நமக்கு வயதாக வயதாக முதுமை வருவது தவிர்க்க இயலாத இயற்கையாகும். அதற்காக நம்பிக்கை இழந்து, ஒரு வகையான மன இறுக்கத்தையோ, விரக்தியையோ நம்மோடு தவிர்க்க இயலாது இருந்தே தீரும் என்று எண்ணுவது ஒருவகை மூடநம்பிக்கையேயாகும்!
இறப்பைத் தவிர்க்க இன்றுவரை இயலாது என்பது மறுக்க முடியாத உண்மையே! அதற்காக எப்போதும் வருத்தத்துடன் வாழவேண்டுமா, என்ன?
முதுமை என்பது முதிர்ச்சி என்று கணக்குப் போடுங்கள்!
நரைத்தன்மைக்கு ஒரு மரியாதை தானே வருகிறது என்ற மற்றொரு பக்கத்தை ஏனோ பார்க்கத் தவறு கிறீர்கள்?
முதுமைஉடலுக்குத்தான்- உள்ளத்திற்கு அல்ல என்பதை பல முறை நாம் இதே பகுதியில் எழுதி விளக்கியுள்ளோம்.
தோல் சுருங்கிடும் (Wrinkles) வந்துவிட்டதே, கீழே விழுந்து விடு வோமோ, தடுமாற்றம் (வருவதற்கு முன்பே) வந்து விடுமோ என்று பயந்து பயந்து சாகும் வேதனைக்கு ஆளாகவேண்டாம்.
முதியவர்களான முதுகுடி தோழர் களே, முதிய தோழியர்களே!
அமெரிக்காவின் பிரபல அறிவுக் களஞ்சிய ஏடு (Bottomline) ஒன்றில் படித்து சேகரித்த தகவல்களைத் தருகிறோம்.
படித்து பயன்படுத்தி மகிழுங்கள்.
தோல் சுருக்கங்கள் முதுமையில் தவிர்க்க இயலாதது என்று பலர் எண்ணுகிறார்கள்; இது தேவையற்ற ஒரு சிந்தனையாகும். அதனைத் தடுக்கலாம். பளபளப்பு மேனியுடன் விளங்கலாம் - கவலைப்படாதீர்கள்!
உடலில் சுருக்கங்கள் ஏற்படுவது என்பது எப்படி என்றால், உடம்பின் செல்கள் எரிந்த நிலை - சுற்றுச்சூழல், சூரிய வெப்பம், போதிய போஷாக்கு உணவுக் குறைவு இவைகளால்தான்!
உடம்பின் செயல் திற அமைப்பு (Metabolism) புரத சத்தைத் தூண்டும் activator protein-1 (AP-1)
என்பது போதிய அளவில் கிடைக்கும்போது நமது உடல் பளபளப்பும் விரிவடையும் தன்மையை ‘கொலேஜென்’ ((Collagen) என்பதன்மூலம் தூண்டுவதால் இந்தத் தோல் சுருக்கமடையச் செய்கிறது.
நல்ல போதிய ஊட்டச் சத்துள்ள உணவு மாற்றம்மூலம் இதனைத் தடுக்க முடியும்.
எரித்தன்மை உள்ள உணவுகளை (inflammatory) உண்ணுவதைத் தவி ருங்கள். (அதிக காரம் ‘அதிகாரம்‘ எப்போதுமே ஆபத்தானதுதானே!)
அத்தகையஎரித்தன்மைஉள்ள அதிகார கொதி நிலைக்குத் தள்ளு வதைத் தடுக்கும் உணவுகளை உண் ணப் பழகுங்கள்.
இப்படிச் செய்வதன்மூலம் தோல்சுருக்கத்தைமட்டும்தடுக் காமல், பொதுவான உடல் ஆரோக் கியத்தையும் வளர்க்க அந்த உணவு முறை மாற்றம் உதவிடும்.
புற்றுநோய், இதயநோய் மற்றும் வயிற்று நோய்களை வராமல் தடுப் பதற்கும் கூட அது நமக்குப் பெரிதும் உதவிடும்.
புரதச் சத்துதான் நமது உடம்பி லுள்ள ‘செல்’களின் பழுதுகளை நீக்கும் முக்கிய கூறு ஆகும்! குறிப் பாக ‘கொலேஜன் செல்’ என்பது பழுதடையாமல் தடுக்கும்.
ஆண்களுக்கு ஒரு நாளைக்குப் போதுமான புரதச் சத்து அளவு 80 கிராமும்; பெண்களுக்கு 65 கிராமும் நாள் ஒன்றுக்கு உண்டால் பயன் அளிக்கும்.
ஒரு நாளின் மூன்று வேளை உணவு,இரண்டுவேளை‘நொறுக் குத் தீனி’ (Snacks) இது இடம்பெற வேண்டுமென, மருத்துவர் நிக்கோலஸ் பாரிகோன் (தோல் சிகிச்சை நிபுணர்) பரிந்துரைக்கிறார்!
இதை எப்படி எடுத்துக் கொள் ளலாம் என்பதற்கு உதாரணம் கூறுகிறார்:
வறுத்த கோழியின் மார்பு - 31 கிராம் புரதச் சத்தினைத் தருகிறது. அரை கப் நேவி பீன்ஸ் - 7 கிராம்; அவிச்ச சால்மன் மீன் - 22 கிராம். இது போதுமானதாகும்! 31 + 7 + 22.
கோழி முட்டை, கோழி, பன்றி இறைச்சி, மெலிந்த மாட்டிறைச்சி (Lean Beef), மீன் இவைகள் உடலுக்கு மிகவும் தேவையான அமினோ அமிலத்தையும் - செல்களின் பழுது நீக்கும் வகையில் பிராணிகளின் புரதம் அளிக்கும் என்பதாலும், அது தவிர தாவரப் புரதம், கய்கறி உணவுப் பழக்கமுள்ளவர்களுக்குசோயாஉணவு மூலம் tempeh, tofu) மூலம் பெறலாம்.
சால்மன் மீனின் கொழுப்பு திரவம் (EFA’s) essential folic acid மிகவும் உதவி செய்யும்.
எனவே, வாரத்திற்கு மூன்று முறை யாக இத்தகைய மீன்களை உணவாகக் கொள்ளுங்கள்!
மீன் சாப்பிடுவதற்குத் தயங்கினால், மீன் எண்ணெய் சாப்பிடலாம்! அது ‘கேப்சூலாகவும்‘ வருகிறதே!
அதுபோல கருமைப் பச்சை யான கீரை, காய்கறி வகைகளை உண்ணுங்கள். நமது தோலின் எரி யூட்டல் தன்மையை (inflammation) அது தடுக்கப் பெரிதும் உதவும்!
‘ஆலிவ் ஆயில்’ என்ற ஆலிவ் எண்ணெய் (உணவில் சேர்த்தால்) இதய நோய்த் தடுப்பானாகவும் கூட அது பயன்படுகிறது.
மற்றவை நமது உடம்பின் செல் களுக்குள் நுழைவதைவிட, இந்த ஆலிவ் எண்ணெய்மூலம் ‘ஓலிவ் ஆசிட்’ என்பது இதிலிருந்து நுழைந்து, தோல் பராமரிப்புக்குப் பெரிதும் உதவுகிறது.
(மற்றவை நாளை)
-விடுதலை,27.10.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக