படுகிறான்.
மிருகங்கள் என்றால் காட்டு மிருகம், நாட்டு மிருகம் என இருவகை உண்டு. அவற்றுள்ளும் வீட்டையே சுற்றி வரும் ஆடு, மாடு, நாய், பூனை போன்றவை ஒரு வகை. வீட்டிற்கு மேலே பறக்கும் காக்கை, குருவி போன்றவை மற்றொரு வகை.
அந்த மிருகங்களை நாம் அறிந்திருப்பதுபோலவே, அவையும் நம்மை அறிந்திருக்கின்றன என்பதை நாம் அறிவோமா? ஏதோ பழமொழிகளில் சொல்லப் பட்டதை வைத்து சிலவற்றை அறிவோம்.
இங்கே ஆசிரியர் விந்தன், மிருகங்களின் இயல்பு களை நன்குணர்ந்து, அவை , ‘ஓ, மனிதா’ என நம்மை விளித்து வினா எழுப்புவதாகக் கூறுகிறார்.
அவருடைய பார்வையில் மிருகங்கள் எழுப் பும் கேள்விகள் வியக்கத்தக்க அற்புதமான கேள்விகளாக உள்ளன. குறிப்பாக,
நாம் தினமும் பாடும் தேசிய கீதம், ஆண்டுக்கு ஒருமுறை எடுக்கும் தேசிய ஒருமைப்பாடு உறுதி மொழி போன்றவற்றிலும்கூட நாம் நேர்மையாக நடந்துகொள்ளுவதில்லை என மிருகங்கள் இடித் துரைக்கின்றன.
அதன் வழியே உண்மை, ஒழுக்கம், நீதி, நேர்மை, ஒற்றுமை, உறுதி, நாட்டுப் பற்று, மொழிப்பற்று எனப் பல உயர்தரமான கருத்தலைகளை நம்மை நோக்கி எழுப்பி விடுகின்றன.
சான்றாக சில சொல்லலாம்.
கரிச்சான் குருவிகள் வீட்டிற்கு மேலே சுற்றுகிறதே எதற்கு? பறவைகளின் கூடுகளிலிருக்கும் முட்டை களையும், குஞ்சுகளையும் திருட, காகம் வருவதை மற்ற பறவைகளுக்கு உணர்த்துவதே அதன் பணி யாம். அதனால், அது காவல் பறவை என்கிறார் ஆசிரியர்.
நாம் பிறரை ‘கழுதை’ என்று ஏளனமாகப் பேசுகின்றோமே, அந்தக் கழுதை நம்மை கேட்கிறது:
‘‘கிழக்கு வங்கத்தில் ஏற்பட்ட ஒரு விபத்தில் பத்து லட்சம் பேர் மடிந்தபோது, அது குறித்து இரக்கம் கொள்ளாமல், ‘எனக்கு, எங்கே ஏ ஒன் காப்பி?’ எனக் கேட்கும் உயர் அதிகாரியாக இல்லாமல், அந்த மக்களுக்காக உண்ணா நோன்பிருந்தாரே வினோபாஜி, அந்த மாமனிதரின் வேதனையை, தன்னுடைய வேதனையாகக் கருதி கை கொடுத்த பெண்ணுக்கு வேண்டுமானால், என்னைக் கழுதை என்று இகழ அருகதை இருக்கலாம். மற்றவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது?’’
அடுத்து, குரங்கு கேட்கிறது:
‘‘ஓ, மனிதா என்னையும், என் குட்டியையும் சேர்ந்தாற்போல் எங்கேயாவது பார்த்திருக்கிறாயா நீ? ‘அய்யோ குழந்தைக்கு ஒன்றும் தெரியாதே தவறிக் கீழே விழுந்து விடுமே’ என்று நான் அதை வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்கமாட்டேன். அதுதான் என்னை வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்கும். அதுவும் எப்படி? என் முதுகை தன் கால்களால் சுற்றி வளைத்து பிடித்தபடி, நானே அதைக் குனிந்துகூடப் பார்க்காமல் கிளைக்குக் கிளை, மரத்துக்கு மரம் இரை தேடி தாவிக் கொண்டேயிருப்பேன். அப்படித் தாவும்போது ‘பத்திரம் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்’ என்றோ, ‘விழுந்துவிடப் போகிறாய் ஜாக் கிரதை’ என்றோ அதனிடம் சொல்லி, அதை எச்சரித்தாவது வைப்பேன் என்கிறீர்களா? மாட் டேன். தன்னைத் தானேதான் அது காப்பாற்றிக் கொள்ளவேண்டும். என்னைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாமென்ற எண்ணம் அதற்கு எழுந்துவிட்டால், பிற்காலத்தில் அது தன்னைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி?
‘இப்படிச் செய்வதால் எனக்கு அதன்மேல் அன்பே கிடையாது’ என்று நீங்கள் நினைத்துவிடாதீர்கள். உண்டு. நானும் உங்கள் வீட்டுப் பெண்களைப்போல அதை என் முன்னங்கால்களால் அணைத்துப் பிடித் துக் கொண்டு பால் கொடுப்பது உண்டு. ஆனால், எதுவரை? அதற்கு இந்த உலகம் தெரியும் வரை. தெரிந்த பின்? எதற்கும் பிறரை அது ஏன் எதிர்பார்க்க வேண்டும்? ஏன் எதிர்பார்க்கவிட வேண்டும்?
மனம் விட்டுச் சொல்கிறேனே! இயற்கையாக இல்லாத பந்தத்தையும், பாசத்தையும் உங்களைப் போல் அவ்வப்போது விலை கொடுத்து வாங்கிக் கொண்டு, அவற்றுக்காக ஒருவருக்கு ஒருவர் பாரமாக இருந்து கொண்டு, சதா தொல்லையில் உழன்றபடி வாழும் வாழ்வு எங்களுக்குப் பிடிப்பதே இல்லை.
அப்படியிருக்க, எங்களிலிருந்து வந்ததாக நீங்கள் எப்படித்தான் சொல்லிக் கொள்கிறீர்களோ, அதுதான் எங்களுக்குத் தெரியவில்லை.’’ என்று எழுதுகிறார் விந்தன்.
குரங்கின் இயல்பான வாழ்க்கையைச் சொல்லி மனிதனின் பொய்யான பந்தத்தை எப்படி சாடுகிறார் பாருங்கள்!
இன்னும் இதே பாணியில் பல மிருகங்களை முன்னிறுத்தி அவை மனிதனை விளித்து கேள்விகள் கேட்பதாக தொடரை நிறைவு செய்துள்ளார் விந்தன்.
தினமணிக் கதிரில் ‘ஓ மனிதா’ தொடர் கட் டுரை வெளிவந்த நாளில், மெத்தப் படித்த மேதாவி களிலிருந்து அரைகுறை படிப்பாளிகளான பாமரர் வரை பல பேர் பாராட்டுக் கடிதங்களை அனுப்பி வைத்தனர்.
‘ஓ மனிதா’ என்ற தலைப்பில் வெளிவந்துள்ள பதினேழு கட்டுரைகள் ஒரே தொகுப்பாக தனி நூலாகவும் வெளிவந்துள்ளது.
கல்வித் துறை அறிஞர்கள் இந்நூலினை பரி சீலித்து பள்ளிக் கல்வி மாணவர்கள் பயன்பெறும் வகையில் துணைப்பாட நூலாகப் பரிந்துரை செய் தால் இளைய தலைமுறை மிகுபயன் எய்தும் என நல்லவர்கள் நம்புகின்றனர்.

விந்தன் நினைவாக... சில பதிவுகள்’’ நூலில் அய்யா
திரு.செ.து.சஞ்சீவி ஒரு சிறப்பான ‘விந்தன் எழுத்து களை’ இலக்கிய பாடம்போல் நமக்குத் தேர்வு செய்து தந்துள்ளார்.
கவிஞர் தமிழ்ஒளி ஒருமுறை சொன்னார்: ‘‘வாழ்க்கையில் என்னதான் வறுமைப்புயல் வீசினாலும் கொஞ்சமும் அசையாத நெடுங்குன்றுபோல் நிற்கிறார் விந்தன்!’’
கவிஞர் ‘தமிழ்ஒளி’யும் தனித்து நின்ற நெடுங் குன்றுதான். தன்னைப் போலவே சலனமற்ற உறுதி படைத்தவர் விந்தன் என்பதை மிகச் சரியாகவே சொன்னார் தமிழ்ஒளி.
அந்த மாமனிதர் தன்னைப்பற்றியும், தன்னுடைய படைப்புகள்பற்றியும் என்ன கருதினார் என்பதை அவர், ‘விந்தன் கதைகள்’ நூலுக்கு அவர் எழுதிய ‘என்னுரை’ தெளிவுபடுத்துகிறது. படியுங்கள்:
என்னுரை
பிரசுரத்தார் எனக்குப் பிடிக்காத காரியம் ஒன்றை செய்துவிட்டார்கள்.
அந்தக் காரியம் இந்தப் புத்தகத்துக்கு ‘விந்தன் கதைகள்’ என்று பெயர் சூட்டியிருப்பதே!
இல்லையென்றால், இதில் வெளியாகியுள்ள கதைகளை என்னுடைய கதைகள் இல்லையென்று யாராவது சொல்லிவிடப் போகிறார்களா என்ன?
‘புதுமைப் பித்தன் கதைகள்’ என்ற புத்தகம் முதன் முதல் வெளியானபோது, இதே கேள்வி பல எழுத்தாளர் நண்பர்களிடையே எழுந்தது. அமரர் புதுமைப்பித்தன் சொன்னார்.
‘‘என்னைத் தவிர ‘என் கதைகள்’ என்று சொல்லிக் கொள்ள இங்கே வேறு யாருக்கு அய்யா, தைரியம் இருக்கிறது?’’
அவருக்கிருந்த அந்தத் தைரியம் அடியேனுக்கும் உண்டு. அதற்குச் சான்று என்னுடைய கதைகளில் சிலவும் பிற மொழிகளில் இடம்பெறக்கூடிய தகுதி யைப் பெற்றிருப்பதேயாகும்.
எனினும் ஏற்கெனவே வெளியான ‘முல்லைக் கொடியாள்’, ‘ஒரே உரிமை’, ‘சமுதாய விரோதி’ ஆகிய கதைத் தொகுதிகளைப்போல இந்தக் கதைத் தொகுதியும் ஏதாவது ஒரு கதையின் தலைப் பையே, தன் தலைப்பாகக் கொண்டு வெளியாகி இருக்கலாமல்லவா?
ஒருவேளை, ‘என் கதைகள்’ என்ற தைரியம் எண்ணத்தில் மட்டும் இருந்தால் போதாது. எழுத்திலும் இருக்கவேண்டும் என்பது பிரசுரத்தாரின் எண்ணமோ என்னவோ!
போகட்டும்.
இலக்கிய உலகில் பொதுவாக ஓர் அபிப்பிராயம் - என்ன அபிப்பிராயம் என்கிறீர்களா? - உங்களால் லேசான விஷயங்களைத்தான் தெரிந்துகொள்ள முடியுமாம். புரிந்துகொள்ள முடியுமாம். உண்மையான வாழ்க்கையில் பட்டும் படாமல், ஒட்டியும் ஒட்டாம லிருக்கும் ‘‘சவுஜன்யம் மிக்க கதை’’ களைத்தான் உங்களுக்குப் பிடிக்குமாம்!
‘ராஜாமணி ஊஞ்சலைப் பிடித்துக் கொண்டு நின்றான்; சூடாமணி கேணியில் ஜலம் இறைத்துக் கொண்டிருந்தாள்; ஒரு கணம் இருவர் பார்வையும் பட்டுத் தெறித்தன’ என்பது போன்ற பீடிகையுடன் திடீரென்று ஏற்படும் திடீர் காதல்களும், திடீரென்று ஏற்படும் திடீர்க் கல்யாணங்களும் நிறைந்த ‘லைட் மேட்டர்’ஸைத்தான் நீங்கள் சுவைப்பீர்களாம்; ‘ஹெவி மேட்டர்ஸ்’ என்றால் எடுப்பீர்களாம், ஓட்டம்!
அதற்கெல்லாம் காரணம் என்னவாம் தெரியுமா? உங்களுக்கு அவ்வளவு தூரம் ‘இலக்கிய ஞானம்‘ கிடையாதாம். பக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக் கத் தெரியுமே தவிர, விஷயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தெரியாதாம்!
இப்படிச் சொல்கிறார்கள் அய்யா, அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்! என்னால் இதை நம்ப முடியவில்லை. ஊஹும். நம்பவே முடியவில்லை!
அதற்காகச் சும்மா விட்டு விடுகிறார்களா? இல்லை; அனுதாபம் காட்டுகிறார்கள். அதை மறுத்தால், ‘‘உங் களுக்குத் தெரியாது ஸார்! புதுமை மக்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் சமுதாயத்தைப் படம் பிடிக்கும்‘எக்ஸ்ரே’கதைகளையும்,அதன்கொடுமை களின் மேல் தீச்சரம் வீசும் புத்துலக இலக்கியங்களையும் அவர்கள் புறக்கணித்து விடுகிறார்கள்!’’ என்றெல்லாம் அவர்கள் உங்கள்மேல் குற்றம் சாட்டுகிறார்கள்.
எது எப்படியிருந்தாலும், என்னைப் பொறுத்த வரை நீங்கள் அப்படி இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இலக்கியத்தில் நான் அப்படிப்பட்ட பாகுபாட்டையும் வகுத்துக் கொள்ளவில்லை..
ஏனெனில், பழைய பாசி பிடித்த வழுக்குப் பாதையை விட்டு விலகிப் புதிய பாதையிலே நான் நடக்க ஆரம்பித்ததும், என்னைத் தொடர்ந்து வருவதை நீங்கள் நிறுத்திக் கொண்டுவிடவில்லை; அஞ்சி நடுங்கி ஓடிவிடவும் இல்லை! பார்க்கப் போனால், உங்களைப் பற்றிக் குறை கூறித் திரியும் மகானுபவர்கள் இதுவரை உங்களுக்காக என்னத்தைச் செய்து குவித்துவிட்டார்கள்?
உலக இலக்கியங்களிலே, உலக மொழிகளிலே எத்தனை எத்தனையோ விதமான புதுமைகள், புரட்சிகள் தினந்தினம் பூத்துக் குலுங்கிக் கொண்டி ருக்கின்றன. ஏன், நம்மை அடுத்திருக்கும் கேரள நாட்டின் மலையாள இலக்கியங்களிலும், ஆந்திர நாட்டின் தெலுங்கு இலக்கியங்களிலும் கூட அவற்றை நாம் பார்க்கிறோம்; பார்த்து பெருமூச்சு விடுகிறோம்.
அப்படியிருக்க, தமிழும், தமிழ் நாடும் மட்டும் பழைமை என்னும் குட்டையில் ஏன் இன்னும் மட்டை போல் ஊறிக் கொண்டிருக்கவேண்டும்?
காரணம் இருக்கிறது. ஆம். காரணம் இருக்கத் தான் இருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை சில‘சைத்தான்’கள்தமிழ்நாட்டுஇலக்கியப்பீடத் தைப் பற்றிக் கொண்டு நாசம் புரிந்து வருகின்றன. எதையெல்லாமோ ‘புதுமை, புதுமை’ என்று கூறிக் கொண்டு அபத்தங்களை, அலங்கார வார்த்தைகளை அள்ளி அள்ளி வீசி, ‘குடும்பக் கதைகள்’ என்ற பேரிலே ‘ஜீவனற்ற இலக்கிய’ங்களைப் படைத்துக் குப்பைகளைக் குன்றுகளாகவும், கோபுரங்களாகவும் உயர்த்திக் காட்டி, உங்களிடமிருந்து அவை ‘உபாதானம்‘ பெற்று வருகின்றன.
இந்தச் ‘செயலற்ற தன’த்தைக் கண்டு நீங்கள் சிரித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும், மேற்படி ‘உபாதானத்’தை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், தமிழ் மொழி வளராது, தமிழ் இலக்கியமும் செழிக்காது.
எனவே, போலியைச் சுட்டெரிக்கும் புதுமைகளை, வாழ்க்கையை அலசி அலசிப் பரிசீலிக்கும் ‘ரசா யன’ங்களை சமுதாயத்தின் புற்றுநோய்களுக்கு ‘மின்சாரச் சிகிச்சை’யளிக்கும் புத்தம் புது முறைகளை, குரூர வசீகரங்களைப் படம் பிடித்துக் காட்டி, மனித உள்ளத்திலே எங்கோ ஒரு மூலையில் செய்வதறியாது ஏங்கிக் கிடக்கும் மனிதாபிமானத்தைத் தட்டியெழுப்பும் உணர்ச்சிமிக்க உயிரோவியங்களை, அந்த அபிமானத்துக்கு விரோதமாயிருந்த - இருந்து வருகிற ‘மனித மிருக’ங்களின் மேல் வெறுப்பைக் கக்கி, உங்கள் நல்வாழ்வுக்கு வழி தேட முயலும் நவயுகக் கதைகளை இன்றுபோல் நீங்கள் என்றும் வரவேற்று வாழ்த்தித் தமிழை வளப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டை மேம்படுத்த வேண்டும். இதுவே என் எண்ணம். இதுவே என் இருபது வருட கால எழுத்து.
இந்த எழுத்தை தமிழ்நாட்டு வாசகர்கள் மட்டுமல்ல, தமிழ் வளர்ச்சிக் கழகத்தாரும் பாராட்டி, பரிசும் அளித்திருக்கிறார்கள்.
இப்படியெல்லாமிருந்தும் கொஞ்ச நாள்களாக என்னைப் பார்க்கும் நண்பர்களெல்லாம், ‘‘இருப்ப வனை விட்டு விட்டு, இல்லாதவனைப் பற்றியே ஏன் அய்யா எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்?’’ என்று கேட்கிறார்கள்.
அவ்வாறு கேட்பவர்கள் இல்லாதவர்களாய் இருக் கிறார்களா என்றால், இல்லை. இருப்பவர்களாய் இருக்கிறார்கள்.
பாவம், பொழுது தானாகவே போகக் கூடியது என்பது கூட இவர்களுக்குத் தெரியாது. அதனாலேயே அதைப் போக்கக் கதைகள் வேண்டும் என்கிறார்கள். குலுங்கும் கொங்கையும், குலுங்காத அல்குலும் அந்தக் காலத்துக் காவியங்களில் அரசர்களுக்காக இடம் பெற்றதுபோல, கவைக்குதவாத காதலும், கருத்துக் கொவ்வாத கல்யாணமும் இந்தக் காலத்துக் கதைகளிலே இவர்களுக்காக இடம்பெறவேண்டும் என்கிறார்கள்.
இயற்கை மட்டும் இடங்கொடுக்குமானால், ஒரு நாள் இருபத்து நாலு மணிநேரமும் இவர்கள் பெண்களுடனேயே காலத்தைக் கழிக்கத் தயாராயிருப்பார்கள்!
மற்றவற்றைப்பற்றி இவர்களுக்குக் கவலையும் கிடையாது; அவற்றைப்பற்றி நினைத்துப் பார்க்கும் அளவுக்குக்கூட மனிதத் தன்மையும் கிடையாது.
அதேமுறையில், எதிர்கால மக்களான நிகழ்கால இளைஞர்களையும் உருவாக்கி, அவர்களிடம் இவர்களுக்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்புச் சக்தியை எந்த விதத்திலாவது பறித்துவிடப் பார்க்கிறார்கள், இந்தப் பாதகர்கள்!
அதற்காகவே ‘காமக் கலை’யை ‘விஞ்ஞானக் கலை’ என்று சொல்லும் அளவுக்கு இவர்களுடைய ‘கலாஞானம்‘ வளர்ந்திருக்கிறது. அதற்காகவே ‘அநாகரிக’த்தை ‘நாகரிகம்‘ என்று சாதிக்கும் அளவுக்கு இவர்களுடைய ‘பண்பு’ உயர்ந்திருக்கிறது. அதற்காக ‘பொழுதைப் போக்க உதவாத கதையை எப்படிக் கதை என்று சொல்ல முடியும்?’ என்று கேட்கும் அளவுக்கு இவர்களுடைய அசட்டுத் துணிச்சல் அதிகரித்திருக்கிறது.
அன்பு ஆசையாகி, ஆசை அன்பானதற்குக் காரணம் இவர்களே; காதல் காமமாகி, காமம் காதலானதற்குக் காரணம் இவர்களே; பாவம் புண்ணியமாகி, புண்ணியம் பாவமானதற்குக் காரணம் இவர்களே. கலை விபசாரமாகி, விபசாரம் கலையானதற்குக் காரணம் இவர்களே. இலக்கியம் பித்தலாட்டமாகி, பித்தலாட்டம் இலக்கியமானதற்குக் காரணம் இவர்களே. நாகரிகம் அநாகரிகமாகி, அநாகரிகம் நாகரிகமானதற்குக் காரணம் இவர்களே; பணம் பகவானாகி, பகவான் பணமானதற்குக் காரணமும் இவர்களே!
இதுவரை ‘பண்பு’ எனும் பட்டுத் திரைக்குப் பின்னால் ஓடி ஒளிந்து கொண்டிருந்த இந்தப் ‘பக்காத் திருடர்கள்’ இப்போது ‘தமிழ்’ என்னும் தங்கத் திரைக்குப் பின்னால் ஓடி ஒளிகிறார்கள்.
‘‘தமிழ் என்றால் இனிமையல்லவா! அந்த இனிமையான தமிழில் இனிமையான கதைகள் எழுதினால் எவ்வளவு நன்றாயிருக்கும்!’’ என்று இவர்கள் ‘சுவாரஸ்ய’மாகச் சொல்லும்போது, ‘‘பணம் என்றால் பாஷாணமல்லவா? அந்தப் பாஷாணத்தின் துணையால் பலருடைய ஆன்மாவை நீங்கள் கொல்லாமலிருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்!’’ என்ற ‘அசுவாரஸ்ய’மாகக் கொட்டாவி விடத் தோன்றுகிறது எனக்கு!
எது எப்படியிருந்தாலும், எனக்குத் தெரிந்தவரை இருப்பவன் வெளியே நல்லவனாயிருக்கிறான்; உள்ளே பொல்லாதவனாயிருக்கிறான்.
இல்லாதவனோ, வெளியே பொல்லாதவனா யிருக்கிறான்; உள்ளே நல்லவனாயிருக்கிறான். அவனுக்குவெளியேநல்லவனாயிருக்கசமூக நிலைஇடங்கொடுக்கிறது;இவனுக்குவெளியே நல்லவனாயிருக்கச் சமூக நிலை இடங்கொடுக்க வில்லை.
இந்த வித்தியாசம் ஒழிய வேண்டாமா? இரு சாராரும் உள்ளும் புறமும் ஒன்றாக வாழவேண்டாமா? இலக்கியம் அதற்கு உதவ வேண்டாமா?
எனவே, இருப்பவனைப்பற்றி எழுதி அவனுடைய பணத்துக்கு உண்மை, இரையாவதைவிட, இல்லாதவனைப்பற்றி எழுதி அவனுடைய உண்மை இரையாவதே மேல் என நான் எண்ணுகிறேன்; அதனால் இனிக்கும் தமிழ் இன்று கசந்தாலும், கசக்கும், வாழ்க்கை என்றாவது ஒரு நாள் இனிக்கும் என்று நான் நம்புகிறேன்.
இத்தகைய குறிக்கோளுடன் எழுதும்போது, ‘இல்லாதவனுக்கு வாழ்க்கையில் நம்பிக்கை உண்டாகும்படி எழுதவேண்டும்‘ என்று சில விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதாவது, செத்தாலும் அவன் நம்பிக்கையுடன் சாகவேண்டும் என்பது அவர்களுடைய கட்சி. என்னுடைய கட்சியோ அதற்கு நேர் விரோதமானது. அதாவது, செத்துத் தொலைபவன் நம்பிக்கையோடுதான் செத்துத் தொலையவேண்டும் என்பது என்ன விதி? நம்பிக் கையில்லாமல்தான் செத்துத் தொலையட்டுமே!’
உண்மை ஒன்று வாழ்ந்தால் போதாதா, உலகம் வாழ!
சென்னை அன்பு
15.5.1956 விந்தன்
விந்தன் தன்னுடைய நிலைப்பாட்டை மிகத் தெளிவாக உணர்த்தி விடுகிறார் அல்லவா? இதற்கு மேலும் சொல்லும் தகுதி எனக்கில்லை.
‘நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்‘ என்பது வள்ளுவர் வாக்கு. அதனை ஏற்று விந்தன் கூறி யுள்ளதையும் இங்கே பதிவு செய்கிறேன், படியுங்கள்:
‘‘என்னுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும், வளத்துக்கு நீரூற்றாகவும், அன்புக்கு உறைவிட மாகவும்,ஆர்வத்துக்குப்பிறப்பிடமாகவும்உள்ள சிரியர்‘கல்கி’அவர்களுக்குஎன்உளங்கனிந்த நன்றி, முதலில் உரியதாகும். அடுத்தபடியாக, என்னுடையநினைவில்என்றும்நீங்காதஇடத் தைப் பெற்றிருப்பவர்கள் தமிழர்கள். பொருளாதார சீர்கேட்டினால்இன்றுஅவர்களுடையவாழ்க்கை எத்தனையோவிதமானதொல்லைகளுக்குஉள் ளாகியிருக்கிறது. அத்தனை தொல்லைகளுக் கிடையிலும் நான் எதிர்பாராத அளவு எனக்கு ஆதரவு காட்டிவரும் அவர்களுக்கு நன்றி மட்டுமல்ல, எஞ்சியுள்ள வாழ்நாள்களும் உரியவை.’’ இப்படி மனந்திறந்த மாமனிதர் அவர்!
(முற்றும்)

-விடுதலை,3-5.10.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக